அன்புத்துத் தோழர்களே முன் பதிவின் வரவேற்ப்பு கருத்துகளையும் எதிர் பார்க்கிறேன்.
பல்வேறு தோழர்கள் என் மீது வன்மம் கொண்டுள்ளது மார்க்க்சிய போக்கு அல்ல. நமது தவறுகளை முழுமையாக வெளிப்படுத்தி சுய விமர்சன ரீதியாக கற்றுக் கொள்வதே இன்றைய முக்கிய தேவையாகும். அதற்க்கு மாறாக நமது பலவீனங்களை வெளிப்படுத்தி திருத்திக் கொள்ளும் செயல் எதிரிகளுக்கும் திருத்தல்வாதிகளுக்கும் பயன்பட்டுவிடும் என்றோ நம்மிடையே உள்ள திரிப்புவாதிகள் இதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்து தவறானவையாகும்.
புரட்சிகர சக்திகளுக்கிடையே உள்ள திரிப்புகளை எதிர்த்து தத்துவ அரசியல் போராட்டத்தின் மூலமாக முறையாக உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து உட்கட்சி போராட்டத்தை நடத்தி இறுதியாக ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு, ஒரே அமைப்பாக நின்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் திரிப்புகள் சரி செய்யப் படும்.
இந்தச் சரியான மார்க்சிய அணுகுமுறையை திரும்ப திரும்ப பின்பர்ருவதன் மூலமாக ஒன்றுபட்ட கட்சியாக நின்று அனைத்து தவறுகளும் சரி செய்யப்பட்டு முன்னுக்கு செல்ல முடியும்…
தொடரும்…