இந்திய முதலாளிவர்க்கத்தின் பாசிச போக்கு குறித்த ஒரு சிறு பதிவு.ஒரு நாட்டின் அரசியல் கட்டமைவுகளையும் பொருளாதார போக்குகளையும் தீர்மானிப்பவர்கள் எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டின் விரல் விட்டு என்ணக்கூடிய பெருமுதலாளிகள் வர்க்கமே .ஆட்கள் மாறலாம் ஆனால் வர்க்கம் என்ற வகையில் இவர்களின் ஆதிக்கம் மாறுவது இல்லை. அதாவது டாடா பிர்லா இடத்துக்கு அம்பானியும் அதானியும் வரலாம் ஆனால் வர்க்கம் என்ற வகையில் இவர்கள் பெரும்முதலாளிய வர்க்கங்களே இவர்களின் நலன் அனைத்தும் ஒன்றுதான்.அதிகாரவர்க்கத்தையும் அரசியல் கட்சிகளையும் இவர்களே கட்டுப்படுத்துகிறார்கள் இது உளவியல் சார்ந்தும் பதவி பணம் வசதி வாய்ப்புகள் சார்ந்தும் செயல்படுகிறது.ஒரு காவல்துறை உயர் அதிகாரி நேரடியாக அம்பானியிடம் லஞ்சம் பெறாத போதும் அம்பானி தான் பணிசெய்யும் மாவட்டத்துக்கு வருகிறார் என்றால் அனைத்து பணிகளையும் ஒதுக்கி விட்டு ஒரு அடிமையைபோல் அம்பானிக்கு சேவை செய்ய ஓடுவார். இது முதலாளிவர்க்க சமுதாயத்தின் சமூக உளவியல் மனிதர்களை அவர்களின் பொருளாதார அந்தஸ்த்தை வைத்து மதிப்பிடும் உளவியல் பண்பு இது அரசு கட்டுமாணம் முழுவதும் ஊடுருவி இருக்கும்..இதுபோல் உளவியல் சார்ந்தும் பொருளாதார நலன்கள் சார்ந்தும் வங்கித்துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் பொதுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பெரும் முதலாளிகள் அனைவரும் மக்களுக்கு எதிரான ஒரு பலம்பொருந்திய கூட்டணியாக அமைகிறார்கள்.லஞ்சம் ஊழல் அரசியல் செல்வாக்கு பதவி பதவி உயர்வு ஆகிய அனைத்தும் இக்கூட்டங்களுக்கு சாதகமானவர்களுக்கு அளிக்கப்படும் எதையும் கண்டு கொள்ளாத அப்துல் கலாம் போன்ற இவர்களுக்கு தொல்லை தராதவர்களுக்கும் சில வேளைகளில் பதவிகள் அளிக்கப்படும் காரணம் இவர்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள.ஒரு நாட்டின் அரசும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும் எப்போதும் பெரும் பணம் படைத்தவர்களை சார்ந்தே செயல்படும்.இப்பெருமுதலாளிகளும் அவ்வப்போது நாட்டின் சூழலுக்கு ஏற்ப இக்கட்சிகளில் தமது கொள்ளைக்கு ஏற்ற கட்சிகளை தேர்வு செய்கிறார்கள்.இந்திய பெருமுதலாளிகள் பலவீனமாக இருந்த காலத்தில் மக்கள் தேசிய விடுதலை உணர்வு வர்க்க உணர்வு ஆகியவை மேலோங்கிய நிலையில் சித்தாந்த பலம் பெற்று இருந்த காலத்தில் காங்கிரசியும் நேருவையும் முன் நிறுத்தினார்கள்.RSSஐ அடக்கி வைத்து ரகசியமாக அதனுடன் கூடிக்குலாவினார்கள் தேவைப்படும்போது அவர்களை தூண்டி விட்டு கலவரங்களையும் நடத்தினார்கள் இந்தியா பாக் பிரிவினைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.இப்போது மக்கள் தங்களை வழி நடத்தும் அமைப்புகள் எதுவும் இன்றி பலவீனமடைந்து நிற்கிறார்கள் இந்திய பெருமுதலாளிகளோ மக்களின் பொது சொத்தையும் வங்கிகளையும் கொள்ளை அடித்து மிகப்பெரும் மூலதனத்தை குவித்து விட்டார்கள்.இப்போது இந்த மூலதனத்தை கொண்டு இந்த நாட்டின் ஒட்டுமொத்த செல்வங்களையும் கொள்ளையிட வாய்ப்பு தேடுகிறார்கள். இதற்கு மிக நம்பிக்கையான அமைப்பு மக்களை பிளவு படுத்தி சீர்குலைக்கும் அமைப்பு என்ற முறையில் பிஜேபியை தேர்வு செய்து அதன்மூலம் தமது கொள்ளைக்கான தடைகளை எல்லாம் அகற்றி வருகிறார்கள்.ஒரு பக்கம் வங்கிகள் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையிடுவது, மக்களின் நிலத்தையும் பொது நிலங்களையும் ஆக்கிரமிப்பது , ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களின் மூலம் விவசாய நிலங்களை அழிப்பது கனிம தேவைக்காக மலைகளையும் காடுகளையும் அழிப்பது .தங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க மீனவர்களின் வாழ்வை அழிக்கும் சாகர்மாலா திட்டங்களை கொண்டு வருவது சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளை மிரட்டி பணிய வைக்க ராணுவ பலத்தை அதிகரிப்பது. என்று சொல்லொனா கொடுமைகளை இக்கூட்டம் இழைத்து வருகிறது.இக்கொள்ளை கும்பலை எதிர்த்து தேசிய இனப்போராட்டங்கள் நடக்காமல் இருக்க அம்மக்களின் மொழிகளை அழிப்பது இந்தியை திணிப்பது ,மக்கள் போராட்டங்கள் எழாமல் இருக்க அவர்களின் கவனத்தை மதவெறியை தூண்டி திசை திருப்புவது போன்ற என்ணற்ற கொடும்கிரிமினல் வேலைகளை செய்யும் இக்கூட்டம்தான் பிஜேபியை இயக்குகிறது.மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது கல்வி உரிமை வேலை வாய்ப்பு உரிமை உயிர்வாழும் உரிமை அனைத்தும் இச்சிறு கூட்டத்தின் மூலதன வெறிக்காக பலியாக்கப்படுகிறது.ஆனால் இங்குள்ள அமைப்புகள் இந்த உண்மையை வெளிப்படுத்தாமல் பிஜேபி இந்துக்களை காக்க இந்துராஜ்ஜியம் அமைக்கப்போவதைபோல் இந்துத்துவ பாசிசம் ஒழிக பார்பண பாசிசம் ஒழிக பிஜேபியை தேர்தலில் தோற்கடிப்போம் என்றெல்லாம் ந்ழல் யுத்தம் நடத்துகிறார்கள்.இடது சாரிகளோ மாலெ குழுக்களோ இந்த உண்மைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் தேசிய விடுதலை உணர்வை வளர்க்காமால் ஆளும் வர்க்கத்தை நேரடியாக அடையாளம் காட்டாமல் பிஜேபின் செயல்களுக்கு பின்னால் உள்ள கொள்ளைகார கொலைகார முதலாளிகளின் கூட்டத்தை அடையாளம் காட்டாமல் ஏதும் செய்யமுடியாதுபாசிசத்தை ஒழிப்பது பிஜேபியை மட்டும் ஒழிப்பது அல்ல பிரதானமாக பிஜேபியின் பின்னால் இருக்கும் கிரிமினல் முதலாளிகளின் கூட்டத்தை அதிகாரத்தை ஆணவத்தை ஒழிப்பதாக நமது இலக்கு மாறவேண்டும்.இக்கூட்டத்துக்கு சமூக அரண்களாக இருக்கும் மத நிறுவனங்களும் தடை செய்யப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் இலக்கு இருக்க வேண்டும் .சிறு தொழில்களை காப்பது விவசாயிகளை காப்பது மக்களின் மொழி உரிமையை காப்பது தேசிய இனங்களின் எல்லைகளை காப்பதாக இப்போராட்டம் விரிந்து பரவ வேண்டும்தேசிய இனங்களின் வாழ்வு உரிமை சுயேச்சை உரிமைகளை மீட்பதாகவும் நமது நோக்கம் இருக்க வேண்டும்அதற்காக மிக பரந்த அளவில் நமது செயலை பரவச்செய்ய வேண்டும் நாடு தழுவிய அளவில் முற்போக்காளர்களையும் தேசிய இன விடுதலை அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் காலம் அதிகம் இல்லை இது அவசர அவசிய பணிவாய்ப்புள்ள ஒவ்வொரு தோழரும் விவாதகுழுக்களை ஆரம்பியுங்கள் கூட்டங்கள் நடத்துங்கள் அவர்கள் ஒருவராக இருக்கலாம் இருவராக இருக்கலாம் எண்ணிக்கை முக்கியம் இல்லை ஏற்பாடுகள் செய்யுங்கள் ,