இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த காலம். சி.ப
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த காலம். சி.ப

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த காலம். சி.ப

இன்று எங்கள் எண்ணம் ஈடேறியது அதாவது மார்க்சியம் பேசுவோம் வாருங்கள் என்ற குழுவில் முதல் உரையாடலைத் தொடங்கினோம் அதாவது பல முன்னணி தோழர்களையும் பல மூத்த தோழர்களையும் இளம் தோழர்களையும் இதற்காக அழைத்திருந்தோம் மிகக்குறைவாகவே ஆர்வம் கொண்டு சில தோழர்கள் கலந்து கொண்டனர் இதற்காக 5 நாட்கள் முன்னதாகவே அறிவித்தும் தோழர்களுக்கு தனியாக வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரில் செய்தி அனுப்பி இருந்தோம் தோழர்கள் கலந்து கொள்ளாமை அவர்களுடைய விருப்பம் தான். இருந்தும் இதில் இன்று நாங்கள் பேசியதையும் மற்றும் எங்களுக்கான சில கருத்துக்களையும் இங்கே பதிவிட நினைக்கின்றேன்

முதற்கண் எனது பேச்சிலிருந்து இந்தப் பதிவு.
” மார்க்சியம் பேசுவோம் வாருங்கள்” குழுவின் அழைப்பின் பெயரில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் எனது செவ்வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாம் அறிந்தவரை மார்க்சிய அறிவை கூடுதலாக வோ குறைவாகவோ எல்லோரும் பேசி கொண்டும் எழுதியும் வருகிறோம்.

ஆனால் இவை பொதுக் கருத்தாக ஆகாமல் இருப்பது ஏன் என்பதனை பற்றி பேசுவதற்காகவே இந்த முயற்சி இதேபோல் மாறுதலுக்கு இன்னும் பல தொடர் உரையாடல்களை ஏற்படுத்தலாம் என்பது நமது நோக்கம்
நான் அறிமுக உரையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிப் போக்கை ஒரு சுருக்கமாக உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன் அதன்பின் தோழர்கள் கலந்துரையாடலாம் என்ற அடிப்படையில் தொடங்குகிறேன்.
தோழர்களே இந்திய பொதுவுடைமை இயக்கமும் சீன பொதுவுடைமை இயக்கம் ஒரே காலத்தில் தொடங்கப்பட்டது.
சீனத்தில் பொதுவுடைமை கட்சி புரட்சி முடித்து இன்று அங்கே எதிர்ப்புரட்சி கோலோச்சுகிறது அப்படி எனும்போது நாம் இன்னும் புரட்சிக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறோம் அப்படி எனில் இந்திய பொதுவுடைமை இயக்கம் கண்ட சாதக பாதங்களை நான் சுருக்கமாக உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன்
மகத்தான ரஷ்ய புரட்சிக்கு பின் முன்னேறிய மேலை நாடுகள் மட்டுமன்றி காலனிய பின்தங்கிய நாடுகளிலும் புரட்சிக்கான ஒரு உத்வேகம் எழுச்சி தோற்றுவித்தது மார்க்சிய கொள்கையால் ஈடுபாடு உள்ள அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினர் அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
1920 ஆம் ஆண்டுகளில் தொடக்கம் இக்குழுக்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலில் ஒரு கட்சியாக உருவெடுத்தது அவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய காலனி ஆட்சியில் கட்சி தொடங்கும் பொழுது ரஷ்ய படிப்பினை அறிந்திருந்த பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் கம்யூனிஸ அபாயத்தை தோற்கடிக்க சதி வழக்குகள் போலீசாரின் உளவுப் பிரிவின் நாச வேலைகளில் பொதுவுடைமை இயக்கம் உதிப்பதை முடக்கப் பார்த்தது.
தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து செயல்பட அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைக்கப்பட்டது பல போராட்டங்கள் கம்யூனிஸ்டுகள் தலைமை ஏற்கும் நிலையில் இருந்தது. காந்திக்கு இருந்த பிர பலத்தையும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை கண்டு அஞ்சிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நாம் தனித்தனி பட்டுவிடுமோ என்ற பயத்தினால் காங்கிரசாரின் தவறுகளை தட்டிக் கேட்க இல்லாதது போலவே தானும் விடுதலை இயக்கத்திற்கு தலைமை ஏற்க துணியவில்லை நாட்டில் பல போராட்டங்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு இறப்பின் போதும் ஆயுதந்தாங்கிய மோதல் ஏற்படும் பொழுதும் காந்தியால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் இருந்தும் கம்யூனிச தொண்டர்களின் போராட்டங்களில் இருந்து பின்வாங்காமல் போராடிக் கொண்டிருப்பர் கம்யூனிஸ்ட் கட்சியை எவ்வித தயாரிப்பும் இன்றி போராட்டத்தில் தன் வீரியத்தை காட்டாமல் ஒதுங்கி கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கவேண்டிய செல்வாக்கை அவை பெறாமலே போய்க்கொண்டிருந்தது
1929 கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் கான்பூர் மீரட் போன்ற பல்வேறு சதி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனால் இயக்கம் பின்னடைவு கண்டாலும் பெஷாவர் சோலாப்பூர் தொழிலாளர் கம்யூன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போட்டி ஆட்சி ஆட்சியை உருவாக்கி இந்த இரு நகரங்களும் சில காலம் மக்களின் கையில் அதிகாரம் இருந்தன இவை காந்தியின் பல போராட்டங்களை பின்னுக்கு தள்ளியது.
இதற்குப் பின்னரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மக்கள் போராட்டங்களுக்கு தலைமை ஏற்க மறுத்தது
1935 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் மூலமாக ” இந்தியர்கள்” அமைச்சர்கள் ஆகினர். காங்கிரஸ் பல மாநிலங்களில் பதவியேற்றனர். விடுதலை போராட்ட இயக்கங்கள் மக்கள் திரளில் இன்றி நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு மாறியது.
இந்நேரத்தில் தனது நிலைப்பாட்டை சரியாக வைக்க வேண்டிய கம்யூனிஸ்டு இயக்கமானது சந்தர்ப்பவாத போக்கிலே வளைய ஆரம்பித்தது தனது சரியான நிலையிலிருந்து சரிந்தது
இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்திலிருந்து போர் எதிர்ப்பின் காரணமாக பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்.
சிறைக்கு வெளியே இருந்த தலைமறைவான கட்சித் தலைவர்கள் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி நமது தேசிய விடுதலைக்காக தீவிரமான போராடுவது என பிரகடனப்படுத்தியது (ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர் தொடுக்க சொல்கின்றனர்). ஆனால் சிறையில் இருந்து தலைவர்கள் ஆங்கிலேயர் தயாரிப்புக்கு ஆதரவளித்து வேலை நிறுத்தம் வேலைநிறுத்தத்தை தடைசெய்யும் கூறுகின்றனர்
போராட்டக் களத்தில் மக்கள் இயக்கங்களுக்கு தலைமையை ஏற்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்க்கத் தவறியது. இது அடிக்கடி மக்கள் போராட்டங்களை பின்னுக்கு இழுக்கவும் செய்தது.
ஆட்சி மாற்றத்துக்கு பின், 1948 ன் தொடக்கத்தில் வர்க்க சமரசத்திற்கு எதிராகப் போராடி தலைமையை கைப்பற்றிய பி.டி ரணதிவேயின் கிளர்ச்சி நடவடிக்கை , அதேநேரத்தில் ஐதராபாத் சமஸ்தான பகுதிக்குட்பட்ட நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைக்கும் நிஜாமின் ஆட்சியை தூக்கி எறியவும் ஓர் இயக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் வலுப்பெற்றிருந்தது.
அதை நிஜாமுக்கு எதிராக போர் ஆக இருக்கும் வரை தேசிய அளவில் ஆதரவு பெற்று பேரியக்கமாக இருந்தது.
தெலுங்கானா இயக்கத்தின் உள்ளூர் தலைவர்கள் மாவோவின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இருந்தனர் ஆனால் 1950களில் பி.டி.ரணதிவே மாவோவின் நிலைப்பாட்டை காலாவதியான போன போலி மருத்துவம் என்றார்.
இந்தியாவுடன் ஹைதராபாத் இணைந்தவுடன் ஆயிரத்து போராட்டத்தை தொடர்வதா விலகிக்கொள்வதாக என்று தலைமையில் குழப்பத்தை உருவாக்கியது. டாங்கே அஜய் கோஸ் போன்றவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அறிவுறுத்தினர். போராட்டம் தொடர்ந்தது உண்மையில் கட்சித் தலைமை தெலுங்கானா இயக்கத்தை காட்டிக் கொடுத்து கைவிட்டது.
1948 முதல் 51 வரை நீடித்த தெலுங்கானா புரட்சி இயக்கத்துக்கு துரோகம் இழைத்து காட்டிக்கொடுத்து முடிவு கட்டிய தலைமை அதன்பிறகு போராட்டங்கள் அற்ற சந்தர்ப்பவாதமே தலைதூக்கியது.
ஆட்சி அதிகார மாற்றத்திற்கு பின் நேருவின் மேற்கத்திய ஆதரவு வெளிநாட்டுக் கொள்கை பற்றி இந்திய கம்யூனிஸ்டுகள் சரியாக கணிக்கவில்லை.
காங்கிரசை சரியான உள்நாட்டு கொள்கை நிறைவேற்றும்படி போராட்டத்தை நடத்துவதும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் விட்டுக்கொடுப்பதும் இவையே நாடாளுமன்றத்தில் விமர்சிப்பதும் வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் ஒரு வேலையாக இருந்தது.
இதே நேரத்தில் சீன இந்திய தாவா பிரச்சினை உருவாகியது அப்பொழுது தேசபக்தியின் அடித்தளமாக இது கருதப்பட்டது

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ரஷ்யாவில் அதிகாரத்திற்கு வந்த குருஷேவ் கும்பல் மார்க்சிய-லெனினிய கொள்கையை திரித்து புரட்டியது.
இது சீன ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் மிக முக்கியமான தாகும் “திருத்தல்வாதம் ” பற்றிய விவாதமே அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த இடதுசாரி பிரிவினரும் வலதுசாரி பிரிவினரும் இருவரும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து நின்றனர்.
[

காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று இரு கட்சிகள் உடைவில் பலர் கோட்பாட்டு பிரச்சினையாக முன்வைக்கின்றனர் உண்மையில் காங்கிரசோடு இருவரும் பின்னாட்களில் செய்து கொண்ட பேரமும் அதற்கான வேலைகளையும் கொண்டு நாம் இதனை கணக்கில் கொள்ளவேண்டும்.

1967 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தேர்தல் பாதைக்கு எதிராக போராடி வந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் தலைமையில் நக்சல்பாரி விவசாயிகள் ஆயுதந்தாங்கிய போராட்டமாக வெடித்துக் கிளம்பிய போது அதை நசுக்குவதற்கு போலீசை அனுப்பியது இடதுசாரி கூட்டணி இந்த நடவடிக்கையின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த வர்க்கத்தின் பக்கம் என்பது தெளிவாக எடுத்துக் காட்டியது.

“துப்பாக்கி குழாயிலிந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்று கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் முழக்கமிட்டார். இதனால் சீனா வியட்நாம் மக்கள் செய்ததுபோல மக்கள் யுத்தப் பாதையை மேற்கொள்வதன் மூலமே இந்திய மக்கள் தங்கள் எதிரிகளை முற்றிலுமாக முறியடிக்க செய்ய முடியும் என்று பிரகடனப் படுத்தினார்கள்.
கிராமப்புற பிரச்சினைகளுக்கும் குறிப்பாக நிலப்பிரபுத்துவத்தின் பாலத்தை தகர்க்க வேண்டிய அவசியத்தையும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மிகப் பெரும் எண்ணிக்கையிலான நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்றார்கள். நிலப்பிரப்புகளை அழித்தொழிக்கும் ஊக்கமான நடவடிக்கைகளுக்கு விவசாயிகளை தட்டி எழுப்பினார்கள் போராட்டம் காட்டுத்தீயாக பரவியது ஆனால் இடது தீவிரவாத தவறுகளுக்குள் இயக்கம் சிக்கிக்கொண்டு மக்கள் திரள் இயக்கங்கள் அமைப்புகள் இல்லாமல் போலீசின் அடக்குமுறையை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமல் கிராமங்களில் இயக்கம் பின்னடைவு கண்டது
சரியான திசை வழி இல்லாமல் கொரில்லா நடவடிக்கைகளால் பல்வேறு வர்க்க எதிரிகளை அழிப்பது பெயரால் மக்கள் மத்தியில் தாங்களே தனிமை பட்டு போயினர் நக்சல்பாரி பிரிவினர்.
நக்சல்பாரி எழுச்சிக்கு பின் புரட்சிகரமான தனது நிலையிலிருந்து வீழ்ந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்போது நெருக்கடியிலிருந்த இந்திராவின் கவர்ச்சிப் முழக்கங்களை முற்போக்கானது என்று ஏற்று
இந்திரா காங்கிரசுக்கு வால் பிடித்தனர்.
காங்கிரஸ் குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தனது கட்சித் தோழர்களை காக்காமல் இரு கட்சிகளும் மௌனம் சாதித்தது.
அவசரநிலை ஆட்சிக்குப் பிறகு இந்திரா எதிர்ப்பு அலைகள் திரிபுரா மேற்கு வங்கம் கேரளா பகுதிகளில் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தது அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே தொழிலாளர்கள் விவசாயிகள் இயக்கங்களை பறிகொடுத்தனர் . தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கு என்று பன்னாட்டு கம்பெனிகள் தரகு முதலாளிகளை வரவேற்பு தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகம் சீரழிந்து போய் உள்ளனர்.
1970- 71 ஆண்டுகளுக்கு பிறகு நக்சல்பாரி இயக்கம் பல்வேறு நிலைப்பாடுகளும் ஆயுதப் போராட்டங்களை ஏற்பதும் மறுப்பதும் என்ற அளவுகோல் நாடாளுமன்ற பங்கெடுப்பு புறக்கணிப்பு என்று பல நிலைப்பாடுகளின் அடிப்படையில் பல குழுக்களாக பிரிந்து பயனற்றுக் கிடக்கின்றன
நம்முன் உள்ள பணி சரியான மார்க்சிய லெனினிய தத்துவத்தை போதிப்பதும் நடைமுறை ஆக்க முயல்வது
நன்றி தோழர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *