இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் விதிகள்
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் விதிகள்

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் விதிகள்

இன்றைய தலைப்பான “ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்” உப தலைப்புகளான

1).பருப்பொருள் மற்றும் பருப்பொருளும் இயக்கமும்

2). விசும்பும் காலமும் (இடமும் காலமும்)(களமும் காலமும்)

3).உணர்வு

4).பொருள்முதல்வாத இயக்கவியலின் விதிகள்.

5). பொருள்முதல்வாத இயக்கவியலின் கருத்தினங்கள்.

6). அறிவின் அடிப்படையும் அளவுகோலும் நடைமுறையே.

7). உண்மை அறிவதற்க்கான இயக்கவியல் பார்வை

 தோழர்களே -சி.பி.

நான் இன்றைய வகுப்பில் நுழையும் முன்னர் கடந்த வகுப்புகளில் சிலவற்றை தெளிவடைந்து மேலே செல்வோம் தோழர்களே.

வர்க்கப் போர் என்பது ஒரு மகத்தான பிரச்சினை அதன் ஒவ்வொரு தனி அம்சங்களையும் நாம் பார்க்க வேண்டும் அத்துடன் அதை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் அப்படி பார்க்காமல் வர்க்கப் போரின் எந்த தனி அம்சத்தையும் பற்றியும் நாம் முடிவு கட்ட முடியாது .ஆகவே மூன்று முனைகளிலும் போராடும் திறமை பெற்றிருந்தால் மட்டும் தான் இயக்கத்தில் சிறந்த முறையில் இயங்க முடியும்.

அதாவது

1).பொருளாதார போராட்டம்

2).அரசியல் போராட்டம்

3).தத்துவ அறிவுப் போராட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.

சரி தோழர்களே சற்று பின்னோக்கி பார்ப்போம்

சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள் இரண்டே இரண்டின் அடிப்படையில் தான் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன என்பதை உணரலாம்.. அந்த இரண்டு எவை?

1). கருத்துமுதல்வாதம்  2).பொருள்முதல்வாதம்

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவினூடே அனைத்து நாடுகளின் தத்துவப் பிரிவுகளும் ஓய்வு இன்றி செயல்படுவது வரலாறு உறுதி செய்துள்ளது. இவை இரண்டும் தமக்கே உரித்தான சமூக உணர்வு மானிட உள்ளக் கிளர்ச்சியைத் தத்துவார்த்த தரத்தில் மனிதர்களிடையே வளர்ப்பதில் அக்கறை காட்டுகின்றன.

(இன்றைய ஆட்சியாளர்கள் நிலையை கருத்தில் கொள்ளலாம்)

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏன் கற்க்கிறோம்? ஏனெனில் மற்ற தத்துவங்கள் அறிவியலை புறக்கணித்து நம்பிக்கையை மட்டுமே துணைக்கு வைத்துள்ளது ஆனால் மார்க்சியம் எல்லா அறியல் வளர்ச்சியையும் தன்னகத்தே கொண்டு வளர்வதோடு சமூகத்தில் ஏற்படும் எல்லா சிக்கல்களுக்கும் மார்க்சிய விஞ்ஞானமானது அண்மைகால அறிவியல் வளர்ச்சியோடு தன்னை வளர்த்து கொண்டு அதற்கான பதிலுறைக்கும் திறன் கொண்டது என்றால் மிகையாகாது தோழர்களே.

ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது?

கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு.

ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும்.

1 நொடிக்கு = 299,792.458 கிலோமீட்டர்கள்
1 நிமிடத்திற்கு = 299,792.458 x 60 = 17,987,547.48 கிலோமீட்டர்கள்
1 மணிக்கு = 17,987,547.48 x 60 = 1,079,252,848.80 கிலோமீட்டர்கள்
1 நாளைக்கு = 1,079,252,848.80 x 24 = 25,902,068,371.20 கிலோமீட்டர்கள்
1 வருடத்திற்கு = 25,902,068,371.20 x 365.242 = 9,460,523,256,033.83 கிலோமீட்டர்கள்

அதாவது, ஒன்பது ட்ரில்லியன் நானூற்றி அறுபது பில்லியன் ஐநூற்றி இருபத்தி மூன்று மில்லியன் இருநூற்றி ஐம்பத்தாறு ஆயிரத்து முப்பத்து மூன்று ( nine trillion four hundred sixty billion five hundred twenty-three million two hundred fifty-six thousand thirty-third) கிலோமீட்டர்கள்.

சுருக்கமாக = 9.4605284 × 1012 கிலோமீட்டர்கள்

தோராயமாக 9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் என்பதே ஒரு ஒளியாண்டு தூரமாகும்.

வானவியல் அலகு (Astronomical Unit-AU)

இயக்கவியலை எல்லோரும் புரிந்து கொள்ளமுடியும் காரணம் அது பளிங்குபோல் தெளிவானது மர்மம் புதிர் ஒன்றும் அதில் கிடையாது அதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் அதில் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை அதை எப்படி புரிந்து கொள்வது என்று இப்போது பார்ப்போம்.

உதாரணமாக இதில் நாம் கைத்தொழில் எடுத்துக் கொள்வோம் அதாவது தச்சர்கள் ஆரம்பகட்டத்தில் கை கொண்டு உருவாக்கிய பல்வேறு பொருள்களும் இன்று அதனை உருவாக்க பல்வேறு மிஷனரிகள் உள்ளது அதில் அவர்களாகவே சிந்திப்பதை மெசின் செய்யும் உயரிய வடிவம் அல்லது இன்னொன்றை பேசுவோம்….

நமது கைகளும் விரல்களும் வேலை செய்தற்குரிய கருவிகள் சிந்தனையின் ஒரு வேலை செய்தல் பிரிவுதான் மிகவும் நுணுக்கமாக செய்ய வேண்டிய ஒரு வேலையை செய்வதற்குரிய சில சமயங்களில் நம் விரல்கள் திறனற்று இருக்கின்றன..

1).பருப்பொருள் மற்றும் பருப்பொருளும் இயக்கமும்

அ).பொருள் என்பது என்ன? என்று முதலில் பார்க்க வேண்டும் அதன் பிறகு

ஆ).பொருள் எப்படி எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்க்கவேண்டும்.

 முதல் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் கொடுக்கும் பதில் தான்  பொருள் என்பது புற நிலையில் உள்ள ஒரு எதார்த்தம் அது மனதை சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது மனதில்லாமலே அது இருக்க முடியும். அது இருப்பதற்கு மனம் அவசியமில்லை என்கிறார்கள் இதைப் பற்றி சொல்லும்போது “பொருளைப் பற்றிய கருத்தோட்டம் குறிக்கிறதெல்லாம் நம் புலன்உணர்ச்சிகள்  மூலமாக நாம் அறியும் புற நிலை எதார்த்தம் தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை” என்று லெனின் கூறினார். (பொருள்முதல்வாதமும் அனுபவஞான  விமர்சனமும்  என்ற அவரது நூலில் 323 ஆம் பக்கம்).

இரண்டாம் கேள்விக்கு பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்ற கேள்விக்கு பொருள் முதல் வாதிகள் என்ன சொல்கிறார்கள் இந்த கேள்விக்கு விடை தர வேண்டியவர்கள் நாங்கள் அல்ல விஞ்ஞானிகள்  தான் இதற்கு விடையளிக்க வேண்டும் என்கிறார்கள் அதாவது பண்டைய காலத்தில் இருந்து தற்காலம் வரை மாறினதே இல்லை என்ற முந்தைய கேள்விக்கான பதிலளிக்கும் பொருள் முதல்வாதிகள் காலத்துக் காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது, மாறித்தான் தீர வேண்டும் ஏனெனில் அவை விஞ்ஞான வளர்ச்சி யோடு சார்ந்து நிற்பது.

ஆரம்பகால அணு கொள்கை அன்மைகால் அணுக் கொள்கை இதனால் பொருள் அற்ற நிலை…..

2). விசும்பும் காலமும் (இடமும் காலமும்)(களமும் காலமும்

அ).பொருள் என்பது இன்னின்ன காலத்தில் இன்னின்ன இடத்தில் இருக்கிற தன்மை பெற்றது என்ற காலத்தையும் களத்தையும் குறித்து வரையறுக்கின்றோம்.

ஆ). பொருள் இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை பெற்றது என்று இயக்கத்தையும் குறித்து வரையறுக்கின்றோம். இந்த இரண்டு அம்சங்களும் பற்றி சொல்லும் பொழுது காலம் களம் என்பது நமது மனதில் வைத்து எண்ணங்களே என்று ஆன்மீகவாதிகள் நினைக்கிறார்கள்.

அப்படி அல்ல களம் நம் மனதில் இல்லை நாம் தான் களத்தில் இருக்கின்றோம் என்று பொருள் முதல் வாதிகள் சாதிக்கிறார்கள் நமது வாழ்வு விரிந்து மலரும் காலம் என்பது அத்தியாவசியமான இந்த நிபதனையாகும் ஆகவே நமது மனதுக்கு வெளியே காலத்திலும் களத்தில் நிலைத்துக் கொண்டிருப்பதே பொருள் என்று பொருள்முதல்வாதம் அறுதியிட்டு கூறுகிறது.

“காலம் களம் என்பவை எல்லாம் வாழ் நிலைக்கு ஆதார வடிவங்கள் ஆகும். களத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இருக்கமுடியும் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதேபோல் அதேபோல் காலத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இருக்கமுடியும் என்று சொல்வதும்  முட்டாள்தனமாகும்” என்று எங்கெல்சு கூறுகிறார்.. (டூரிங் மறுப்பு நூலில் 52- ஆம் பக்கம்).

3).உணர்வு

நமது உணர்வைச் சார்ந்திராமலே சுதந்திரமாக ஒரு யதார்த்தம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம் . நமக்கு முன்னாலேயே இருந்து வந்தது என்று நாமெல்லாம் நம்புகிறோம் நாம் மறைந்த பிறகும் அது நீடித்து இருக்கும் என்று நாம் நம்புகிறோம். நாம் பிறப்பதற்கு முன்னாலேயே சென்னை நகரம் இருந்தது அதே போல் அது தரைமட்டமாகினலே தவிர நாம் இறந்த பிறகும் அவை இருந்துக் கொண்டுதான் இருக்கும்.

சென்னை பற்றி நாம் சிந்திக்காமல் மறந்திருக்கும் போது கூட சென்னை என்னவோ இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது நம்மைப் பொறுத்தவரை சர்வ நிச்சயம். அதைப் போலவே நாம் என்றைக்கும் பார்த்திராத நாம் பயணித்து அறிந்திறாத பல்லாயிரக்கணக்கான நகரங்கள் உலகெங்கும் உள்ளன. அவற்றின் பெயர் கூட நமக்குத் தெரியாது. இருந்தாலும் அவை இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே விஞ்ஞான வளர்ச்சி ஆன்மீக மாய வாதத்தை குழி தோண்டி புதைக்கிறது.

இயக்கம் என்பது பொருளின் வாழும் தன்மையாகும் வாழ்க்கை முறையாகும். இயக்கமற்ற பொருளைப் பற்றி எப்படிச் சிந்தித்துப் பார்க்கவும் முடியாதோ அதேபோல் பொருளற்ற இயக்கத்தை பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது” என்கிறார் எங்கெல்ஸ் டூரிங் மறுப்பு நூலில் 70ஆம் பக்கம்.

இன்றைய நிலையில் இருக்கும் பூமியானது ஒரு நீண்ட காலத்திய பரிணாமத்தின் மொத்த விளைவு ஆகும் அதாவது நிதானமான ஆனால் இடையறாத இயக்கத்தின் விளைவே ஆகும் என்பது நமக்குத் தெரியும்.

 ஆகவே பொருள் இருக்கிறது என்று நிரூபித்துக் காட்டிய பிறகு குறிப்பாக பின்வருமாறு வரையறுக்கின்றோம்.

இயங்கிக்கொண்டே இருக்கும் பொருளே தவிர உலகில் வேறு ஒன்றும் இல்லை அந்த இயங்கும் பொருள் காலத்திலும் களத்தில் தான் இருந்து இயங்க முடியுமேயல்லாமல் வேறெந்த  ரீதியிலும் இயங்க முடியாது”  லெனின் எழுதிய பொருள்முதல்வாதமும் அனுபவஞான விமர்சனம் நூல் பக்கம் 236.

முடிவாக…

இந்தக் கருத்துகளின் விளைவாக என்ன முடிவாகிறது? கடவுள் என்ற கருத்து “பரிசுத்த ஆன்மா , பரமாத்மா” என்ற கருத்து , பிரபஞ்சத்தை சிருஷ்டித்து கர்த்தா என்ற கருத்து இருக்க சாத்தியமே இல்லை என்று ஆகிறது. ஏனெனில் காலத்துக்கும் களத்துக்கும் அப்பாற்பட்ட கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது. காலத்துக்கு அப்பாற்பட்ட இயங்கும் கடவுள் அதாவது எந்த குறிப்பிட்ட காலத்திற்கும் நிலை கொள்ளாத கடவுளை அதாவது அங்கே இங்கே என்று எங்கும் இடம் கொண்டிராத கடவுளை நம்புவது என்றால் மாயையான ஆன்மீக வாதத்தில் வீழவேண்டியதுதான் அப்பொழுது விஞ்ஞானத்தை ஆராய்ச்சிகளை புறக் கணிக்காதிருக்க முடியும்.

இந்தப் பிரபஞ்சத்தை கடவுள் படைதிருக்க முடிந்திருக்க வேண்டும் என்றால் இந்த பிரபஞ்சத்தை ஏதோ ஒரு களத்தில் கடவுள் படைத்திருக்க வேண்டும் ஆனால் கடவுளுக்குத்தான் களமே இல்லையே . எனவே சூனியத்திலிருந்து பிரபஞ்சம் பிறந்திருக்க வேண்டும் அற்றது உற்றது என்றாகி இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தை யாரோ படைத்தார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமானால் முதலில் இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபஞ்சம் இருந்திருக்கவில்லை என்றும் அடுத்தபடியாக வெறும் சூனியத்திலிருந்து ஏதோ ஒன்று வெளிவந்தது என்று ஒப்புக்கொள்ள வேண்டும் இது உண்மையிலேயே விஞ்ஞானபூர்வமான தில்லை என்பது நாம் அறிந்ததே.

4).பொருள்முதல்வாத இயக்கவியலின் விதிகள்.

அ).அளவு நிலை பண்பு நிலையாக மாறுதல்

(இயக்க இயல் ரீதியான மாறுதல்)

ஆ).நிலை மறுப்பின் நிலை மறுப்பு

(பரஸ்பர வினை)

இ). எதிர் நிலைகளின் ஒற்றுமையும் மோதலும்

(முரண்பாடு)

1). ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை தனித்த ஒன்றாகக் காணாமல் அதை ஏனைய வற்றோடு இணைத்து ஒரு முழுமையின் பகுதியாகவும் பல்வேறு பொருள்களோடும் அல்லது நிகழ்வுகளோடும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்படுவதாகவும் காணல் வேண்டும்.

2). எல்லாப் பொருள்களும் அல்லது நிகழ்வுகளும் எப்பொழுதும் இடையறாது இயங்கிக்கொண்டு இயக்கப் போக்கில் இருக்கின்றன. அவை மாறுகின்றன வளர்கின்றன அல்லது சிதைகின்றன.

3). ஒரு பொருளில் அல்லது ஒரு நிகழ்வில் ஏற்படும் அளவு மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் பண்பு மாற்றமாக உருப் பெற்று வேறு ஒரு பொருளை அல்லது நிகழ்வை தோற்றுவிக்கும்.

4). எல்லாப் பொருள்களுக்குள்ளும் அல்லது நிகழ்வுகக்குள்ளும் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும் இந்த முரண்பாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும் போராட்டமும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும்.

முதல் விதி. அ). இயக்க இயல் ரீதியான மாறுதல்

இறுதியானது என்று எதையும் இயக்க இயல் கருதுவதில்லை இதற்கு அர்த்தம் இயக்கவியலை பொருத்தவரையில் நாம் ஆராய்ந்து ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சென்ற காலத்தையும் எதிர்காலத்தையும் சொல்வதாகும்.

எனவே எதுவும் நிரந்தரமானதல்ல அதனுடைய இன்றைய நிலை இறுதியானது அல்ல என்று சொல்வேண்டும்.

ஒரு பொருளையோ ஒரு செயலையோ நீங்கள் ஆராய்ந்த பிறகு அவற்றை இயக்க சக்தியின் விளைவாக ஏற்பட்ட மாறுதல்களை எல்லாம் கண்ட பிறகு நீங்கள் கவனித்து தெரிந்த மாறுதல்களைப் பெற்று சொன்ன பிறகு நீங்கள் மேலும் ஆராய்ச்சி ஆழ்ந்து அந்த மாறுதல் இயக்கத்தில் ஏன் ஏற்பட்டது என்று பரிசோதிக்க வேண்டும்.

இரண்டாம் விதி. .நிலை மறுப்பின் நிலை மறுப்பு

இந்த விதியை பொறுத்தவரையில் எதுவும் முடிவாகவில்லை ஒவ்வொன்றும் ஒரு இயக்கத்தின் முடிவாகவும் மற்றொரு இயக்கப் போக்கில் ஆரம்பமாகவும் இருக்கின்றது ஒவ்வொன்றும் எப்போதும் பார்த்தாலும் மாறிக் கொண்டே இருக்கின்றது வளர்ந்து கொண்டே இருக்கின்றது அதனால் தான் முதலாளித்துவ சமுதாயம் சமுதாயமாக மாறும் என்று அவ்வளவு சர்வநிச்சயமாக கருதுகிறோம் ஏனெனில் எதுவும் இறுதியாக நிறைவுற்ற

நிலையை எய்துவதில்லை. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் சோசலிச சமுதாயமாக மாறும் என்று நாம் எவ்வளவு சர்வநிச்சயமாக கருதுகிறோம் ஏனெனில் எதுவும் இறுதியாக நிறைவுற்று நிலையை எய்துவதில்லை.

என்றென்றைக்கும் வளர்ச்சி இருந்துகொண்டேதான் இருக்கும் இதை எல்லாம் கேட்டபிறகு  இயக்க இயல் என்பது ஏதோ தவிர்க்க முடியாதபடி நடந்து விடக்கூடிய விஷயம் என்று நினைத்து விடகூடாது.

ஏனெனில் அப்படி நினைக்க நேரிட்டால் என்னாகும் நாம் விரும்புகிற மாறுதல் சர்வநிச்சயமாக ஏற்பட்டுவிடும் என்று சொல்கிறோமே?

அப்படியானால் நாம் ஏன் போராட வேண்டும் சும்மா இருந்தாலும் அது வர தானே செய்யும் என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.

முக்கியமாக கவனிக்கத்தக்கது ஏனெனில் மார்க்ஸ் சொல்கிறது போல் சோஷலிசம் பிறப்பதற்கு ஒரு மருத்துவச்சி இருக்கவேண்டிய அவசியம் அதனால்தான் ஒரு புரட்சி அவசியமாகிறது.

முன்னே சொன்னது போல் விஷயங்களெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல இந்த மாறுதல் ஏற்படுவதை தடுக்கவோ  துரிதப்படுத்துவோ சக்தி பெற்றிருக்கிற மனிதர்கள் வகிக்கும் பாத்திரத்தை நாம் மறக்கலாகாது( இவை வரலாற்று பொருள் முதல்வாதத்தில் விரிவாக பார்ப்போம்).

ஒவ்வொரு பொருளிலும் விஷயத்திலும் இயக்கப் போக்குகளின் சங்கிலி அமைப்பு ஒன்று இருக்கிறது இந்த இயக்கங்கள் எல்லாம் அந்தந்தப் பொருளின் உள்ளே இயக்க சக்தியின் விளைவாக ஏற்படுகின்ற என்பதை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும்.

மூன்றாம்

 விதி. 3). முரண்பாடு…

பொருள்களும் விஷயங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன இடையறாது பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன சுருங்கச்சொன்னால் இயற்கையை எவ்வகைப்பட்ட இயக்கத்தில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன இவை முதல் இது என்று பார்த்தோம்

ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறுகிறது மட்டுமல்ல அந்தப் பொருள் அதாக இருப்பதோடு மட்டுமின்றி அதன் எதிர்மறையாக உள்ள மற்றொரு பொருளாகும் இருக்கிறது.ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் எதிர்மறை அடங்கியிருக்கிறது ஒவ்வொரு பொருளும் தன்னுள்ளே தன்னையும் தனது எதிர்மறையும் அடக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர்மறையான சாவையும் அடக்கிக் கொண்டிருக்கிறது

முதலாளித்துவ சமுதாயத்திற்கு உள்ளேயே முரண்பாடு இருக்கிறது என்று நாம் பேசுவது என்று அர்த்தம் என்ன?

முதலாளித்துவ சமூகத்தில் எதார்த்தமான சக்திகள் இருந்து போர் புரிந்து கொண்டிருக்கின்றனர் முதலாவது சக்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கும் போக்குள்ள சக்தி

அதுதான் முதலாளி வர்க்கம் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போக்கிலே போகிறது பிறகு இன்னொரு சமுதாய சக்தி இருக்கிறது அது முதலாளி வர்க்கத்தின் நிலையை மறுக்கும் போக்கிலே போகிறது அதுதான் தொழிலாளி வர்க்கம்

ஆகவே முரண்பாடு என்ற விபரங்களை அடங்கி இருக்கிறது ஏனெனில் தனது எதிர்மறையான தொழிலாளி வர்க்கத்தை உருவாக்காமல் முதலாளி வர்க்கத்தால் ஜீவித்திருக்க முடியாது எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு சமாதி கட்டுப்பவர்களை முதலாளிவர்க்கம் உற்பத்தி செய்கின்றது என்று மார்க்ஸ் சொல்கிறார்.

கீழ் காணும் உபதலைப்புகள் சுருக்கமாக

5).பொருள்முதல்வாத இயக்கவியலின் கருத்தினங்கள்.

6). அறிவின் அடிப்படையும் அளவுகோலும் நடைமுறையே.

7). உண்மை அறிவதற்க்கான இயக்கவியல் பார்வை

இதனுடன் இந்த வகுப்பை நிறைவு செய்ய நினைக்கிறேன் தோழர்களே…

இதற்க்கு நான் பயன்படுத்திய நூல்கள்

(1). இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் NCBH தொடக்க நூல்

(2).மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் தத்துவத்திற்க்கான ஓர் அரிச்சுவடி- ஜார்ஜ் பொலிட்சர்

(3).முரண்தர்க்க பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஓ.யாக்கோத்

நன்றி தோழர்களே…

________________________________________________________________++____________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *