தோழர்களே உங்களின் உயர்வான கருத்துகளை வர்வேற்க்கிறேன்.
1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட்அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை.இந்தியாவின் அன்றைய நிலையை நோக்குவோமானால், ஒருபுறம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன, பெரும் முதலாளிகள் அய்க்கியப்பட்டு ஏகாதிபத்திய அரசுடன் பிணைக்கப்பட்டிருந்தனர். மற்றொரு புறம் பாட்டாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கத்துடன் நேச அணியை நிறுவ தவறியது.இவ்வாறாக சீனாவை காட்டிலும் இங்கு எதிர்பரட்சி சக்திகள் கூடுதல் பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருத்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளி வர்க்கம் தக்க வைத்து கொண்டு நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுடன் சமரசம் செய்து கொண்டது.CPI க்குள் பிரதானமாக புரட்சியின் பாதை பற்றிய விவாதங்களே இருந்தது. புரட்சியை நடத்துவதற்கு தேவைப்படும் திட்டம், யுத்த தந்திரம் செயல் தந்திரம் பற்றிய புரிதல் இல்லை.கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழும்பொழுது, அதை விவாத சுதந்திரம், செயல் ஒற்றுமை என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவே இல்லை.கருத்து வேறுபாடுகள் மேலும் சிக்கலான பொழுது அரசியல் தலைமை குழுவான தோழர்கள் டாங்கே, ராஜேஸ்வர ராவ், பசவபுன்னையா அடங்கிய மூவர் குழுவை அனுப்பி சர்வதேச தலைமையான தோழர் ஸ்டாலினை சந்தித்தது.சர்வதேச தலைமை பின்வரும் ஆலோசனைகளை முன் வைத்தது.(1).சர்வதேச அளவில் நடைப்பெறும் தேசிய விடுதலை போராட்டங்களில் இருந்தும், சீன புரட்சியின் அனுபவங்களில் இருந்தும் படிப்பினை பெற வேண்டும்.(2). பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கும் முதலாளிகள், நிலபிரபுக்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை ஒன்றுபடுத்தி, சுதந்திரம், விடுதலை அடைவதற்கான பொதுவான அடிதளம் உருவாக்க வேண்டும்.(3). இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்றவாறு பாதை தீர்மானிக்க வேண்டும்.(4). அது அமைதி பாதையாக இருக்காது.இவைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக வரலாற்று பக்கங்கள் சொல்லவில்லை என்பதே வருத்தமான விசியம்…உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோதல்சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப்போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்குஎதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளை சந்தித்தது.ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்றுபோற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய -லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில்அவர் கூறியதாவது:“இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் டைந்துவிட்டது என்பதை பின் வருமாறு கூறியது:“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல்அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும் நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத் திருத்தம் கூறியது.CPI,CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.தொடரும் தோழமைகளே….LikeCommentShare