இந்திய இடதுசாரி இயக்கம் ஓர் தேடுதல்-3 சி.பி

தோழர்களே இன்று நாடு புரட்சிக்கு ஏங்குகிறது புரட்சியாளர்களோ அதனை தேடிக் கொண்டே உள்ளனர் என் பதிவின் நோக்கம் கடந்த காலத்தை அறிந்து எதிர்காலத்தை சரி செய்வோம் ஆகவே கடந்தகால படிப்பினைகளில் நாம் கற்றவை பெற்றவையே இனி இன்றைய பதிவில்இ.க.க அகிலத்தின் அறிவுறுத்தலின் பேரில் 1925 ல் துவங்கப்பட்டது.1942 வரை கட்சி தலைமறைவாக செயல்பட்டது. லாகூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு என சதி வழக்குகள் போடப்பட்டு, துவக்கத்திலேயே கடும் அடக்குமுறைக்கு உள்ளானது. ஆனாலும் நாடு முழுக்க தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், அறிவாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இருந்தனர்.கடற்படை, தரைப்படை, விமானப்படை என இராணுவத்திலும் கூட அதற்கு கட்சி கிளைகள் இருந்தது.நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது. வோர்லி பழங்குடியினர் கலகம், கையில் விவசாயிகள் போராட்டம், தெபகா இயக்கம், மெய் மென்கிங்கில நடந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் என பல போராட்டங்களை வழி நடத்தியது.தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டமாக வளர்த்தது இதில் 4000 தோழர்கள் புரட்சிக்காக தியாகியாயினர். 3000 கிராமங்களும், 10,000 ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டில் வந்தது.கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்துக் கொள்வதிலும் அமுல்படுத்துவதிலும் இந்திய கம்யூனிசட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது. தங்களுக்கான திட்டத்தை முன் வைத்து எல்லா ஏகாதிபத்தியய் எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயாரற்ற நிலையில் இருந்தது. ஏனெனில் அது கருத்தியல் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தது. நீண்ட காலம் விஞ்ஞனப் பூர்வமான வேலை திட்டம் இல்லாமலேயெ செயல்பட்டது. “புரட்சிகரமான தத்துவம் (வேலை திட்டம்) இல்லையேல் புரட்சி இல்லை” எனற தோழர் லெனின் புரிதல் கைவிடப்பட்டது. இதன் விளைவு கட்சிக்குள் கோஸ்டிவாதம், பிராந்தியவாதம், பிளவு நடவடிக்கை, சுயநல அடிப்படையில் குழுக்கள் அமைத்தல் போன்ற போக்குகள் கட்சிக்குள் நிலவியது.இன்னிலையில் (1933ல்) சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிட் கட்சியின் பரிதாப நிலையிலான குழப்பங்கள் பிளவுகளுக்கு முடிவு கட்டி வலுமைமிக்க ஒன்றிணைந்த கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி CPI க்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் CPI சில சமயம் இடதுசாரி தந்திரத்தையும் சில சமயம் வலதுசாரி தந்திரத்தையும் பின்ப்ற்றியே வந்துள்ளது. சரியான வழி முன் வைக்கப்படும் பொழுது அது நிராகரிக்கப்பட்டது.தொடரும் ….