இந்தியாவில் வேலைவாய்ப்புக்களின் நிலைமை
இந்தியாவில் வேலைவாய்ப்புக்களின் நிலைமை

இந்தியாவில் வேலைவாய்ப்புக்களின் நிலைமை


×

  ☰Do

  1. சமூக நலம்
  2. சுய தொழில்கள்
  3. தொழிலாளர் நலன்
  4. இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை – சில முக்கிய பிரச்சினைகள்

  நிலை:open

  இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை – சில முக்கிய பிரச்சினைகள்

  மக்களுக்கு போதுமான தரமான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய சவால்கள் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  இது சமீப காலங்களில் மேலும் மோசமடைந்துள்ளது.

  மிகவும் பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்புக்களின் நிலைமை

  சொந்தத் தொழில், குடும்பத்தொழில் மற்றும் மிகவும் நலியக் கூடிய வேலைவாய்ப்புக்களின் நிலைமை

  மொத்த வேலைவாய்ப்பில் இப்படிப்பட்ட பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்பில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் ஆகும். இவர்களில் 46 சதவிகிதத்தினருக்கும் மேல் தெற்கு ஆசியாவிலும் ஆப்ரிக்காவின் சஹாரா பகுதிக்கு கீழ் உள்ள நாடுகளிலும் 70 சதவீகித பணியாளர்களுக்கு மேல் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பணியில் உள்ளனர். பன்னாட்டு தொழிலாளர் நல அமைப்பின் அறிக்கையின்படி உலக மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கையுடன் 2.4 மில்லியன் வேலையற்றோர் இணைகிறார்கள்.  இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 17.6 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இது 2017 வாக்கில் தெற்காசியாவில் மொத்த வேலையில்லா மக்களின் எண்ணிக்கையில் 60 சதவிகிதமாகும்.

  ஆகவே வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அவைகளைத் தரமானவைகளாக உருவாக்கவும் கொள்கைகளை செயல்படுத்துவது இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த நாள் முதலே பெரிய சவாலாக உள்ளது.  இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பற்றிய சில முக்கியமான பிரச்சனைகள் இங்கு ஆராயப்பட்டுள்ளன.

  இன்றைய நிலையில் பணியாளர்களின் பங்கேற்பும் வேலை வாய்ப்புசார் சவால்களும்

  இந்தியாவின் மொத்த ஜனத்தொகையான 1.3 பில்லியனில் (உலகமக்கட் தொகையில் கிட்டத்தட்ட 6ல் ஒரு பங்கு) 70 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில் 40/45 சதவிகிதத்தினரை பணியாளர்கள் என்று கருதலாம். மொத்த ஜனத்தொகையில் பணியாளர்களின் பங்கு இதே நிலைமையில் நாடு சுதந்திரமடைந்திலிருந்து தொடர்ந்து வருகிறது.  இதில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது இந்தியாவில் மக்கள் செய்யும் பணிகள் ஜாதி மத பாலின பகுதி அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் ஒரு தொழிலை விட்டு மற்றொரு தொழிலுக்குச் செல்வதில் சிக்கல். குறிப்பாக பெண்கள் ஒருவருக்கும் மற்றவருக்குமிடையே பெருமளவிலான ஊதிய வித்தியாசங்களும் தடைகளும் கவனிக்க வேண்டியவை. இந்திய மக்கட்தொகையில் ஆண்களைவிட பெண்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து 20 சதவிகிதம் குறைவாகவே உள்ளது. சமீபத்திய அரசு ஆய்வின்படி பெண்களின் பங்கு 25 முதல் 30 சதவிகிதமாக உள்ளது. பலதரப்பட்ட சமூகப் பொருளாதார குழுக்களுக்கிடையே மாநிலங்களுக்கிடையே கிராமப்புற நகர்ப்புறங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்து காணப்படுகின்றன. 2016 இல் வெளி வந்த பன்னாட்டுத் தொழிலாளர் நல அமைப்பின் மகளிர் மற்றும் வேலைவாய்ப்பு அறிக்கையின் படி உலகத்திலேயே இந்தியாவில் தான் ஆண் பெண்களுக்கிடையே ஊதியத்தொதை 26 சதவிகிதம் வரை மிகவும் வேறுபட்டுள்ளது. இது ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் 23 சதவிகித வித்தயாசத்தை விடவும் மிகவும் கூடுதலாகும். இதுவே வளர்ந்த பொருளாதாரங்களில், ஆண் பெண் ஊதிய வித்தியாசம் சராசரி 15 சதவிகிதமாக உள்ளது.

