இந்திய இராணுவ வீரனின் ..வாழ்க்கையை விவரிக்கும் செய்தி
(ஒரு இராணுவ நண்பரின் எழுத்து)(இந்தப் பதிவுக்கு போவதற்க்கு முன் என் கருத்து. சமுதாயம் பகை வர்க்கங்களாகப் பிளவுபட்டவுடன்
அரசு தோன்றுகிறது.
இராணுவம் என்பது அரசின் சிறப்பான கருவியாகும்
ஒரு குறிப்பிட்ட
வர்க்கம் தனது அரசியல் மார்க்கத்தை ஆயுதமேந்தி வன்முறை மூலமாக பிரியோகிப்பதற்க்கு பயன்படுத்தபடும் கருவியாகும்.
இராணுவத்தின் பணி அரசின் வர்க்கத்தன்மை, சமுதாயத்தன்மையையும் அதன் செயல்பாடுகளையும்
தீர்மானிக்கிறது. பொதுவாக கூறினால் இராணுவம் ஆளும் வர்க்கத்தின் சார்பாக உள்நாட்டு பிறவர்க்கங்களின் போராட்டங்களை நசுக்கவும், ஆளும் வர்க்க கட்டளைக்கு அடிபணிந்து, வெளிநாட்டு விவகாரங்களைப்
பொருத்தவரை மற்றைய நாடுகளை ஆக்கிரமிக்ககூடியதாகவும், வெளியார் தாகுதலில் இருந்து தற்காத்துக்
கொள்ளகூடியதாகவும் இருக்கும். மேலும் இதில் ஒடுக்கப் பட்ட வர்க்கத்தின் வேலையற்ற கூட்டமே தன் வாழ் நிலைக்காக இங்கே பணிபுரிகின்றனர்).
இனி நண்பரின் வார்த்தைகள்…
ஆதிமுதல்…. அறுபதுவரை,
சீருடையின் மோகம் இளமையின் வேகம் எப்படியும் தகுதி ஆகிவிடவேண்டும் என்ற ஆர்வம்……
👉காரணம்?
அரசு வேலை ஆர்வம் ,
குடும்பத்தின் வறுமை ,
சீருடை கவர்ச்சி.
👉பயிற்சி!!
திட்டுறான் என தெரியும், திட்டுவது புரியாது .
அப்பனும் ஆத்தாளும் அன்போடு வளர்த்து ஆசையாய் வளர்த்த உடம்பில் மாற்றான் ஒருவன் அடிக்கும் போது, அடியின் வலியை விட மனதின் வலிதான் அதிகமாக இருக்கும்.
பயிற்சியின் முடிவில் எல்லாம் மறந்துபோகும்.
👉சிலகாயங்கள் ஆறாது மனதில்.
முதல் விடுமுறை….
தண்ட சோறு
தடிமாடு
தறுதலை என்ற பெயரெல்லாம் மாறியிருக்கும். பகைவனும் பங்காளி ஆவான்.
👉வருமானம்….
எத்தனை காசோலை அனுப்பினாலும் கடைசியில் கணக்கில் வராது.
👉எல்லையில் …..
ஒர் இரவேனும் உறங்க கிடைக்காதா?
கர்ணனின் கவசகுண்டலம்
போல எங்களுக்கு ஹெல்மட்டும் புல்லட் புரூப்பும் ஆனால் கர்ணணுக்கோ அதை கழட்டிய போது உயிர் போனது எங்களுக்கோ அதை கழட்டினால்தான் உயிரே வரும்.
👉வாழ்க்கை துணை……
வந்த நாட்களில் கெஞ்சுவாள் வேலை பெரிதா நான்பெரிதா என்று….. வேலையை விடுவென்று.
இன்னும் கொஞ்ச நாளில் கேட்பாள் இத்தனை வருட சம்பாத்யம் எங்கே? என்று.
👉பிள்ளைகள்…..
மழலையில் அழும் அப்பா என்னை விட்டு போகாதே என்று….
பதின்பருவத்தில் கேட்கும் எப்ப போவாய் என்று..
👉கிடைத்தது…..
கொஞ்சம் இடத்தில் அழகாய் ஒரு வீடு, மனைவி,குழந்தைகள், பட்டாளக்காரன் என்ற பெயர்.
இருபது வருடத்தில் இத்தனை கிடைத்தும் இனியாவது வி ஆர் எஸ் வரவா என்றால் ……
எல்லோரும் கேட்பது
இனி இங்கே வந்து என்ன பண்ண போற?
👉நிறைவு……
ஒரு கிழட்டு….. ஹவில்தாராய்,சப்இன்ஸ்பெக்டராய்,இன்ஸ்பெக்டராய், நாங்கள் அறுபதில் வீடு சென்றடையும்போது!!!
👉மகளின் திருமணம் மகனி்ன் மேற்படிப்பு… ஆடம்பரம்….
எல்லாவற்றிலும் தீர்ந்தது எங்கள் வங்கி கணக்கு.
👉மீதம் உள்ளது எங்களது ஓய்வூதியம்.
👉முடிவு……..
உன்னத உறவாய் நாம் நினைத்த உறவுகளின் யதார்த்த முகம் இப்போதுதான் நமக்கு தெரியவரும்.
முகஸ்துதி செய்த வாய்களெல்லாம் வையும்.
👉👉அப்போதுதான் எங்கள் ஈரகண்களுக்கு தெரியும்.
குஜராத்தின் சதுப்புநில எல்லையும்,
ராஜஸ்தான்
எல்லையின் வெப்பமும், பஞ்ஜாப் எல்லையின் இரும்பு வேலியும்,
ஜம்மு எல்லையில் என்னை உரசி போன பாகிஸ்தானின் தோட்டாவும், காஷ்மீர் பனியில் நான்பட்ட பாடும், காஷ்மீர் தீவிரவாதிகளின்
குறியில் நான் தப்பியதும், வங்கநாட்டின் கடத்தல்காரர்களின் அட்டூழியத்தில் நான் தப்பித்ததும், திரிபுராஎல்லையில் மூளைகொல்லி மலேரியா கொசுக்களிடம் தப்பித்ததும்,
இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளுக்கு உணவு கொடுத்து என்தேசத்தை நான் காத்ததும்………….
நினைவுக்குவரும்👈👈
👉இத்தனையும் நாங்கள் செய்தது இந்தியதேசத்திற்கு.
எங்களுக்காக…..????
எதுவுமேஅனுபவிக்கவில்லை …..
எனநினைக்கும்போது…. இலேசானவலி இதயத்தில்………..
💪இருந்தாலும் நாங்கள் பெருமையுடன் உரக்கச் சொல்லுவோம்…..
👬👬நாங்கள்👬👬
👮இந்திய இராணுவ படை வீரர்கள்👮
🙏🏻தாய் மண்ணே வணக்கம்🙏🏻
🇮🇳ஜெய்ஹிந்த் 🇮
(அவரின் வார்த்தைகள் சாதரணமாக புரிய அப்படியே பகிர்ந்துள்ளேன்… நன்றி அவருக்கு).