இந்திய போரட்ட வரலாறு-3
இந்திய போரட்ட வரலாறு-3

இந்திய போரட்ட வரலாறு-3

19-ம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் புதிய சூழல் தோன்றி தேசிய இயக்கத்திற்கு உத்வேகமூட்டியது.

1908-ல் பம்பாய் நெசவாலைத் தொழிலாளர்கள் பாலகங்காதர திலகரின் கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுதான் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் ஆகும்.இந்த வேலை நிறுத்தத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் சில தலைவர்கள் தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்றனர். 1906-09 காலகட்டத்தில் மட்டும் 500 அரசியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பஞ்சாப்பில் விவசாயிகளின் கலகங்கள் மிருகத்தனமாக நசுக்கப்பட்டன.

வெடித்தெழுந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கங்கள்:

1914-ல் ஜாரிஸ்ட் ரஷ்யா ஜப்பானால் தோற்கடிக்கப்பட்டதும், தொழிலாளி வர்க்கத்தால் வழிநடத்தப்பட்டு ரஷ்யாவில் வெற்றிகரமாக நடைபெற்ற அக்டாேபர் 17-ம் நாள் புரட்சியும், இந்திய மக்களுக்கு உத்வேகமூட்டின.

இந்திய மக்கள் பெருந்திரளினர் காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் குதித்தனர். இந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும் நசுக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் சிறப்புச் சட்டங்களை இயற்றி அவற்றை ஆயுதமாகத் தரித்துக் கொண்டது.

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1917-ல் ரௌலட் குழு சதி வழக்குகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டது.
1919-
ல் இது சட்டமாக்கப்பட்டது.

பஞ்சாப்பில் மக்கள் இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்குவதற்கு இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 1917-18 ம் ஆண்டுகளில் பீகார் மாநில சம்பிரான் விவசாயிகள் ஒரு போர்க்குணமுள்ள போராட்டத்தை நடத்தினர்.

1921-22 ம் ஆண்டுகளில் மலபாரில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியிலுள்ள ராம்பா பழங்குடியினர் அல்லூரி சீதாராமராஜூ தலைமையில் ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தினர்.

1920-22 ம் ஆண்டுகளில் கொடிய ஒடுக்கு முறைகளை எதிரிட்ட வெகுஜன இயக்கம் தாவிப் பாய்ந்து முன்னேறியது.15-லட்சம் தொழிலாளர்கள் 200 வேலை நிறுத்தங்களில் பங்கு கொண்டனர். காந்தியின் அனுமதி இல்லாமலே குண்டுல் மாவட்டத்தில் பதனந்திப்பாடு என்ற கிராமத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வரிகாெடா இயக்கத்தை நடத்தினர்.

ஆனால் காந்தியாே உடனடியாக வரியைக் கட்டுமாறு அவர்களுக்கு கடிதம் எழுதினார். பர்தாேலியிலும், சௌரிசௌராவிலும் நடந்த நிகழ்வுகளைக் காந்தி விரும்பவில்லை, பிரிட்டிஷ் அரசாங்கம் புரட்சிகர அரசியல் அறிகுறிகளாக மோப்ளா விவசாயக் கலகம் வெடித்தெழுந்ததையும், கான்பூர் சதி வழக்கின் விசாரணை நடந்த போது வெடித்தெழுந்த கலவரத்தையும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

1926-28 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தொழிலாளி வர்க்க இயக்கங்கள் அதன் சிகரத்தைத் தொட்டன, சூர்யா சென் தலைமையில் மத்தியத்தர வர்க்கப் புரட்சியாளர்கள் சிட்டகாங் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றினர்.

ஐக்கிய மாநிலத்திலும் வரிகாெடா இயக்கம் தொடர்ந்தது. பெஷாவர் நகரைக் கைப்பற்றிய மக்கள் திரள் இயக்கப் போராளிகள் அந்நகரைப் பத்து நாட்களுக்குத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

அக்கலகத்தை நசுக்க கூர்க்காப் படைப் பிரவு அனுப்பப்பட்டது. ஆனால் இராணுவத்தினராே மக்களைத் துப்பாக்கியால் சுட மறுத்துவிட்டனர்.தொழிலாளர்கள் ஷோலாப்பூர் நகரை ஏழு நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டனர். இராணுவச் சட்டம் பிறப்பிக்கும் வரை அந்நகர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

1942-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா என்ற இடத்தில் மக்கள் அரசை நிறுவி 10 நாட்கள் ஆட்சி புரிந்தனர்.இதைப் போன்றே கிழக்கு உத்திரப் பிரதேசத்திலும், வடபீகாரின் பகுதியான பாலியாவிலும் 1942-ம் ஆண்டில் திஜ் (THEG) மக்கள், மக்கள் அரசை நிறுவினர்.

அதே ஆண்டு மேற்கு வங்கத்தின் மதினிபூர் மாவட்டத்தில் தாம்ராலிப்தா என்றழைக்கப்பட்ட மக்கள் அரசை நிறுவினர். ஆனால் காந்தியத்தின் விளைவாய் இந்த மக்கள் திரள் இயக்கங்கள் துயரமான முடிவுக்கு வந்தன.

இந்த மகத்தான மக்கள் திரள் போராட்டங்கள் 1920-30 களில் துயரமான முடிவுக்கு வந்தன என்பதனாலேயே இதனால் பலன் ஏதுமில்லை என்று நாம் கருத முடியாது, இந்தப் போராட்டங்கள் வளமான அனுபவத்தைக் கொண்டவை.

அளவற்ற மக்கள் பேரார்வத்தை, உணர்வுகளை, ஒத்துழைப்புகளை, தியாகங்களை வெளி்படுத்தின. தற்காலிகத் தோல்விகள் இந்தச் சாதனைகளை துடைத்தெறிந்து விட முடியாது.இது எதிர்காலப் போராட்டங்களுக்கான படிக்கற்கள் ஆகும். இந்தப் போராட்டங்களை ஆய்வு செய்வதும் புரிந்து கொள்வதும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும்.

2) கம்யூனிஸ்ட் கட்சி

1921-25 ஆண்டுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருத்தலுக்கு வந்தது. (இக் கட்சி அமைக்கப்பட்ட சரியான தேதி இனிமேல்தான் கட்சியால் தீர்மாணிக்கப்பட வேண்டும்).

இக்கட்சி இந்திய மக்களை ஒன்றுபடுத்தி அமைப்பாக்கியது. இதன் நோக்கம் சோசலிசம், தொழிலாளர் விவசாயிகள் அரசு, விடுதலை என்பவை ஆகும்.

இக்கட்சி நிலப்பிரபுத்துவ ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், திட்டமிட்ட நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் கட்டியமைத்தது.

1942-ம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் கட்சியினால் வெளிப்படையாக இயங்க முடியவில்லை. 1921-ம் ஆண்டிலிருந்தே பல சதி வழக்குகளை இக்கட்சி எதிரிட்டது.
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக லாகூர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரத் சதி வழக்கு போன்ற சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

கம்யூனிஸ்டுகள் தனித்த முறையில் தேசிய இயக்கத்தை இந்திய விடுதலைக்கான வெகுமக்கள் இயக்கமாக வளர்த்து விடுவார்கள் என்றும் கிராமப்புற ஏழைகளும் தொழிலாளர்களும் இத்தகைய இயக்கத்தை கட்டியமைப்பாேராக ஆகிவிடுவர் எனவும் அஞ்சியதால் பிரிட்டிஷ் அரசு தீர்மாணமான முறையில் கம்யூனிஸ்ட் கட்சியை கருக்காெண்ட நிலையிலேயே நசுக்கும் வகையில் செயல்பட்டது.

தொடரும்….4/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *