இந்திய இடதுசாரி இயக்கம் ஓர் தேடுதல்-1 சி.பி
இந்திய இடதுசாரி இயக்கம் ஓர் தேடுதல்-1 சி.பி

இந்திய இடதுசாரி இயக்கம் ஓர் தேடுதல்-1 சி.பி

அன்பு தோழர்களே நான் இந்திய இடதுசாரி இயக்கம் அதன் வரலாற்று கட்டத்தில் மார்க்சியத்தை நடைமுறை படுத்தும் பொழுது இடறி சென்ற பாதை இன்று வரை ஒரு புரட்சிக்கு ஏங்கும் நாட்டில் நமது முனோடிகளின் நிறை குறை பற்றி தேடுவதே இந்த பகுதியின் நோக்கம். நாம் ஒன்று பட்டு ஒரு புரட்சிகர கட்சியை கட்ட முற்பட வேண்டாமா? என்பதே என் பதிவின் நோக்கம்.

துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும்
மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக
பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,
ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முட்ங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா?
அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.

1789ல் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சி ‘சுதந்திரம்-சமத்துவம்- சகோதரத்துவம் என்ற மனிதகுல உரிமை மாண்புக் குரலை எழுப்பியது.

1847ல் மார்க்ஸ்- ஏங்கல்ஸ் தலைமையில் ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற பாட்டாளி வர்க்கத்தின் முதல் அரசியல் கட்சி துவங்கப்பட்டது.

1848ல் உலகப் புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மார்க்ஸ்-ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்டனர்.

* வரலாற்று வளர்ச்சி ரீதியில் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் உழைக்கும் மக்களின் வெற்றியும் தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.

* மூலதன ஆதிக்கத்தின் சுரண்டல் நுகத்தடியிலிருந்து சமுதாயம் முழுவதையும் விடுவிக்காமல் ‘சமத்துவம்’ படைக்க முடியாது. சமத்துவம் இல்லாமல் உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேறு வழி இல்லை.

* கம்யூனிஸ்ட் புரட்சியை கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளி வரக்கத்திற்கு அடிமைச் சங்கிலியை தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. அடைவதற்கு ஓர் பொன்னுலகம் இருக்கிறது.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”

என்று மார்க்ஸ்சும் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உலகம் முழுவதற்குமான முழக்கத்தை முழங்கினர்.

“ஒன்றுக்கொன்று நேர், எதிர் எதிர் முரண்பட்ட இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் அதிகாரத்தை கைப்பற்றுவ தற்காக நடக்கும் போராட்டம் வர்க்கப் போராட்டம்.

சமுதாயத்தின் சகல பகுதி மக்களையும் சுரண்டலில் இருந்து விடுக்காமல் பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது. கூர்மையான வர்க்கப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களை வர்க்கமாக அணிதிரட்ட வேண்டும்.

சமுதாயத்தை இயக்கும் ஆகப் பெரும் சக்தியான உழைக்கும் வர்க்க நலனுக்காக உருவானதே கம்யூனிஸ்ட் கட்சி.

எனவேதான் “புரட்சிகரமான லட்சியமும், புரட்சிகரமான கொள்கையும் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது”
என்றார் லெனின்.

* ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் தொடர்ச்சியாகப் பங்கேற்க வேண்டும். முழுமையான ஜனநாயகம் என்பதே சமத்துவம் ஆகும்.”

– என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.

அப்படியெனில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சில தேடுதல்!

1857ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆங்கில ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் இதை ‘சிப்பாய் கலகம்’ என்று திசை திருப்பினர்.

ஆனால், இது சிப்பாய் கலகம் அல்ல. “முதல் இந்திய சுதந்திரப் போர்” என்று சரியாக கணித்தவர் காரல் மார்க்ஸ்.

1907ல் ஸ்டட் நகரில் சோசலிஸ்ட்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஏகாதிபத்திய நாடுகள், காலனிநாடுகளை கடுமையாகச் சுரண்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தினார் லெனின்.

1908ல் திலகர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இதனைக் கண்டித்து வடக்கே பம்பாயிலும், தெற்கே தூத்துக்குடியிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இதனை, “இந்திய பாட்டாளி வர்க்கம் தனது உணர்வு பூர்வமான அரசியல் வெகுஜன போராட்டத்தை தொடங்கி விட்டது. இனி ஆங்கில ஏகாதிபத்தியம் ஆளுமை செலுத்த முடியாது இடிந்து நொறுங்கும்” என்று முழங்கினார் லெனின்.

1913ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் சோகன்சிங் பக்னா தலைமையில் ‘கதார் கட்சி’ துவங்கப்பட்டது.

முதல் உலகப் போருக்கு முன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் குடியேறிய பஞ்சாப் தொழிலாளர்களால் இக்கட்சி உருவாக்கப்பட்டது.

இந்த கதார் கட்சியின் செயலாளர் லாலா ஹர்தயான் என்பவர்தான் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை இந்தியா விற்கு முதலில் அறிமுகப்படுத்தினார்.

1914ல் கதார் கட்சியினர் கோமகட்டமாரு என்ற கப்பலில் ஆயுதங்களை ஏந்தி இந்தியாவை விடுவிக்க புறப்பட்டு வந்தனர்.

கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கில படையுடன் ஏற்பட்ட மோதலில் பலர் வீர மரணம் அடைந்தனர். சிலர் தப்பித்தனர். (தப்பித்தவர்களில் பலர் பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது, அமிர்தபஜார் என்ற பத்திரிகை மூலம் ஆங்கில ஏகாதிபத் தியத்திற்கு கண்டனமும், உயிரிழந்த இந்திய மக்களுக்கு அனுதாபமும் சோவியத் அரசின் சார்பில் லெனின் தெரிவித்திருந்தார்

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்பு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும் இந்திய மக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டது.

இந்திய விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க தொடங்கினர். நிலப்பிரபுத்துவ மற்றும் காவல்துறை யின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் அணிவகுத்தனர்.

உ.பி.கோரக்பூர் மாவட்டத்தில் சவுரி சவுரா போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் விவசாயிகளால் கொல்லப் பட்டனர். காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

‘போராட்டப் பாதையில் வன்முறை புகுந்துவிட்டதாகக் கூறி’ காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

காந்திஜியின் இந்த நடவடிக்கை விடுதலைப் போராட்ட வீரர்களிடமும், பொதுமக்களிடையேயும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

1925 டிச. 25,26 தேதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடக்க அமைப்பு மாநாடு நடைபெற்றது.

” இந்தியாவில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக நிலைகளை ஆராயவும், மக்களின் வாழ்வை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடவும் கூடியுள்ளோம்” – என்று வரற்புக்குழுத் தலைவர் ஹசரத் மொகானி குறிப்பிட்டுப் பேசினார்

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *