இன்று பிளவுகளை சந்திதுக் கொண்டிருக்கும் மாலெ அமைப்புகளே
இன்று பிளவுகளை சந்திதுக் கொண்டிருக்கும் மாலெ அமைப்புகளே

இன்று பிளவுகளை சந்திதுக் கொண்டிருக்கும் மாலெ அமைப்புகளே

இன்று பிளவுகளை சந்திதுக் கொண்டிருக்கும் மாலெ அமைப்புகளே உங்கள் சிந்தனைக்கு.ஒற்றுமைக்கான போராட்டம் கொள்கை வழிக்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது, என்பது சர்வதேச அனுபவம். ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் 2-வது மாநாட்டில் மென்ஷ்விக், போல்ஷ்விக் என்ற பிரிவினை ஏற்படுகிறது. அன்று கட்சியின் தலைவர் பிளக்கனேவ், மாநாடு முடிந்த பிறகு கருத்துப் போராட்டம் கூர்மை அடைகிறது. 3-வது கட்சி மாநாடு கூட்டும்படி லெனின் (சிஓ) கூறுகிறார். (பின்னர் ராஜினாமா செய்துவிட்டு சிசி-யில் இணைந்து கொள்கிறார்) பல்வேறு கமிட்டிகளும் மாநாடு கூட்டுவதற்கு கோரிக்கை விடுக்கிறது.பிளக்கனேவ் இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்துகிறார். பின்னர் லெனின் அமைப்புக் கமிட்டியை (ஓசி) அமைத்து மாநாட்டுக்கு ஏற்பாடு செய்கிறார். கட்சியில் உள்ள மென்ஷ்விக் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கிறார். அவர்கள் லெனின் கூட்டிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. லெனினை பிளவுவாதிகள் என்றனர். மென்ஷ்விக்குகள் தனியாக மாநாடு நடத்துகிறார்கள். போல்ஷ்விக் மென்ஷ்விக் என இரண்டு கட்சிகளாக பிரிகிறது. இது 1905-ல் நடைபெறுகிறது.1906-ல் இரண்டு பிரிவினைரையும் ஒன்றுபடுத்தும் நோக்கில் ஒற்றுமை காங்கிரஸ் கூட்டுகிறார். ஒற்றுமைக்கான அடிப்படையாக செயல் தந்திரப் பிரச்சனைகள் மீதான நகல் தீர்மானங்கள் முன் வைக்கப்படுகிறது.1. தற்பாேதைய கட்டம் ஜனநாயகப் புரட்சிக் கட்டம்,2. ஆயுத எழுச்சி பற்றி3. இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றி,4. தொழிலாளர் சோவியத் அமைப்பது பற்றி,5. முதலாளிய கட்சிகள் பற்றிய அனுகுமுறை,6. தேசிய சமூக ஜனநாயக கட்சிகள் பற்றிய அனுகுமுறை,7. தொழிற்ச்சங்கம்,8. டூமா (பாராளுமன்றம்),9. அமைப்புக் கோட்பாடு,10. விவசாயத் திட்டம் பற்றிமாநாட்டில் மீண்டும் ஒன்றுபட்ட கட்சி உருவாகிறது. மென்ஷ்விக்குகள்தான் பெரும்பான்மை பெற்று தலைமையைக் கைப்பற்றுகின்றனர். ஒற்றுமைக்கான போராட்டம் கொள்கை வழிக்கான போராட்டத்துடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது என்பதை லெனின் உணர்கிறார்.ஒன்றாக இருந்து பிளவுபட்டு மீண்டும் ஒன்றாக இணைகிற குழுக்களுக்கே லெனின் அரசியலை முன் வைக்கிறார். தமிழ்நாட்டில் பிளவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மாலெ குழுக்களே சற்று சிந்தியுங்கள், தங்களுக்குள் விவாதிப்பதற்கே நிபந்தனைகள் முன்வைக்கது உண்மையான புரட்சியின் மீது நம்பிக்கையிருப்பின் சரியான. விதிகளின் அடிப்படையில் இணைவீர், மற்றெல்லாம் புரட்சியை காட்டிக் கொடுக்கும் வேலையே-சிபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *