இந்திய புரட்சிகர சக்திகள் பிளவுண்டு, சிதறி இருக்கக் காரணம் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கு இடமில்லை, ஒத்தக் கருத்தைக் கொண்ட கட்சியை நேசிக்கும் இயக்க மறுப்பியல் கண்ணோட்டமே.
மறுபட்ட கருத்தை அனுமதிக்க மறுக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனை முறையை கொண்டிருப்பதால் தோழர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்த்து பகையாக அணுகும் இவர்களின் சிந்தனா சக்தியை அறிந்தாலே இவர்களின் மார்க்சிய புரிதல் வெளிச்சமாகும் தோழர்களே….
பல மாதங்களாக அமைப்புக்குள் நடக்கும் போராட்டம் சில பொதுவெளியில் வரும் பொழுது வேதனை அளிக்கிறது, உண்மையில் மார்க்சிய ஆசான்கள் தங்களின் உயிரினும் மேலாக வளர்தெடுத்த தங்களின் கட்சி எப்படியெல்லாம் போக கூடாதோ அப்படியெல்லாம் போய் கொண்டிருப்பதும் இன்றைய நிலையில் அதனை பற்றிய ஒரு தேடுதலே எனது இந்தப் பதிவு.
பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததிலிருந்து கூடுதலாக பொருளாதார கலாச்சார ரீதியான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சொல்லொணா துயரத்திற்க்கு ஆளாகி வருகின்றனர், ஆளும் வர்க்கத்தில் கொடுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முன்னணி படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமை பெரும் சோகமானது.
இந்திய பொதுவுடமை இயக்கத்தை பொருத்த வரை கணிசமான காலம் இடது வலது என்ற திருத்தல்வாத துரோகத்தால் வீணாகிப் போனது இன்றைய நிலையில் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்க வேண்டிய மா-லெ கட்சி சிதறுண்டு பல குழுக்களாக தங்களின் குறுங்குழுவாத போக்கால் ஒன்றுபட முடியாமல் ஆளும் கும்பலுக்கு எதிராக நிற்க்க பலமற்ற சக்தியாக இருப்பதனால் மேலும் பழைய சமூக கருத்துகளின் தாக்கத்தால் ஒன்றிணைப்புக்கும் வளர்சிக்கும் பாதகமான அம்சங்களை பேசவே இந்தப் பதிவு.
ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்ட வேண்டிய இந்த நேரத்தில் பல முரண்பட்ட கருத்துகளை பற்றி பேச வேண்டி உள்ளது.(இதனை பற்றி பின் பார்ப்போம் முதற்கண் அமைப்பு சார்ந்த பிரச்சினை)
முப்பத்து ஆண்டுகளாக ஒரு அமைப்பு கேள்வி கேட்கும் எல்லோரையும் வெளியேறுவதற்கு வைக்கும் குற்றச்சாட்டுகள் சில அதில் முக்கியமாக கலைப்புவாதி, அந்நிய சக்தி, சரி அப்படி அமைப்பின் புரட்சி கர தன்மையை அறிந்தே மேல் செல்வோமே!!!
(1). தலைமையானது தனது கொள்கைகளையும் திட்டங்களையும் கட்சியின் (அமைப்பின்) முன்வைத்து விவாதிப்பது பிளீனம் மாநாடு அரசியல் அமைப்பு வழிமுறைகளை உருவாக்குவது, அதனை செயல்படுத்த தலைமை கமிட்டி ஊழியர்களை உருவாக்குதல் இவை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பணி ஆனால் இங்கோ இவை நடைமுறையில் இல்லாத போது என்னத கேட்க?.
(2). தலைமை என்பது விமர்சனம் சுயவிமர்சனம் ஜனநாயக மத்திய துவத்தை கட்சிக்குள் கடை பிடிக்காமல் அராஜகவாதமாக சர்வாதிகார போக்கு அமைப்பை வளர்தெடுக்கவா?.
(3). தத்துவத்தில் ஓட்டாண்டிதனம்,அரசியலில் வலது விலகல் போக்கு, அமைப்பில் எதேச்சாதிகாரம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் அமைப்பு சுய கலைப்பை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது….
(அரசியல் கருத்துக்களை வரவேற்க்கும் அதே நேரத்தில் அரசியல் அற்ற வாதங்களை ஏற்க இடமில்லை…. இன்னும் வரும் பல செய்திகளை தாங்கி)
இவை பதிவு செய்யப்பட்டவை