இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் பற்றி ஒரு பருந்துப் பார்வை
இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் பற்றி ஒரு பருந்துப் பார்வை

இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் பற்றி ஒரு பருந்துப் பார்வை

இன்று வரை இந்தியாவில் புரட்சியும் நடைபெறவில்லை அதே போல் கட்சியும் பலப் பட இல்லை.

பாராளுமன்ற முறையிலான சுரண்டும் வர்க்கம் எவை என்று இவர்களுக்கு தெரியவில்லையோ அதேபோல் மக்கள் ஜனநாயக குடியரசு ஆகவும் ஆகவில்லை, ஆயினும் உலக கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட கதி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

திரிபுவாதம், இடதுசாரி குறுங்குழுவாதம், வறட்டு வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டே இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கமானது இன்றுவரை அதற்கான பணியான மக்கள் ஜனநாயக புரட்சியையோ அல்லது சோசலிசத்தை அமைக்கும் பணியையோ இன்றுவரை நிறைவேற்றாமையால் அவை கனவாகவே உள்ள நிலையில் , உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு வெற்றிகரமாக புரட்சியை முடித்து சோசலிசத்தை கொணர்ந்தது, உலகில் உயர்ந்த நிலையில் அச் சமூகம் இருந்தது, ஆனால் அங்கும் இன்று திரிபு வாதமும் சோசலிசத்தை பின்னடையச் செய்து முதலாளித்துவ நிலைக்கு சென்றுவிட்டது.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் தான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது . நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 50 ஆண்டுகால மார்க்சிய- லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .இந்த தடைகள் கடக்கப் பட்டாக வேண்டாமா?.

சிபிஐ சிபிஎம் கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினரின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். புரட்சியாளர்களோ அதிகாரவர்க்க மூலதனத்திற்கு எதிராகவும் பெரு முதலாளித்துவ கும்பலுக்கு எதிராக சரியான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கு அமைப்பதில் திறமை அற்றவர்களாக இருக்கின்றனர் .

இதனை நாம் புரிந்துக் கொள்ள நமது ஆசான் களிடம் செல்வோம் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு வழிகாட்டியது இந்த அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி பாதை குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் திசை வழியை அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இணைவதன் மூலமாக குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக போராட்டமாக இருக்கும். இந்த வழியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்துகொண்டு சீனாவின் குறிப்பான நிலைமைக்கு ஏற்ப புதிய ஜனநாயக அரசை அமைத்தது.குடியேற்ற நாடாக இருந்து இந்தியாவுக்கு இந்த வழி பொருந்தக்கூடியது அகிலம் தனது பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

இந்தியாவில் பல்வேறு வர்க்கங்களின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து இருந்தது அதோடு ஜமீன்தார் எதிர்ப்பு நிலவுடைமை எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்து கொண்டிருந்தது.

புற சூழல் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் பலம் பெறுவதற்கும் உகந்ததாக இருந்தது .அகிலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு கம்யூனிச குழுக்களும் தனிநபர்களும் இணைந்து பலம்வாய்ந்த ஒன்றுபட்ட கட்சியை கட்டுமாறு அறிவுறுத்தியது 1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி ஆனது ஆளும் வர்க்கத்தால் பல்வேறு விதமான சதி வழக்குகள் போடப்பட்டு துவக்கத்தில் கடும் அடக்குமுறைக்கு உள்ளனது ஆனாலும் நாடு தழுவிய தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் அறிவாளிகள் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இணைந்தனர் .கடற்படை தரைப்படை விமானப்படை இராணுவத்திலும் கூட அதற்கு கட்சிக் கிளைகள் இருந்தது .

தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டம் என வளர்ந்தது.4,000 பேர் புரட்சிக்காக தியாகிகள் ஆகினர் 3000 கிராமங்கள் 10 ஆயிரம் ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இருந்தும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்து கொள்வதிலும் அமுல்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது.

தங்களுக்கான திட்டம் முன் வைத்து எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயார் அற்ற நிலையில் இருந்தது . ஏனெனில் அது கருத்தியல் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தது . நீண்டகாலம் விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டம் இல்லாமலே செயல்பட்டது . புரட்சிகரமான தத்துவம்( வேலை திட்டம்) இல்லையேல் புரட்சி இல்லை என்கிற லெனின் புரிதலை கைவிடப்பட்டதே இது போன்ற போக்குகள்.. இதன் விளைவு கட்சிக்குள் கோஷ்டி வாதம் பிராந்தியவாதம் பிளவு நடவடிக்கைகள் சுயநல அடிப்படையில் குழு அமைத்தல் போன்ற போக்குகள் அமைப்புக்குள் நிலவியது.

இந்நிலையில் 1933 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டியது உட் குழப்பங்களுக்கும் பிளவுகளுக்கும் பரிதாபகரமான அத்தியாயத்துக்கு முடிவு கொண்டுவர வலிமைமிக்க ஒன்றிணைந்த ஒரு கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி வேண்டுகோள் விடுத்தது .ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலசமயம் இடதுசாரி தந்திரத்தையும் சிலசமயம் வலதுசாரி தந்திரத்தை பின்பற்றியே வந்துள்ளன சரியான வழி முன்வைக்கப்படும் போது அது நிராகரிக்கப்பட்டதே வந்துள்ளது.

அன்றைய சூழ்நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது :-

இந்தியாவை நோக்குவோமானால் இங்கு ஏறத்தாழ இதே நிலைமைகள் பரந்த அளவில் இருந்தது காண்கிறோம்(சீனாவோடூ).

ஆனால் இங்கு சக்திகளின் பலாபலம் வேறுவிதமாக இருந்தது ஒரு புறம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் மேலும் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன பெரும் முதலாளிகள் மேலும் அதிகமாக அய்க்கியப்பட்டிருந்தனர். ஒரு தனி ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். சீனாவைப் போல் போட்டியாக ஏகாதிபத்திய அரசுகளிடையே அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. அதேவேளையில் நிலவுடமை உறவுகள் குறிப்பாக சுதேசி அரசுகளில் தொடர்ந்து நிலவின. மற்றொருபுறம் பாட்டாளி வர்க்கம் விவசாய வர்க்கத்தினுடன் ஒரு அணியை நிறுவ தவறியது.

இவ்வாறு சீனாவை காட்டிலும் இங்கு எதிர்ப்பு சக்திகள் கூடுதலான பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருந்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளிவர்க்கம் தக்க வைத்துக் கொண்டு நிலபிரபுத்துவம் ஏகாதிபத்திய அவற்றுடன் சமரசம் செய்து கொண்டது.

இன்றும்‌ கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் வர தயங்குகின்றனர். நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இங்குள்ள இடதுசாரி எனும் சிபிஅய் சிபிஎம் முதலாளி வர்க்கத்தின் தரப்புக்கு ஓடிச்சென்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு துரோகமிழைக்கின்றனர்( இதனை நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப்புக்கு இட்டுச் சென்ற காவுஸ்திகியால் தலைமை தாங்கப்பட்ட இரண்டாம் அகிலத்தின் துரோகத்தைதோடு பொறுத்தி பார்க்க வேண்டும்).

இன்றைய உலக மய சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலனிய முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்தும் ஒடுக்குமுறை போர்களும் வரலாறு காணாத கொள்ளையும் நடைபெறுகின்றன. ஆனால் இதை எதிர்த்து சவால் விடுவதற்கு சோசலிச நாடுகளும் இல்லை கம்யூனிச நாடுகளும் இல்லை .

அப்படியே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலவீனப்பட்டு பிளவுண்டு பல்வேறு விதத்தில் இருக்கிறது, மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்க்க திறன் இல்லை உண்மைதான்.

தோழர் சூ என் லாய் கூறியதாக கீழ்காணும் விவரங்களை காண்போம், ஒவ்வொரு நாட்டிலும் நிலைமைகள் வேறுபடும் எனவே ஒவ்வொரு கட்சியும் மார்க்சிய-லெனினியதை திட்டவட்டமாக செயல்படுத்த வேண்டும் ,இது பணிவாக நடந்து கொள்வதில்லை ஆனால் யதார்த்தத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டியதாகும், நீங்கள் செல்லும் பாதை உங்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

உலகம் வர்க்கங்களாக தேசங்கள் ஆகும் பிரிவு பட்டுள்ளது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளி வர்க்கம்தான் அதனதன் சொந்த நாட்டின் விடுதலையை சாதிக்க முடியும் எனவே தேசிய எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் நம்மால் இருக்க முடியாது.

இந்திய கம்யூனிச இயக்கம் பற்றி ஒரு சிறு தேடுதல்

அமிர்தசரஸில் ஏபரல் 1958-ல் நடைபெற்ற சி.பி.அய்யின் மாநாடு,”கேரளா வழிகாட்டுகிறது என்ற சி.பி.அய்யின் வழியில் சி.பி.எம்மும் பாராளுமன்ற சாக்கடையில் புரட்சிகர வழிக்கு முரணாக உள்ள அமைதியான சரணாகதி பாதையில் வர்க்க கூட்டுக்கும், வர்க்க சரணாகதிக்கும் இட்டு சென்றது. தொழிலாளிகள், விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? அல்லது வாக்குபெட்டி மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? என்பதுதான் மார்க்சிய லெனின்யத்திற்க்கும், வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல கேரளாவின் பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணி வேராக உள்ள தற்ப்போதைய பொருளாதார, அரசியல் அமைப்பை மாற்றமுடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் எங்கின்ற கருத்தை மா-லெ வாதிகள் உறைப்பது போல், “வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

இந்திய கம்யூனிச இயகத்தின் நீண்டகால வரலாற்றில் முதன்முறையாக மக்கள் ஜனநாயகத்தையும், சோசலியத்தையும் அடைவதற்க்கான ஒரே பாதை மா-லெ பாதைதான் என்பதை நக்சல்பாரி நிரூபித்தது. இதற்க்கு முன்பாக நடத்தபட்ட தெலுங்கான போராட்டமானது இந்திய அரசாங்கத்திற்க்கு எதிரான போராட்டமாக அமையவில்லை. புரட்சிகர வன்முறையை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிலவுகின்ற அரசியல், பொருளாதார அமைப்பை ஒடுக்கபட்ட வர்க்கங்களால் தூக்கியெறிய முடியும் என்றும், அப்போதுதான் மேம்பட்ட இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் நக்சல்பாரி துணிவுடன் அறிவித்தது. மோசடியான, போலியான பாராளுமன்ற பாதையால் ஈர்க்கப்பட்டிருந்த இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் தலைமைகளையும் நக்சல்பாரி அம்பலப்படுத்தியது. இந்தப்பாதை(CPI,CPM) வர்க்க போராட்டத்தின் உயரிய வடிவமான புரட்சிகரப் பாதையிலிருந்து மக்களை திசை மாற்றுகிறது, சுரண்டலும், ஒடுக்கு முறையும் நிறைந்துள்ள அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்க்கு பதிலாகக் கேரளாவின் பாதை அதனை தொடரவே வழிவகுக்கின்றது. சி.பி.ஐ, சி.பி.எம் இரண்டு குழுக்களும் மார்க்சிய-லெனினியத்தை நிராகரித்து, குருசேவ் மற்றும் அவரை தொடர்ந்து வந்தவர்களால் முன்வைக்கபட்ட “புதிய திசையமைவு”, “புதிய கருத்தாக்கங்கள்” போன்ற திரிப்புவாதக் கண்ணோட்டத்தால் அக்கட்சி வழி நடத்தபட்டபோது. நக்சல்பாரி மா-லெ-மா சிந்தனையை உயர்த்திபிடித்து தெள்ள தெளிவாக முழங்கியது, அது பாராளுமன்ற பாதையை நிராகரித்து, மக்கள் ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் நிறுவுவதற்காகப் புரட்சிகரப் பாதையைக் கடைப்பிடிப்போவதாக உரக்க அறிவித்தது.

புரட்சிகர பாதை என்பது மிருதுவான, நேரான பாதையல்ல, மாறாக, வளைவுகளும், சுளிவுகளும், மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த கரடுமுரடான பாதை. இப்பாதையானது எதிர்காலத் தலைமுறைகள் பொருளியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் செழுமையான வாழ்க்கை வாழ்வதற்க்காகவும், சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வை வாழ்வதற்க்காகவும் நிகழ்காலத்தில் இன்றியமையாததாக உள்ள இடர்பாடுகளைக் கொண்ட நீண்ட பாதையாகவும், அவ்வப்போது தோல்விகளைச் சந்திக்கக் கூடிய பாதையாகவும், மாபெரும் தியாகங்களையும் கோருகின்ற பாதையாக உள்ளது. நக்சல்பாரிதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மீது ஆதிக்கம் செழுத்தி அதன் ஆற்றலை இழக்கச் செய்திருந்த சந்தர்ப்பவாதத்தின் நீண்டகாலப் பிடியை உடைத்தெறிந்து, அதனை விடுவித்தது.

1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மா-லெ இயக்கங்களுக்குள்ளும் பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மா-லெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மா-லெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது, இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.கிட்டதட்ட அய்ம்பதாம் ஆண்டை நெருங்கப் போகிற மா-லெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வளர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ரஸ்சிய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனினியம் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆனால் தங்களின் இயக்கமறுப்பியல் கண்ணோட்டத்தால் குறுங்குழுவாதிகளாக மாறிவிட்டனர்.

முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில் கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்க்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும், மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்து கொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனினியம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்ப்டுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.

அதை புரிந்துக் கொள்ளாத சில சந்தர்ப்ப வாதிகள் வறட்டு வாதிகள் ஆகியோர் சுய விமர்சனம் எதையையும் செய்ய விடாமல், இறுதியில் வலதுசாரியாக சீரழிந்து போவது போலன்றி. (விரிவாக கீழே)..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

தோழர் சூ என் லாய் கூறியதாக கீழ்காணும் விவரங்களை காண்போம், ஒவ்வொரு நாட்டிலும் நிலைமைகள் வேறுபடும் எனவே ஒவ்வொரு கட்சியும் மார்க்சிய-லெனினியதை திட்டவட்டமாக செயல்படுத்த வேண்டும் ,இது பணிவாக நடந்து கொள்வதில்லை . ஆனால் யதார்த்தத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டியதாகும்,நீங்கள் செல்லும் பாதை உங்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

உலகம் வர்க்கங்களாக தேசங்கள் ஆகவும் பிரிவு பட்டுள்ளது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளி வர்க்கம்தான் அதனதன் சொந்த நாட்டின் விடுதலையை சாதிக்க முடியும். எனவே தேசிய எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் நம்மால் இருக்க முடியாது.

கட்சி என்பது ஒரு போராடும் அமைப்பு, முன்னணிப் படையானது வெகுஜன திரளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அது தோல்வி அடைய நேரிடும்.

மாவோ தலைமையில் நடந்த பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ சிந்தனைகளுடன் மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டார்கள் அதாவது அதிகாரத்தை கைப்பற்றிய பிறகும்கூட நாமும் மக்கள் திரள் வழியில் தான் செல்ல வேண்டும் .

அவரே சொல்கிறார் நான் சங்காய் நகரத்தில் இருந்தேன் அப்போது நாங்கள் பல கூட்டங்களை நடத்தினோம் நாங்கள் சிறிய எண்ணிக்கையான முன்னணி படையினர் அல்லது ஊழியர்களை திரட்டினோம். நாங்கள் போராட்டத்தின்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென தோன்றி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்வோம். கூட்டம் துவக்கத்தில் கொஞ்சம் பேர் மக்கள் இருப்பார்கள் ஆனால் இறுதியில் இருப்பது சிறிய முன்னணி படை தான் ஆளும் வர்க்கம் அடக்க முயன்றபோது நாங்கள் சிறு குழுக்களை அமைத்து அவர்களை தீர்த்துக்கட்டினோம் இவை கொஞ்சம் காலம் தான் செயல்பட்டது எங்களுக்கு பின்னடைவுதான் கொடுத்தது (1927 காங்செங் தலைமையில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிடுகிறார்).

1927 ம் ஆண்டு தோல்விக்குப் பிறகு இடதுசாரி சாகாத அனுபவத்தை பார்க்க நேர்ந்தது அவர்கள் சிறிய எண்ணிக்கை கொண்டவர்கள் அவர்கள் கிராமங்கள் சென்று நிலப்பரப்புகளை கொன்றார்கள் அவர்களால் தற்காலிகமாகத் தான் மக்களை திரட்ட முடிந்தது அவர்கள் தங்களை மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள வில்லை .அவர்களுக்கு மக்கள் திரள் அடிப்படை இல்லை சிறிய எண்ணிக்கை கொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் என்று இடம் மாறிக் கொண்டே இருந்தார்கள் இவர்கள் எதிரியால் அடக்கப்பட்டார்கள்.

