இந்திய விவசாய உற்பத்தி முதலாளிதுவ முறைக்கு மாறி விட்டதா?
இந்திய விவசாய உற்பத்தி முதலாளிதுவ முறைக்கு மாறி விட்டதா?

இந்திய விவசாய உற்பத்தி முதலாளிதுவ முறைக்கு மாறி விட்டதா?

நேற்றைய கிளப் அவுஸ் விவாதமே
++++++++++++++++++++++++++++
விவாதத்தை தொடக்கி வைத்து நான் பேசியவை கீழே;- தோழர் ஞானசூரியன் பல்வேறு தகவல்கள் அடிப்படையில் கிராமபுற மக்கள் எப்படியுள்ளனர் மற்றும் அரசின் நடவடிக்கைகளை அடுக்கினார். தோழர் சுப்பிரமணி அண்மையில் வசந்தகுமார் அவர்களின் நூலினை மேற்கோள் காட்டி இதனை பற்றி பரிசீலிக்க வேண்டுமென்றார் மேலும் தோழர் வேலன், தோழர் ரவீந்திரன் தொடர்ந்து வாதித்து நேரம் 1:30 நேரத்திற்க்கு மேலே செல்லவே விவாதத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று முடித்துக் கொண்டோம். உங்களின் கருத்துகளை முன் வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இனி நான் பேசியவை, அன்பு தோழர்களே இன்றைய விவாதிற்கு செல்லும் முன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து முதலாளித்துவம் என்றால் என்னவென்று கோட்பாட்டு ரீதியாக கூறுவதை பார்ப்போம்.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன.
இவை நமக்கு கிடைத்துள்ள வரையறை, உண்மையில் நாம் இங்கே பேசு பொருள் விவசாயம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாறிவிட்டதா என்னுமிடத்தில் நாட்டின் பெருவாரியான மக்கள் இன்றும் கிராமபுறத்தில் வாழ்வதோடு அவர்களின் வாழ்வாதரம் இதே விவசாய உற்பத்தியை சார்ந்தே இருப்பதால் அவர்களின் உற்பத்தி சாதனங்கள் உற்பத்தி கருவிகளின் அடிப்படையில் அந்த மக்களின் உற்பத்திமுறையானது முதலாளித்துவ உற்பத்தியாக மாறிவிட்டதா என்பதே நம் முன் உள்ள கேள்வி?. மற்றும் இணையத்தில் வாசித்து விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே.
https://namaduillakku.blogspot.com/2023/04/blog-post_55.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *