இரு துருவங்கள்
இரு துருவங்கள்

இரு துருவங்கள்

"மணியம் இந்தா எண்பது சதம், கார்ட்டை எடுத்துக்கொண்டு பன் வாங்கிக் கொண்டு வா” 
என்ற அம்மாவிற்க்கு மகன்
"என்னால் முடியாதம்மா" 
"ஒ நீயொரு பீ. ஏ. பட்டம் வைச்சிருக்கிருய், பட்டிணியெண் டாலும் எப்பிடி பன் வாங்கப்போவாப், மானம் போப்விடு மெல்லோவோ? ".
என்ற அம்மா 
"உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாற்றுவாய் என்றுதான் உள்ளதையெல்லாம் வித்துச் சுட்டுப் படிப்பிச்சம். இப்ப உப்பிடி ஏன் படிப்பிச்சனி என்று கேட்கிறனி ஏன் பெத்தனி என்றும் கேட்டுவிடுவாயோ?'
செல்லம்மாவிற்கு துக்கத்தில் நெஞ்சேயடைத்துக்கொண்டது. நாள்தோறும் மூத்தவனோடு ஏதாவது வாக்குவாதம் நடத்துகொண்டேயிருக்கும். வீட்டில் வறுமையும் விரக்தியும் வளர வளர மோதல்களும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
"அப்பா செத்ததோடு உனக்கும் வரவர பைத்தியம் பிடிச்சுப் போட்டுது. எடுத்ததுக்கெல்லாம் என்மேலை பாய்ஞ்சுகொண்டுதான் நிக்கிருய்",
மணியம் குத்தலாய் கூறினான். 
"ஒமடா எனக்குப் பைத்தியந்தான் பிடிச்சுப்போட்டுது. நீயேன் பைத்தியக்காறியோடை வீணய் பேசிக்கொண்டிருக்கிருப் தெருச்சுத்தப் போவன்'.
"நாங்க கம்மா தெருச்சுத்திறம் என்றுதான் நினைச்சுக்கொண் டிருக்கிருய்".
"இல்லை,
 நீ கூடித்திரியிற கூட்டமெல்லாம் எனக்குத் தெரியா தெண்டா நினைக்கிருய், உனக்கு என்ன நடக்கப்போகுதெண்டும் எனக்குத் தெரியும். என்ன நம்பிக்கையோடை ஒரு காலம்வாழ்ந்தன். இப்ப எல்லாம் அழிஞ்சுபோச்சு. இன்னும் என்னென்ன அழிவுதான் வரப்போகுதோ".
செல்லம்மா கவலை தாங்க முடியாது கலங்கிய கண்களுடன் குசினிக் குந்தில் குந்தி, நாடியில் கையை ஊன்றி வைத்தபடி கூறினால்.

அவ்வேளை குளித்து விட்டு தலையை உயர்த்தியபடி ஆனந்தன் வந்து கொண்டிருந்தான். கிணற்றடியிலேயே அவர்களது வாக்குவாதம் அவனுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

"என்னம்மா விடிந்ததுமே உன் ஒப்பாரியை தொடங்கிவிட்டாப். இனி ராத்திரிக்கு தூங்கு மட்டும் இந்த ஒப்பாரிதான். இப்ப என்ன நடந்திட்டுது என்று தொடங்கிருய்",
ஆனந்தன் தமையனைப் பொருட்படுத்தாது தாயின்முன் நின்று கொண்டே துவாய் தலைப்பை உருட்டி காதைக் குடைந்துகொண்டே கேட்டான்.
"என்னதான் நடக்கேல்லை. எல்லாமே தடந்து முடிஞ்சுது. உள்ள சொத்து எல்லாமே உங்க படிப்புக்காக அழிச்சுப்போட்டமே. இருந்த தாலிக்கொடி கூட அவற்றை செத்த வீடு, அத்திரட்டிச் செலவோடை போட்டுது. இனிமேல் தின்னுறதுக்குத்தான் என்ன இருக்கு, அந்த மனுஷன் இருக்குமட்டும் நிலத்தையாதல் கொத்திக்கொண்டிருந்துது. உங்களுக்குப் பின்னால் பி ஏ. பட்டம் ஏறிவிட்டுது. இனி மண்வெட்டி யைத்தானும் தொடமாட்டியள், இப்பபாரன் பண் வாங்கப் போகவே முடியாதொண்டு இவன் நிக்கிறான்"
"அதுதானம்மா நான் போப் வாங்கிவாறனே. நீதானே முந்தி அப்பாவையே பேசுவையே "நீ நிலம் கொத்தப் பிறந்தனிசரி, என்ரை பிள்ளைகளையும் நிலம் கிண்ட விடுவனென்று நினைச்சியா? என்று. இப்ப மாத்திப்பேசிருய்"
'நான் நினைச்சபடி நடந்துதா, சொத்து, சுகம் எல்லாம் அழிஞ்சு போச்சுதடா",
"அதுதான் நல்லதம்மா. இனிமே எமக்கு இழக்கிறதுக்கு எதுவு மில்லை, சரிதானேயம்மா' .
"இவர் இப்ப பாட்டாளியாகிவிட்டாராம். புரட்சி நடத்தப் போகிறார்?".
இருவர் பேச்சையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மணியம் தாயைப் பார்த்தபடி தம்பி யார்பற்றி நளினமாகக்கறிஞன். 'ஓம் புரட்சி நடத்தத்தான்போறம், அதைவிட்டு உன்னைப் போல இன விடுதலை பேசித்திரிவன் என்று நினைக்கிறியா??
ஆனந்தன் கேட்டான். "நீதானே தமிழ் உணர்ச்சியே இல்லாத துரோகியாச்சே, சிங்களத்தை திணித்ததால்தானே உனக்கும் எனக்கும் கூட வேலையில்லை. தெரு அளக்கிறம்".
"சிங்களவரில் மட்டுமே வேலை கிடைச்சிருக்கா, ஏழு, எட்டு லட்சம் பேருக்கு வேலையில்லை. வருஷம்தோறும் மேலும் இரண்டுலட் சம்பேர் சேர்ந்துகொள்ளுகிருங்கள். பாராளுமன்ற ஆட்சியால் எல்லாருக்கும் வேலைதர முடியும் என்று நினைக்கிறியா? தமிழரசு வந்து விட்டால் தமிழர் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிடும், அப்படித் தானே?".
கடைசி வார்த்தையை ஆனந்தன் நளினமாக அழுத்திக்கூறிஞன், "வெறும் வயித்தைப்பற்றித்தான் உங்களுக்குக் கவலை, மானம் என்று ஒன்றில்லையா ???
'வயித்துக்காகப் பிச்சையெடுப்பது மானக் கேடில்லையோ" என்று ஆனந்தன் கூறிவிட்டு தாயைப் பார்த்துச் சொன்னான்,
"காசைத் தா அம்மா பாண் வாங்கி வாறன், பாண் வாங்கப் போறதையே மானக்கேடு என்று நினைக்கிறவர்தான் மானத்தைப் பற்றி பேச வந்திருக்கிறார்".
"நான் குளிக்கப்போறன்." மணியம் இழுத்தான். "ஒமடா உன்ரை மழுப்பல் எனக்குத் தெரியாதா" என்று கூறிக்கொண்டே கையிலிருந்த 80 சதத்தையும் செல்லம்மா ஆனந்தனிடம் நீட்டினாள்.
"இன்னும் 20 சதம் தா அம்மா. பாண் விலை கூடினது உனக்குத் தெரியாதா?"
"கோதாரீலை போறவங்கள், பிறகும் விலையை ஏத்திவிட்டாங்களா? ''
'அரிசி விலையிலை கொஞ்சம் குறைச்சிருக்கிருங்களாம். இந்தத் தகிடுதித்தங்களை உன்ரை மகனிட்டைக் கேள்"
மணியன் பரிகசித்தான். 'போன மாதந்தானே ஏத்திணாங்கள். அதையா குறைச்சிருக் கிருங்கள்" என்று மனக்குழப்பத்தோடு கூறியபடி செல்லம்மா குசினிக்குள் சென்று மேலும் 20 சதத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். ஆனந்தன் சேட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு பாண் வாங்க வெளி நோக்கி நடந்தான்.
செல்லம்மா குசினிக்குள் சென்று புகைந்துகொண்டிருந்த அடுப்பை கிளறி வாயால் ஊதி மூட்டினாள். அவள் மனதும் புகைந்து புகைந்து பழைய வாழ்க்கையையும் தான் கட்டிய மனக்கோட்டைகளையும் நினைந்து எரிந்துகொண்டிருந்தது. தன் பிள்ளைகள் தன் புருஷனைப் போல நிலம் கிண்டிக் கஷ்டப்படப்படாது என்று அவள் கருதியது மட்டுமல்ல, புருஷனை என்றும் குறைவாகவே மதித்து வந்தாள். தன்
சீதனச்சொத்து யாவையும் விற்றுப் படிப்பித்தாள். குத்தகை நிலத் தைக் கிண்டிக்கொண்டிருந்த புருஷனும் அவளை விட்டுப் போய்விட்டார். இருவரும் தொழிலில்லை என்று தெரு அளந்தாலும் பரவாயில்லை ஆபத்தான அரசியலில் ஈடுபட்டிருப்பதே அவளுக்கு அதிக வருத்தமளித்தது.
ஆனந்தன் பாணை வாங்கிக்கொண்டு வந்தபோதும் வீட்டில் வாக்கு வாதம் நடத்துகொண்டிருந்தது. செல்லம்மா சம்பலையும் சுடவைத்த பழங்கறியையும் வைத்தாள்.
'நீங்க சாப்பிடுங்கோ, எனக்குக் கொஞ்ச பழஞ்சோறிருக்கு" "என்னம்மா, பிறகும் அண்ணனோடு சலசலப்பு'
ஆனந்தன் உசாவிஞன். தாய்க்கு அளவுமீறி வீண் தொல்லை கொடுப்பதை அவன் விரும்புவதில்லை.
"அவன் அஞ்சு ரூபா காசு வேணுமாம். கடன் கேட்கக்கூட இனி ஆட்களில்லை" உங்களைப் படிப்பிக்கச் செலவழிச்ச காசை வட் டிக்குக் கொடுத்திருந்தாலும் நான் இன்றைக்குக் கஷ்டமில்லாமல் செல்லப்பிள்ளையாப் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பன். நீங்களும் ஏதேன் தோட்டந்துரவைப் பார்த்து மனுஷராய் பிழைத்துக் கொண்டிருப்பீர்கள்"
செல்லம்மா அழாக்குறையாய் அளந்தாள். ""உன்னிலை பிழையில்லை அம்மா. ஊரைப் பார்த்து நீ ஆத்தோடை போனாய். அவங்களும் கவைக்குதவாத கல்வியைக் கற்பிக்கிருங்கள். இந்த வீட்டிலை மட்டும் இத்தப் பிரச்சளை இல்லையம்மா. நாடெல்லாம் இந்த நிலதான். கொஞ்சக்காலம் பொறம்மா. இந்தச் சமூகத்தையே உடைத்தெறிந்து காட்டுறம்'
ஆனந்தன் பேச்சில் உணர்ச்சியும் உறுதியும் தொனித்தது. பாணை வெட்டி தமையனின் தட்டில் போட்டான்.
'இவர்தானம்மா புரட்சி நடத்தி உனக்குச் சோறு போடப் போறார், காத்துக் கொண்டிரம்மா' மணியம் கேலியோடு கூறினான். "இவர் தமிழன், நாட்டுக்கு உயிர் கொடுப்பதாக வீம்புபேசிறர். ஒருவேலை கிடைத்ததும் ஒடிப்போய் சிங்களம் படிப்பார்?"
ஆனந்தன் அடித்துச் சொன்னன். "இவர் மட்டும் வேலைகிடைச்சால் போகமாட்டார்"
'உள்ளேப்போல குட்டி பூஷ்வா அல்ல நான்'
"இவர் வேறை குடும்பத்திலிருந்து வந்தவர். 71ல் நடந்ததைப் போலத்தான் இவற்ரை புரட்சியும் இருக்கும்"
உன்னைப் போன்றவங்களைச் சேர்த்தால் துவக்கைக்(துப்பாக்கியை) கண்டதும் மட்டுமல்ல, வேலையைக் கண்டதும்கூட ஓடி விடுவாங்கள். சோஷலிசம் பேசிற காலத்திலை இனத்துக்கு விடுதலைதேடப் போகிருர்"
ஆனந்தன் பழித்துக் கூறிஞன். "சுதந்திரம் கிடைத்தால் எங்கள் இனம், மொழிக்கு சமத்துவம் வேண்டாமோ? சிங்களவருக்குத்தான் எல்லா சுதந்திரமுமோ?"
"அரச மொழியாகி சிங்கள மக்கள் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விட்டுதா? எங்களிலும்பார்க்க மோசமானதால்தான் 71 கிளர்ச்சி கூட நடந்தது. பாராளுமன்றத்தாலை அவங்க பிரச்சனையோ எங்க பிரச்சனையோ தீர்த்துவிடப் போவதில்லை. இன்னும் மோசமாகிக் கொண்டேயிருக்கும். ஒரு புரட்சி நடந்துதான் இப்பிரச்சண்யெல் தீரமுடியும்"
"புரட்சி நடந்தால் தமிழருக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வந்துவிடும்"
மணியம் நளின பாஷையில் கூறினான். 
புரட்சி ஏன் வராது?
எந்த மொழியாலை படித்தாலும் எல்லாருக்கும் வேலை கிடைக்கும். எல்லாரும் உற்பத்தியில் ஈடுபடுவோம். இப்ப நீ கூட சிங்களத்தால் சிங்களவருக்கு வேலை கிடைக்குது, தமிழனுக்கு வேதியில்ல என்றுதானே வகுப்புவாதம் பேசுகிருய், எத்தனை தவருண கருத்து. படித்த சிங்கள மக்கள் நிலை எங்கள் நிலையிலும் மோசம்'
"" போதுமப்பா போதும், உங்க ரண்டு பேற்றை சண்டையும். இப்ப சாப்பிட்டு முடியுங்கோ, என்ரை கவலே உங்க ரண்டு பேருக்கும் சோறு போடுற கவலேதான் போற போக்கைப் பார்த்தா ரண்டு பேருக்கும் அரசாங்கமே சோறுபோடும் போலையிருக்கு"
செல்லம்மா பொறுமையிழந்து கூறிஞள். 'இது எங்க வீட்டுப் பிரச்சனை மட்டுமில்லையம்மா. இதுதான் இன்றைய நாட்டுப் பிரச்சனை. பாட்டாளி வர்க்கந்தான் பெருகி வருகுதே' "அதென்னடா பாட்டாளி என்றால்? நீயும் பாட்டாளிதானே?" செல்லம்மா கேட்டாள். "நான் அரைப்பாட்டாளியம்மா. ஆனல் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையை கிரகித்துவிட்டேன். எங்காவது தொழிற்சாயிைல் அல்லது தோட்டத்தில் கூலிவேலை செப்யத் தொடங்கினல் தான் முழுப்பாட்டாளியாகிவிடுவேன்"
தாயாருக்காகவல்ல, மறைமுகமாக தமையனுக்காக விளக்கிக்கூற முயன்ருன்.
"எனக்கு உந்தப் பெயரே பிடிக்கேல்லையம்மா" மணியம் கூறிஞன். "குட்டிப் பூஷ்வாவிற்கு எப்பிடிப் பிடிக்கும். பல்கலைக்கழகத்தில் படித்ததெல்லாம்.பழகினதெல்லாம் உன்மூளையில் அப்படியே இருக்கே" 
" அப்ப என்னை உங்க புரட்சியிலை சேர்க்க மாட்டீங்க" ""ஒருபோதும் சேர்க்கமாட்டம்" 
'அதுதானே முந்தியே சொன்னனே. துவக்கைக் கண்டதும் மட்டுமல்ல, வேலையைக் கண்டதும்கூட புரட்சியைவிட்டு ஓடிவிடுவாய்' "போதுமடா போதும். போய் கையைக் கழுவிவிட்டு தெருச் சுத்தப் போங்கோ. நான் இருக்கிறனே சோறுபோட, வீட்டிலை அரிசி இல்லை”
செல்லம்மா செம்பில் தண்ணீரைக்கொடுத்து எழுப்பிவிட்டான். 'ஒடியல் புட்டு அவியம்மா. சாப்பிட ஆசையாயிருக்கு, நான் ராத்திரிக்கு வெளியூர் போகிறேன்.""
தாயைப் பிரிந்து நீண்டபயணம் புறப்படுவதுபோல ஆனந்தன் குரல் ஒலித்தது. ★

மூலம் —–இரு முனைகள் மாதவன் (ஈழ எழுத்தாளர்)

(மூல மொழியை நான் மாற்றவில்லை புரிதலுக்கு சில திருத்தங்கள் செய்தேன் அவ்வளவே).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *