கம்யூனிஸ்டுகளால் கட்டியமைக்கப்பட்டு வந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தை நசுக்குவதற்கும்,அதன் முன்னேற்றத்தைத் தடுக்கவும் காலனிய அரசாங்கம் 1924-ல் கான்பூர் சதி வழக்கையும் 1929-ல் மீரத் சதி வழக்கையும் சதித்தனமாக தொடுத்தது.
இந்த நடவடிக்கைகள் தொழிலாளி வர்க்க இயக்கம் அதன் உச்சத்தை நோக்கி வேகமடைவதை தடுத்ததே தவிர அதனை அழித்திட முடியவில்லை இரண்டே ஆண்டுகளில் தொழிலாளி வர்க்க இயக்கம் மீண்டெழுந்து அதன் சிகரத்தைத் தொட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கம் அவிழ்த்துவிட்ட அடக்குமுறைக்கும் அதிகமாகவே, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அசிங்கமான முறையில் தலைதூக்கிய சீர்திருத்தவாதம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சாரத்தை பலவீனப்படுத்தி அழித்தது.
தொழிலாளி வர்க்க இயக்கத்தை ஐக்கியப்படுத்தப்பட்ட சக்தியாக ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக சந்தர்ப்பவாதத்துடன் கூடிய சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சதிகளைச் செய்தனர். அதனை அதிகார வர்க்கத் தொழிற்சங்கங்களாக தரங்கெடச் செய்தனர்.இதனால் தொழிலாளி வர்க்கம் இந்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டது.
தொழிலாளிகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியாேரிடையே உணர்வைச் சீறி எழச்செய்த கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டினது மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து கட்சி அடக்குமுறைக்கு எதிராகப் பல இயக்கங்களை நடத்தியது.
இந்திய தேசிய இராணுவத்தின் (I.N.A) படைவீரர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிராகவும் இந்து முஸ்லீம் கலவரங்களைத் தடுப்பதற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகப் பணியாற்றியது. இக்கட்சி ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களைக் கட்டியமைத்ததாேடு, மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டியமைத்தது.
ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி வெறி பிடித்த மமதையில் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்கள் மீது கொடுமை மிக்க விசாரணையை நடத்திய போது ஒட்டு மொத்த நாடே வீறிட்டெழுந்தது இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்களை நிபந்தனையற்று விடுவிக்கக் கோரி ஒரே குரலில் கோபத்துடன் கர்ஜித்தது.
1945 நவம்பரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மாணவர்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு முன்னணியில் நின்று இந்த இயக்கங்களை ஆதரித்தனர். அவர்கள் பெரிய அளவிலான கதவடைப்புப் போராட்டங்களையும் (ஹர்த்தால்கள்) வேலை நிறுத்தங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
காங்கிரஸ், முஸ்லீம்லீக் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு முன்னணியில் நின்று இந்த இயக்கங்களை ஆதரித்தனர். அவர்கள் பெரிய அளவிலான கதவடைப்புப் போராட்டங்களையும், வேலை நிறுத்த்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிப் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்த போது அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்திய மக்களைச் சேர்ந்த மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்து வெற்றியை ஈட்டிப் பெற்றனர்.
கடற்படையினரின் கலகம்
இந்திய இராயல் கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றின் சிப்பாய்கள் தங்களாேடு பணிபுரியும் பிரிட்டிஷ் சிப்பாய்களைப் போன்றே தாங்கள் நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு வழங்கப்படும் அதே போன்ற உணவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோரினர் இதற்கு மேல் அவர்கள் வேறெதையும் கோரவில்லை.
இந்தக் கோரிக்கைகளை அடையப்பெறக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களிலும், கப்பற்படை தளங்களிலும் பணிகளை முடக்கிக் கண்டனங்களைத் தெரிவித்தனர். தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நகரத்தை நோக்கி ஆர்ப்பாட்ட அணிவகுப்பை நடத்தினர்.
இந்திய தேசிய இராணுவத்தின் சிப்பாய்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் இந்தாேனேஷியாவுக்கு அனுப்பப்பட்ட படைப் பிரிவுகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர், தங்களின் கப்பல்களில், காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். கடற் படையினரிடையே புதிதாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய தேசபக்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டியது. கைது செய்தும் துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டும் கடற்படையினரை நசுக்க விரும்பினர்.
கப்பல்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு கடற்படையினர் கூர்மையாக எதிர்வினை புரிந்தனர். அவர்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே எதிர்க்க முடிந்தது, ஆனால் அவர்களின் வீரமிக்க எதிர்ப்பு பம்பாய், கராச்சி ஆகிய பகுதிகளிலிருந்த கடற்படையினரைப் புரட்சிகர சகாப்தத்தினது தோற்றத்தின் முன்னாேடியாக எழுச்சியுறச் செய்தது, அவர்களின் வீரத்துடனும், தேசப்பக்தியுடனும் கூடிய ஒன்றுபட்ட போராட்டம், இந்திய இராணுவப் படையினரிடம் மகத்தான உணர்வைப் பொங்கியெழச் செய்தது.
இந்தியக் கடற்படையினருக்கு ஆதரவாக விமானப் படையினரும் பல இடங்களில் பணிகளை முடக்கினர், எல்லாவிடங்களிலும் கலகத்தில் ஈடுபட்ட கப்பற் படையினரைச் சுடுவதற்கு இந்திய இராணுவத்தினர் மறுத்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்படையினரின் கலகத்தை கம்யூனிஸ்ட் கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட தொழிலாளர்கள் அங்கீகரித்து ஆதரித்தனர். கடற்படையினரின் கலகத்தை ஆதரித்து பம்பாய், கல்கத்தா, திருச்சி, சென்னை ஆகிய பல இடங்களில் மகத்தான வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் டாங்குகளாேடு வெள்ளைப் படையினரையும் ஆயுதந்தாங்கிய வாகனங்களையும் கலகம் நடந்த இடத்திற்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த வெள்ளை இராணுவம் மக்களை அச்சுறுத்துவதற்காக மனிதத் தன்மையற்ற படுகாெலைகளை நடத்தியது. இரண்டு நாட்களில் சமாதானத்தை விரும்பும் 200க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கப்பல் படையினரின் கலகமும் இந்தியத் தொழிலாளர்களின் மகத்தான ஆர்ப்பாட்டங்களும் ஒன்றுக்காென்று தொடர்பற்ற தனித்த நிகழ்வுகளல்ல, கப்பல் படையினர் வேலை நிறுத்தத்தை நடத்திய ஒருவார காலத்திற்குள் ஜபல்பூர் இராணுவத் தளத்திலிருந்த 300 சிப்பாய்கள் தங்கள் பணிகளை முடக்கி காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பதாகைகளை உயர்த்தி மார்ச் 4-ம் நாள் தெருக்களில் அணிவகுப்பை நடத்தினர்.
மார்ச் 8-ம் நாளன்று டெல்லியில் பிரிட்டிஷார் நடத்திய வெற்றி விழாவை எதிர்த்துத் தொழிலாளர்களும் மக்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களும் நகர்மன்றக் கட்டிடத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
மார்ச் 18-ம் நாளன்று அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. டேராடூனில் கோர்க்காப் படைப் பிரிவினரை ராணுவம் கைது செய்தது.
உணவுப் பொருட்களின் அளவைக் குறைத்ததை எதிர்த்து அலகாபாத்தில் காவல் துறையினர் மார்ச் 19-ம் நாளன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஏப்ரல் 3-ம் நாளன்று பீகாரில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேலே விளக்கிய வகையில் ஆயுதப்படை களிடையேயும், காவல்துறையினரிடையேயும் அந்த நேரத்தில் புரட்சிகரச் சூழல் நிலவியது. அதே அளவில் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்க்க முடியாத வேலை நிறுத்த அலை ஏற்றத்தால் சூழல் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்திய பிரிட்டிஷ் முதலாளிகளின் சுரண்டலையும் ஒடுக்கு முறைகளையும் இனியும் தாங்க முடியாது என்ற நிலையிலிருந்த தொழிலாளர்களும் ஊழியர்களும் அமைதிக் காலங்களில் கூட ஒன்றுபட்டு அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டு மொத்த உலகப் போர்க் காலமான 1942-ல் அதிகமான அளவில் வேலை நிறுத்தங்களின் அலை ஏற்றம் காணப்பட்டது. 1946-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1942-ல் நடந்த போராட்டங்களை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
1946 ஏப்ரலில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்திற்காக ஒரு வாக்கடுப்பு நடத்தியது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக 100% தொழிலாளர்கள் வாக்களித்தனர்.
வேலை நிறுத்தத்திற்கான முடிவினால் விளைந்த உணர்வு, பிற ஊழியர்கள், எழுத்தர்கள், வங்கிகளில் பணிபுரியும் சேவகர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், அரசாங்கச் சிப்பந்திகள் ஆகியாேரிடையே மின்சாரத்தைப் போல அவ்வளவு வேகமாகப் பரவியது. அன்றைய காலத்திலான போர்க்குணமிக்க போராட்டங்களின் உணர்வை இவை பிரதிபலித்தன.
தொடரும்…5/-