இராணுவம் என்றால் என்ன அதன் தேவை என்ன?

தொடர்ந்து இந்தோ-சீன எல்லை பிரச்சினையை முதண்மையாக்கி ஊடகங்கள் தங்களின் பசியாற்றி கொண்டிருக்கும் இவ்வேளையில்….. சாதாரண உழைக்கும் மக்கள் தெரிந்துக் கொள்வதோடு குழப்பத்தில் ஊசலாடும் நடுநிலைவாதிகளும் இந்த வித்தியாசமான மோதலை எப்படி பார்ப்பது என்று தினறிக் கொண்டிருக்கும் திருத்தல்வாதிகளும் எனது இராணுவம் பற்றிய இந்தப் பதிவு.

தோழர்களே…

இராணுவம் என்றால் என்ன அதன் தேவை என்ன?
======================================
போர் நடத்துவதற்க்கு தேவையான மிக முக்கியமான கருவி இராணுவம் ஆகும்.

புரதான பொதுவுடைமை சமுதாயத்தின் அழிவுக்குப் பின் சமுதாயம் பகை வர்க்கங்களாகப் பிளவுபடுகின்றது.

சமுதாயத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகின்றது.

சமுதாயம் நாடுகளாக அமையப் பெற்றவுடன் நாடுகளை ஒடுக்குவதும் அடிமைபடுத்துவதும் தொடங்கியது.

பன்னெடுங்காலமாக வர்க்க சமுதாயத்தில் எண்ணற்ற போர்கள் நடந்துள்ள்ன. கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் ஏற்த்தாழ 10,000 போர்கள் நட்ந்திருப்பதாக மதிக்கபடுகின்றது.

சமுதாயம் பகை வர்க்கங்களாகப் பிளவுபட்டவுடன் அரசு தோன்றுகிறது. இராணுவம் என்பது அரசின் சிறப்பான கருவியாகும் ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தனது அரசியல் மார்க்கத்தை ஆயுதமேந்தி வன்முறை மூலமாக பிரியோகிப்பதற்க்கு பயன்படுத்தபடும் கருவியாகும்.

இராணுவத்தின் [தேவை] பணி
=======================
அரசின் வர்க்கத்தன்மை, இராணுவ சமுதாயத்தன்மையையும் அதன் செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. பொதுவாக கூறினால் இராணுவம் ஆளும் வர்க்கத்தின் சார்பாக உள்நாட்டு பிறவர்க்கங்களின் போராட்டங்களை நசுக்கவும், ஆளும் வர்க்க கட்டளைக்கு அடிபணிந்து, வெளிநாட்டு விவகாரங்களைப் பொருத்தவரை மற்றைய நாடுகளை ஆக்கிரமிக்ககூடியதாகவும், வெளியார் தாகுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளகூடியதாகவும் இருக்கும்.

இதில் ஏழை எளிய மக்கள் எங்கே வருகின்றனர் என்றால்,”இராணூவத்துக்கு வேண்டிய படை வீரர்களை வழங்கி அவர்களுக்கு உணவளிப்பதற்க்கு மட்டுமே மக்கள் தேவைப்பட்டனர். இராணுவ வெறி அய்ரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தி அதை விழுங்கி வருகின்றது,” என்கின்றார் நமது ஆசான் ஏங்கெல்ஸ்.(Anti duhring page 286)

ஆகவே போரை பற்றிய தெளிவு நமக்கு வேண்டும் தோழர்களே தேவைப்படின் தொடருவேன் இதனை… See Less