  விவசாயத்தொழில்

  இந்தியத் தொழிலாளர் நிலைமையில் மற்றொரு முக்கியமான அம்சம் நாம் விவசாயத்தையே அதிகமாக நம்பியிருப்பது தான். மொத்த பணியாளர்களில் 50 சதவிகிதத்தினர் விவசாயத்துறையில் உள்ளனர். இது அல்லாமல் தற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 6 இல் ஒரு பங்கு என்ற அளவில் தான் உள்ளது. விவசாயத்தில் அதிக மக்கள் ஈடுபட்டிருப்பதனால், அங்கே அவர்களுக்கு ஒரளவுக்கே வேலைவாய்ப்பு இருக்கிறது. இதனால் பெரும்பான்மையாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. விவசாயம் அல்லாத துறையில் காணப்படும் நிலை விவசாயத்தைப் போலவே மிகவும் பாதிப்பு அடையக் கூடிய முறைப்படுத்தப்படாத அதே நிலைமை தான். விவசாயம் அல்லாத துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உள்ள நிலையில் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு அவர்களின் பங்களிப்பு 80 சதவிகிதமாக உள்ளது. இதில் பத்து சதவிகித்திற்கும் குறைவானவர்களே முறைப்படுத்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் 65 முதல் 70 சதவிகிதம் வரை பொதுத் துறை நிறுவனங்களில் உள்ளனர் (பொது நிர்வாகம் மற்றும் இராணுவத்துறை உள்ளிட்டவர்கள்). தனியார் துறையில் கிட்டத்தட்ட 29.2 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். இதில் பெரு உற்பத்தி நிறுவனங்களில் உள்ளவர்களும் சேவைத்துறையில் உள்ளவர்களும் அதிகம். தனியார் துறையில் 16 சதவிகித மக்கள் முறைப்படுத்தப்படாத வகையில் உள்ளனர்.

  இந்தியப் பணியாளர்களின் சூழல் அமைப்பு மேலோட்டமாக பார்க்கும் போது மிகவும் பரிதாபமான கவலை தரக்கூடிய வகையில் உள்ளது. இந்த நிலைமை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னேற்றப்பாதையை ஒட்டியே உள்ளது. ஆனால் 1990 க்குப்பின் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொண்டத்தற்கு பிறகு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்தக்கால கட்டத்தில் விவசாயத் தொழில் மிகவும் நலிந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மேல் மட்டக் கொள்கைளும் அடிப்படைத் துறைகளில் பொது முதலீடு மிகவும் குறைந்துள்ளதுமேயாகும். இதனால் விவசாயத் துறையினால் அதிகப் பணியாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதனால் விவசாய வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்த மக்களின் எண்ணிக்கை பெருகி அவர்கள் விவசாயம் அல்லாத துறையில் வேலை தேடுகிறார்கள. இதிலும் கூட பொருள் உற்பத்தித்துறையிலும் சேவைத்துறையிலும் நிலமற்ற மற்றும் விவசாய கூலிதொழிலாளிகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. 1990 களில் இருந்தே தேசிய வருமானத்தில் பொருள் உற்பத்தித்துறையின் பங்களிப்பு சுமார் 15-16 சதவிகித அளவிலேயே தேங்கியுள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகித பொருள் உற்பத்தி அமைப்புகளில் 1 அல்லது 2 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அது அவர்களின் நலிவுற்ற தன்மையை காட்டுகிறது. அவர்கள் சுயதொழில்களிலும் இருப்பதை 1990லிருந்து காணலாம்.

  புள்ளி விவரம்

  உயர் பொருளாதார வளர்ச்சி காலகட்டத்தில் கூட வேலைவாய்ப்புக்களின் அதிகரிப்பு மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. உற்பத்தி பெருகியும் கூட வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் இருப்பது கடந்த முப்பது ஆண்டுகளாக எல்லாத் துறைகளிலும் காணப்படுகிறது. வளர்ச்சியின் மையத்தன்மை சேவைத்துறையின் பெருக்கமாக உள்ளது. இதில் அதிக அளவில் தற்காலிக ஊழியர்களும் சுயமாக வேலை செய்பவர்களும் உள்ளனர். இதனால் முறைப்படுத்தப்படாத பணியாளர்களாக உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு முறைப்படுத்தப்படாத பணியாளர்கள் தெற்காசிய நாடுகளில் உள்ளனர். மிகவும் பாதிக்கப்படக்கூடிய முறைப்படுத்தப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதமாகும். உண்மையில் தற்போது மிகவும் கவலையளிக்ககூடிய நிலைமை முறைப்படுத்தப்பட்ட துறையில் கூட பெருமளவில் முறைப்படுத்தப்படாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். 1999 – 2000 மாவது ஆண்டில் ஒழுங்குப்படுத்தப்பட்ட துறையில் கூட முறைப்படுத்தப்படாத பணியாளர்களின் பங்கு 38.7 சதவிகிதமாக இருந்து 2011 -12ல்அது 54.4 சதவிகிதமாக உயர்ந்தது என்று தேசிய மாதிரி கணிப்பு நிறுவனத்தின் 68 வது சுற்று விவரம் கூறுகிறது. அதே அறிக்கையின் படி கிராமப் பகுதியில் உள்ள 97 சதவிகித மக்கள் சுயமாக வேலை செய்யும் நிலைமையும் நகர்ப்புறங்களில் அது 98 சதவிகிதமாக உள்ள நிலைமைகளும் அவர்கள் முறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இது அல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள தற்காலிக பணியாளர்களில் 78 சதவிகித்தினரும் கிராமப்புறங்களில் 81 சதவிகித மக்களும் முறைப்படுத்தப்படாத துறையில் உள்ளனர். ஆகவே 2011 – 12 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் மதிப்பீடுகளின்படி (கடைசியாக கிடைக்கும் மதிப்பீடுகள்) முறைப்படுத்தப்படாத பணியாளர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையான 484.70 மில்லியன்களில் 447.20 மில்லியன்களாக இருந்தது. இதில் பெரும்பான்மையோர் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் ஸ்திரமான வேலைப் பாதுகாப்பு இல்லாமலும் சமூகப் பாதுகாப்பு இல்லாமலும் உள்ளனர்.

  ஏற்கனவே நாம் பார்த்த படி பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு பின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே போனாலும் முறைப்படுத்தும் தன்மையும் பணியாளர்களுக்கு பாதிப்பான நிலைமையும் உயர்ந்து கொண்டேபோகிறது. அரசு சமூகத்துறையில் பலவற்றிலிருந்து விலகிக் கொண்டுள்ள நிலையில் இந்த பணியாளர்களின் பாதிப்புத் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளன.

  முறைப்படுத்தப்படாத பணியாளர் நிலைமை தொடர்ந்து கொண்டே போகும் அதே வேளையில் முறைப்படியான பணியாளர் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 1990க்கு பின் தேக்க நிலைமையை அடைந்துள்ளது. முறையான பணியாளர்களின் எண்ணிக்கை 1987 – 88 ல் ஆண்களிடையே 10 சதவிகிதமாக இருந்தது. இது 2009 -10 ல் 8.5 சதவிகிதமாகக் குறைந்து 2011 – 12 ல் 10 சதவிகிதமாக உயர்ந்தது. சமீபகாலங்களில் தோற்றுவிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 80 சதவிகிதமாக உயர்ந்தது. 80 சதவிகித்த்திற்குப் மேல் தற்காலிகப் பணிகளாகவே உள்ளன. அவைகளில் பெரும்பான்மையான பணிகள் கட்டுமானத்துறையில் உள்ளன. உழைக்கும் மக்கள் பல வகையாக பாகுபடுத்தப்படுவது அவர்கள் செய்யும் தொழிலிலும் இடத்திலுமே விளங்கிறது. சமீபத்திய தகவல்களின் படி உற்பத்தி முறைகள் சிறிய அளவு நிறுவனங்களுக்கு மாறி வருவதால் பணியாட்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. தற்போது பல உற்பத்தி நிலையங்கள் சுயவேலைவாய்ப்புகள் மூலம் செய்யப்படுவதால் பணி செய்யும் இடம் முறையான வகையில் அமைவதில்லை. ஆகவே இங்கு பணி செய்பவர்களுக்கு பணியாளர்கள் என்ற அந்தஸ்து கிடைக்காமல் போனது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல பணியாளர்கள் சார் சமுக பாதுகாப்புகளும் கிடைக்கவில்லை.

  அதிகமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடீய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அன்றாட வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களின்படி 1983 முதல் 1993-94 வரையிலான கால கட்டத்தில் வேலை வாய்ப்பின்மை வெகுவாக குறைந்தது. அரசு மதிப்பீடுகளின்படி இனி ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் புதிய ஜனத்தொகைக்கு ஏற்ப நாம் செயல்பட முடியும். ஆனால் தற்போது பணியாளர் நல வாரியத்திடமிருந்து கிடைக்கும் மதிப்பீடுகளின்படி பார்த்தால் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாவதன் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்ற நிலைமைக்கு நாம் வெகு தூரத்தில் இருந்தாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் 90 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. 2010 இல் 11 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 2014 ல் அது 1 ½ லட்சமாக குறைந்தது.

  சமூகப்பாதுகாப்பு அடித்தளம் அவசியம்

  பொருளாதார சீர்திருத்தக் காலத்தில் இந்தியப் பணியாளர் சண்டை மிகவும் கெடுபிடியாக உள்ளது (பல சட்டங்கள் செய்யக்கூடாது என்று தடுக்கும் நிலைமைகளால்) என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இவைகளை தளர்த்தினால்தான் அந்நிய முதலீடு கிடைக்கும் என்று கூறுப்பட்டது. அரசு கொள்கைகளை உருவாக்குபவர்கள் அடிக்கடி கூறுவது – இந்தியாவில் குறைந்த வயதுடைய மக்கள் அதிகம் உள்ளது நமக்கு நல்ல பலம் ; அவர்களுக்கு திறன்களை அளித்து பணியாளர் சந்தையிலுள்ள கெடுபிடிகளை தளர்த்தினால் அதிகமான அந்நிய முதலீடு கிடைக்கப்பெற்று அதனால் வேலை வாய்ப்புகள் உயரும். நாம் வேறு இடத்தில் கூறியுள்ளதுபடியும் பொருளாதாரக் கூற்றுக்களின்படியும் பார்க்கும்போது பணியாளர் சார்ந்த ஒழுங்கு முறைகளால் பொருளாதார வளர்ச்சியோ வேலை வாய்ப்பு உருவாக்கலோ பாதிக்கப்பட மாட்டாது.

  நாம் முன்பு பார்த்தபடி மொத்தப் பணியாட்களில் மிகவும் சொற்பமானவர்களே ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே சமூக பாதுகாப்புகள் கிடைக்கின்றன. சில மாநிலங்களிலும் சில துறைகளிலும் செயல்படும் குறைந்தபட்ச சட்ட நிலைமைகள் தவிர முறைபடுத்தப்படாத பணிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளுக்கான எந்தவொரு முக்கிய தொழிலாளர் நல சட்டமும் செயல்படாத நிலையில்தான் உள்ளது. இந்தப் பின்னனியில் பார்க்கும்போது இந்தியப் பணியாளர் சந்தையில் கெடுபிடிகள் இருப்பதாக எப்படி கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தியாவில் பணியாளர் எண்ணிக்கையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் போதுமான சட்டப் பாதுகாப்பு இல்லாமலும் கிட்டதட்ட சட்டங்களே செயல்படாத சூழ்நிலையிலும் உள்ளனர்.

  ஆகவே இந்தியாவின் கொள்கை வகுப்பவர்கள் மொத்த பணியாளர்களுக்கு ஏற்ற வகையில் பணியாளர் உரிமைகளுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அந்தக் கொள்கையில் அடிப்படையான தொழிலாளர் நலத் திட்டங்களும் குறிப்பாக தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியமும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்தக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால்தான் முறைப்படுத்தப்படாத பணியாளர் சந்தை நிலைமையை சீர் செய்ய முடியும். இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு ஏற்றவாறு சமூக பாதுகாப்பு நிலைமைகளும் அமைய வேண்டும்.

  முறைப்படுத்தப்படாத பணியமர்வில் உள்ளவர்களுக்கு உடனடியாக சமூகப் பாதுகாப்பும் அவர்கள் வாழ்க்கையை கண்ணியமாக நடத்தவும் வழிவகை செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு அடிப்படை சேவைகளான சத்துணவு, குடிநீர், வடிகால் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை அதிகரித்து அவர்களுக்கு சென்றடையும்படி உறுதி செய்ய வேண்டும். இதனால் பணியாளர்களின் திறமையும் சமூக நிலைமையும் உணர்ந்து அவர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதிலிருந்து வெளிப்பட உதவும்.

  ஆதாரம் : திட்டம் மாத இதழ்

  ஆசிரியர் : பிரவீன்ஜா
  3.13   30 மதிப்பீடுகள் மற்றும் 0 commentsஉங்கள் மதிப்பீடுநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.

  உங்கள் ஆலோசனையை இடுங்கள்

  (மேலே உள்ள உள்ளடக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் / பரிந்துரைகள் இருந்தால், அவற்றை இங்கே இடுங்கள்)முழு பெயர்உங்கள் தகவல்சமர்ப்பிக்கவும்


  விவசாயம்வேளாண் உள்ளீடுகள்பயிர் உற்பத்திஅறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள்கால்நடைகள்கோழிமேலும் பார்க்கஆரோக்கியம்பெண்கள் ஆரோக்கியம்குழந்தை ஆரோக்கியம்NRHMAYUSHஊட்டச்சத்துமேலும் பார்க்ககல்விகுழந்தை உரிமைகள்கொள்கைகள் / திட்டங்கள்குழந்தைகள் மூலையில்ஆசிரியர்கள் மூலையில்ஆன்லைன் மதிப்பீடுமேலும் பார்க்கசமூக நலபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சிதிட்டமிடப்பட்ட பழங்குடியினர் நலன்திட்டமிடப்பட்ட சாதி நலன்பின்தங்கிய வகுப்புகள்அமைப்புசாரா துறைமேலும் பார்க்கஎரிசக்திஆற்றல் அடிப்படைகள்ஆற்றல் பாதுகாப்புஆற்றல் திறன்ஆற்றல் உற்பத்திசிறந்த நடைமுறைகள்மேலும் பார்க்கமின்னாட்சிஇந்தியாவில் இ-ஆளுமைதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிமின்-அரசு சேவைகள் ஆன்லைனில்VLE களுக்கான வளங்கள்மொபைல் ஆளுகைமேலும் பார்க்க

  இந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் செயல்படுத்தி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்)எங்களை பற்றிஎங்களுக்கான இணைப்புஎங்களை தொடர்பு கொள்ளஉதவிபோர்டல் கொள்கைகள்சாதகமாகச் சேர்க்கவும்தள வரைபடம்உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்

  • கடைசியாக மாற்றப்பட்டது April 19 , 2022
  • . © 2022 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *