இந்திய போராட்ட வரலாறு-2

தங்கள் வசமிருந்த மரபு வழிப்பட்ட ஆயுதங்களுடன் விவசாயிகள் நடத்திய ஆயுதமேந்திய கலகங்களின் பல நிகழ்வுகளைக் காண முடிந்தது.

1858-ம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும், மன்னர்களும் கைவினைஞர்களும் விவசாயிகளும் காலனி ஆட்சியாளர்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தினர் அவையாவன:

1820 மற்றும் 1837-ல் நடைபெற்ற கோல்களின் கலகம்,

1836-க்கும் 1854-க்கும் இடையில் 22 முறைகள் வருவாய் வரி வசூலிப்பதை எதிர்த்து மலபார் விவசாயிகள் நடத்திய கலகங்கள் தக்கானத்தில் (பூனா, அஹமத் நகர் போன்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் பகுதிகளில்) 1853-ம் ஆண்டிற்கும் 1857-ம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்:

1855-56 ம் ஆண்டுகளில் பீகார், வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சந்தால் விவசாயிகளின் கலகங்கள்,

1854 மற்றும் 1860 களில் வங்கத்திலும் பீகாரிலும் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1857-ல் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் என்று பிரபலமாக அறியப்பட்ட சிப்பாய்க் கலகம்.
இக்கலகம் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்ட பரவலான பகுதிகளில் முஸ்லீம் மற்றும் இந்து மதத்தினரால் ஒன்றுபட்டு நடத்தப்பட்டதாகும்.

1859-1873 ம் ஆண்டுகளில் பாட்னா மற்றும் சிராஜ்கஞ்ச்(வங்கம்) ஆகிய இடங்களைச் சுற்றிலுமாக நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்.

1859-1921 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாப்ளா விவசாயிகளின் போராட்டங்கள்,

1866-1868 ம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் தர்பங்கா, சம்பரான் ஆகிய இடங்களில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1873 ம் ஆண்டிலும்,மீண்டும் 1890-ம் ஆண்டிலும் கிழக்கு வங்காளத்திலுள்ள ஜெஸ்சாேரில் நடைபெற்ற விவசாயிகளின் கலகங்கள்,

1879-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராம்பாவில் நடைபெற்ற கோயாக்களின் கலகம்,

1893-94 ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநில விவசாயிகள் வருவாய் வரியைக் கட்ட மறுத்ததற்காக அவர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதற்கு எதிராக நடைபெற்ற விவசாயக் கலகங்கள்,

1895-1901 ம் ஆண்டுகளுக்கிடையே நடைபெற்ற முண்டாக்களின் கலகங்கள்,

நிலப்பிரபுக்கள் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிடும் போது விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகிய உற்பத்திச் சக்திகள் நடத்திய போராட்டங்கள் அதிகமானவை என்பதாேடு, இவர்கள் நடத்திய போராட்டங்கள் எண்ணிக்கையிலும் பரப்பிலும் அதிகப் புகழ் பெற்றவையாகவும், அதிகப் பிரபலமடைந்தவையாகவும் இருந்தன.

புதிய விழிப்புணர்வும் புதிய அரசியல் சக்திகளும்

19-ம் நூற்றாண்டின் முடிவில் தலித்துகளும், பெண்களும் சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்தனர்.
பல மாநிலங்களில் மக்கள் விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.
எழுத்தறிவிற்கான இயக்கங்கள் நூலகங்கள், பத்திரிக்கைகள் முற்பாேக்குக் கருத்துக்கள் ஆகியவை துல்லியமான வடிவங்களை எடுத்தன.

விடுதலைக்கான போராட்டம் நாடு முழுவதும் சாதிகள், தேசிய இனங்கள், பிரதேச வேறுபாடுகள் ஆகியவற்றைத் தாண்டி விரிவடைந்தது.
தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியாேரது போராட்டங்களும் அணிவகுத்து முன்னேறின.
முற்பாேக்குக் கருத்துக்களால் உற்சாகமடைந்த மத்தியத்தர வர்க்கம் போராட்டங்களைப் பாதுகாத்துத் தலைமை ஏற்று நடத்த முன்வந்தன.

தங்களின் சூறையாடலுக்காகவும் தங்களின் நிர்வாகத்தை நடத்துவதற்காகவும் கல்வி, போக்குவரத்து, செய்தித் தொடர்பு ஆகியவற்றை இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தினர்.
இவைகள் அவர்களின் அக விருப்பங்களுக்கு எதிராக நிலம் பிரதேசம் ஆகிய எல்லாத் தடைகளையும் தாண்டி மக்களிடையே ஜனநாயகக் கருத்துக்களைப் பரவ செய்தன.

ஐராேப்பாவில் நடைபெற்ற முதலாளிய ஜனநாயகப் புரட்சி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பாட்டாளி வர்க்க இயக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளும் புரிதல்களும் மக்களிடம் சென்றடைந்தன.

அங்கெங்கெனாதபடி பரவலாக முற்பாேக்குக் கருத்துக்களும் புதிய அரசியல் திசைவழிப்படுத்தலும் பரவின.
இத்தகைய வழியில் முற்பாேக்குக் கருத்துக்களுக்கும் பிற்பாேக்குக் கருத்துக்களுக்கும் இடையிலான போராட்டங்கள், இவற்றின் எதிர் விளைவுகள் மற்றும் சுதந்திரத்தை விரும்பும் சக்திகளிடையேயான ஒருங்கிணைவு ஆகியவற்றினிடையில் புதிய அரசியல் சக்திகளின் முன்னேற்றம் நடந்தேறியது.

புதிய அரசியல் சக்திகளின் தோற்றம் சுதந்திரத்தை விரும்புகிற சக்திகளுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிரான இவர்களின் எதிர்ப்பு பல்வேறு வடிவங்களை எடுத்தது.

கதார் கட்சி விடுதலைக்காக ஆயுதமேந்திய எதிர்ப்புக்கான தயாரிப்புகளைச் செய்தது. பகத்சிங்கும் மற்றவர்களும் ஆரம்பக் கட்டத்தில் அந்நியக் காலனி ஆதிக்க நுகத்தடியிலிருந்து நாட்டை விடுவிக்கப் பயங்கரவாத வழிமுறையைப் பின்பற்றினர்.

அல்லூரி சீதாராமராஜூ, கொமுரம்பீம், பிர்சா முண்டா ஆகியாேர் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொழுந்துவிட்டெரியச் செய்தனர்.
இந்தக் கட்டத்தில் ஓரளவிற்கு அதிகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டது பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் கண்காணிப்புக் கண்களின் கீழான பல்வேறு அமைப்புகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரிய அளவில் அமைதியான வன்முறையற்ற பாதை பற்றி அவர்கள் பரப்புரை செய்தனர், அவர்கள் மக்களின் கலகங்களை வன்முறையானவை அராஜகமானவை என்று முத்திரை குத்தினர் என்பதாேடு அவற்றை எதிர்க்கவும் செய்தனர்.

நாடு முழுவதிலும் விடுதலைக்கான போராட்டம் கிளம்பியிருந்த நேரத்தில் அவர்கள் அகிம்சையைப் பரிந்துரைத்தனர். மிக உயர்ந்த நிலையில் அமைதியானசத்தியாக்கிரகங்களைநடத்தி அதை பாதுகாப்பான போர்வையாகப் பயன்படுத்தினர்.

காந்தியின் தலைமை மிகத் திறமையான முறையில் அமைதியான சத்தியாக்கிரகம் என்ற வழிமுறையை நடைமுறைப்படுத்தி பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக எழுந்த அலை வீச்சின் மீது குளிர் நீரை ஊற்றி காலனி ஆட்சியாளருடன் பேரம் பேசுவதற்கான கருவியாக அதனைப் பயன்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தங்களும் ஒடுக்குமுறைச் சட்டங்களும்:

பிரிட்டிஷ் அரசு மக்களின் கோபத்தை மந்தப்படுத்தி நசுக்க 19-ம் நூற்றாண்டுக்கு முன்னரே ஒரே சமயத்தில் நிகழுமாறு சீர்திருத்தங்களுக்கான சட்டங்களையும் ஒடுக்கு முறைக்கான சட்டங்களையும் நடைமுறைப் படுத்தினர்.

அவ்வாட்சி சீர்திருத்தங்களுக்கான பல சட்டங்களை அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அல்லாமல் மக்களிடையே பிரமைகளை ஏற்படுத்தி மக்களின் ஒன்றுபட்ட வலிமையின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே இயற்றினர்.

தொடரும்–3/