இந்தியாவின் மக்கள் வாழ்நிலை தேடுவதோடு விவாசாயிகள் பற்றியும் ஒரு தேடுதலே இவை தோழர்கள் விவாதத்தில் கலந்துக் கொள்ளவும்….
நிலவுடமை பற்றி NSS ஆய்வறிக்கை அடிப்படையில் இந்திய விவசாயிகளைப் பற்றி ஆறு விதமான குறிப்புகள் உள்ளன அவை பின் வருபவன.
நில மற்றவர்கள் (landless) .
குறு விவசாயிகள் (sub marginal) .
ஒரு ஏக்கருக்கு குறைவாக நிலம் உடையவர்கள்
மிகச் சிறிய விவசாயிகள் (marginal).
இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உடையவர்கள்
சிறிய விவசாயிகள் (small Farmers) 5 ஏக்கர் குறைவாக நிலம் உடையவர்கள்)
மத்தியதர விவசாயிகள் (medium) 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உடையவர்கள்
பெரிய விவசாயிகள் ( large Farmers) 15 ஏக்கருக்கும் மேல் நிலம் உடையவர்கள்
1947க்குப் பிறகு நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.
1953 -54 ல் நிலமற்ற விவசாயிகள் 23.09 % ஆகும் அதே 1972-82 இடையில் 41% உயர்ந்துள்ளது . குறு விவசாயிகள் மத்தியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை மிகச் சிறிய விவசாயிகள் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது 1953-54 ல் 13.98% இருந்த 1982 18.43% மாறி சற்று உயர்ந்துள்ளதை காட்டுகிறது. அதேபோல் சிறு விவசாயிகள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1953-54 10.09% லிருந்து 1982 16.49% நிலம் சொந்தமாக இருந்தது மற்றும் நடுத்தர விவசாயிகளிடம் 1952-53 31.18% லிருந்து 1982 38.03% உயர்ந்துள்ளது.
பெரிய விவசாயிகள் நிலம் 1953-54 ல் 52.51% இருந்தது 1982 ல் 33.26% குறைந்துள்ளது.
இவை நிலத்தின் கையிருப்பை பற்றி என்எஸ்எஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கையை நிலவுடமை சமுகம் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நமக்கு கொடுக்கிறது. நிலமற்ற விவசாயிகளின் நிலையானது பெரும் ஏற்றத்தாழ்வு காணமுடிகிறது. அதுபோல் அது பெரும் நிலம் உடையார்களின் சொத்தும் பெரும் மாற்றத்தைக் காண முடிகிறது. அதேநேரத்தில் மிகச்சிறிய மற்றும் சிறிய விவசாயிகளின் நிலம் அதிகரித்துள்ளது. இதனை பற்றி இப்பொழுது புரிதலுக்காக மட்டுமே வேறொரு நேரத்தில் விரிவாக பேசுவோம்.
நிலவுடைமையாளர்கள் அவன் நிலத்தை அன்று கூலிகளைக் கொண்டு பயிரிட்டான், பரம்பரை பரம்பரையாக அடிமைகளாக தன் நிலத்தில் கூலியாட்களை வைத்திருந்தான்; அன்று வெளிநாட்டவரால் நன்கு மதிக்கப்பட்ட இவன்; இன்று அரசியல் பங்காளியாகவும் உள்ளான். நிலவுடைமையின் வீழ்ச்சி இன்று தனது மூலதனத்தை வேறுவகையில் முதலீடு செய்து தனது இடத்தை முதலாளித்துவத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளான்.
ஆனால் ஏதும் அற்ற அன்றை விவசாயக் கூலித் தொழிலாளி தொழில்துறை பாட்டாளிகளாக எல்லோருமாறிவிட்டனரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன்..(இவர்களை பற்றி கீழே மீண்டும் பேசுவோம்).
இன்று அடிக்கடி இந்திய பிரதமர் மோடி டிவியில் தோன்றி ஏதோ விவசாய மக்களின் வாழ்வுக்கு தான் பங்கு அளிப்பதாக கூறி கொண்டுள்ளார். இவை ஆளும் வர்க்கம் தனக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறது உணவுப்பஞ்சம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் விவசாயிகளை காப்பதாகும் அவர்களுக்கு தங்களால் உதவி செய்வதாகும் பேசுவது நடந்து கொண்டுதான் உள்ளது. அவை உண்மையில் பெரும்பான்மையான மக்களுக்கு போய் சேருவதேயில்லை ஏனெனில், அரசின் கடன் வசதி, வருமான வரி சலுகைகள் பணக்கார விவசாயகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. இவர்கள்தான் டிராக்டர் வங்கி கடன் வாங்குவது , கூட்டுறவு சங்கத்தில் ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் இவை மென்மேலும் செல்வ செழிப்புக்கு சொத்து சேர்ப்பதில் வளர்ச்சி பெறுகிறான்.
இந்தியா ஒரு விவசாய நாடு; நாட்டின் பெரும்பாலான மக்கள் விவசாயிகள் இந்திய அரசின் அண்மைய ஆய்வறிக்கையின் அடிப்படையில் 70% மக்கள் கிராமப்புறத்தில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர் அதில் 60 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டுள்ளதாக அதே அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படி எனும்போது இந்தியாவின் முதன்மையான முரண்பாடாக எதை காண்பது என்பது இங்கு சிலர் விவாதித்து கொண்டுள்ளனர். அதனைப் பற்றி இங்கே நான் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இன்று நமது சமூகத்திலுள்ள நேரடி பிரச்சனைகளுக்கான காரணங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.(ஓரு சிறிய அறிமுகம் மட்டும் குறிப்பாக கீழே இணைக்கிறேன்).
விவசாயிகளின் வாழ்வு இன்றும் விடிந்தபாடில்லை. உணவு உற்பத்தி உயர்த்தும் திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்தவில்லை. விவசாயிகள் அரைப் பட்டினியுடன் வாழ்கின்றனர் காரணம் என்ன? விவசாயிகளுக்கும் உற்பத்திக்கும் இடையில் முதல் முரண்படாக இந்நாட்டில் விளங்குவது நிலமாகும், உண்மையாக உழைக்க முன்வரும் விவசாயிகளிடம் நிலம் இல்லை.
இன்று நாம் பல்வேறு பெரும் சொத்து உடையவர்கள் என்பவர் தனது முதலீடாக ஆங்காங்கே நிலத்தை வாங்கி குவிப்பதும் ஒரு போக்காக் காணமுடிகிறது .நாட்டின் பெரும்பான்மையான நிலங்கள் இன்றும் அன்றைய நிலவுடைமையாளர்கள் இன்றைய பெருமுதலாளிகளுக்கு கையில் உள்ளது சில பன்னாட்டுக் கம்பெனிகள் வசமும் உள்ளது. மக்களிடையே காணப்படும் நிலமானது பெரும்பாலும் வானம் பார்த்த நிலமாக உள்ளது. அப்படியே கிணற்று நீர் இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேட்டால் தண்ணீர் மாசுபட்டுள்ளதால் விவசாயம் செய்யவே பயன்படாத பல பகுதிகள் உருவாகியுள்ளது .இன்னொறுபுறம் இன்று பெரும்பகுதி நிலங்கள் யார் கையிலுள்ளதோ அவர்களுக்கு விவசாயம் சார்ந்த உழைப்பிற்கு ஊக்கம் இல்லை. உணவு உற்பத்திக்கு ஈடுபட உள்ள தொழிலாளர் விவசாயிகள் கையில் நிலம் இல்லை.
மறைந்துள்ள விசியம் விவசாய வர்க்கம் அரசியல் அதிகாரம் பெறும் வரை அவர்களுக்கு எவ்வித சலுகையும் பெறப்போவதில்லை; பணக்கார விவசாயிகள் மேலும் அரசியல் அதிகாரம் பெற கூலி விவசாயிகளை நாட்டில் பெருகி வருகிறார்கள் . இதே நேரத்தில் நம் நாட்டில் ஏற்பட்டு வரும் முதலாளித்துவ அமைப்பில் மக்களுக்கு எவ்விதமான பயனளித்துள்ளது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுமையும் ஏற்றத்தாழ்வும் முதலாளித்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் முதன்மையானது. முதலாளித்துவம் வறுமை இரண்டுமே பகைமை உறவு கொண்டவை. அதனால் தான் முதலாளித்துவம் அதன் பிறப்பிலேயே அதை அழிக்கும் கருவையும் கொண்டிருக்கிறது என்று நமது ஆசான் கூறியுள்ளார்.
முதலாளித்துவம் ஆனது கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக இந்த ஏற்றத்தாழ்வை கட்டிக் காக்கிறது .
1). கூலி விகித ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி பல்வேறு ரக இக்கட்டான வேலைகளையும் தொழிலாளர்கள் கொண்டு செய்விக்க முடிகிறது.
2). வேலையில் உள்ளவர்களுக்கு வறுமையை காட்டி எச்சரித்து தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பிரித்து வேலை வாங்குகிறது வேலை செய்யாவிடின் பட்டினியாக இருக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது.
3). வேலையற்ற ஏழைகளை காண்பித்து உழைப்போர் ஊதியத்தை குறைத்து தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த முடிகிறது. உழைப்போர் லாபத்தில் அதிகப்பங்கு பெற முடியாது போகிறது.
4). குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளரும் வறியவர்களின் சேவையையும் உற்பத்தி பண்டங்களும் குறைந்த விலையில் பெற முடிகிறது. இவைதான் முதலாளித்துவ லாப வேட்டைக்கான அடிப்படை ..
நாட்டின் முன்னேறி வர்க்கமான தொழிலாளர்களும் நலிவுற்று கொண்டுருக்கும் விவசாயிகளுடன் இணைந்து புதியஜனநாயக புரட்சிக்கு வழி தேட வேண்டும். அத்தகைய புரட்சியே நாட்டில் உண்மையான ஜனநாயக தன்மை நிலைநாட்ட முடியும். நிலம் அனைத்தும் மக்கள் சொத்தாகவும்; அனைவரும் நாட்டின் தேவையை ஒட்டி உழைப்பர். நாம் அனைத்திலும் தன்னிறைவு பெறுவோம் விலையேற்றம் பற்றாக்குறை பற்றிய துன்பம் அனைத்தும் அப்பொழுது மறைந்து போகும்.
- குறிப்பு:- “முதலாளித்துவம்வளர்ச்சி விவசாயத்தில் ஏதுவாகவும் பல வடிவங்களும் நுழைகின்றது மேலும் விவசாயத்தில் முதலாளித்துவம் அதன் தன்மையிலேயே தொழில்துறை போல் சமமாக வளர்ச்சி அடைய முடியாது ஒரு இடத்தில் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் ஒரு வடிவத்தில் விவசாயத்தில் ஒரு அம்சம் அது முன்னுக்கு எடுத்துச் செல்கிறது” – லெனின் .
- தொழில்துறைமுதலாளித்துவம் விவசாயத்துறை முதலாளித்துவம் உள்ள ஒப்பீட்டு ரீதியான வளர்ச்சியையும் இயங்கியல் உறவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியை ஆராய முடியும். தொழில்துறை முதலாளித்துவத்தில் வெளிப்படும்தெளிவான வர்க்க அணி சேர்க்கையும் வர்க்க முரண்பாடுகளும் விவசாயத்துறை முதலாளித்துவத்தில் காண்பது இயலாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியான அளவில் தொழில்துறை முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பலம் பலவீனம் உள்வாங்கிக்கொண்டு விவசாயத்துறையில் முதலாளித்துவம் வளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- முதலாளித்துவஉற்பத்தி முறை என்பது இதற்கு முந்தி எல்லா உற்பத்தி முறைகளில் உயர்ந்த கட்டமாகும். அதுமட்டுமல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மிகவும் சிக்கலான பரிணாமங்களை பல்வேறு விதமான வடிவங்களில் கொண்டதாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது.
- உறையாடுவோம் வாருங்கள் தோழர்களே.
இங்குள்ள உற்பத்தி சக்தி என்னே? என்பதோடு ஏகாதிபத்திய காலகட்டத்தில் உள்ள உற்பத்தி உறவையும்புரிந்துக் கொள்வோமே தோழர்களே இம்மாதிரியான முதலாளித்துவ வளர்ச்சி இன்று நமது நாட்டில் நடந்தேறி வருகிறது. தொடரும்… - வேலையில்லாத்திண்டாட்டம் எது?
- படித்துவிட்டுஒருவர் வேலை தேடுகிறார், அவருடைய படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்றால், அது வேலையில்லாத் திண்டாட்டம் என்று கருதப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார நிலைமையை உணர்த்துகிறது. இதை சதவீதத்தில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால், மொத்தமாக வேலை தேடுகிறவர்கள் எண்ணிக்கையை, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதை நூறால் (100) பெருக்கி சதவீத கணக்குப் போடுகிறார்கள். ஏற்கெனவே வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வேலையில்லாத் திண்டாட்ட சதவீதம் குறைவாகத் தெரிகிறது.
- The current population of India in 2022 is 1,417,173,173, a 0.68% increase from 2021. The population of India in 2021 was 1,407,563,842, a 0.8% increase from 2020. The population of India in 2020 was 1,396,387,127, a 0.96% increase from 2019.
- In the long-term, the India Unemployed Persons is projected to trend around 32 Million in 2021 and 44.20 Million in 2022, according to our econometric models.
- மொத்த மக்கள் தொகை 2011 கணக்குபடி 1210854977
- குழந்தைகள் 164515253
படித்தவர்கள் 763638812- படிக்காதவர்கள் 447216165
மொத்தம் வேலை செய்பவர்கள் –
481888868 விவசாயத்தில்- 95942413
விவசாய கூலி -86168706 , 22866367,58164984
மற்ற வேலை -168121650 வேலையற்றவர்- 728966109
- இன்று நாட்டின் மொத்த மக்கள் தொகை (2022) 1,417,173,173
- வேலையில்லாதவர்கள் என்று இன்று அரசரிக்கை கூறுவது 32 மில்லியன்2021 மற்றும் 44.20 மில்லியன் 2022,பொருளியல் கணகெடுப்பு படி எங்கிறது அரசு. இதில் உயர் கல்வி பயின்றோரை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவது என்பது புரிந்துக் கொள்ள வேண்டும். கல்வியை முழுமையாக முடிக்காமலோ அல்லது தொழிற்க் கல்வி போன்ற இளநிலை பாடம் படித்து வேலைத் தேடுவோரை இந்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை ஏனோ?
I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.