இந்திய போராட்ட வரலாறு
இந்திய போராட்ட வரலாறு

இந்திய போராட்ட வரலாறு

நமது கடந்த காலத் தலைமுறைகளின் போராட்டங்களிலிருந்து எந்தப் பாதையை பின்பற்றுவது என்பதற்கான புரிதலை ஓரளவுக்கு வந்தடைவதே இந்த வினாவுக்கான விடையாகும்.
இந்தப் போராட்டங்களை ஆய்வு செய்து, படிப்பினைகளைப் பெற்று தற்போதைய சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.

சாதாரண மக்கள் மீது ஆதிக்கம் பெற்று நிலப்பிரபுத்துவ, முடியரசுகளும், பெரும் பேரரசுகளும் தோற்றமெடுத்தன.
அவை உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட செல்வங்களை அபகரித்துக் கொண்டு தங்களின் பேரரசுகளைக் கட்டியமைத்தன.நமது நாட்டினுள் போர்ச்சுக்கீசிய, டச்சு மற்றும் பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள் நுழைந்து நாட்டின் சில பகுதிகளில் ஆட்சி நடத்தினர்
.

ஆனால், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், மரபுகள், பழங்குடிகள், தேசிய இனங்கள், சாதிகள், மாறுபட்ட புவியியல் சூழல்கள், சுற்றுச் சூழல்கள் ஆகியவற்றைக் கொண்ட நமது நாட்டில் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை நிறுவியவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள்தான்.

இந்தியாவிலுள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சக்திகள், சமூகக் குழுக்கள் ஆகியவை முன்னேற்றத்தை நோக்கி அணிவகுப்பதைத் தடுக்கும் வகையிலான மூலயுத்திகளை பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தினர்.

இரண்டு கூர்முனைகளைக் கொண்ட கத்தரியைப் போல பல்வேறு சமூகக் குழுக்களையும் பகுதிகளையும் மிகக் கொடுமையான சூறையாடலுக்கும் அடக்குமுறைக்கும் ஆட்படுத்தினர்.

மாரக்ஸ் அவர்களும் கொசாம்பி போன்ற அறிஞர்களும் காலனியவாதிகளின் வருகைக்கு முன் இந்தியாவில் நிலவிய இயற்கையோடியைந்த, தன்னிறைவுக் கிராமப்புற பொருளாதாரத்தை ஆசியபாணி உற்பத்திமுறை எனப் பண்புமயப்படுத்தினர்.இத்தகைய உற்பத்தி முறையின் கீழ் இந்தியச் சமூகம் முன்னேறியதா? பின்னடைவுக்கு ஆளானதா? அல்லது தேக்கமடைந்ததா? என்பது இன்றைய நிலையில் பயனற்ற கேள்விகளாகும்.
ஆயினும் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பிரிட்டீஷாரின் தலையீட்டையும்,

நீண்டகால ஆசியாவிலுள்ள ஆட்சியாளர்கள் மூன்று வகைப்பட்ட நிர்வாகப் பிரிவுகளையும் அதற்கான பணிகளையும் பயன்படுத்தி வந்தனர்.

1) பொருளாதாரப் பிரிவு: இப்பிரிவு வரி வசூலிப்பு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மூலாதாரங்களைச் சுறையாடுவதில் ஈடுபட்டது.

2)போர்ப் பிரிவு: இப்பிரிவு பிரதேசத்திற்கு வெளியேயுள்ள மக்களைச் சூறையாடுவதில் ஈடுபட்டது.

3) உள்நாட்டுப் போர்ப் பிரிவு: பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் முந்தைய படையெடுப்பாளர்களிடமிருந்து முதல் இரண்டு கடமைகளை மட்டுமே எடுத்துக் கொண்டனர் மூன்றாவது கடைமையைக் கைவிட்டனர்.
ஐராேப்பிய ஆட்சியாளர்கள் அறிந்திராத வழிமுறை இது.
இதன் விளைவாக இந்திய விவசாயப் பொருளாதாரம் முழுமையாக அழிவுக்கு ஆளானது.

முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவுவதற்கு ஐராேப்பிய முதலாளிகள் செய்ததைப் போன்று இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கும் பணியை பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மேற்காெள்ளவில்லை.

இந்தியாவில் பல பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்துவதற்குத் தடையாக இருந்த இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தை அழித்தாெழிக்கும் மூல உத்தியை அவர்கள் பின்பற்றினர்.
அதே நேரத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாத்துக் கொண்டே தங்களின் காலனி ஆதிக்கக் கொள்கைக்கு சேவை புரியும் வகையிலான புதிய அமைப்பை மெதுவாகத் தோற்றுவித்தனர்.

அவர்கள் நிலப்பிரபுத்துவ சக்திக்கு எதிராக மென்மையான அதே போன்று வன்மையான முறைகளைப் பயன்படுத்தி அவர்களை தங்களின் சமூக அடித்தளமாக மாற்றி அமைத்துத் தங்களின் பேரரசை விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் செய்தனர்.

தங்களின் ஏகாதிபத்திய இயல்புக்கு உண்மையானவர்களாக இருக்கும் வகையில் இந்திய மக்களின் மீது மிகவும் கொடூரமான ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்தினர்.
இது அவர்களின் அக விருப்பங்களுக்கு முரணாக இன்னாெரு வழியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய இனச்சமுதாயங்களிடையே அரசியல், பொருாதார, கலாச்சார உறவுகளை வளர்ச்சியடையச் செய்வதில் கொண்டுவிட்டது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழான தாங்க முடியாத நிலைமைகள் இந்திய மக்களுக்கு வேறு வழியைத் தேடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.
அவர்களின் தேசிய ஜனநாயகப் பேரார்வங்கள் சிறு கலகங்கள் என்ற வடிவத்தில் வெளிப்பட்டன.
மென்மையான கண்டன இயக்கங்கள் தொடங்கப்பட்டன.
அவை கிராமங்களை விட்டு வெளிச்செல்வது, தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகச் சொந்த கிராமங்களிலிருந்து ஓடிப் பிற கிராமங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருப்பது, நிலங்களைத் தரிசாக போட்டுவிட்டு தூராந்திரப் பெயர் தெரியாத இடங்களுக்குச் செல்வது போன்ற மாறுபட்ட வடிவங்களை எடுத்தன.

இவைகள் மட்டுமல்லாமல், மிருகத்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களையும், காலனியாதிக்கவாதிகளையும் எதிர்த்த போராட்டங்களும், கலகங்களும் வெடித்தெழுந்ததை நமது நாட்டினது வரலாற்றில் காண முடிந்தது.
தங்கள் வசமிருந்த மரபுவழிப்பட்ட ஆயுதங்களுடன் விவசாயிகள் நடத்திய ஆயுதமேந்திய கலகங்களின் பல நிகழ்வுகளைக் காண முடிந்தது.

1858-ம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் மன்னர்களும், கைவினைஞர்களும், விவசாயிகளும் காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினர்.

அவையாவன:
1820
மற்றும் 1837-ல் நடைபெற்ற கோல்களின் கலகம்

1836-க்கும் 1854-க்கும் இடையில் 22 முறைகள் வருவாய் வரி வசூலிப்பதை எதிர்த்து மலபார் விவசாயிகள் நடத்திய கலகங்கள் தக்கானத்தில் (பூனா,அஹமத் நகர் போன்ற மகாராஷ்டிர மாநிலத்தின் பகுதிகளில்) 1853-ம் ஆண்டிற்கும் 1875-ம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்:

1855-56 ம் ஆண்டுகளில் பீகார், வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சந்தால் விவசாயிகளின் கலகங்கள்.

1854 மற்றும் 1960 களில் வங்கத்திலும் பீகாரிலும் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்.

1857-ல் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் என்று பிரபலமாக அறியப்பட்ட சிப்பாய்க் கலகம்.
இக்கலகம் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்ட பரவலான பகுதிகளில் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தினரால் ஒன்றுபட்டு நடத்தப்பட்டதாகும்.

1859-1873 ம் ஆண்டுகளில் பாட்னா மற்றும் சிராஜ்கஞ்ச் (வங்கம்) ஆகிய இடங்களைச் சுற்றிலுமாக நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்

1859-1921 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாப்ளா விவசாயிகளின் போராட்டங்கள்.

மென்மையான கண்டன இயக்கங்கள் தொடங்கப்பட்டன.
அவை கிராமங்களை விட்டு வெளிச் செல்வது, தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்காகச் சொந்த கிராமங்களிலிருந்து ஓடிப் பிற கிராமங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருப்பது, நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு தூராந்திரப் பெயர் தெரியாத இடங்களுக்குச் செல்வது போன்ற மாறுபட்ட வடிவங்களை எடுத்தன.

இவைகள் மட்டுமல்லாமல், மிருகத்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களையும், காலனியாதிக்கவாதிகளையும் எதிர்த்த போராட்டங்களும், கலகங்களும் வெடித்தெழுந்ததை நமது நாட்டினது வரலாற்றில் காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *