இந்தியா பற்றி மார்க்ஸ்
காலனிகளை பற்றி மார்க்ஸ் கீழ்காணும் கருத்துகளில் உறுதியாக இருந்தார்.
1). காலனி ஆட்சி புரட்சிகரப் பாத்திரம் வகிப்பதில்லை. மாறாக காலனி நாட்டு மக்களைப் பார்வை என்பதும் , மார்க்ஸ் தனது கருத்தை மாற நிலையில் .வைத்திருந்தார் என்ற கருத்தை புகுத்த நினைக்கிறார் அவினேறி..
பிரிடிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ரஜ்னி பாமிதத் மார்க்ஸ் கூறத சிலவற்றையும் மிகைப்படுத்தி காட்டி உள்ள தகவலை சுனிதிகுமார் கோஷ் சுட்டிக் காட்டி உள்ளார். அதே போல் இந்த நூலின் தமிழாக்க அணிந்துரை எஸ்.வி.ஆர் தனது பணியை திறம்பட அணிந்துரையில் செய்துள்ளார் அதாவது தனது மார்க்சிய முகமூடி கழன்டு போனதை இவர் அறிந்திருக்கவில்லையோ என வினவ தோன்றுகிறது!!!
பின் நவீனதுவ நா.முத்து மோகனை தூக்கி நிறுத்த நினைக்கும் எஸ்.வி.ஆர். ஏனோ சுனிதி குமார் கோஷ்ன் விமர்சன பார்வையை முழுமையாக உள்வாங்க மறுப்பது?.
இந்திய பெருமுதலாளி வர்க்கம் என்ற தன் நூலில் சுனித் குமார் கோஷ் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ்ன் எழுத்துகளை முழுமையாக கவனத்தில் கொண்டு மார்க்சின் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலித்துள்ளார்.
இந்திய வரலாற்றை எழுதியதில் பெரும் வாதங்களை மார்க்சிய ஆய்வாளர்களுக்கு இடையே கிளளப்பியது.
டிடி கோசம் பி, ஆர்.எஸ் எஸ் சர்மா, ரொமிலா தாப்பர் முதலான மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் “ஆசிய உற்பத்தி முறை ” என்னும் எண்ணக்கருவை நிராகரித்தனர். ரோமிலா தாப்பர் உள்ளிட்ட சில வரலாற்று ஆசிரியர்கள் “ஆசிய உற்பத்தி முறை ” என்ற எண்ணிக் கரு மூலம் மார்க்சின் சிந்தனையில் இயங்கியலற்ற அம்சம் தென்படுகிறது என்று வாதிடுகின்றனர். இது உண்மையல்ல மார்க்சின் வரலாற்று பொருள் முதல்வாதத்தில் உள்முரண்பாடு ஒன்னும் இல்லை பிற்காலத்தில் இவ்வெண்ணக் கருவையும் மார்க்ஸ் கைவிட்டு விட்டார் என்று சுனிதி குமார் கோஷ் சரியாக வாதிடுகின்றார்.
டிடி கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா ஆகியோர் ” ஆசிய உற்பத்தி முறை ” கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதது பற்றி மெளனம் சாதிக்கின்றனர்.
சில மார்க்சியர்கள் மீம்மாம்சகர்கள் வேதத்தை போற்றுவது போலவும் அதற்க்கு மேலே சென்றும் மார்க்சின் எழுத்துகளைப் போற்றுவது மார்க்சியத்திர்ழ்க்கு அவமானத்தை தேடித் தரும்.
தமிழ்நாட்டில் சில மார்க்சியர்கள் ஆசிய உற்பத்தி முறை சரியெனக் கொள்கின்றனர்.
நிலையான மாற்றமில்லாத ஆசிய சமூகம் என்ற கருத்தை மார்க்ஸ் 1881 இல் ஒரேடியாகக் பின்னுக்குத் தள்ளுகிறது ஏனெனில் காலனி நாடு அதை ஆளும் முதலாளிய நாட்டுப் பொருளாதாரத்தின் பின்னிணைப்பாகப் பிணைக்கப்படுகிறது. சமநிலை குலைந்த ஒரு பொருளாதாரம் காலனி நாட்டில் ஏற்படுகிறது.
2. சமூகம் புனரமைப்பு செய்யப்படுவதற்க்கான முன்தேவை பழைய அமைப்பின் ஆழிவுதான். பழைய அமைப்பை அழித்தல் அகச் சக்திகளால் தான் செய்ய முடியுமேயன்றி வெளிநாட்டு மூலதனத்தின் ஆட்சி போன்ற புறச் சக்திகளால் அல்ல. பழைய சமூகக்கட்டமைப்பை மாற்றியமைக்கப்பட்ட மற்றொரு வடிவத்தில் பாதுகாக்கவே இந்த புறசக்திகள் முனைகின்றன. எனவே பழைய கட்டமைப்பை அழிப்பது அல்லது சமூகப் புரட்சியை செய்வது காலனி மக்களை மட்டுமே சார்ந்துள்ளது.
3. இத்தகைய அழித்தல் இல்லாமல் ஆக்கமோ, புத்துயிர்ப்போ இருக்க முடியாது. இந்த அழித்தலைச் செய்ய ஒரு காலனி தேசிய விடுதலை பெற்றாக வேண்டும் ஒரு காலனி அல்லது அரைக்காலனி நாட்டின் மக்களின் உண்மையான முன்னேற்றத்துக்கு இந்த விடுதலை முக்கிய தேவையாகும். காலனி தளைகளை உடைத்தெறியாமல் எந்த ஒரு காலனியும் புனரமைப்புப் பணியை மேற்கொள்ள முடியாது.
ஷ்லோமோ அவினேறி இஸ்ரேலிய அறிஞர் மார்க்சின் சில வரிகளை பிடித்துக் கொண்டு இவைதான் மார்க்ஸ் சமூதாயம் பற்றிய ஒட்டுமொத்த
கைவிட்டு விட்டார் என்று பேனியல் தார்னர் மிகச் சரி யாகச் சொல்கிறார். 1867க்கு பின் மார்க்சின் எழுத்துகளை ஆதாரமாக காட்டுகிறார் தார்னர்.
இந்தியா பற்றி மார்க்ஸ் நூலின் சாரம் எழுதத் தொடங்கி அதனை உள்வாங்கி நான் எழுத சில வாரம் ஆகி விட்டது. ஏனெனில் நான் முதலில் மேலோட்டமாக வாசித்தேன் பின் இதன் கருத்தின் இன்றைய தேவையை தேடிய பொழுதுதான் விளங்கியது மார்க்ஸ்சின் தத்துவத்தை மர்க்ஸ்சை கொண்டே குறைக் காண்பது என்று தெளிவானேன். அதாவது மார்க்சியம் இயங்கியலை அடிப்படையாகக் கொண்டது ஆனால் “ஆசிய சொத்துடைமை” என்பது மாறா நிலையை முன் நிறுத்துகிறது ஆகவே இங்கு மார்க்சின் தத்துவம் தவறு என்று பேச வருகின்றனர். அவர்களுக்கானதே இந்தப் பதிவு.மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து 1844ல் சமூகத்தில் உள்ள பல்வேறு துறைகளை மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து தங்களுக்குள் ஒரு நிலைப் பாட்டை கருத்தொற்றுமைக்கு வருகின்றனர். அவைதான் புனித குடும்பம் (THE HOLY FAMILY OR CRITIQUE OF CRITICAL CRITIQUE). இவை மிகச் சிறப்பான நூல் இதனை வாசித்து பாருங்கள் மார்க்சின் மேதவிலாசம் புரிந்துக் கொள்ள.மார்க்ஸ் என்ற மேதையின் எழுத்தின் சிலவற்றை கூட உள்வாங்காத பலர் அவரை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது மார்க்சியம் என்பது கடல் அதில் நாம் கற்றவை மிகக் குறைவு, ஆகவே இருமாப்பு வேண்டாம். நாம் மார்க்சிய ஆசான்கள் மீது வசைமாறி பொழிவதை விட்டு நமக்கான தேவையை மார்க்சிய அடிப்படையில் தேடுவொம்.அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும்.சோசலிச நாடுகள் உல்கில் எங்கும் இல்லாத நிலையில் சோஷலிசத்திற்கும் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன் நிறுத்தி உலகை சுரண்ட இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதனஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டுவருகின்றன. சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான இடதுசாரி சிந்தனைகளும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்படுகின்றன. பழைமைவாதம், சாதி, மத, இன, பிரதேசம் என மீட்டுநிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை மக்களை ஒன்றிணைவதற்க்கு மாறாக தனித் தனியாக போராட சொல்கிறது, போராட்ட களத்தை மடை மாற்றுகிறது.ஆகவே இது போன்ற ஒரு செயலே மார்க்சின் மீதான விமர்சன்மும். இந்தியாவை பற்றி மார்க்ஸ் அடுத்தப் பதிவில் எழுதுவேன் தோழர்களே…………..
மிகவும் அதிசயமாக உள்ளது இங்கு சில தோழர்களின் எழுத்துக்கள். மார்க்சியத்தை பேசிக் கொண்டே மார்க்சியத்தை செழுமை படுத்துகிறேன் என்று மார்க்சியத்திற்கு எதிராக எழுதி குவிக்கும் அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக இதனை எழுதுகிறேன்.இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரிீ இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது , மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்குமுறையற்ற ஒரு நல் வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் தோழர்களே சிந்தியுங்கள்.இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மா-லெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்…இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும். இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஸ்ய ஏகாதிபத்தியம்.இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் என்னும் கட்டுரையை மன்த்லி ரிவ்யூவில் சுனிதி குமார் கோஷ் எழுதினார், அதை இந்திய பெரு முதலாளி வர்க்கம் என்ற தனது நூலில் சேர்த்துள்ளார். மார்க்ச்சு ஏங்கல்ஸ் எழுத்துக்களை முழுமையாய் கவனத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவை பற்றி எழுதிய வற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் வாதிடுகின்றேன் ஏனெனில் மார்கசிய ஆசானின் எல்லா காலத்தையும் கணக்கில் கொண்டு சுனிதிகுமார் கோசின் கட்டுரை மிகத் தெளிவாக மார்க்ஸ் மீதான விமர்சன்ங்களுக்கு பதிலளித்துள்ளார்.அவர் நடைபெறும் விவாதங்களில் சுமத்தப்படும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தக்கமுறையில் பதில் அளித்துள்ளார். ஆகவே கட்டுரையை முழுமையாக வாசித்து அறிந்து எழுதுவது அவசியமாகும்.1850ம் ஆண்டில் இந்தியாவை பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆக்கம் அல்லது அழிவை ஏற்படுத்தி செய்தல் என்ற இரட்டை பணியை மேற்கொண்டிருந்தனர் என்ற கருத்தை அவரின் இறுதியான கருத்துகள் என வாதிடும் பலர் மார்க்சியத்தின் வரலாற்று பொருள்முதல்வாத்த்தை சீர்குலைக்க மார்க்சின் ” ஆசிய சொத்துடைமை முறை” என்ற சொல் பிரயோகத்தை பிடித்து தொங்க நினைக்கின்றனர்.தமிழகத்தில் குறிப்பாக தமிழில் மூன்று பேர் இதனை பற்றி பேசி உள்ளதாகவும் ஒருவர் மட்டுமே மார்க்சியத்தை துணை கொண்டு சரியாக அணுகி உள்ளதாகவும் மற்றவர்கள் எதிர் நிலைக்கு சென்றுள்ளதை நூல் குறிப்பிடுகிறது. என் கருத்து பின் நவீனதுவ வாதியான ஒருவர் இந்த விமர்சன பார்வையை தூக்கி நிறுத்தும் வேலையை திறம்பட செய்துள்ளார் தொகுப்பாசிரியரும் அவ்வேலையை தனது பதிப்புறையில் வெளிக்காட்டியுள்ளார்.. மற்றவை நாளை எழுதுவேன் தோழர்களே.
அன்புத் தோழர்களே முன்னர் பதிவுகளின் தொடர்ச்சிஇந்தியாபற்றிய ஆராய்ச்சிகள் குறிப்பாக மொகலாய இந்தியா பற்றிய ஆராய்ச்சிகள் காலனியத்துக்கு முந்தைய இந்தியா பற்றிய சர். தாமஸ் மன்ரோ, லெப்.கர்னல் மார்க் வில்க்ஸ், சர்.சார்லஸ் மெட்கால்ப் போன்ற பிரிட்டிஸ் உயர் அதிகாரிகள் சிலரின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு மார்க்ஸ் 1850 களில் தீட்டிய சித்திரம் துள்ளியமானது அல்ல.இந்தியாவின் சமூக கட்டமைப்பு முழுவதையும் இங்கிலாந்து உடைத்து விட்டது அது மீண்டும் சீரமைக்கப்படும் அதற்கான அறிகுறிகள் இன்னும் தோன்றவில்லை என்று 1853 ல் மார்க்ஸ் சொன்னபோதும் புத்துயுர்ப்பு பணி முன்பே தொடங்கிவிட்டது என்று அவர் நம்பினார் . பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் அரசியல் ஒற்றுமை உருவாக்கி உள்ளது. இந்த ஒற்றுமை ஆங்கிலேயரின் வாள் வலிமையால் திணிக்கப்பட்டு (மின் தந்தியால் வலுவூட்டப்பட்டு நீடிக்க வைக்கப்பட்டுள்ளது ). உள் நாட்டுப் படை ஒன்று திரட்டி பயிற்சி தந்துள்ளது (இந்தியாவின் தன்னெழுச்சி இது அவசியமானது ) முதல் முறையாக பத்திரிக்கை சுதந்திரம் தந்துள்ளது. நிலத்தில் தனி உடைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசியல் சமூக அமைப்பிற்கு இது மிகவும் அவசியமான ஒன்று . கல்வியின் மூலம் அரசாங்கத்திற்கு தேவையானதகுதிகளை கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானம் ஊட்டப்பட்ட ஒரு வர்க்கத்தை இந்தியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.உலகிலிருந்து இந்தியா தனிமைப்பட்டு இருப்பதை உடைக்க நீராவியை பயன்படுத்தியது இந்தியாவின் தேகத்திற்கு அதன் தனிமை தான் முக்கிய காரணமாக நவீனத் தொழில்துறையின் முன்னோடியான ரயில்வேயில் வளர்க்க திட்டமிட்டுள்ள ரயில்வே அவற்றிலிருந்து உருவாகும் நவீனத் தொழில்துறையானது இந்திய சாதிகளுக்கு அடிப்படையாக உள்ள மரபு ரீதியான வேலைப்பிரிவினை ஒழித்துவிடும். இச் சாதிகளே இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கு தீர்மானகரமான தடைகள் ஆகும் என்று நம்பினார்.1853 இல் நியூயார்க் டெய்லி டிரிப்யூன் என்ற பத்திரிகையில் இந்தியா பற்றி எழுதிய கட்டுரைகளில் இந்திய சமூகத்தை “ஆசிய சமூகம்”அல்லது “ஆசிய அமைப்பு” என்று மார்க்ஸ் சித்தரிக்கிறார். மூலதனம் நூலுக்கான தோராயமான முன்வரைவையும் எழுதப்பட்டு நீண்டகாலம் கழித்து வெளியிடப் பட்டுதுமான் பொருளாதார கையெழுத்துப் படிகளில் (1857-59) தான் “ ஆசிய உற்பத்தி முறை” என்ற சொற்றொடரை முதன் முதலாக மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இக்கையெழுத்துப் படிகளில் ஒரு பகுதி முதலாளிக்கு முந்தைய பொருளாதார உருவாக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதிலும் மூலதனத்திலும் (முதல் பாகம்) காலத்துக்கு முந்திய சமூகத்தை “ஆசிய அமைப்பு” என மார்க்ஸ் வர்ணிக்கிறார்.ஆனால் ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தில் மார்க்ஸ் கடைசி வரை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கவில்லை. இந்தியா பற்றி 1853 எழுதும் பொழுதும் கூட அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இந்தியாவைப் பற்றி எழுதி வந்த ஆங்கிலேயர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த ஒரு பிரச்சினையை சொத்து பற்றிய பிரச்சினையாகும் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள மேட்டு நிலத்தில் சொந்த உரிமையில் நிலவி வந்ததாக தெரிகிறது. மீண்டும் மார்க்ஸ்1858-இன் தொடக்கத்தில் எழுதியதாவது : பிரிட்டன் பாராளுமன்றத்தில் கிழ்க்கிந்திய வாணிபக் கழகத்தின் பிரதி நிதிகள் கூறிய படி, இந்தியாவில் நிலம் இங்கிலாந்தில் இருந்ததை போலவே தனிச் சொத்தாக இருந்து. பெரும்பாலான சுதேசி மக்கள் அறு நூறு அல்லது எழுனூறாண்டு கால்ப் பழமை கொண்ட உரிமைப்பத்திரங்கள் மூலம் தங்களின் நிலங்களை சொந்தம் கொண்டாடி வந்தார்கள்.இவ்வாறாக மார்க்ஸ் “ஆசிய உற்பத்தி முறை” என்ற கருத்தை கடைசி வரை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை.தோழர்களே தொடருவேன்…
அன்பு தோழர்களே இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் என்ற நூலில் சுனிதி குமார்கோசின் 22 பக்க கட்டுரை இந்த நூல் மற்றும் மார்க்சின் கண்ணோட்டத்தை விளங்கி கொள்ள உதவுகின்றது.நான் இதற்க்கு முன் இரண்டு பதிவு எழுதியிருந்தேன் அவை ஆங்கில ஏகாதியபத்தியம் மக்களை எவ்வாறெல்லம் சுரண்டியது என்பதும் அவை சமூக மாற்றத்தை தள்ளி போட என்னவெல்லாம் செய்தது என்று எழுதியிருந்தேன் இதில் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறியவை என்ன என்று பார்ப்போம்.இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் காலனி ஆட்சிக்கு முந்தைய இந்திய சமூகத்தின் முக்கிய கூறுகள் என 1853 காலத்தில் எழுதியவை கீழ்வருமாறு 1) நிலத்தில் தனியுடைமை இல்லாமை. 2) செயற்கையான நீர்ப்பாசன வசதி சார்ந்திருந்தது.3) மாற்றமில்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனி அணுக்களாக இருந்த கிராமங்களைக் கொண்ட சமூகம் அது, குறைவான வசதிகளோடும் மற்ற கிராமங்களோடு பெரும்பாலும் எத்தகைய தொடர்பும் இல்லாமலும் இவை இருந்தன, சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாத வேட்கைகளோ முயற்சிகளோ இக்கிராம சமூகங்களுக்கு இருக்கவில்லை.4). விவசாயத்திற்கும் கைத்தொழில்கும் இடையே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்த ஐக்கியம் மரக்கலைப்பையும் கைதறிக்கும், இதர கைத்தொழில் கருவிகளுக்குமிடையே தொன்றுதொட்டு இருந்து வந்த பிணைப்பும் “மாற்றமுடியாத ஒரு வேலைப் பிரிவினை நிலவியதும்”, தன்னிறைவு பெற்று தனிமைபட்டுக் கிடந்த கிராமச் சமூகங்களின் அடிப்ப்டையாக் அமைந்தன.5). வேளாண்மை உற்பத்திகளும் தொழிலுற்பத்தியாளர்களுக்கும், கிராம ஊழியர்களுக்கும் நடந்து வந்த பண்ட பரிவர்த்தனை ஊழியம் சந்தைக்கான உற்பத்தி என்பது முழுக்க முழுக்கத் தோற்றம் பெறவில்லை.6). ஊர்களும் நகரங்களும் வெறும் இராணுவ முகாம்களாக காட்சியளித்தன்.7). இக்கிராமங்கள் சமுக மாற்றத்தை எதிர்த்தன. அதன் சமுக நிலை பழங்காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரை மாறாமல் இருந்து வந்தது.இவதான் மார்க்ஸ் வைத்த கருத்து இதனை பற்றி தெளிவாக வரும் நாட்களில் பார்ப்போம் தோழர்களே.தொடரும் தோழர்களே….
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்-5
தோழர்களே, முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி.நிலையான மாற்றமில்லாத ஆசிய சமூகம் என்ற கருத்தை 1881இல் ஒரு அடியோடு கைவிட்டார் என்று டேனியில் தார்னர் மிகச்சரியாக சொல்கிறார். 1867 க்குப் பிறகு எழுதி வைத்த குறிப்புகளை ஆதாரமாகக் காட்டும் தார்னர் ஆசிய உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் இக் குறிப்புகளில் எதையும் சொல்லவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு இந்தியாவிலும் சீனத்திலும் இருந்த உற்பத்தி முறை பற்றி மூலதனம் மூன்றாம் பாகத்தில் மார்க்ஸ் எழுதுகையில் ஆசிய உற்பத்தி முறை என்று குறிப்பிடவில்லை மாறாக “முதலாளிகள் அதற்கு முந்தைய உற்பத்தி முறை தேசிய உற்பத்தி முறை என்றே கூறுகிறார்”.மார்க்கின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் அரசின் தோற்றம் பற்றி பேசும் போது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது சமூகம் வர்க்கங்களாக பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது இப்பிரிவில் காரணமாக அரசு தோன்றியது இன்றியமையாதது என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிபிட்ட காலத்தில் அதாவது சமூகம் வர்க்கங்களாக பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுது இப்பிரிவின் காரணமாக அரசு இன்றியமையாதது ஆயிற்று. அர்சின் தோற்றம் குறித்து இந்த மார்க்சியக் கோட்பாடானது வர்க்கத்திற்கு முந்தைய சமூகத்தில் அல்லது வர்க்க வேறுபாடுகள் குறைவாக இருந்த பன்னெடுங்காலாமாக சமூகத்தில் இருந்து வந்தது என்ற மார்க்சின் தொடக்ககால கருத்தோடு இவை முரண்படுகிறது . ஆனால் பின்னால் இக்கருத்தை மார்க்ஸ் கைவிட்டுவிட்டார் என்பதில் ஐயமில்லை. கற்பனை சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்ற நூலிலும் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலும் எங்கெல்ஸ் மூன்று வகையான அரசு வகைகளை குறிப்பிட்டுள்ளார்.வர்க்கப் பாகைமையின் அடிப்படையில் எழுந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினை அடக்குவதற்காக எழுந்த அரசு,1). பழங்கால அரசு 2).நிலவுடைமை அரசு 3).நவீன அரசு அல்லது முதலாளிய அரசு. ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஆசிய வகைப்பட்ட அரசு பற்றி அவர் பேசவில்லை கற்பனை சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்ற நூலில் குறிப்பிட்ட உற்பத்தி முறைகளின் கீழ் அடிமை முறை பண்ணை அடிமை முறை கூலி உழைப்பு முறை சுரண்டப்படும் வர்க்கங்கள் அரசின் அடக்கு முறைக்கு உள்ளாகின என்று குறிப்பிடுகிறார் ஆனால் ஆசிய உற்பத்தி முறை பற்றி அவர் குறிப்பிடவில்லை.ஆசிய உற்பத்தி முறை பற்றிய மார்க்சின் கோட்பாடு மாற்றத்தை கொண்டது போலவே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அவர் கொண்டிருந்த முந்திய கருத்துக்களும் மாற்றத்திற்கு உள்ளாகி அன்னிய மூலதனத்தின் ஆட்சியானது தொழில்மய மக்களுக்கு எதிரான ஒரு போக்கைத் தொடங்கி வைத்துள்ளதுள்ளதை தனது ஆராட்சி மூலம் அறிந்திருந்தார். இந்திய பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் பின்னிணைப்பாக மாற்றி அதனை மேலும் பிற்பட்ட நிலைக்குத் தள்ளியது என்ற அம்சத்தை தொடர்ந்து தான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் மார்க்ஸ் புரிந்து கொண்டார்.மற்ற நாடுகளில் கைத்தொழில் உற்பத்தி அளித்ததன் மூலம் இயந்திரமானது அந்த நாடுகளை தனக்கு வேண்டிய மூலப் பொருட்களை வழங்கும் களங்கலாக வலுக்கட்டாயமாக மாற்றுகிறது. இவ்விதமாக பிரிட்டனுக்கு வேண்டிய பருத்தி, கம்பளி, சணல் நார், சணல், மற்றும் நீல சாயம் ஆகியவற்றை உற்பத்தி செய்யுமாறு இந்தியா கட்டாயப் படுத்தப் பட்டது.நவீன தொழில் வள நாடுகளின் தேவைகளுக்கு பொருத்தமான ஒரு புதிய அனைத்துலக உழைப்புப் பிரிவினை துவங்கி உலகின் ஒரு பகுதியை முதன்மையான தொழில் களமாகவும் மற்றொரு பிரிவை மூலப்பொருட்களை வழங்குகின்ற முதன்மையான வேளாண்மை உற்பத்தி களமாக மாற்றி அமைத்தது 1880ம் தொடக்கத்தில் ரயில் பாதைகள் பற்றி எழுதுகையில் அவை இந்தியாவில் தொழில் புரட்சிக்கான கிரியா ஊக்கியாக செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரே பின்வருமாறு எழுதினார் பொதுவாகச் சொன்னால் ரயில் பாதைகள் வெளிநாட்டு வளர்ச்சிக்கு பெரும் தூண்டுதலாக இருப்பதற்கு பதில் பெரும் துன்பத்தை தண்டனையாக அமைந்தது என்றும் மூலப்பொருட்களை முக்கியமாக ஏற்றுமதி செய்து வந்த நாடுகளில் வாழும் அனைத்து மக்களின் துன்பத்தை அதிகரித்தது என்றும் எழுதினார். உண்மையில் உற்பத்தியாளர்களுக்கு இரயில் பாதைகள் துயரத்தையே தந்தன என்று மார்க்ஸ் சொன்னார்.தோழர்களே தொடரும்…