சாதியத்தின் ஆரம்ம காலம்-1
+++++++++++++++++++++++ 07/12/2021
சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லா…
இவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.
அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்).
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலு, ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.
சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
மெலும் பின்…
1Raja Rajan
நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதி ஆக்கிக் கொண்டனர். அவர்களது நிலத்திலே உழைப்பவர் அவர்களது பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினர் ஆக பல படிகளில் பிரிக்கப்பட்டனர் . சொத்துடையவர்க்கு மதிப்பு உழைக்க வேண்டியதில்லை. உடல் உடலுழைப்பாளர் குறைவாக கருதப்படுகின்ற இது
ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே, கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது. தன் குட்டிகளைப் பிரித்து பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வேலையில் நிலப்பிரபு செய்வித்தான் ஜாதி அமைப்பிலேயே குடிப் பழக்கம் இன்றும் தொடர்கிறது தனித்தனி சமூக அமைப்பாக வாழ்கின்றனர்.
நிலப்பிரபுத்துவம் உடைந்தும் இக்காலத்திலும் தனி சமூக அமைப்பாகவே ஜாதிகள் கருதப்படுகின்றன நடைமுறையில் ஆதிக்கம் குறைந்த போதும் சிந்தனை பாகுபாடு இன்றும் நிலவுகிறது.
தொழிலாளர்களாக சுரண்டப்படுவது மட்டுமல்ல சாதியின் பெயராலும் இவர்கள் சுரண்டப்படுகின்றனர் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.
இயந்திர உற்பத்தி வளர்ச்சி ஒன்றே சாதி அமைப்பு ஓரளவு குறைக்க வல்லது பின்னர் முதலாளி தொழிலாளி என்ற பிரிவில் சுரண்டல் நடைபெறும் அதன் பின் நடைபெறும் சோசலிச புரட்சி ஒன்றே சாதி அமைப்பிற்கும் முடிவுகட்ட கூடியது அங்கும் இக்கருத்தை ஒழிக்க பல ஆண்டுகள் ஆகலாம் ஏனெனில் இது சிந்தனையுடன் ஒன்றி இருப்பதாகவும்.
ஜாதியின் தொடர்ச்சி இன்றைய சமூகத்தில்-1
+++++++++++++++++++++++++++++++++
உலகில் பல புரட்சி நடந்துள்ளது அதில் ஐரோப்பிய போன்ற முதலாளித்துவ புரட்சி எங்கும் நடக்கவில்லை. நில உடைமை சமூகத்தை தூக்கி எறிந்ததோ அதன் எல்லா உறுப்புகளையும் துண்டித்து மக்களுக்கான ஜன நாயகம் என்று சமத்தும் சகோதரவத்தும் என்று பேசி தொழிலாளர்களின் மீதான அடக்கு முறையை சுமையை குறைதனர் (இருந்தும் தனது சுரண்டலை வேறு வடிவில் தொடர்ந்தனர் என்பது மற்றவை).
ஐரோப்பிய போன்ற நாடுகளில் நடந்த புரட்சியின் அடிப்படையில் தனது கருத்தை இவ்வாறு கூறுகிறார் லெனின், “புரட்சி என்பது கடந்தகால மிச்ச சொச்சங்களை வழித்தெறிந்துவிட்டு அதன் புதிய வகைப்பட்ட ஜனநாயக ஸ்தாபனங்கள் ஊற்று போல கிளம்பி மறுபுறத்தில் முதலாளித்துவ ஜனநாயகம் தேவைப்படும் அது அவசியமான மாறுதல்களை உண்டாக்கித் தரும் இது புரட்சியின் மூலம் மட்டுமே ஏற்படும் ஆனால் சீர்திருத்த பாதை என்பது உடலில் அழுகிப்போன பாகங்களை அங்கங்கே பல்வேறு உபதைகளுடன் கெட்டுபோன பாகத்தை தூக்கிக் கொண்டே கடந்து போய் இருக்க வேண்டும் அதாவது மிகவும் வெறுக்கத்தக்க மன்னர் ஆட்சி முறையும் அதை சார்ந்து நின்ற மிகவும் வெறுக்கத்தக்க இழிவான நாற்றம் அடிக்கிற நோய் பரப்புகிற உறுப்புகளுக்கு கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பரிவு காட்ட பாதையே புரட்சிப் பாதை ஆகும். ஒரு நொடியில் அழுகிப்போன பாகத்தை வெட்டி எறிவது போல் புரட்சியை நடத்தி முடிப்பது மட்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும் அதன்மேல் அழுத்தப்பட்டு உள்ள சுரண்டல் முறையில் இருந்து விடுபட சாத்தியமானதே அவை இல்லாத மற்ற எல்லாமே அதற்கான விடியல் விடிவு அல்ல.( சன நாயக புரட்சிக்கான போராட்டத்தை பற்றி லெனின் குறிப்பிடும் சமூக ஜன நாயகவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள் நூலிலிந்து) தோழர்.
இங்கேதான் நமது நாட்டில் ஆங்கிலேயன் செய்த சூழ்சிகளை புரிந்துக் கொள்ள வேண்டும்
தொடர் பதிவில் காணுங்கள்
ஜாதியின் தொடர்ச்சி இன்றைய சமூகத்தில்-2
+++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் ஜாதி நிலைத்து இருப்பதற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன் இவை எனது தேடுதலின் தொடர்ச்சியே இவை முற்றும் முழுக்க இல்லை ஏனென்றால் எனக்கு கிடைக்கப்பெறும் ஆதாரங்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொண்டுள்ளேன்.
அவை சில முழுமையாக முழுமையற்றும் இருக்க சாத்தியம் உண்டு ஆகவே முழுமையாக எழுதி முடித்தபிறகு சரியானவற்றை நான் பகிர்ந்து அளிப்பேன்.
அதுவரை எனது ஆதாரங்கள் அடிப்படையில் எழுதிக் கொண்டுள்ளேன்.
தெற்காசிய சமூகத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய தன்மை வாய்ந்த ஒன்று ஜாதி ஆகும் இந்த சமுதாயம் அமைப்பானது சாதியின் தோற்றம் வரையறை இன்றளவும் சாதி இருத்தலின் அடிப்படைகள் சாதி ஒழிக்க வழி என்பவற்றோடு நமது பிரச்சினைகளை விவாதிக்க செய்வோம்.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலு, ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
சாதியானது உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது சனதன மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
ஒரு காலத்தில் சாதி என்பது வர்க்க அமைப்பு ஆக இருந்திருக்கும் அதாவது ஒரு சாதி என்பது ஒரு வர்க்கமாக இருந்திருக்கும். ஆனால் நிலவுடமை கூறுகள் தகர்ந்து முதலாளித்துவ கூறுகளின் வளர்ச்சியால் சாதிக்குள்ளே வர்க்கங்களாகி விட்டது. ஒரே சாதிக்குள்ளே ஒடுக்குபவனும் ஒடுக்கபடுபவனும் வந்து விட்ட பின் முன்னில் போலன்று இன்றைய சமூகத்தில் சாதி நிலை. இனி சாதியை இனி வர்க்கமாக பார்க்க முடியாது…. வர்க்க அடிப்படையில் அணுக வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
தொடரும் அடுதப் பதிவில்….