இன்று மார்க்சியத்தை புரிந்து கொள்ள-R Chanrasekaran
இன்று மார்க்சியத்தை புரிந்து கொள்ள
-R Chanrasekaran

இன்று மார்க்சியத்தை புரிந்து கொள்ள
-R Chanrasekaran

மார்க்சியம் குறித்த 41ம் பதிவு .இன்று மார்க்சியத்தை புரிந்து கொள்ளாமலே மார்க்சியத்தை ஒழித்துகட்டும் முயற்சி உலகம் எங்கும் பரவி இருக்கிறது.புரட்சி நடந்த நாடுகளில் எத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்க முடியும் அல்லது உருவாக்கினார்கள் என்பது புரியாமலே அவரவரின் மனப்போக்கில் தோன்றுவதை எல்லாம் உளறிக்கொட்டுகிறார்கள்,தமிழ் தேச பொதுவுடமைக்கட்சியின் செயலாளர் தியாகு போன்றோர் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே தவறு என்கிறார், ஒரு கட்சி ஆட்சிமுறை கூடாது என்கிறார் ,இந்த கருத்தை சில மாலெ குழுக்களும் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள்.சிலர் மார்க்சின் உபரி மதிப்பு கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்கிறார்கள்..சிலர் பாட்டாளிவர்க்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.சிலர் மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைக்க வேண்டும் என்கிறார்கள் பல மாலெ அமைப்புகள் பெரியாரிய அமைப்புகளாவோ தலித்திய அமைப்புகளாகவோ மாறியே விட்டன.இப்படி ஒவ்வொன்றாக அமைப்புதுறை தத்துவ துறை என்று மார்க்சியத்தின் அடிப்படைகளை தகர்ப்பது அல்லது கைவிடுவது என்பதாகவே இன்றை நிலை இருக்கிறது,அதுபோல் இன்று மார்க்சியம் பேசும் பெரும்பாலோர் ஏதும் அறியாத உளறுவாயர்களாவே இருப்பதும் புதியவர்களிடம் மார்க்சியம் சென்று சேர்வதில் தடையை ஏற்படுத்துகிறது.சரி மார்க்சின் உபரி மதிப்ப கோட்பாடு காலவதி ஆகிவிட்டதா?உபரி மதிப்பு தத்துவம் காலவதி ஆகிவிட்டது என்றால் சோசலிசம் குறித்த மார்க்சின் கம்யூனிச தத்துவமே காலாவதி ஆகிவிட்டதாக பொருள்.இன்று ஏகாதிபத்திய நிறுவனங்கள் பின் தங்கிய நாடுகளில் தங்கள் நிறுவனங்களை ஏன் ஆரம்பிக்கிறார்கள்?குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பார்கள் என்பதால்தானே இந்த குறைந்த கூலிக்கு ஆளை தேடுவது அவனின் உழைப்பின் உபரியை உரிஞ்சத்தானே.இன்று நாட்டில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை என்ன ?ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளின் பணிகளை செய்யவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதாவது தங்கநகை கடன் நிலத்தின் மீதான வங்கிக்கடன் வழங்குவதற்கான ஆவணங்களை சரிபார்த்து ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளுக்கு அனுப்புவது , பெரும் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது இப்படி ஏகப்பட்ட வேலைகளை இந்தியர்கள் செய்கிறார்கள்.சரி ஐடி நிறுவன வேலைகளை அந்தந்த ஏகாதிபத்திய நாடுகளில் செய்யவேண்டியது தானே ஏன் செய்யாமல் அந்த வேலைகளை இந்தியர்களிடம் ஒப்படைக்கிறார்கள் எல்லாம் மார்க்ஸ் கூறும் உபரி மதிப்பை கொள்ளையிடவே.இன்று அமெரிக்க நிலவுடமையாளர்கள் வங்கிகடன் பெற வேண்டுமானால் அதற்கான ஆவணங்களை சரிபார்த்து நிலத்தை மதிப்பிட்டு எவ்வளவு கடன் வழங்கமுடியும் எனகூறுவது இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனம் ஆகும்.இன்று உலகின் பல நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஏன் தனது பெரும் மூலதனத்தை குவித்து இருக்கிறது.இங்கு ஹூண்டாய் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் 10 % பேரே நிரந்தர ஊழியர் மற்றவர் எல்லாம் எந்த உத்திரவாதமும் இல்லாத குறைந்த கூலி வாங்கும் ஒப்பந்த தொழிலாளர்கள்.இப்படி குறைந்த கூலியை கொடுத்துவிட்டு மீதியை உபரியாக கொள்ளையிடவே தனது நிறுவனங்களை ஏகாதிபத்தியங்கள் பின் தங்கிய உருவாக்குகிறார்கள்.தென் கொரியாவில் இயங்கும் ஹூண்டாய் பணியாளர்கள் நிர்பந்தம் எதுவும் இல்லாமல் பாடல் கேட்டுக்கொண்டே சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு காருக்கு அடியில் பொருத்தவேண்டிய உதிரிபாகங்களை பொருத்துகிறார்கள்இவர்களுக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் 20 நிமிடம் ஓய்வு அளிக்க வேண்டும் இந்த சலுகைகளில் குறைபாடு ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக வேலையை நிறுத்திவிடுவார்கள் இவர்களின் குறைந்த பட்ச
சம்பளமும் இந்தியரை விட 20 மடங்குக்குமேல் அதிகம் .ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்கு உல்லாச பயணம் . உட்பட மனைவிக்கு குழந்தை பிறந்தால் கணவனுக்கும் சம்பளத்துடன் லீவு 3 மாதங்களுக்கு ஒருமுறை உள்நாட்டில் சுற்றுலா என்றுஇன்னும் எண்ணில் அடங்கா சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஆனால் இதேவேலைகளை செய்யும் இந்தியருக்கு குறைந்த அளவு ஒப்பந்த கூலியை தவிர ஏதும் இல்லை அவர்கள் பணிசெய்யும் இடங்களிலும் சிறுநீர்கழிக்க செல்லும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.நின்று கொண்டே தலையை சாய்து காரின் அடிபாகங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை பொருத்த வேண்டும் கழுத்திலும் இடுப்பிலும் கடும் வழி ஏற்படும் ஓய்வெடுக்க முடியாது ஒவ்வொரு காருக்கும் இத்தனை நிமிடங்கள் என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது காலம் தாழ்ந்தால் வேலை போய்விடும்.தொழிற்சங்கம் ஆரம்பிப்பவர்கள் கட்டம் கட்டி வேலைகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் மீண்டும் அவர்கள் இந்தியாவில் எங்கும் வேலை செய்ய முடியாத அளவுக்கு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.இவை எல்லாம் எதற்காக செய்யப்படுகிறது தொழிலாளி வர்க்கத்தின் உபரி மதிப்பை கொள்ளையிடவே ஆனால் மார்க்ஸ் காலத்தில் முதலாளிவர்க்கம் தனது சொந்த நாட்டில் உபரியை கொள்ளையிட்டது . இன்று அது உலகு தழுவியதாக மாறி இருக்கிறது.எனவே முதலாளியம் இருக்கும் வரை அது ஏகாதிபத்தியமாகவும் இருக்கலாம் முதலாளியமாக இருக்கும்போது தேசிய அளவிலும் ஏகாதிபத்தியமாக மாறும்போது உலக அளவிலும் அது தொழிலாளர்களின் உபரி உழைப்பை உரிஞ்சுகிறது.அடுத்ததாக முதலாளிய உற்பத்தி தேக்கத்தையும் அழிவையும் குறித்த முதலாளியத்தின் இன்னொரு அம்சமான அராஜக சந்தை பொருளாதாரத்தை குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.சமீபத்தில் மாஸ்கோவில் உள்ள ஸ்புட்னிக்கில் உள்ள ஹூண்டாய் ஆலையில் கூலி உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் ஹூண்டாய் நிறுவனம் 300 பில்லியன் யுவானை இழந்தது இப்போது அந்தநிறுவனத்தை சீனாவுக்கு விற்க முயற்சிக்கிறது,இதில் இருந்து தெரிய வில்லையா மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடுதான் இன்றும் முதலாளிய உலகை வழிநடத்துகிறது என்பது2R Chandrasekaran R Chanrasekaran 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *