அமால்நர், கான்பூர் ஆகிய நகரங்களைச் சார்ந்த மற்றும் தெற்கு இரயில்வேயைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராக எசமானர்கள் தொடுத்த ஒடுக்குமுறைகளை உறுதியுடன் எதிரிட்டு நின்றனர். இதற்குத் தோழமைப்பூர்வமாக ஆதரவளித்து பம்பாயில் 4 லட்சம் தொழிலாளர்களும், கல்கத்தாவில் 16 லட்சம் தபால்துறைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்.
அன்றைய காலத்தில் நடைபெற்ற முதன்மையான வேலை நிறுத்தங்களின் போது தொழிலாளர்களிடையே போர்க் குணத்தையும், போராடும் உணர்வையும் தொழிலாளர்களிடையே பொங்கியெழுந்த பேருணர்வையும் காண முடிந்தது.
இந்தப் போர்க்குணமுள்ள போராட்டங்களின் எழுச்சியானது இந்தியாவின், கொடுங்காேன்மை மன்னராட்சிப் பகுதிகளுக்கும் பரவியது, காஷ்மீரத்தில் டோக்ரா அரசர்குல மன்னராட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஷேக் அப்துல்லா தலைமையில் மகத்தானதாேர் இயக்கம் நடைபெற்றது.
அரசாங்கம் படுமாேசமான ஒடுக்குமுறையை அவிழ்த்துவிட்டது. இந்த வன்முறையை எதிர்த்து மக்கள் சீறி எழுந்தனர். ஜூன் 21,22 ல் நாடு முழுவதிலும் கண்டனக் கூட்டங்களும் ஹர்த்தால்களும் நடைபெற்றன. எல்லாேரும் காஷ்மீர மக்களுக்கு ஆதரவாக நின்றனர்.
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் வஞ்சகத் திட்டங்களும், அவற்றை மக்கள் இயக்கங்களுக்கு எதிராகப் பயன்படுத்த மேற்காெள்ளப்பட்ட முயற்சிகளும் அவர்கள் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை.
எனவேதான் அவர்கள் காங்கிரசுக்கும், முஸ்லீம்லீக்கிற்கும் இடையிலான முரண்பாட்டை இந்து முஸ்லீம் வகுப்பினரிடையே வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிடவும், மக்களிடையே இரத்தத்தை பெருக்கெடுத்தாேடச் செய்யவும் எழுந்துவரும் புரட்சிகர மக்கள் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கும் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தை இடைவிடாது நடைமுறைப்படுத்தி வந்தனர். காங்கிரஸ், முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகளின் தலைமை ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்வதற்காகச் செய்து கொண்ட அழிவுத்தரத்தக்க பாதை மக்களை இரண்டாகப் பிளவுப்படுத்தியது. இது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ஒருமுகப்படு்த்தவில்லை. இத்தகைய சரணாகதியானது கல்கத்தா, பம்பாய், நவகாளி, பீகார், மீரத் ஆகிய பகுதிகளில் கொடூரமான வன்முறை வகுப்புப் படுகாெலைகளை நடத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு வாய்ப்பை அளித்தது.
சிலநாட்கள் முன்னர் வரை தாமாக முன்வந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்த இந்திய மக்கள் பெருந்திரளினர் மீது அந்நிய ஆட்சியாளர்களால் ஏவப்பட்ட எதிர்த்தாக்குதல்களே இந்த வகுப்புக் கலவரங்கள் ஆகும். இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி அந்நிய ஆட்சியாளர்களின் முதுகெலும்புகளில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தினர்.
காங்கிஸ் தலைமை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் திட்டங்களை நிராகரிப்பதற்கு பதிலாக, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக நிற்பதற்கு பதிலாக, இவற்றுக்கெல்லாம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக ஏகாதிபத்தியத்துடன், சமரசங்களை செய்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் ஏகாதிபத்திய வாதிகளின் திட்டத்தை முஸ்லீம் லீக்கிற்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவே விரும்பினர்.
காங்கிரசைப் பின்பற்றிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். காங்கிரஸ் பின்பற்றிய வழியின் விளைவாக அவர்களிடையே முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு வளர்ந்தது. பெருந்தேசிய வெறி காங்கிரசுக்குள் பரவியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் தங்களுக்குள் ஒருவருக்காெருவர் எதிரெதிராகப் போராடிக்காெண்டு வகுப்புவாத படுநாசத்தில் தங்களை மூழ்கடித்துக் கொண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்க்கவும், அதற்கு எதிராக கலகம் செய்வதற்குமான அவர்களின் ஆற்றலை இழக்கச் செய்யவே விரும்பினர்.
சில காலங்கள் வரை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான வகுப்புப் படுகாெலைகள் கிழக்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை முனைமழுங்கச் செய்தன. சில அளவுகளில் வகுப்புக் கலவரங்கள் என்ற கரு மேகங்கள் 1946 களின் தொடக்கத்தில் ஒன்றுபட்ட மக்களின் போராட்டங்கள் என்ற சிவப்பு உதயத்தை மூடிமறைத்தன
கல்கத்தாவில் இந்து முஸ்லீம்களிடையே சகாேதரப் படுகாெலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளி வர்க்க உரிமைகளைப் பெறுவதற்கு இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு துப்பாக்கிகளை எதிர்காெண்டனர்.
1946 ஆகஸ்ட் 24 லிருந்து செப்டம்பர் 23 வரை கல்கத்தாவின் தெருக்களில் இந்து முஸ்லீம்களிடையே சகாேதரப் படுகாெலைகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் 40,000 பேர்களைக் கொண்ட தென்னிந்திய இரயில்வேயை சேர்ந்த இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக நின்று தங்களின் உரிமைகளுக்காகப் போராடினர்.
பொன்மலையில் தங்கள் தலைவர் இஸ்மெய்ல்கான் என்பவரை விடுதலை செய்யக் கோரி காவல் துறையினரின் துப்பாக்கிகளை துச்சமாக மதித்து 4,000 தொழிலாளர்கள் போராடினர்.
பம்பாயிலும்,டாக்காவிலும் பிற இடங்களிலும் வகுப்புக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்த போது செப்டம்பர் 25ல் இராணுவத்தை சேர்ந்த இந்து முஸ்லீம் காவல்துறையினர் தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாய் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
நவகாளியில் நாடே வெட்கத்தினால் தலை குனியும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னராட்சிப் பகுதிகளில் எல்லா மதங்களையும், பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஆலப்பி என்ற இடத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக தங்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களை நடத்தினர்.
பீகாரில் தூண்டிவிடப்பட்ட கும்பல்கள் தங்களின் சகாேதரர்களைப் படுகாெலை செய்து கொண்டிருந்த போது தெலுங்கானாப் பிரதேசத்தைச் சேர்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த விவசாயிகள் நிஜாமின் கொடுங்காேல் ஆட்சியின் கொத்தடிமை முறையையும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கலகம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தாங்கள் சாதித்தவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக இந்திய இராணுவத்தை எதிர்த்தும் நிஜாமினது இராணுவ சட்டத்தை எதிர்த்தும் கலகம் செய்து கொண்டிருந்தனர். ஹைதராபாத் மன்னராட்சி பிரதேசத்தின் மையத்திலேயே தாக்குதலைத் தொடு்த்ததன் மூலம் ஜமீன்தாரி அமைப்பினது அஸ்திவாரத்தையே ஆட்டங்கானச் செய்தனர்.
இந்த மக்களின் போராட்டங்களை ஆய்வு செய்து மக்களுக்குச் சரியான புரட்சிப் பாதையைக் காட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்திருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைவனாக அது மலர்ந்திருக்க வேண்டும், மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் ஒரு சரியான புரட்சிகர திசைவழியை வகுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அதனால் செய்ய முடியவில்லை.
நாட்டினது ஒரு மூலையில் இந்து முஸ்லீம் மதங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், விவசாயிகளும், ஈவிரக்கமின்றி தங்களை சுரண்டி சூறையாடி வந்த ஏகாதிபத்தியவாதிகளையும் ஜமீன்தார்களையும் எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடி கொண்டிருந்தனர். இன்னாெரு மூலையில் கொடுமையான முறையில் ஒருவருக்காெருவர் எதிரெதிராகப் போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த வகுப்பு வாதக் கலவரங்கள் தங்களின் கூட்டான ஒன்றுபட்ட போராட்டங்களுக்கும் ஒன்றுபட்ட அமைப்புகளுக்கும் தீவிரமான முறையில் தீங்கு விளைவிக்கும் என்பதை வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் இயற்கையாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
நாடு முழுவதிலும் ஒட்டு மொத்தத் தொழிலாளர்களும் பங்கேற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இந்த வகுப்புக் கலவரங்கள் கடுமையான அடியாகும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இந்த கலவரங்களை நிறுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்காெண்டனர்.
தொடரும் …6/-