இ.க.க அகிலத்தின் அறிவுறுத்தலின் பேரில் 1925 ல் துவங்கப்பட்டது.
1942 வரை கட்சி தலைமறைவாக செயல்பட்டது. லாகூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு என சதி வழக்குகள் போடப்பட்டு, துவக்கத்திலேயே கடும் அடக்குமுறைக்கு உள்ளானது. ஆனாலும் நாடு முழுக்க தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், அறிவாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இருந்தனர்.
கடற்படை, தரைப்படை, விமானப்படை என இராணுவத்திலும் கூட அதற்கு கட்சி கிளைகள் இருந்தது.
நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது. வோர்லி பழங்குடியினர் கலகம், கையில் விவசாயிகள் போராட்டம், தெபகா இயக்கம், மெய் மென்கிங்கில நடந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் என பல போராட்டங்களை வழி நடத்தியது.
தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டமாக வளர்த்தது இதில் 4000 தோழர்கள் புரட்சிக்காக தியாகியாயினர். 3000 கிராமங்களும், 10,000 ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டில் வந்தது.