மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-30
இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-13
தோழர்களே நேற்றைய பதிகளையும் உங்களின் உறையாடல்களையும் கருத்தில் கொண்டு இந்தப் பதிவு எழுதுகிறேன்….
1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை.
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிறைவுறப் போகிறது ஆனால் அவை தனது இலக்கை அடையாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு தவிக்கிறது.
CPI,CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.
தொடரும் தோழர்களே…..சிபி.