இந்த மாதிரியான முறை இங்கே தோல்வி கண்டது எனவே முக்கிய பிரச்சினை வழி சம்பந்தப்பட்டதாகும் எந்த வழியையும் கொள்கையை எடுக்கிறீர்கள் என்பது முக்கியம் .அடுத்து மக்கள் திரளை திரட்ட வேண்டியதில்லை என கட்சி நிலைப்பாட்டை எடுத்தால் தோல்வியில்தான் முடியும்.

அடுத்த பிரச்சனை எதுவெனில் விமர்சனம் சுயவிமர்சனம் மூலமாக கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளதாக .ஒருவர் துணிச்சலுடனும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்கிறார் என்றால் அவர் முறையாக செயல்பட முடியும். கட்சித் தலைமை இதை செய்யாவிட்டால் அவர்கள் நாசமாகி போய்விடுவார்கள் .

வெற்றிக்குப் பிறகு தலைவர் மாவோ கடந்த காலத்தை மறந்து விடாதே என்று அறிவுறுத்தினார் வெற்றிக்கு முன்பு 28 ஆண்டுகளாக கட்சி இருந்து வந்துள்ளது கடந்த அரை நூற்றாண்டு கால பாதையை நாம் பரிசீலனை செய்தால் சரி தவறுகளை சீர் தூக்கி பார்க்க முடியும்.

1967ல் மாவோ சாரு மஷூம்ந்தருக்கு கட்சியை பற்றி கூறியதாவது உங்களுக்கு குறைந்த அனுபவம் தான் உள்ளது எனவே படிப்படியாக உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். உங்களது பொதுவான திசைவழியில் விடாப்பிடியாக எவ்வளவு காலம் இருக்கிறார்களோ அப்போது தான் நீங்கள் திட்டவட்டமான கொள்கைச் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். “தவறுகளை தவிர்ப்பதுஎன்பது சாத்தியமில்லை நாங்கள் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம்.”என்று.

தவறான கருத்துகள் தவறான கொள்கையை தவறான வேலை முறைகள்” ஆகியவை புரட்சியின் எதிரிகள் என்று சாரூ அக்டோபர் 8-இல் கூறியதற்கு மேல் உள்ள பதிலாக மாவோ கூறியுள்ளார். இது பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளது .

மேலும் தோழர் சாரூ தலைமையில் உங்கள் எதிர்காலம் இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.

எதிரிக்கு எதிரான தாக்குதல் பற்றி “கஷ்டமும் இல்லை சாவும் இல்லை” என்பதை இயங்கியல் ரீதியில் எடுத்துக் கொள்ளலாம் .கஷ்டங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து ஒதுங்கி விடாதீர்கள். சகாசத்திற்காக தியாம் செய்யவேண்டாம் ;எதிரிகளை எதிர்த்துப் போராடுங்கள்; போலீசாரை இரகசியமாக அழித்தொழிப்பது அராஜகம் ஆனது .இது நீண்ட காலம் நீடிக்காது; இது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் . ஒரு புரட்சியை நேசிக்கும் புரட்சியாளர்

தங்களுடைய புரட்சிகர உறுதிப்பாட்டை பேணுவதிலும் எடுத்துக்காட்டாக இருக்கின்ற தோழர்கள் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வதும் எவ்வித அவசியமற்ற பயங்களை சந்தேகங்களை ஆகியவை போலிமதிப்பு உணர்வும் இல்லாமல் புரட்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தேவையான படிப்பினை பெறுவது முதன்மையான கடமையாக உள்ளன.

இந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடிப்பது மூலம் மட்டுமே கட்சிக்கு அதனை என்று நெருங்கி தாக்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்த தவறுகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுபட்டு வெளி வருவதற்கும் நாம் உதவி செய்ய முடியும் ஸ்தாபனத்தை பற்றிய லெனின்ய அடிப்படைகளுக்கு உட்பட்டு ஒரு பலமான கட்சியை கட்டவும் புரட்சிக்கான முன்னெடுத்துச் செல்ல சரியான கட்சி ……

1895 ஆம் ஆண்டில் லெனின் கூறினார், “ புரட்சிகர அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட வேண்டும், அது புதிய வரலாற்று சூழலின், பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கைச் சகாப்தத்தின் கட்டாயமாகும். ஆனால் புரட்சிகர ஆற்றலை நசுக்குபவர்களான பழைய தலைவர்களையும், பழைய கட்சியின் தலைமையையும் அழிப்பதன் மூலமாக மட்டுமே அது தொடங்க பட முடியும்…..

ஆக விமர்சனம் சுய விமர்சனம் என்னும் ஆயுதம் ஏந்துவோம்

சுயவிமர்சனமானது ஒரே நாளில் செய்து முடிக்கக் கூடிய ஒரு விஷயம் அல்ல . அது கட்சிக்குள்ளேயே மேலிருந்து கீழ் வரை மேற்கொள்ள வேண்டிய ஒரு இயக்கமாகும். அது கட்சி உறுப்பினர்களின் கணிப்பிலும் நடைமுறையிலும் தடையாக நிற்கின்றன தவறான சிந்தனைகளைக் களைவதன் மூலமாகவும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை ஒளியில் ஒரு சரியான கொள்கை சரியான கணிப்பு ஆகிவற்றை வரையறுப்பது மூலமாகவும் இவை பெரிய கல்வி நடவடிக்கையாகும். எனவே சுயவிமர்சனம் என்பது ஒரு போராட்டமாகும். வெளியில் நடக்கின்ற வர்க்கப் போராட்டத்தை பிரதிபலிக்கின்ற கட்சியின் உள் போராட்டமாகும்.

கங்கை ஆற்றில் ஒரு மூழ்கு மூழ்கிய உடனே எவ்வாறு ஒருவன் தன்னை முழுமையாக சுத்தப்படுத்திக் கொள்ள முடியாதோ அது போல கடந்த கால தவறுகளை எண்ணி வருத்தப்பட்ட உடனேயே கட்சியினுள் இன்று தடையாக உள்ள தவறான கணிப்பை நம்மால் கலைந்து விட முடியாது. ஒப்பு நோக்குகையில் ஒருவன் தன்னுடைய தவறுகளை உணர்வது என்பது எளிதானது ஆனால் ஒவ்வொரு நேரத்திலும் சூழ்நிலையிலும் மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஒப்பு நோக்குதல் கஷ்டமானதாகும்.

இனி மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கு

மார்க்சிய மூலவர்கள் எடுத்த முடிவுகளுக்கு அவர்களே மாற்றம் கண்டுள்ளனர் 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. 1872 இல் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையின் சில விவரங்கள் இந்த வேலைத்திட்டம் காலங்கடந்து விட்டன என்பது விளங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,இன்னொன்றும் காண்போம் ஏகாதிபத்திய சகாப்தத்துக்கு முந்தைய முதலாளித்துவ உலகில் வாழ்ந்த எங்கெல்ஸ் ஒரு நாட்டில் மட்டும் சோஷலிசப் புரட்சி சாத்தியமா என்பதற்க்கு இல்லை என மறுத்துள்ளார்.

ஆனால் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சில நிலைக்கு உட்பட்டு இவ்வாறு ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் என லெனின் நடைமுறை ஆக்கினார் .இவை இரண்டும் முடிவுகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும். அந்த மாற்றங்கள் மார்க்சிய அடிப்படையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வழிநின்று புரட்சிகர நடைமுறை அனுபவங்களைக் கொண்டு எடுக்கப்படும் மாற்றங்களாகும், மார்க்சிய பூர்வமாக இருக்க வேண்டும், இதுவன்றி கருத்து முதல்வாத கண்ணோட்டத்தின் வழி நின்று எடுக்கப்படும் மாற்றங்கள் மார்க்சிய மாற்றங்கள் ஆகாது.

மார்க்சியமானது விஞ்ஞானபூர்வமான மாற்றங்களும் அவை குறித்த தேடல்களும் உண்டு தேடலே இல்லை வளர்ச்சியை இல்லை என்பது மார்க்சியத்திற்க்கு உடன்பாடு இல்லை அவை விஞ்ஞானபூர்வமான வளர்ச்சியோடு வளரும் தன்மை கொண்டது .

ஆக புரட்சியானது ரஷ்யாவை போன்றதே உலக நாடுகள் எல்லாவற்றிலும் நடைபெற வேண்டும் என்பதும் சீனாவில் நடந்தது புரட்சி அல்ல என்பதும் அடிப்படியில் மார்க்சியத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளலாமையே என்பேன் . ஏனென்றால் ரஷ்யாவில் ஒருபுறம் பின்தங்கிய விவசாய பகுதியான ஆசியப் பகுதியில் இன்னொரு ஐரோப்பிய சார்ந்த தொழில் வளர்ச்சியான பகுதியையும் லெனின் தன்னுடைய நூல்” சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்களில் ” சுட்டிக் காட்டியிருப்பார்.

இதைப்போல் தன்னுடைய நாட்டின் சரியான பொருத்தமான முறையில் மாவோ கணித்து சீனப்புரட்சி கையிலெடுத்த அங்கு பின்தங்கிய விவசாய முறையில் பல்வேறு விதமான குறு மன்னர்கள் நிலப்பரப்புகள் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்து அந்நாட்டில் புரட்சிக்கான வழி முறையை கண்டறிந்தார், அங்கே ஒரு வளர்ந்த பாராளுமன்றமும் தொழில் துறையை இல்லாமையால் அவை புரட்சியை இல்லை என்பது தவறானது ஆகும்.

அப்படியெனில் வியட்நாம் மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் எவ்வகையான புரட்சி அதை தன்னுடைய தேசிய விடுதலைக்கான புரட்சி அல்லவோ அதேபோல் சில நாடுகளில் காலனி ஒடுக்கு முறையில் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்த Cuba போன்ற புரட்சி சோசலிச புரட்சி அல்ல சோசலிசதிற்க்கு முந்தைய புரட்சியே அவை சோசலிசத்திற்கு வழி வகுத்தது.

விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தை திரித்து அல்லது தன் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டு அதில் தோல்வியுற்ற பின் இது விஞ்ஞானம் இல்லை என்பதும் இந்த விஞ்ஞானம் வெற்றி பெறாது என்பது தவறாகும். விஞ்ஞானிகள் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் அஞ்ஞானிகளாக மாறிவிடக்கூடாது.

அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே மார்க்சியம் அமைத்துக் கொடுத்தது, பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்துள்ளது -லெனின்.

இதனை இரண்டு விதமான கோட்பாடுகள் ரீதியாக பேசுவோம்.

1). பொருள்முதல்வாத கண்ணோட்டம்

2). கருத்து முதல்வாத கண்ணோட்டம்

பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வழிநின்று புரட்சிகர நடைமுறையால் பெறப்பட்ட அனுபவங்களையும் கருத்துகளையும் கொண்டு மார்க்சியத்தின் மீது கொண்டுவரப்படும் மாற்றங்கள் மார்க்ச்சிய நெறிப்பட்டவையாகும். மார்க்சிய முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும் இது பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும்.

கருத்து முதல்வாத கண்ணோட்டத்தில் மார்க்சிய முறையிலை அணுகி அதன் அடிப்படை அம்சங்களை திரித்தல் என்பது மார்க்சியத்திற்க்கு எதிரான மாற்றங்கள் ஆகும் இவை கருத்துமுதல்வாதமே.

மேல்தளம் அடித்தளம் என்பவை மார்க்சிய கருத்தாக்கங்கள் ஆகும் மேல் தளத்து அம்சங்கள் அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்டு அதை பாதிக்கின்றன என்பது மார்க்சியம் ஆகும்.

இதை தான் நவ மார்க்ச்சியம் என்றும் புதிய இடதுகள் என்றும் மார்க்சியத்தை கருத்து முதல்வாத கண்ணோட்டத்தில் மாற்ற முயலும் ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோம்.

இப்பொழுது பலர் மார்க்சியத்தை இவர்களின் பிராங்க்பர்ட் பள்ளியின் கருத்துக்களோடு சேர்த்தே பேசுகின்றனர் பிராங்க்பர்ட் பள்ளியின் நோக்கமே மார்க்சியத்தை மடை மாற்றுவதுதான்.

சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் “இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே “மண்ணுகேற்ற மார்க்ச்சியம்” என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை.

இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்தியசிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும்அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.

முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரி இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது , மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்குமுறையற்ற ஒரு நல் வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே பேசுவோமே இன்னும் பல…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *