கார்பரேட் சாமியார் இந்துத்துவம் பேசி கொண்டே நாட்டை கொள்ளையடிக்க – இந்து வேசத்தில் ஏமாற்றும் தந்திரம்.
லாபம் மட்டுமே கொள்கையாக கொண்ட முதலாளிதான் இந்த ராம் தேவ் , அவனின் வார்த்தைகள் தன் பிராண்ட் விற்பனை செய்ய மட்டுமே என்பதனை அறியாத மக்களாக உள்ளவரை!
மக்களை மதம் சாதி என்ற கட்டுதளைகளால் பிணைக்கப்பட்டு தங்கள் தேவைப்படும் போது அவர்களை ஆட்டுவித்து தனது விசுவாசிகளின் மூலமாக தேவையான வழிகளில் மக்களை பயிற்றுவிக்கும் முதலாளித்துவ சாமியார் வேடம் ….
அவரின் பிராண்ட் மக்களின் நலன் அற்றவை அவை பணம் சம்பாதிக்க ஒரு கூட்டம் வேண்டும் என்ற முதலாளித்துவ சிந்தனையை தூக்கி நிற்க்கும் மர்மம் இதுவே!
பா.ஜ.வுக்கு பெரும்பான்மையினர் ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர்த்திவிட்டதாலேயே மக்களில் பெரும்பாலோர் பா.ஜ.க.வை ஆதரிப்பதாகுமா? அவர்களது கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கருதமுடியுமா? மிகப்பெருவாரியான மக்களை கார்ப்பரேட் முதலாளிகளின் பண பலத்தாலும் விளம்பர பலத்தாலும் மக்களை ஏமாற்றி பாசிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்கள் அனைவரும் பாசிஸ்ட்டுகளிடம் ஏமாந்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா? அல்லது மக்கள் பாசிஸ்ட்டுகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா?
சுரண்டும் வர்க்கங்கள் இந்த சாதி மதத்தையை எப்படி தங்களது ஆதாயத்திற்காக தங்களது சொந்த சாதி மதத்தையைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் ஏமாற்றி பயன்படுத்துகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அனைத்து மத சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை நாம் ஒரு அணிக்குள் கொண்டுவரமுடியும். இதற்கு மாறாக சாதி மதவாதம் பேசுபவர்கள் வர்க்க ஒற்றுமையை சீர்குழைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து போராடவேண்டியது அவசியமாக உள்ளது. சாதியேதடா? உழைக்கும் ஜனங்கள் ஒன்றடா. இதுவே எங்களது கொள்கை என்ன விலைகொடுத்தும் சாதி, மதம் கடந்து அனைத்து உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைப்போம், மக்கள் ஜனநாயக குடியரசை படைத்திடுவோம். அதற்கு தடையாக உள்ளவர்களை எதிர்த்து போரிடுவோம்.
அண்மையில் கார்பரேட் சாமியார் ராம் தேவின் வார்த்தை கீழே:-
பாரத் மாதா கி ஜே முழக்கமிடாதவர்களின் தலைகளை வெட்டி இருப்பேன், சட்டத்தை மதிப்பதனால் அவ்வாறு செய்யவில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் ஆவேசப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோதக்கில், ‘சத்பாவனா சம்மேளனம்’ நடந்தது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதாவது:
நான் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்கிறேன். இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் லட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி இருந்திருப்பேன்.
சிலர் தொப்பி போட்டு கொண்டு, என் கழுத்தை வெட்டினாலும் பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் என்கின்றனர். இந்த நாட்டில் சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மதிக்கிறோம். இல்லையென்றால், நம் நாட்டை அவமதிப்பவர்கள் ஒருவர் இல்லை, ஆயிரம் பேர் இருந்தாலும், லட்சம் பேர் இருந்தாலும், அவர்களின் தலைகளை வெட்டும் அளவுக்கு நமக்கு பலம் உள்ளது.
பாரத மாதா கீ ஜே என்று முழக்கமிடுவது நமது மண்ணின், நமது தாய்நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவது. இதற்கு எதிராக எந்த மதமாவது இருந்தால், அது நாட்டுக்கு எதிரானது. பாரத மாதா கீ ஜே என்பது தாய்நாட்டை பற்றியது. அதற்கும் எந்த மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.
பாரத மாதா கீ ஜே என்று சொல்வது எந்த மதத்தின் வழிபாடும் அல்ல. இது நாட்டுக்கு நாம் செலுத்தும் மரியாதை, பெருமை, கவுரவம். நாம் இந்துவாக, சீக்கியராக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால், நாம் எல்லோரும் இந்தியர்கள்.
இவ்வாறு ராம்தேவ் பேசினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி சமீபத்தில் கூறுகையில், ‘‘என் கழுத்தில் கத்தி வைத்து தலையை வெட்டுவேன் என்று மிரட்டினாலும், பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன்’’ என்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெயர் குறிப்பிடாமல் ராம்தேவ் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஆச்சார்யா தேவ் விராட், செஸ் விளையாட்டு வீரர் அனுராதா பெனிவால், பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.