இ.க.க(மா-லெ)மீதான விமர்சனம்-1

இன்று மா-லெ அமைப்புகள் சிதறுண்டு பல்வேறு குழுக்களாக உள்ள நிலையில் அதனை பற்றிய நீண்ட தொடர் எழுத உள்ளேன். இதன் மீதான தங்களின் மேலான விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன் தோழர்களே, விமர்சனத்திற்க்கான உரைகல் மார்க்சியம்தான் ஆகவே அளவுகோல் மார்க்சியம் மட்டுமே. தனி நபர் தாக்குதலை விடுத்து மார்க்சிய அடிப்படையில் கேள்வியை வையுங்கள் தோழமைகளே.

இ.க.க(மா-லெ) கட்சிக்குள் மாறுபட்ட கருத்தை அனுமதிக்க மறுத்த இயக்க மறுப்பியல் சிந்த்னை முறையும், ஜன நாயகமற்ற எதேச்சாதிகாரப் போக்கும் கட்சி கட்டப் பட்ட காலத்திலே தொடங்கியதால் கட்சிக் கட்டப் பட்ட சிறிது காலத்திலெயெ பலக் குழுக்களாக சிதறிப் போகக் காரணமாக அமைந்தது. ஆனால் ரசியாவில் நாடு முழுவதும் இருந்த பல மார்க்சிய குழுக்களையும் ஒன்றினைத்து ஒரே சமூக ஜனநாயக கட்சியாக லெனின் கட்டி அமைத்து அதை நிலை நிறுத்தி , திடப்படுத்தி, சோசலிச புரட்சியை வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் நமது மா-லெ கட்சி ஒன்ருபட்ட பிறகு திடப்படுவதற்கு மாறாக, பல குழுக்களாக சிதறுண்ட நிலையில் இன்றுவரை ஒன்றுபடாமலேயே உள்ளது. உதாரணத்திற்க்கு தலைகீழாக உள்ளது அல்லவா? இந்த நிலையானது எதிரிக்கு (ஆளும் வர்க்கத்திற்கும் அதாவது ஆட்சியாளர்களுக்கும்) பெரும் மகிழ்ச்சியையும், உண்மையான புரட்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த மன வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும்.

இன்று குழுவுக்குள் கருத்து முரண்பாடு தோன்றும் போதெல்லாம், குழு பிளவுபடுவதும் சக்திகள் வெளியேருவதும் தொடர்கதையாக உள்ளது. இது எல்லா மா-லெ குழுக்களின் பொது போக்கே. அதாவது ஒரே விதமான தவறான இய்க்க மறுப்பியல் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் அமைந்த ஜனநாயக மற்ற எதேச்சாதிகார அணுகுமுறை, விளைவுகளும் அனைத்து மா-லெ குழுவுக்கும் ஒரேவிதமாக அமைக்கிறது….

தொடரும்…


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *