அண்மையில் என் நண்பர் ஒருவருடன் உறையாடும் பொழுது அவர் சொன்னார்,” எல்லாம் தி.மு.காவிற்க்கு எதிராக பேசுகின்றனர் எழுதுகின்றனர் உண்மையில் ஆட்சியில் உள்ள அதிமுகாவையோ பிஜேபியையோ பற்றி பேசுவதில்லை என்பது அவரின் குற்றசாட்டாக இருந்தது. உண்மையில் சாதரண மக்களின் நிலை இதுதான் ஏனெனில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து இதனை காண்கின்றனர். ஆகவே அதனையையே இடதுசாரிகளும் கடைப்பிடிப்பார்கள் என்றால் அவர்களின் மார்க்சிய அறிவு என்னே?தோழர் மருதையன் பேசுகிறார் சீமானும் கமலும் பாஜக தமிழகத்தில் வேறூன்ற பாதையில் உள்ள இடையூறுகளை நீக்கி பாஜகவிற்கு வழி அமைத்துக் கொடுப்பவர்கள். இது உண்மைதான் திமுக வின் நிலை இதிலிருந்து மேம்பட்டஒன்றல்ல என்பது கடந்தகால வரலாறு தோழர் மருதையன் நான் இதனை பற்றி சொல்ல தேவையில்லை!!!
தேர்தல் பற்றிய ஒரு பார்வை+++++++++++++++++++++++நாடாளுமன்ற மாயைக்கு எதிரான மாவோவின் போராட்டம்: முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த அமைப்புகளால் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி பெரும்பான்மை பெறுவதோ, அவ்வாறு அது பெற்றாலும் அந்த வர்க்கத்திற்கு எதிராக பாராளுமன்றங்கள் செயல்பட அனுமதிக்கும் என்பதோ, அமைதியாக அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிடும் என்பதோ நடவாத காரியம். இவ்வாறு கூறுவது பாட்டாளி வர்க்கத்தையும் பிற உழைக்கும் மக்களையும் நாடாளுமன்ற மாயையில் மூழ்கடிக்கச் செய்வதற்கான ஒரு மோசடியே தவிர ஒன்றுமல்ல. இருப்பினும் குருசேவின் நவீன திரிபுவாதத்தால் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் பீடிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 1957ஆம் ஆண்டு பிரகடனமும்,1960 அறிக்கையும் குருசேவின் திரிபுவாதத்தைக் கொண்டிருந்தது மேற்கூறப்பட்ட இரண்டு ஆவணங்களில் அடங்கியுள்ள குருசேவின் திரிபுவாதத்தை மாவோவின் தலைமையில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பின் வருமாறு சுட்டிக் காட்டிற்று:1. “ஆளும் வர்க்கம் தானாகவே அதிகாரத்தைத் துறக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் இந்த இரண்டு ஆவணங்களும் உள்நாட்டுப் போரின்றி பல முதலாளித்துவ நாடுகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று கூறுகிறது.2. பாராளுமன்றமல்லாத பாதையின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறும் அதே சமயம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்குச் சேவை செய்யும் கருவியாக அதை மாற்ற முடியும் என்று சொல்லப்படுகிறது.3. சமாதானமற்ற மாற்றத்தைப் பற்றி குறிப்பிடும் அதே வேளையில் பலாத்காரப் புரட்சியின் உலகு தழுவிய விதி என்று அது வலியுறுத்த தவறி விட்டது.”இந்திய திருத்தல்வாதிகளின் ஏமாற்று வித்தை:ஏற்கனவே நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத் தலைமைக்கு இது ஓர் ஆயுதமாகப் பயன்பட்டது. இன்று வலது, இடது திரிபுவாதிகள் நாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றி இந்தியாவின் ஜனநாயகப் புரட்சிக்கு பெரும் துரோகமிழைக்கின்றனர். நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளில் சட்ட மன்றங்களில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறி மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக செயல்பட்டு வருகின்றனர், பலாத்காரப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விதிகளில் ஒன்றாகும்; மார்க்சிய லெனினிய அடிப்படைகளில் ஒன்றாகும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் இவ்விதியைப்பற்றி மாவோ பின் வருமாறு கூறுகிறார்: “ஆயுத சக்தியால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், யுத்தத்தால் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது புரட்சியின் கேந்திரக் கடமையும், அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும், புரட்சி பற்றிய இந்த மார்க்சிய – லெனினியக் கோட்பாடு சர்வவியாபகமாகப் பொருந்தியது, சீனாவுக்கு மாத்திரமல்ல, இதர நாடுகளுக்கும் பூரணமாகப் பொருந்தியது. “ (மாவோ- போர்தந்திரம் குறித்த பிரச்சினைகள்).மார்க்சியம் சொல்லும் பாடத்தை வழி நடத்திய ஆசான்களே இன்று வழி தவறி போனதை பேசுவதே இந்தப் பதிவு மேலும் சிலரின் கருத்துகள் உள்ளடக்கமாக உள்ளது.
ஏனெனில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து இதனை காண்கின்றனர். ஆகவே அதனையையே இடதுசாரிகளும் கடைப்பிடிப்பார்கள் என்றால் அவர்களின் மார்க்சிய அறிவு என்னே?
தோழர் மருதையன் கருத்தும் பேச்சும் தெளிவாக உள்ளது. சீமானும் கமலும் பாஜக தமிழகத்தில் வேறூன்ற பாதையில் உள்ள இடையூறுகளை நீக்கி பாஜகவிற்கு வழி அமைத்துக் கொடுப்பவர்கள்.
தமிழகத்தில் பாஜகவுக்கு பாதை அமைத்து கொடுக்கவே சீமான், கமல் ஹாசன், சகாயம், ராமதாஸ், அஇஅதிமுக, போன்றோர் உதவுகின்றன.
இணையத்தில் வரும் கருத்து கீழே:-
மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் கீழ்க்கண்டவைகள் தமிழக மக்களுக்கு பரிசாக கிடைக்கும்.
🛑 டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும்.
🛑 அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.
🛑 சமூகநீதி கொள்கையின் மணிமகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
🛑 அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
🛑 தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும். 🛑 தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும். 🛑 மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.
🛑 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும்.
🛑 ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட்தேர்வு புகுத்தப்படும்.
🛑 தமிழக காவல்துறையில் முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
🛑 தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார்மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.
🛑 மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.
🛑 சேலம் டூ சென்னை எட்டு வழி சாலை விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக நிலங்களை பிடுங்கி உடனடியாக அமல் படுத்தப்படும்.
🛑 சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
🛑 அமைதிப் பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும். தமிழக மக்களே உஷார்.
1. தமிழர்களின் அடையாளங்களை அழித்து மற்ற மொழிகளுக்கு தமிழ்நாட்டில் அங்கீகரம் அளித்து மும்மொழி கொள்கையை சட்டமாக இயற்றி விட்டீர்கள்.
2. என்னதான் படித்து தேர்வு எழுதினாலும் வட மாநிலத்தவர்களை பணியமர்த்திவிடுகிறீர்கள். படித்தும் பலன் இல்லை.
3. அப்படியே வேலைக்கு முண்டியடித்து வந்தாலும் வேலைக்கேற்ப 100000 முதல் 1200000 வரை அழவேண்டியிருக்கிறது.
4. பொள்ளாச்சி விவகாரம் போல என் இன பெண்களின் கற்புக்கு கூட பாதுகாப்பு இல்லை. இன்னும் வழக்கில் தீர்ப்பு இல்லை. நம் காவல்துறை உலகிலேயே இரண்டாம் இடம். ஆனால் அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
5. அருப்புக்கோட்டை கல்லூரி விரிவுரையாளரிடம் கூட பெண்களை தவறான வழிக்கு அழைத்து சென்ற வழக்கில் உண்மையை வருட கணக்கில் விசாரிக்கும் சூழல். ஆட்சியாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு.
6. தூத்துக்குடியில் 13 அப்பாவிகளை ஓட ஓட சுட்டு தள்ளிய வழக்கில் விசாரணை இன்னும் எத்தனை வருடமோ?
7. சாத்தான்குளம் தந்தை மகனை கொன்ற வழக்கில் விசாரணை இன்னும் எத்தனை வருடமோ?
8. விவசாயிகள் இன்னும் எத்தனை நாட்கள்தான் டெல்லியில் போராடவேண்டுமோ?
9. பிஞ்சு குழந்தைகளை எருமை மாடுகள் கூட்டமாக சேர்ந்து மானபங்கபடுத்துவது. கோவிலில் வைத்து அக்கிரமம் செய்வது. அந்த குழந்தையின் தகப்பன் நிலையில் இருந்து யோசிக்கவே மனம் பதறுகிறது. 10. வேறுமாநிலத்தவருக்கு தமிழ் நாட்டில் வீடு கட்டி தரப்படும். அப்பதானே இங்க கால் பதிக்க முடியும். கேட்டால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். உங்கள் ஆட்சி இருக்கும் மாநிலத்தில் இதை செய்ய முடியுமா? இங்க இருப்பவனுக்கே வீடு இல்ல. அதபத்தி கவலை இல்லை. இப்போது வந்தாரை ஆளவைக்கும் தமிழகம் ஆகிவிட்டது. இதுபோல உணர்ச்சிபூர்வமான, வாழ்வாதார பிரச்சனைகளை தாரைவார்த்துவிட்டு, 8 வழி சாலையை வைத்து என்ன பண்ண போறோம்? பேருக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் பேரு வங்கிட்டா போதுமா? மீத்தேன் நிறுவனங்கள் வெளியே போயாச்சா? இணக்கமா போறோம் போறோம்னு சொல்லிட்டு எல்லா மாநில உரிமையும் போச்சு. இணக்கமா போகாட்டி உள்ள போகணும். அதுக்கு எல்லாரையும் அடிமை ஆக்குறதா? பல கொடுமைகளை நீதிமன்றங்கள் தானே முன்வந்து வழக்கு போட்டு விசாரிக்கும் நிலைமை. நல்ல நீதிபதிகள் கொஞ்சம் இருக்காங்க அதனாலதான் அப்பப்ப மழை பெய்யுது. தமிழன் நான் கடைசி வரை தண்ணியடிசிட்டே இருக்க வேண்டியதான். குடுகிற 1000, 1500 எங்க போக போகுது டாஸ்மாக் வழியா நம்கிட்டதான வரப்போகுதுன்னு ஒரு நம்பிக்கை. இவங்களுக்கே ஓட்டு போட்டுட்டு நாட்டை அடமானம் வைச்சிட்டு போகவேண்டியதான். நான் யோசிப்பேன் திருந்துவேன்னு நினச்சு தமிழன் நலன் நினைக்கும் தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் கத்தி கத்தி தொண்டை தண்ணிதான் தீரும். கடைசி வரை நான் என்ன பத்தியோ, என் தமிழ்நாட்டை பத்தியோ யோசிக்கவே மாட்டேன்.