R Chandrasekaran R Chanrasekaran

நாம் அஞ்ச வேண்டியது பிஜேபிக்கு அல்ல, இந்திய சமூகம் பின்தங்கிய தேங்கிப்போன நிலையில் இருப்பதை பார்த்தே அஞ்ச வேண்டும், இந்த தேக்கம் இருக்கும் வரை பிஜேபி போன்ற பிற்போக்கு அமைப்புகள் உருவாகவே செய்யும் யாரும் அதை தடுக்க முடியாது இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்நிலை மாறுமா நிச்சயம் மாறாது காங்கிரஸ் வந்தாலும் பிஜேபி நீடிப்பதற்கான சமூக அடிப்படை நீடிக்கவே செய்யும் எனவே தேர்தலில் பிஜேபியை தோற்கடித்து அந்த இடங்களில் திராவிட கொளுந்துகளை கொண்டு வந்து உட்கார வைத்து வேடிக்கை பார்க்க நினைக்காமல் விவசாயிகளின் பின் தங்கிய வாழ்க்கை முறையில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர என்ன செய்யலாம் என சிந்தியுங்கள்விவசாயிகள் தங்கள் பிற்போக்கான உற்பத்தி முறையில் நீடிக்கும் வரை அவர்களிடம் சாதிய சிந்தனையும் ஆனாதிக்க சிந்தனையும் நீடிக்கவே செய்யும் இதுவே பிஜேபியின் சமூக அடிப்படையாகும்உபி ராஜஸ்தான் மகராஸ்டிரா,மத்திய பிரதேஸ் போன்றபகுதிகளில் நீடிக்கும் பின் தங்கிய நிலவுடமை சார்ந்த பிற்போக்கு வாழ்நிலையே பிஜேபியை மீண்டும் மீண்டும் உயிர்பிக்க போதுமானதுபின் தங்கிய நிலவுடமையின் மிச்சங்கள் இன்னும் நீடிப்பது ஒரு ஜனநாயக மாற்று அரசியல் தத்துவம் பண்பாட்டு துறையில் உருவாகாமல் இருப்பது தேசிய இன உணர்வுகள் ஜனநாயகம் சாராமல் சாதியம் சார்ந்து பேசப்படுவது அனைத்தும்பிற்போக்கின் சமூக வெளிப்பாடாகும்ஆனால் இங்கு கம்யூனிஸ்டு என அழைத்துக்கொள்ளும் கூட்டங்கள்: இந்த சமூக அடித்தளத்தை மாற்ற யோசிக்காமல் கட்சிகளை மாற்ற கோருகிறார்கள் பிஜேபிக்கு மாறாக காங்கிரசை ஆதரிப்பது அதிமுக்கவுக்கு பதிலாக திமுகவை கொண்டு வருவது என்பதே இவர்களின் கொள்கையாக இருக்கிறதுஎன்ன செய்தால் மக்கள் வாழ்வை உந்தி தள்ள முடியும் அவர்களைபிற்போக்கு வாழ்வில் இருந்து வெளிக்கொணர முடியும் என்ற யோசனை யாருக்கும்கிடையாதுசரி காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் என்ன வேறுபாடு காங்கிரசின் புதிய காலனிய கொள்கைகளையே பிஜேபி அமுல்படுத்துகிறது காங்கிரஸ் ரகசியமாக செய்ததை தனது சமூக பின்புலம் கொடுத்த தைரியத்தில் பிஜேபி வெளிப்படையாக செய்கிறதுஅதுபோல் தமிழகத்தில் மாநில கல்வி உரிமையை மத்தியில் ஒப்படைத்தது யார் திமுகதானேஸ்டெர்லைட், நியூட்ரினோ . ஹைட்ரோஜார்பன் திட்டங்களையும் கொண்டுவந்தது யார் திமுக தானே, காவிரியில் அணைக்கட்ட அனுமதித்தது கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க சம்மதித்தது யார்மேற்கண்ட விசயங்களில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடில்லையோ அதுபோல் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் வேறுபாடு இல்லை இனிமேலாவது கட்சிகளின் வர்க்க அடிப்படைகளை புரிந்து கொண்டு மக்களுக்கான அரசியல் பொருளாதார கொள்கைகளை முன் எடுக்க சிந்திப்பீர்களா தோழர்களே,மாற்று அரசியலை முன் வைக்காமல் தேர்தல் அரசியலோ தேர்தலை புறக்கணித்த அரசியலோ நீங்கள் எதுவும் செய்யமுடியாது தேவை பிஜெபி காங்கிரஸ் திமுக அதிமுக கும்பலின் புதிய காலனிய அர்சியல் பொருளாதாரத்துக்கு பதிலாக அம்பானி அதானி சிவ நாடார் கலாநிதிமாறன் மர்றும்பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும்அழிந்து கொண்டு இருக்கும்விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பது கூட்டு விவசாயமுறையை வளர்ப்பது அம்பானி அதானிகள் கொல்ளையிட்ட மூலதனத்தைபறித்து அதை விவசாய நிலங்களை மேம்படுத்தவும் நீர்பாசணத்தை விரிவு படுத்தவும் மழைநீர் வெல்ள நீர்களை பாதுகாத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை முன் எடுக்க வேண்டும்மதவெறியில் இருந்து மக்களை மீட்க மதம் தனிமனித உரிமையாக்குவதும் மதத்தை அரசியல் பொதுவாழ்வில் இருந்து வெளியேற்றுவதும் வேண்டும்தமக்கு என்ன வேண்டும் என்ன செய்தால் தங்கள் சிக்கல்கள் தீரும் என்பதை மக்களே ஆய்வு செய்து முடிவு எடுக்க கற்பிக்கப்படவேண்டும்எந்த திட்டமானாலும் அப்பகுதி மக்களிடம் கலந்து விவாதித்து அவர்களின் அங்கிகாரம்பெர்று நிறைவேற்ற வேண்டும்இப்படி ஒவ்வொரு துறையிலும் ஜனநாயக வாழ்க்கை முறையை மக்களுக்கு கற்பித்து வழிகாட்டல் செய்யும்போதுதான் அவர்கள் முற்போக்காக மாறுவார்கள் பிஜேபியின் சமூக அடித்தளத்தை ஒழிக்க முடியும் இதற்கு நீண்ட காலம் ஆகவே செய்யும் நமக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது