இந்திய கிராமபுறம் எப்படி உள்ளது என்பதனை கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன் அதனை பற்றி விரிவாக எழுதும் முன் ஒரு தோழருடன் விவாதித்தேன்; அவர் அப்படியெப்படி அந்த குறிப்பிட்ட ஜாதியில்லை என்றார். நான் அந்த இரண்டு கிராமங்களும் நேர்கோட்டில் ஒரு போலவே உள்ளது இருந்தும் இயற்கையில் ஒன்று ஆற்றுபடுக்கையிலும்(A) மற்றொன்று மானாவாரி(B) விவசாய முறையையும் சார்ந்து நிற்கிறது என்றேன். ஆக அந்த கிராமங்களில் பட்டியல்இன ஜாதி மக்கள் (SC)இல்லை அதே போல Aகிராமத்தில் பெருவாரியான ஜாதி ஒன்றே அவர்களுக்குள்ளே ஏற்ற இறக்கங்கள் மற்ற B கிராமத்தில் ஒரே ஜாதி மற்றொரு ஜாதி ஒரே குடும்பம் மட்டும்தான். இவை இப்படியிருக்க A கிராமம் ஆற்றுபடுக்கையில் உள்ளதால் படித்து பல வேலைவாய்ப்புகளை தேடிக் கொண்டுள்ளதும் நிலம்சார்ந்த உழைப்பை முக்கியதுவம் கருதி வாழ்ந்தோர் அதிக நிலமுடையோரும் கீழ்நிலையை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதையும் கண்கூடாக காண முடிந்தது. இந்த கிராமங்கள் பற்றி முழுமையான ஆய்வை விரைவில் எழுதுவேன். முயற்சிக்கிறேன் தோழர்களே.
அரசின் டிஜிட்டல் விவசாய முறை ஆனால் உண்மையை புரிந்துக் கொள்ள கள ஆய்வு செய்ய வேண்டும்.
இந்திய அரசின் விவசாய நிலை பற்றிய அறிக்கை
ஏழ்மை பற்றி அரசின் விளக்கம்
தீடிரென ஏதோ புரட்சி நடந்து முடிந்து விட்டது போல சில ட்ராட்ஸ்கியவாதிகள் அவரை ஏற்கும் சிலரும் நாடு முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறி விட்டது என்கின்றனர்.
நான் அவர்களிடம் கேட்பது ஒன்று மட்டுமே நாடு எந்த வளர்சியை அடைந்திருந்தாலும் பரவாயில்லை நாட்டு மக்களின் உற்பத்தி முறை என்னே என்ற ஒரே கேள்வி மட்டுமே.
விவசாய நெருக்கடிக்கான காரணங்கள்:
நெருக்கடிக்கான காரணங்களை அறியவும், உலகமயமாக்கலுக்கும் நெருக்கடிக்குமான தொடர்புகளை அறியவும் ஆய்வு நடத்த வேண்டிய தேவை உள்ளது. அப்படி தொடர்புகள் இருக்குமானால், இந்த சவாலை எதிர்கொள்ள எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அறிய வேண்டும்.
விவசாய உற்பத்திப் பொருட்களின் தாராள இறக்குமதி:
இந்தியாவில் விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சிக்கு, குறிப்பாக பணப்பயிர்களின் விலை வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் அந்தப் பொருட்களின் இறக்குமதிக்கான அனைத்துவிதமான கட்டுபாடு களையும் நீக்கியதுதான் காரணம். உதாரணமாக, இந்திய அரசாங்கம் இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து டீ மற்றும் காப்பிக்கான இறக்குமதி வரியை கணிசமாக குறைத்ததின் விளைவாக அந்தப் பொருட்களுக்கான விலை உள்நாட்டில் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. எனவே, இந்த விளைபொருட்களை விளைவிப்பது இலாபகரமற்றதாக மாறிப் போனதால், அந்த உற்பத்தியானது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தப்பட்டது. இறக்குமதிக்கான அளவுக் கட்டுப்பாட்டு நீக்கமும், வரிக்குறைப்பும் உலக வர்த்தக்க் கழகத்தின் கட்டுபாடுகளின் அடிப்படையில் செய்யப்படுவதால் விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி என்பது அரசின் தாராளமயக் கொள்கையின் நேரடி விளைவாகும்.
விவசாயத்திற்கான மானியக்குறைப்பு நடவடிக்கை:
சீர்திருத்தம் துவங்கியபின்பு விவசாயத்திற்கான பல்வேறு வகையான மானியங்களை அரசாங்கம் குறைத்தது. அதனால், விளைபொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. மானியக்குறைப்பு மற்றும் உரங்களின் மீதான கடந்த சில ஆண்டுகளாக விதிக்கப்பட்டுவரும் கட்டுப்பாடுகள் போன்றவை விவசாயத் துறையை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதாக ரமேஷ் சந்த் என்று பொருளியல் வல்லுனர் கூறுகிறார். இந்த நட்வடிக்கை இடுபொருளுக்கான விலையை உயர்த்தி விவசாயத்தை குறைந்த இலாபமுடைய தொழிலாக மாற்றிவிட்டது. விவசாயத்திற்கான மானியக் குறைப்பு நடவடிக்கையானது உலக வர்த்தகக் கழகத்தின் (WTO) விதிமுறைகளின் அடிப்படையில் செய்யப்படுவதால் இதுவும் உலகமயக் கொள்கையோடு தொடர்புடையதே.
விவசாயத்திற்கு குறைந்தவட்டி மற்றும் சுலபக் கடன் வசதி இல்லாமை:
1991ம் ஆண்டிற்குப் பின் விவசாயத்திற்கு கடன் வழங்கும் முறையை வர்த்தக வங்கிகள், தேசிய வங்கிகள் உட்பட பெரும் மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக எளிதாக கடன்பெற முடியாமல் போனது. வட்டி விகிதமும் தாங்க முடியாத்தாக ஆனது. இதன் காரணமாக விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களை நாடவேண்டியதாயிற்று. அது விவசாயத்திற்கான செலவை அதிகப்படுத்தியது. சீர்திருத்த காலகட்டத்திற்குப் பிறகு கடன் அளிக்கும் வசதிகளையும், வட்டிச்சலுகைகளையும் வங்கிகள் நீக்கியதன் மூலம் விவசாய நெருக்கடியை தீவிரப்படுத்தின என்று தேசிய வேளாண்மைக் கமிஷனின் தலைவரான டாக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அதிக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில், விவசாயிகள் கடன் பொறியில் விழுந்தனர். பெரும்பாலான விவசாயிகளின் தற்கொலையானது கடன் தொல்லையினால்தான் நிகழ்ந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வங்கிகளை தனியார்மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட மக்களுக்கு ஆற்ற வேண்டிய சமூகக் கடமையை விடுத்து இலாபத்தின் அடிப்படையில் செயல்படத் தொடங்கியதே காரணமாகும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் நாட்டில் விவசாயிகளின் இன்றைய நிலையை புரிந்துக் கொள்ள அதே நேரத்தில் கிராமபுறம் எப்படி உள்ளது என்று கள ஆய்வு செய்யாமலே கதை எழுத வேண்டாம் நிஜதிற்க்கு வாருங்கள் தோழர்களே..
மேலும்
மொத்தத்தில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 833.5 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், இது மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாகும், அதே நேரத்தில் 377.1 மில்லியன் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். நகர்ப்புற விகிதம் 1951 இல் 17.3 சதவீதத்தில் இருந்து 2011 இல் 31.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கை குழு (EAG) மாநிலங்கள் EAG அல்லாத மாநிலங்களுடன் (39.7 சதவீதம்) ஒப்பிடுகையில் குறைந்த நகர்ப்புற விகிதத்தை (21.1 சதவீதம்) கொண்டுள்ளன.
பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கலின் வேகம், இந்தியாவின் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதை தொடர்ந்துள்ளது. இந்த இடம்பெயர்ந்த மக்கள் சில இலாபகரமான வேலைவாய்ப்பைப் பெறுகிறார்களா என்பதனை விட இவை நிரந்தர வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைகிறதா கேள்வியை விட அவர்கள் குடுதலாக தங்குமிடம் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் நகர அமைப்பு அவர்களுக்கு நல்ல தங்குமிடம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, இந்த குறைந்த வருமானம் கொண்ட புலம்பெயர்ந்தோர் சேரிகள் எனப்படும் நகரத்தின் மிக பின் தாங்கிய குடியேறினர். இது நகர்ப்புற சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சியின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் நகரங்கள்/நகரங்களில் உள்ள சேரிகளின் அளவை தற்போதைய ஆய்வு ஆராய்கிறது. 65.5 மில்லியன் மக்கள் இந்தியாவின் வெவ்வேறு அளவிலான நகரங்கள்/நகரங்களில் உள்ள சேரிகளில் வாழ்கின்றனர். சிறிய நகரங்களை விட பெரிய நகரங்கள் அதிக சேரிகளால் குறிக்கப்படுகின்றன என்ற பிரபலமான கருத்து 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை. 20,000 க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறிய நகரங்கள் மற்றும் 20,000 முதல் 1,00000 மக்கள்தொகை கொண்ட நடுத்தர நகரங்கள் முறையே 27.2% மற்றும் 24.3% பதிவாகியுள்ளன.
Related