அன்புத் தோழர்களே மார்க்சிய மேடை என்ற பகுதியில் என்னை பேச அழைத்தமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்த தலைப்பை பேச சொன்னதோடு அதில் முக்கிய தேவையான கருத்துகளை பேசும்படு வழிகாட்டிய தோழர் சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயங்கியல் பொருள்முதல்வாதம் இன்றைய தலைப்பு தோழர்களே -சி.பி.
எந்த ஒரு தத்துவமும் அடிப்படையான கருத்தாக்கம் ஒன்றை நிச்சயமாக கொண்டிருக்க வேண்டும் இல்லாவிடில் அது தத்துவம் ஆகாது என்று முந்தைய வகுப்பில் அறிந்தோம். அதைப்பற்றி இப்பொழுது பேசுவோம். இந்த உலகைப் பற்றி புரிந்து கொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கின்றன அவற்றை பிரித்து ஆராய்ந்து பார்த்தோமானால் சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள் இரண்டே இரண்டின் அடிப்படையில் தான் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன என்பதை உணரலாம்.. அந்த இரண்டு எவை?
1). கருத்துமுதல்வாதம் 2).பொருள்முதல்வாதம்
இவ்விரண்டில் அடித்தளங்களில் ஏதோ ஒன்றில் தான் இந்த உலகம் எப்படி தோன்றியது என்பதை உண்மையான புரிதல் இருக்க இயலும்.
மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன அதாவது ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்விதான் தத்துவ முழுதிலும் கேட்கப்படும் முதல் கேள்வி?.இந்தக் கேள்விக்கு தத்துவவாதிகள் கொடுத்த விடைகளே அவர்களை இரண்டு முகாம்களாக பிரித்து விட்டன. ஆன்மா தான் முதலிடம் வகிக்கிறது இயற்கை இரண்டாம்பட்சம்தான் என்று அடித்துப் பேசியவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கைதான் மூலாதாரமானது என்று கருதிய மற்றெல்லோரும் பொருள்முதல் வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்”. (லூத்விக் பாயர்பாக்கும் மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவுகள் பகுதியில் இருந்து).
முதலில் ஆன்மீகவாதிகள் தரப்பு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ஏனெனில் அவர்கள் தான் இந்த உலகம் கடவுளின் சிந்தனையிலிருந்து அல்லது பிரம்மினால் படைக்கப்பட்டது என்று வாதிடுகிறார்கள் அவர்கள் கருத்து சரிதானா என்பதை ஆராய்வோம்.
கடவுளானாலும் வேறு எந்த சக்தியானாலும் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல அவன் மட்டுமே முக்காலமும் உணர்ந்தவன் அவனின்றி அணுவும் அசையாது ஐம்பூதங்களும் அவனுக்கு கட்டுப்பட்டவை ஆக்குதல் அவனே அழித்தலும் அவற்றில் காத்தலும் அடங்கும் இவையெல்லாம் ஆன்மீகம் சொல்லும் கருத்துகள்.
கடவுள் பற்றிய எண்ணங்களில் பல்வேறு மதங்கள் தங்களுக்குரிய வியக்கியானங்களில் வித்தியாசப்படுகின்றன என்றாலும் அதை கடவுள் இருப்பை மனிதனுக்கு அடங்காத ஏதோ ஒரு சக்தி இருப்பதையும் மறுப்பதில்லை அந்த அரூப சக்தியோ அல்லது கடவுளோத்தான் உலகம் உருவாக காரணம் என்கின்றனர்.
மதங்கள் கடவுள் இருப்பதையோ அல்லது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதேனும் ஒரு சக்தி இருப்பதையோ உறுதிப்படுத்துகின்றன அவைதான் இந்த உலகத்தைப் படைத்த உலகின் நிகழ்வுகளை ஆட்டிப்படைகின்றன என்று மனிதனை மயக்குகின்றன. அவற்றில் பெயரால்தான் கர்மவினையை வலியுறுத்துகின்றன. இவை எப்படி என்று விவேகானந்தரிடம் வருவோம்.
பிறந்ததிலிருந்தே சிலர் மகிழ்ச்சியோடு இருப்பதும் சிலர் துன்பத்தில் வாடுவதையும் எப்படி விளக்குவது . இந்த வேறுபாட்டை உண்டாக்க அவர்கள் ஏதும் செய்யவில்லை இந்த பிறவியில் ஒன்றும் செய்யவில்லை சென்ற பிறவியில் செய்தது இந்த பிறவியின் நிலைமைக்கு காரணம் என்று வேற்றுமைகளின் விளக்கம் என்கிறார் விவேகானந்தர்.
இப்போது புரிகிறதா ஏன் மார்க்சிய ஆசன் மதத்தை அபினி என்று குறிப்பிட்டார் என்று? நாம் இந்தக் கர்மவினையை அப்படியே ஏற்றுக் கொண்டால் என்ன முடிவுக்கு வரவேண்டி இருக்கும்? நாம் துன்பங்களுக்கு முற்பிறவியில் செய்த பாவமே காரணம் என்ற முடிவுக்குத்தான் வர இயலும். செல்வந்தர்கள் புண்ணியம் செய்தவர்கள் உழைப்பவர்கள் பாவம் செய்தவர்கள் என்னே ஆன்மீகத்தின் நீதி?
இப்படித்தான் காலம் காலமாய் நம்மை ஆன்மீகவாதிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே மதத்தின் பேரால் கடவுள் என்ற கோட்பாட்டின் பெயரால் நம் மூளையில் திணிக்கப்பட்டிருக்கும் கருத்துமுதல்வாத சிந்தனையில் இருந்து நாம் விடுபட்டு நம் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் விஞ்ஞானபூர்வமான பொருள்முதல்வாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கான தேடல்தான் உலகத்தை யார் படைத்தது அல்லது உலகம் எப்படி உருவானது என்ற அவசியமே எழுகிறது.
கடவுளின் கருத்தில் இருந்து தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பூமி படைக்கப்பட்டது என்று கருத்து முதல் வாதிகள் ஒரேயடியாய் உலகத்தின் தோற்றத்தை கூறிவிடுகிறார்கள் அவர்களிடம் கடவுள் இருப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.
இதற்கு நேர் எதிராய் பொருள்முதல் வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது இப்போது பார்ப்போம்.
மனிதனோ அல்லது வேறு எந்த உயிரினமும் வாழ்ந்திடாத வாழ்ந்திருக்க முடியாத நிலையில் ஒரு காலத்தில் பூமி இருந்தது என்று இயற்கை விஞ்ஞானிகள் திண்ணமாக கூறுகிறார்கள். உயிரோடு இயங்கும் ஜீவராசிகள் பின்னால் வந்தவைதான் நீண்ட பரிணாம வளர்ச்சியின் பயனாக வந்தவையே அவை. (பொருள்முதல்வாதமும் அனுபவ ஞான விமர்சனம் நூலிலிருந்து).
மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றுவதற்கு தேவையான சமுதாய- வரலாற்று முன் தேவைகள் பற்றி முன்னர் வகுப்பில் அறிந்தோம்…. இன்று அதன் தொடர்ச்சியாக…
பண்டைய இயக்கவியலும் புதிய காலத்திய இயக்க மறுப்பியலும்.
மார்க்சியம் தோன்றுவதற்கு முன்பு தத்துவ ஞானத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக திகழ்ந்தது ஹெகலின் இயக்கவியல் ஆகும். இயக்கவியல் என்பது என்ன? 2500 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனி விஞ்ஞானங்கள் இயற்பியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் போன்றவை இருக்கவில்லை . அறிவின் எல்லாத் துறைகளையும் தழுவியதாக தத்துவம ஞானம் மட்டுமே இருந்தது.
எல்லா பொருள்களும் இடையறாத இயக்கத்தில் இருக்கின்றன என்றும் , தோன்றி மறைந்து வருகின்றன என்றும் , இவை எல்லாமே ஏதோ ஒரு வழியில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன என்றும், உள்ளுக்குள்ளேயே முரண்பாடு கொண்டிருக்கின்றன என்றும் தத்துவஞானிகள் கண்டார்கள்.
இந்த ஆதி நிலையிலான அறியாப்பருவத்திற்குரியதாயினும் உள்ளியல்பில் பிழையற்ற கருத்தோட்டம் இயக்கவியல் சிந்தனை முறை அல்லது பண்டைய இயக்கவியல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் முழுமையான விவரங்களை விளக்க முடியாமை முழுமையான சித்திரத்தை விளக்க முடியாத போதாமை இதனுள் உண்டு.
காலம் செல்லச்செல்ல தனித்தனி விஞ்ஞானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின எனினும் இயற்கை புறப்பாடுகளின் சாரத்தை ஆய்வு பூர்வமான ஆராய்ச்சிகளால் கண்டறிய வேண்டும் என்ற முயற்சிகளை விட வெறும் அனுமானங்களாலேயே அவற்றை கண்டறிவதறக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் முயற்சி செய்யப்பட்டு வந்தது.
16- 18ஆம் நூற்றாண்டுகளில் தான் ஆய்வு பூர்வமான இயற்கை விஞ்ஞானம் தோன்றியது அந்த காலத்தில் தான் மூல சிறப்புள்ள இயந்திரவியல் தோன்றியது இது பூமியிலும் வானத்திலும் காணப்படும் மிகவும் துள்ளியமாக விளக்கியது பொருள் உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்குள் அதையே தாவரவியல் விஞ்ஞானிகளும் விலங்கியல் விஞ்ஞானிகளும் 16 ஆயிர கணக்கான செடிகொடிகளை சுமார் 20 ஆயிரம் உயிரின வகைகளை ஆய்வு செய்து அமைப்பை விவரித்தனர். முதன் முதலாக மனித உடல் அமைப்பு ஆய்வு செய்யப்பட்டது ஆனால் இயந்திரவியல் மற்ற விஞ்ஞானங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது.
இயக்க மறுப்பியல்
++++++++++++++++++++
இயற்கையில் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கின்றன ஆயினும் இந்த இயக்கமானது மாறாமல் இருந்து வரும் சுழற்சிகள் வடிவங்கள் ஆகியவை திரும்பத் திரும்ப தோன்றி மறையும் இயக்கமே என்று சொல்லும் கருத்தினையே விஞ்ஞான அறிவு ஊட்டியது.
ஒரு பொருளைப் பார்ப்போம் பார்க்கிற பொழுது இந்த பொருள் இப்பொழுது எப்படி உள்ளதோ அப்படியேதான் எப்பவும் ஒரு உருறாமல் அப்படியே இருக்கும். இது எப்பவுமே மாறவே மாறாது என்கின்ற பார்வை வெறும் இயந்திர மயமான பார்வை.
இவர்கள் சொல்கிற கண்ணோட்டத்தை நாம் எடுத்துக் கொண்டால் இந்த சமூகத்தில் சுரண்டலும் ஊழலும் இருக்கிறது அது எப்போதும் இருக்கும் அதை மாற்ற முடியாது என்று தானே அர்த்தம்.
பூமி படைக்கப்பட்டது போலவே இன்றும் இருக்கிறது அன்று எப்படி சூரியன் உதித்ததோ இன்றும் அப்படிதான் உதிக்கிறது அதேபோல் மறைகிறது என்பர்.
சூரியன் பொதுவாய் அறிவியல் பூர்வமாக உதிப்பதும் மறைவதும் இல்லை குறிப்பாய் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உதிப்பது என்பதும் ஒரே மாதிரி அல்ல அதன் குளிர் காலம் கோடை காலம் கால வேறுபாடு வெப்பம் குளிர் நாட்டுக்கு நாடு வேறுபாடு இவை புரிந்துக் கொண்டால் மட்டுமே இந்த இயக்க மறுப்பியலாளர்களை இனங் காண முடியும்.
இயக்கத்தின் சாரம் பற்றியும் பரஸ்பர தொடர்புகள் முரண்பாடுகள் குறித்தும் விளக்குகிற இயக்கம் மறுப்பில் கருத்தோட்டம் பண்டைய இயக்கவியலுடன் ஒப்பிடுகையில் ஒரு அடி பின்னுக்கு போவதாக அமைந்தது.
இயக்கவியல்
+++++++++++++
இயக்கவியலின் வரலாறு ஹேகலின் தத்துவ முறையிலிருந்து பிறந்தது அதுபற்றிய தோழர் ஸ்டாலின் கூற்று இது”அதன் முக்கியமான அம்சங்களை ஹெகல் எனும் தத்துவத்வதியே உருவாக்கினார் என்று மார்க்சிய ஆசான்கள் வழக்கமாக குறிப்பிடுகின்றனர். எனினும் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் இயக்கவியல் அணுகுமுறையும் ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையில் ஒன்றுதான் என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது உண்மையில் சொல்லப்போனால் ஹெகலின் தத்துவம் கருத்துமுதல்வாதம் என்ற கூண்டுக்குள் சிக்கிக் கிடந்தது. இந்த கூண்டைத் திறந்து ஏகலின் அணுகுமுறையில் இருந்த பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக்கொண்டு நவீன அறிவியல் வடிவம் கொடுக்கும் நோக்கத்தில் அந்த சாராம்சத்தை மேலும் வளர்த்தனர்”.
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் நூலிலிருந்து).
பதினெட்டாம் நூற்றாண்டில் இயக்கம் மறுப்பியலில் சிக்கிக் கிடந்தது என்று மேலே பார்தோம் அல்லவா அதே காலத்தில் வரலாற்றின் வளர்ச்சியில் அறிவியல் துணைக் கொண்டு இந்த பேரண்டத்தில் உள்ள எல்லா பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற முக்கிய மான முடிவை தந்தார்.
ஆன்மீக வாதியான ஹேகல் அறிவியலின் துணையோடு இயக்கவியல் விளக்கினார்.
இயங்கியலை விதியை காண்போம்
1). ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை தனித்த ஒன்றாகக் காணாமல் அதை ஏனைய வற்றோடு இணைத்து ஒரு முழுமையின் பகுதியாகவும் பல்வேறு பொருள்களோடும் அல்லது நிகழ்வுகளோடும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்படுவதாகவும் காணல் வேண்டும்.
2). எல்லாப் பொருள்களும் அல்லது நிகழ்வுகளும் எப்பொழுதும் இடையறாது இயங்கிக்கொண்டு இயக்கப் போக்கில் இருக்கின்றன. அவை மாறுகின்றன வளர்கின்றன அல்லது சிதைகின்றன.
3). ஒரு பொருளில் அல்லது ஒரு நிகழ்வில் ஏற்படும் அளவு மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் பண்பு மாற்றமாக உருப் பெற்று வேறு ஒரு பொருளை அல்லது நிகழ்வை தோற்றுவிக்கும்.
4). எல்லாப் பொருள்களுக்குள்ளும் அல்லது நிகழ்வுகக்குள்ளும் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும் இந்த முரண்பாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும் போராட்டமும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும்.
இவைதான் இயங்கியல் கண்ணோட்டமாகும்.
இனி இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் பற்றி
1). உலகம் என்பது அதன் தன்மையிலேயே பொருளியலானது. பொருள்கள் நம் உணர்விற்கு அப்பாற்ப் பட்டு புறவயகமாக இயங்குகின்றன.
2). பொருள்கள் முதன்மை வகைப்பட்டவை கருத்துகள் சார்புநிலை பட்டவை அதாவது பொருள்கள் மனித எண்ணங்களின் சார்பின்றியும் இயங்க வல்லவை ஆகும். கருத்துக்கள் மனித மனதில் எதிரொளித்து படிமங்களாக உருப்பெறுபவை, அவை பொருள் இன்றி இல்லை.
3). பொருளிலிருந்து உருவெடுத்த கருத்துக்கள் மீண்டும் பொருள்களை தாக்குகின்றன
4).ஒரு பொருளைப் பற்றிய பரிபூரண அறிவு இன்றுவரை அறியப்படவில்லை எனினும் உலகப் பொருள்கள் அனைத்தும் அறியப்பட முடிந்தவையே. மாயை என்பதும் அறிய முடியாது என்பதும் இல்லை.
ஒரு தத்துவத்துக்கு இரண்டு பயன்கள் உண்டு இயற்கையையும் சமூகத்தையும் விளங்கிக் கொள்வதும் அவற்றை மாற்றுவது என்ற இரண்டு பயன்கள் உண்டு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாகும் விளங்கிக் கொள்தல் என்பது மாற்றுவதற்குரிய முதற்படியாகும் இவ்வாறு விளங்கிக்கொள்ளும் நெறிமுறைகளும் அவற்றின் வழி பெறப்பட்ட அடிப்படைக் கருத்துகளும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் முறையிலாக அமைவதுண்டு.
இம்முறையில் உள்ள சிறுசிறு கூறுகள் மாற்றம் பெற்று காலப்போக்கில் செழுமை அடையும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஒருமுறையியலுக்குரிய அடிப்படை அம்சங்களை மாற்றத்திற்கு உள்ளாகிவிடின் மாறிய அம்சங்கள் பழைய முறையியலுக்கு உரித்தாக இராது. அவ்வாறு அடிப்படையில் மாறி அம்சங்கள் புதிய தத்துவத்துக்குறிய புதிய முறையியலாக அமையும் பழைய தத்துவத்தின் நீட்சியாக இருக்காது இது அனைத்து தத்துவத்திறக்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ஆத்திகம் என்பது இயற்கையையும் சமூகத்தையும் விளங்கிக்கொள்ளும் ஒரு நெறிமுறை ஆகும். மனித முயற்சிக்கும் செயல்திறனுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆற்றல் உலகை கட்டுப்படுத்துகிறது என்பது இதன் அடிப்படைக் கருத்து ஆகும் . இதை கடவுள் என்றும் தலைவிதி என்றும் மூலக் கருத்து என்றும் பல பெயர்களில் அழைப்பர்.
இது ஆத்திக முறையில் ஆகும் இதை விடுத்து விட்டு கடவுள் இல்லை என்பதும் மனித முயற்சி முதன்மையானது என்பதும் தலைவிதி பொய்யானது என்பதும் ஆத்திகத்தில் இவற்றை அடக்க முடியுமா முடியாது அப்பொழுது நமக்கு வேறு ஒரு தத்துவம் அதற்குரிய முறையியலில் தோன்றுகின்றன இப்படி ஒவ்வொரு தத்துவத்துக்கும் உரிய அடிப்படை அம்சங்கள் உண்டு.
இவ்விதத்தில் மார்க்சிய முறையிலுக்கான அடிப்படை அம்சங்கள் உண்டு இது தனக்கென உரித்தான வழியில் உலகை விளக்கிக் கொள்ளவும் மாற்ற முனைகின்றன. இந்த அடிப்படை அம்சங்களில் சிற்சில மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டு உள்ளன ஆனால் அவை அடிப்படை அம்சங்களை தலைகீழாக மாற்றி விடவில்லை. இந்த அடிப்படை அம்சங்கள் முற்றிலும் மாறினவெனில் அவை மார்க்சியத்தின் எல்லையை கடந்து விடுகின்றன.மார்க்சிய மற்ற கருத்துகளை தோற்றுவிக்கின்றன. இவ்விடத்தில் மார்க்சியத்தையும் மார்க்சியம் அற்ற போக்கையும் பிரிக்கும் எல்லைக்கோடு தென்படுகிறது.
மேலும்
” இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய-லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இயற்கைத் தோற்றங்களை அணுகும் முறையிலும் அவற்றைக் கூர்ந்து பரிசீலித்து மனதால் உணரும் முறையிலும் இயக்கவியலைப் பயன்படுத்துவதாலும், இயற்கைத் தோற்றங்களை விளக்குவதிலும் அவற்றுக்குக் கருத்து உருவம் கொடுப்பதிலும் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதாலும், இந்த உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.”
மார்க்சின் ஒரு புதிய சித்தாந்தம் அதுவே இயக்கவியல் பொருள் முதல் வாதமாகும். இச்சித்தாந்தம் மார்க்ஸ் கண்ட மனிதவரலாற்றுடன், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற விஞ்ஞானத்துடன் இணைந்தது. சமுதாயத்தின் இயங்கியல், அதனால் ஏற்படும் சிந்தனை மாற்றம், முரண்பாடுகள், அவற்றால் ஏற்படும் வளர்ச்சிப் போக்குகளை விஞ்ஞான பூர்வமாக விளக்குவது. மதம் சார்ந்த கருத்தியல் வாதத்திற்கு இது முரணானது.
இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்ற சித்தாந்தத்தைக் கிரகிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படலாம்.
லெனின் இச்சித்தாந்தத்தை மிக எளிமையான முறையில் விளக்கி உள்ளதை பாருங்கள்.
“எல்லாச் சித்தாந்த வாதிகளும் உலகத்திற்குப் பல்வேறுவகையாக விளக்கம் கூறியவர்களே. அதை எவ்வாறு மாற்றுவது என்பதே எமது வினா” என்றார் மார்க்ஸ். உலகை மாற்றியமைக்கக் கூடியது அரசியல் செயற்பாடே. இது ஒரு புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம். ஆகவே இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்பது அரசியற் செயற்பாடு. ‘புரட்சிகர அரசியற்கோட்பாடின்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது’ என்றார் லெனின்.
மார்க்சினுடைய இப்புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம் உலகை வேகமாக மாற்றக் கூடிய உந்து சக்தியாக விளங்குகிறது. பாட்டாளிகளுக்காகவே கண்டு பிடிக்கப்பட்ட இச்சித்தாந்தத்தைப் பாட்டாளிகளே விரைவில் கிரகித்துக் கொள்ளுகின்றனர். இச்சித்தாந்தத் தைக் கிரகித்துக் கொண்டதும் அது ஓர் உந்து சக்தி ஆகிறது. புரட்சிகர நடைமுறைக்குத் தூண்டுகிறது; வேகமாகப் பாட்டாளிகள் உலகை மாற்றி வருகின்றனர், தம் விலங்குகளை ஒடித்து.
மார்க்சின் சித்தாந்தத்தின் மிகப் பெரிய வெற்றி இதுவே ஆகும். உலக சமூக அமைப்பை வேகமாக மாற்றுவதற்குரிய விஞ்ஞான நடை முறையைக் கண்டவர் மார்க்சே. அதையே யுகம் யுகமாக அவரது பெயரும் சேவையும் நீடிக்கும் என்று எங்கெல்ஸ் கூறினர்.
சமுதாயத்தை அறிவியல் நோக்கில் – அணுகுமுறையில் பார்ப்பதும் படிப்பதும் சரியான முறையாகும். அறிவியல் இரு வகைப்படும் இயற்கை அறிவியல், சமூக அறிவியல் என்பன அவை,
இயற்கை அறிவியல்:
இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry) போன்றவை. உற்பத்தி சக்திகளைப் பற்றி விளக்குவன. பொருள் உற்பத்தியைப் பெருக்கவும் பெரும் பொருளீட்டவும் பயன்படும். ஆளும் வர்க்கமும் அரசும் இதில் பெருங் கவனம் செலுத்துதலும் பெரும் பணச் செலவிடலும் இயல்பே.
சமூக அறிவியல்
மானிடவியல், தொல்பொருளியல், பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம், நீதி போன்றவை இவற்றுள் அடங்கும். இவை அறிவியல் முறையில் கற்றுத்தரப்படுவதில்லை. ஏன்? இவை உற்பத்தி உறவுகளைப் பற்றியும் அதைப் பாதுகாத்து நீதிப்படுத்தும் மேல்மட்ட அமைப்புக்களைப் பற்றியும் அல்லவா பேசுகிறது.
பயன்பட்ட நூல்கள்.
தோழர்களே நான் இதனை தயாரிக்க பயன்படுத்திய நூல் விவரங்களை இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் (NCBH), மார்க்சிய திறனாய்வுச் சிக்கல்கள் கோ.கேசவன், இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஏ. நிசார் அகமது பாரதி புத்தகாலயம்…. இன்னும் சில இதில் உள்ள கருத்துகள் எல்லாம் நமது முன்னோடிகளினுடையவையே.
நன்றி தோழர்களே….
சீன கம்யூனிஸ்ட் கட் சியின் ஏழாவது தேசிய மாநாட்டிலான தனது முடிவுரையில் தோழர் மா சே-துங் மக்களைப் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறு அறைகூவினார். புரட்சிகர மக்கள் நம்பிக்கை கொண்டிருந்து, பிற்போக்காளர்களுக்கு அஞ்சாமல், இறுதிவரை போராட்டத்தில் விடாப்பிடியாக இருக்கத் திடமும் கொண்டிருக்கும் பட்சத்தில் புரட்சி நிச்சயமாக வெற்றியடையும் என்பதைக் காண்பிக்க அவர் ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ என்ற புராதன சீன குட்டிக் கதையை மேற்கோள் காட்டினார்:
மாநாட்டின் நெறியைப் பிரசாரப்படுத்துவதில் எமது நோக்கம் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் முழுக் கட் சியினதும் சகல மக்களினதும் நம்பிக்கையை வளர்ப்பதா கும். உறுதியுடனும், தியாகத்திற்கு அஞ்சாமலும், வெற்றியை ஈட்டுவதற்காகச் சகல கஷ்டங்களையும் கடக்கக் கூடி யதாக, நாம் முதலில் முன் அணியினரின் அரசியல் அறிவுணர்வை உயர்த்த வேண்டும். ஆனால் இது போதாது; முழு மக்களும் வெற்றிக்காக எம்முடன் சேர்ந்து மனமுவந்தும் சந்தோஷமாகவும் போரிடும் வகையில் நாம் முழு மக்களதும் அரசியல் விழிப்புணர்வைத் தட்டியெழுப்பவும் வேண்டும். சீனா பிற்போக்காளர்களுக்கல்ல , சீன மக்களுக்கே சொந்தம் என்ற நம்பிக்கையை நாம் சகல மக்களிடத்தும் மூட்ட வேண்டும். ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்” என்றொரு புராதன சீன பரம்பரைக் கதை உண்டு. அது மிக மிகப் பழங் காலத்தில் வட சீனாவில் வாழ்ந்த, வடக்கு மலையின் மூடக் கிழவன் என அழைக் கப்பட்ட ஒரு கிழவனைப் பற்றியது. அவனது வீடு தெற்கு முகமாக இருந்தது; அதன் வாயிலுக்கு அப்பால் வழியை அடைத்தபடி ராய் ஹாங், வாங்வூ என்ற இரு பெரும் மலைச் சிகரங்கள் இருந்தன. அவன் தன் மக்களைக் கூட்டிக் கொண்டு, அவர்களோடு மண்வெட்டிகள் சகிதம் மிகுந்த மன உறுதியுடன் இந்த மலைகளை வெட்டத் தொடங்கினான், புத்திசாலிக் கிழவன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு நரைத்தாடி இவர்கள் செய்வதைக் கண்டுவிட்டு, ”நீங்கள் செய்வது எவ்வளவு முட்டாள் தனம்! நீங்கள் ஒரு சிலர் இந்த இரண்டு பிரமாண்டமான மலைகளையும் வெட்டியெடுப்பது முடியவே முடியாதது.” எனக் கிண்டலாகக் கூறினான். அதற்கு மூடக் கிழவன், ”நான் சாக எனது மகன்கள் தொடர்ந்து வெட்டுவார்கள்; அவர்கள் சாக என் பேரப் பிள்ளைகள் இருப்பார்கள்; பின்னர் அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமாக எல்லையின்றித் தொடர்ந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகத்தான் இருந்தாலும் இத்த மலைகளால் இருப்பதை விட மேலே வளர முடியாது ; நாங்கள் ஒவ்வொரு முறையும் சிறிது வெட்டியெடுக்க அவை அவ்வளவுக்குக் குறையும். ஏன் எங்களால் அவற்றை வெட்டி அகற்றிவிட முடியாது?” எனப் பதிலளித்தான். புத்திசாலிக் கிழவனின் பிழையான கருத்தை மறுத்துவிட்டு அவன் தனது நம்பிக்கையில் சிறிதும் தளராமல் தினமும் வெட்டிக்கொண்டே இருந்தான். கடவுள் இதனால் மனமிரங்கி இரு தேவதைகளை அனுப்ப, அவை அம்மலைகளைத் தம் முதுகுகளில் தூக்கி எடுத்துச் சென்றன. இன்று, சீன மக்கள் மீது அசையாத சுமையாக இரு பெரும் மலைகள் கிடக்கின்றன. ஒன்று ஏகாதிபத்தியம், மற்றையது நிலப்பிர புத்துவம். சீன கம்யூனிஸ்ட் கட்சி இவற்றை வெட்டி எடுத்து விடுவதென்று நெடுங்காலத்துக்கு முன்பே தன் மனதில் திடங்கொண்டுவிட்டது. நாம் விடா முயற்சியுடன் இடையறாது வேலை செய்ய வேண்டும்; அப்போது நாமும் கடவுளின் நெஞ்சைத் தொடுவோம். எமது கடவுள் சீன வெகுஜனங்களே யன்றி வேறெவருமல்ல அவர்கள் எழுந்து நின்று எம்மோடு சேர்ந்து வெட்டினால், இந்த இரு மலைக ளையும் ஏன் வெட்டி அகற்ற முடியாது?
1946-ல் சியாங் கே- ஷெக் எம்மைத் தாக்கிய போது எமது தோழர்களில் பலரும் நாடு முழுவதினதும் மக்களும் யுத்தம் வெல்லப்பட முடியுமா என்பது பற்றி ஆழ்ந்த கவலை கொண்டனர். நானும் இது பற்றிக் கவலை கொண்டேன். ஆனால் ஒரு விஷயத்தில் எமக்குத் திட நம்பிக்கை இருந்தது. முழுமையும் சம்பந்தப்பட்ட வரை நாம் விரோதியைத் துச்சப்படுத்தாவிட்டால், நாம் சந்தர்ப்பவாதத் தவறை இழைப்பவர்களாவோம். மாக்ஸும் எங்கெல்ஸும் இரு மனிதர்கள் மட்டுமே. இருப்பினும் அந்த ஆரம்ப நாட் களிலேயே அவர்கள் முதலாளித்துவம் உலகெங்கும் வீழ்த்தப்படும் எனப் பிரகடனம் செய்தனர். ஆனால் திட்டவட்டமான பிரச்சினைகளையும் குறிப்பிட்ட விரோதிகளையும் கையாள்வதில் நாம் விரோதிகளைப் பாரதூரமாகக் கொண்டாலன்றி நாம் பெரும் தவறை இழைப்பவர்கள் ஆவோம்.
அடுத்த வகுப்பில் தொடரலாம் தோழர்களே…..