இயக்க மறுப்பியலே பெரியார் சிந்தனை-சி.பி
இயக்க மறுப்பியலே பெரியார் சிந்தனை-சி.பி

இயக்க மறுப்பியலே பெரியார் சிந்தனை-சி.பி

நேற்று ஒரு கிளப் அவுஸ் விவாதம் அதில் நான் கேட்ட கேள்விக்கு எதை எதையோ பதிலாக கொடுக்க நினைத்த அந்த தோழர்கள் ஏற்பட்ட விவாதம் அதற்க்கான பதிலளிக்க தவறிய அந்த தோழர்களுக்கு பதிலாக இந்தப் பதிவு…….பெரியாரையும் அவர் நாத்திக வாதம் பற்றி பேசும் தோழர்கள் பெரியாரின் மார்க்சிய விலகல் என்னவென்பதனை புரிந்துக் கொள்ளவே இந்தப் பதிவு தோழர்களே…..பெரியாரின் நாத்திகம் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே. கடவுள், மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற அவரது கருத்து அபத்தம் .மனிதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடும்போது இயற்கை விதிகளை புரிந்து கொள்ளாதபோது உண்டானது கடவுள் நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கையை பலப்படுத்தி மனிதனை தனக்கு அடிமையாக்க சுரண்டும் வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் மதத்தை உருவாக்கின என்பதே உண்மை. இந்தியாவில் பார்ப்பனர்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால் கடவுள் நம்பிக்கையை அவர்கள்தான் உருவாக்கினார்கள் இல்லையென்றால் மக்களுக்கு கடவுள் நம்பிக்கையே வந்திருக்காது என்பது அபத்தம். ஏற்கத்தக்கதல்ல.மனிதனின் கடைசி புகலிடம் மதம் என்று மார்க்ஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? மனிதன் தான் நினைத்தது நடக்காத போது வேறுவழியின்றி கடவுளைநாடிச் செல்கிறான் என்பதே இதன் அர்த்தம். அப்படி தேவைகள் பூர்த்தியாகி அவன் நினைத்தபடி நடக்கும் போதும் அவன் கடவுளை நாட வேண்டிய அவசியம் இல்லைஎன்றுதானே இதற்கு அர்த்தம்.மனிதனின் தேவை நிறைவுபெற்று அவன் நினைத்தபடி வாழ்க்கை அமையும்போது அவன் கடவுளை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விதிகளை புரிந்து கொள்ளும் பொழுது மூடநம்பிக்கையும் ஒழிந்து போகும்.ஆகவே மூடநம்பிக்கை, கடவுள், மதம் ஆகியவை ஒழிந்து போக பார்ப்பானை ஒழித்துவிட்டால் ஒழிந்து போகாது. மனித வாழ்க்கைக்கு உகந்த சோசலிச சமுதாய மாற்றமே இதற்கு தீர்வாகும்……..இயக்க மறுப்பியல்++++++++++++++++++++இதனை பெரியாரின் நீண்ட பகுத்தறிவாத இயக்க நடைமுறையில் சில அறிந்துக் கொள்ள பயன்படுத்த நினைக்கிறேன். ஏனெனில் இயக்க மறுப்பியல் என்ன அவை என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதனை தெளிவடைய பயன்பெறும் என்ற நோக்கில் இதனை பேசுகிறேன் இங்கே பெரியாரின் அரசியலை அல்ல தத்துவத்தை மட்டுமே பேசுகிறேன். என் கருத்தில் முரண்படும் தோழர்கள் அதற்கான சான்றாவணங்களில் இருந்து தெளிவடைந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.பெரியாரின் தத்துவ விளக்கமானது மனித அமைப்பு பற்றி பேசும்போது அவர் உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே பல்வேறு பொருள்களின் கூட்டுப் பொருள் என்றும் அவை அனைத்தும் இயங்குவது இயங்காத ஜீவன் உள்ளது ஜீவன் இல்லாதது என பிரிக்க முடியும் என்றும் கூறுகிறார். இந்த பகுப்பாய்வு முறை மார்க்சிய தத்துவ ஞானம் இயற்கை விஞ்ஞானம் நிரூபித்து உண்மைகளுக்கு எதிரானதாகும் பதினெட்டாம் நூற்றாண்டின் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் அதாவது இயக்கம் மறுப்பியல் கண்ணோட்டத்திற்கு உட்பட்டது, இதையே நாம் கொச்சை பொருள்முதல்வாதம் இயக்க மறுப்பியல் என்கிறோம்.பெரியார் மார்ஸ்க்கும் எங்கெல்சுக்கும் பிந்திய காலத்தைசேர்ந்தவர் அதாவது நமது காலத்தை சேர்ந்தவர். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் பல படிகள் வளர்ந்த காலத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் வளர்ந்த விஞ்ஞான கோட்பாடுகளையோ மார்க்சும் எங்கெல்சும் வகுத்து இயங்கியல் பொருள்முதல்வாத விதிகளையோ அறிந்து கொள்ளவில்லை, அவரைப் பொறுத்தவரை சமுதாய வரலாற்றில் தத்துவஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளாமல் பதினெட்டாம் நூற்றாண்டின் நிலையில் தன்னைப் பின் தள்ளி இருக்கச் செய்து கொண்டார். இதனால் அவருடைய தத்துவக் கண்ணோட்டம் முழுவதும் கொச்சை பொருள்முதல்வாத அடிப்படையில் அமைவது தவிர்க்கவே முடியாதவையே.கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கைகளை ஒழிப்பது சாத்தியமா?இன்றைய மத நம்பிக்கை மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அதாற்க்கு ஆளும் வர்க்கம் துணைப்போகிறது அப்படியெனில் வெறும் கருத்தால் மதம் கடவுள் நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா? முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்பட வேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும் போது அதாவது சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்வதுடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது. “ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான்” என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.ஆனால் இங்கே பெரியாரின் நிலை சீர்திருத்தம் மட்டுமே உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக இருந்தது ஏனென்றால் அப்பொழுது உயிரியல் ரசாயன விஞ்ஞானங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தது. இயந்திரவியல் அடிப்படையில் தத்துவஞானிகள் விளக்கம் அளித்தனர். இவை இயக்க மறுப்பியலை அடித்தளமாக கொண்டிருந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன 1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு, 2). சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது. 3). பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு, இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது. இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை, எனவே பெரியாரின் இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்திய பண்பானது இயக்கியலை புரிந்துக் கொள்ளாத போக்கே ஆகும். பெரியார் கூறுகிறார் “உயிர் என்பது பொருள் தன்மையற்றது பொருள் தன்மையற்றது என்றால் இயங்கும் தன்மையுடையதாகும். இயங்கும் தன்மை உடையது என்றால் அதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் இயந்திரத்தை அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை சொல்லலாம் .எது போல என்றால் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் ஒரு எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பது போலவும் அசைவின் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இயங்குவது போல இயங்கும் தன்மை உயிருக்கு இருப்பதாக….” ( பெரியாரின் தத்துவ விளக்கம் பக்கம் 35-38).பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.பெரியார் கூறுகிறார், “இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்….( பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)பகை வர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது. இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.மனிதனை அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.”எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்” என்று எங்கெல்ஸ் கூறினார்.எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை படைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பைப் மட்டுமே போராட்ட வடிவமாக கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் “ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது” காண மறுக்கிறது. இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே பெரியாரை சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.இன்றும் மக்களி வறுமைக்கும் பசி பட்டினிக்கும் காரணமான ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க்காமல் பார்பனர்களை குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர். இவை சமூக வளர்ச்சிப் போக்கை கணக்கில் கொள்ளாமையே என்பேன்.LikeCommentShare

0 Comments

https://www.facebook.com/palanichinnasamy/posts/4130767143685041?notif_id=1629352886496378&notif_t=feedback_reaction_generic&ref=notif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *