நான் பல வரலாற்று நிகழ்வுகளை தொகுக்க நினைக்கும் பொழுது அதன் உண்மை தன்மையை விளக்க வேண்டி உள்ளது, இதனை எழுத இன்னும் கால தாமதம் செய்ய நினைத்தேன், ஏனெனில் எனது வேறொரு தேடுதல் மா-லெ இயக்க பின்னடைவு , மக்கள் சிந்தனைகளை மடை மாற்றும் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகளை பற்றி தேடினால் தமிழகத்தில் மிக குறைவான ஆய்வு செய்துள்ளனர் ஆகையால் அதனை தேடி கொண்டிருப்பதால் பின்னர் பார்ப்போம், தற்பொழுது நான் சந்திக்கும் அரசியல் புரிதலுக்கு சில பதிவுகள்… (தோழர்கள் தோழமையோடு தவறுகளை சுட்டிக்காட்டலாம்)ஒரு தோழரின் பதிலுக்காக ….பிரிட்டனின் ஆதிக்கத்து முன்பு வரலாற்று அளவிலும் அரசியல் நிர்வாக அளவிலும் இந்தியப் பகுதிகள் ஒரு நாடாக இருந்ததே இல்லை இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமிழ்தேசம் (Tamil Nation) கூட இருந்ததும் இல்லை.தமிழ் தேசிய இனம் மட்டுமல்ல. எல்லா தேசிய இனமும் தான்.ஆனால் தமிழ்மொழி பேசும் பல பகுதிகள் (Principalities) இருந்தன. (இதே போல் பல்வேறு மொழி பேசும் பகுதிகள் இருந்தன). இந்தப் பகுதிகளில் இருந்த சமூகப் பொருளாதார நிலையை நிலவுடைமை அமைப்பு (Feudal Society) என்பர். நீண்ட நெடுங்காலமாக சிற்சில மாற்றங்களுக்கே உட்பட்ட இச்சமூக அமைப்பை பிரிட்டன் ஆதிக்கவதிகள் தம் நாட்டின் பொருளியல் நலங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தனர். இம் மாற்றங்களும் ஆதிக்கவாதிகளின் பொருளாதாரக் கட்டங்களைச் சார்ந்து நின்றன். இவற்றை மூன்றாகப் பிர்க்கலாம்.(அ). வணிக மூலதனக் காலம்.(ஆ). தொழில் மூலதனக் காலம்.(இ). நிதி மூலதனக் காலம்.(இவற்றை பற்றி வேறொரு சமயத்தில் பார்ப்போம்)—————————————————————————-இருபதாம் நூற்றாண்டில் ரசியாவில் மூன்று புரட்சிகள் நடந்தன, 1905 டிசம்பரிலும் 1917 மர்ச்சிலும்1917 நவம்பரிலும் நடந்தன. இவற்றில் முதல் புரட்சி தோற்றது. அன்றைய பிரிட்டன் இந்தியப் பகுதிகளில் ரசிய புரட்சியை எதிர் கொண்ட விதம் குறித்து இனி காண்போம்.1905 டிசம்பர் புரட்சி வரவேற்கப்பட்டது, பிரிட்டனை சட்டபூர்வ வழிகளில் மட்டுமே எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தலைவர்கள் மக்கள் புரட்சியில் பங்கெடுப்பதை பாராட்டினர்.1917 மார்ச்சில் நடந்த புரட்சி, சர்வதேசப் பெண்கள் நாளான்று, பெண்கள் ஆர்பாட்டத்தின் மூலம் தொட்ங்கியது, இதில் படிப்படியாக தொழிலாளர்களும் இராணுவத்தினரும் கலந்து கொண்டனர். மார்ச்சு 10 ல் 2 லட்சம் தொழிலாளர்களும் மாரச்சு 12 இல் 60 இராணுவத்தினரும் கலந்து கொண்டனர். உணவு தேவை யுத்தம் ஒழிக என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நட்த்திய பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை இராணுவத்தின் ஒரு பகுதியினர் சுட மறுத்து அவர்களுடன் இணைந்தனர்; புரட்சி வென்றது ஜார் பதவி விலகினான். லிபரல் கட்சியினர், சோசலிசப் புரட்சி கட்சியினர், பொதுவ்ய்டைமை கட்சியின் ஒரு பிரிவான மென்சிவிக் குழுவினர் ஆகியோர் இணைந்து மார்ச்சு 12 இல் தற்காலிக அரசாங்கம் அமைத்தனர். இது முதலாளியக் குடியுரிமைகளை வழங்கியது. இது முதலாளிய வகை பட்ட புரட்சியாகும். இது இந்தியப் பகுதிகளில் உள்ள அனைவராலும் வரவேற்க்கபட்டது. நேச நாடுகளுடன் கூட்டு கொண்டு ஜெர்மனியை எதிர்த்த பிரிட்டன், வலுமிக்க ₹இய மக்கள் அரசாங்கமே ஜெர்மனியை முறியடிக்கும் என் எண்ணி இதற்க்கு ஆதரவு கொடுத்தது. புரட்சி நடந்த 7 நாட்களுக்குள் ரசிய அரசாங்கத்தை பிரிட்டன் அங்கீகரித்தது.இந்திய பகுதியில் உள்ள அரசியலர்களும் இம் முதலாளியப் புரட்சியை வரவேற்றனர்.1917 நவம்பரில் ஏற்பட்ட புரட்சி, சோசலிசப் புரட்சியாகும். மார்ச்சியில் நடந்த முதலாளியப் புரட்சிக்கு பின் ஏற்பட்ட முதலாளிய அரசு மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்க இயலவில்லை, யுத்தத்தை நிறுத்த இயலவில்லை, மக்களுக்கு உண்ண உணவும் உழைக்க நிலமும் இல்லை, முதலாளிய முரண்பாடுகள் முற்றின. இவ்வாறக நவம்பர் 7 ல் சோசலிசப் புரட்சி லெனின் தலைமையில் நடந்தேரியது, இதனை ஸ்டாலின் வார்த்தையில் சொன்னால்,”ஊல்கம் முழுவதும் உள்ள சுரண்டப்பட்ட மக்களின் ஸ்தாபனப் போராட்ட வழிமுறைகளிலும் வடிவங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் மரபுகளிலும் பண்பாட்டிலும் சித்தாந்தத்திலும் நிகழ்ந்த அடிப்படையான இரு மாற்றத்தைக் குறிக்கிறது”.இத்தகைய புரட்சியை இந்தியப் பகுதிகளில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காண்போம். மார்ச்சுப் புரட்சியை எல்லாத் தரப்பாராலும் மதிக்கப்பட்டது, அரசினரும் இப்புரட்சியை வரவேற்றனர். ஆனால் நவம்பர் புரட்சியை அரசு வரவேற்கவில்லை, இந்தியப் பகுதிகளில் இத்தத்துவம் குறித்த க்ருத்துகளைத் தடுத்தனர். மேலும் இவர்கள்போல்சிவிஸ்ம் குறித்துத் தவறாக விள்க்கம் அளித்தனர்.(ஆரசு ஆவணம் கூறுகிறது.)அரசாங்கத்தின் நிலை இப்படியிருக்க இந்தியப் பகுதிகளில் உள்ள அரசியலர்கள் இப்புரட்சிக் குறித்தும் சோசலிச சமூக அமைப்பு குறித்தும் வேறுபட்டிருந்தன்ர். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.(1). இவற்றை கடுமையாக் எதிக்கும் நிலை. (2). ஊசலாட்டம், குழப்பம் ஆகியவற்ற்ய்க்குள்ளாகி நிலைப்பாட்டுத் தெளிவில்லாத நிலை.(3), உறுதியான ஆதரவு நிலை.ஏகாதிபத்திய நிறுவனங்களின் அவதூறுப் பிரசாரத்தையும் மீறி நவம்பர் புரட்சியை வர்வேற்றனர். இவர்கள் நோக்கம் ஏகாதிபத்தியத்திடமிருந்து பரிபூரண விடுதலை என்பதாக இருந்ததால், லெனின் முழக்கமான தேசங்களின் சுய நிர்ணய் உரிமை இவர்களைக் கவர்ந்தது. தி மாடர்ன் ர்வ்யு, ஆத்ம சக்தி, சம்சார், சங்கா,ஆந்திராபத்திரிகா, கிஸ்ட்னா பத்திரிகா போன்ற பத்திரிக்கைகள் ரசிய புரட்சியின் ஆதரவு செய்திகளை வெளியிட்டன. ஆங்கில அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்கு இவை பதில் கொடுத்தன.தமிழக அரசியல் தலைமைகளை இதன் ஊடாக புரிந்து கொள்ளவும் அடுத்த கட்டுரை அதனை விவாதிப்போம்.———————————————————————————-