இலக்கைதேடி
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒரு பார்வை

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒரு பார்வை

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-1

 • ஐந்து குருடர்கள் யானை பார்த்த கதையை நாம் சிறு வயதிற் கேட்டிருப்போம். ஒவ்வொரு குருடனும் யானையின் ஒரு பகுதியை மட்டுமே தொட்டுத் தடவி ஆராய்ந்து, அப்பகுதியையே யானையின் முழுமையெனக் கருதித் தான் தொட்ட பகுதி தானறிந்த எப்பொருளை ஒத்திருந்ததோ அப்பொருளையே யானையும் ஒத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து, மற்றவர்களுடன் கடுமையாக வாதிட்டதைப் பற்றிச் சிரித்திருப்போம். மனித அறிவும் பல சமயங்களில் குருடர் யானை பார்த்த வகையில் அமைந்து விடுகிறது. எந்தவொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களினின்றும் பார்க்கவும் முழுமையையும் பகுதியையும் உறவுபடுத்தியும் வேறுபடுத்தியும் ஆராயவும் தவறும்போது, நமது பார்வை குறைபாடுடையதாகி நமது முடிவுகள் முழுமையற்றனவாகின்றன.

மனித அறிவு தனி முழுமையற்றதெனினும் மனிதன் வேண்டி நிற்கும் அறிவு மனித வாழ்க்கைக்குத் தொடர்பானதும், மனிதனது தேவைகளின் அடிப்படையில் எழுவதும் என்பதால், அறிவு அறிவுக்காகவே என்ற முறையில் அறிவு தேடப்படுவதில்லை.

 • மனிதனது பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்யவும் மனித வாழ்வைச் செழுமைப்படுத்தவும் தேவைப்படும் அறிவு மனித சமுதாயத்தினதும் சமுதாய நடைமுறையினதும் இணைந்தே வளர்ச்சி பெறுகிறது. மனித இனத்தின் எதிர்காலம் பற்றியும் மனிதர் வாழுஞ் சூழல் பற்றியும் அக்கறை கொண்ட சமுதாயப் பார்வையையும் நடைமுறையையும் சார்ந்து நிற்கும் அறிவு வேட்கை, மனிதரது தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் நிறைவு பெற முடிவும்.

“மார்க்சின் பெயரும் சேவையும் யுகயுகமாக நிலைத்து நிற்க்கும்”

மார்க்ஸ் மறைந்த மூன்றாவது நாள் (17-3-1883) மார்க்சின் கல்லறை அருகே நின்று ஏங்கெல்ஸ் எழுப்பிய குரல் கூறிய வார்த்கைகள் இன்றும் வீண்போகவில்லை; என்றும் வீண்போகாது.

அன்று அவரது சிந்தனைகளைச் சில அறிஞர்களும் தொழிற் சங்கத்தவர்களுமே படித்தனர்; பாராட்டினர்.இன்றோ உலகம் முழுவதும் அவரது பெயரும் சேவையும் பாராட்டிப் போற்றப்படுகின்றன.

மார்க்ஸ் சிந்தனை ஒரு லெனினைச் செயல்வீரனுக்கியது. ஒரு மாவோவை புரட்சியாளனாக்கியது. உலகின் பாதி மக்கள் அவரது கோட்பாடுகளை ஏற்று அவர் வழியிலே புதிய உலகைப் படைக்கும்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,

மார்க்ஸ் சமூக விஞ்ஞானி; வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 135 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோசலிச சமுதாயத்தின் அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் கூறி நிற்கிறது.

தோழர்களே இதனை தொடராக இங்கே எழுத முயற்சிப்பேன் உங்களின் விமர்சன்ங்களால் எனது எழுத்துகளை சீர்படுத்த அழைக்கிறேன் தோழர்களேசிபி

26/01/2020 முகநூலில் பதிவு செய்த நாள்

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-2

உலகில் இந்த நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கும் அதன் உச்சமான ஏகாதிபத்தியத்திற்கும் மட்டும் உரியதொன்றா? அல்லது சோசலியத்திற்குரிய நூற்றாண்டாக அமையப் போகின்றதா ?

கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்றிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு மேதைகளும் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச் சென்ற தத்துவாமே மார்க்சியமாகும். அன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமைவாத கருத்து முதல்வாத உலக நோக்கிற்கு எதிராக இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக நோக்கை மார்க்சியம் நிலைநிறுத்திக் கொண்டது. மேலும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு மட்டுமன்றி முழு மனிதகுல விடுதலைக்குமான தலைவிதியோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மாபெரும் வலிமையையும் பெற்றக்கொண்டது.

மார்க்சிசம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்தத்தை முன்வைக்கின்றது. எவ்வாறு முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக்கொண்டதோடு அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும் மார்க்சியம் வெற்றி கண்டது.

மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் பற்றிய துல்லியமான ஆய்வையும் தெளிவான வரையறைகொண்ட முடிவுகளையும் தமக்கேயுரிய மேதாவிலாசத்துடன் அணுகி ஆராய்ந்து அதன் மூலம் முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தி வரும் கூலி அடிமை முறையின் உள்ளார்ந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.

 • முதலாளித்துவத்தின் கீழ் மனிதர்களின் உழைப்பு, அதன் மதிப்பு, கூலி, விலை, இலாபம், உபரி உற்பத்தியும், உபரி மதிப்பும், விநியோகம் என்பவற்றின் அடிப்படைகள் கண்டறியப்பட்டன. முதலாளித்துவத்தின் ஒரே இலக்கு இலாபத்தைக் குவிப்பதும், மூலதனத்தைப் பெருக்குவதும் தான். மனிதர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அன்றி அவர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதோ அல்ல என்பதையும் மார்க்சும் ஏங்கெல்சும் தமது ஆய்வுகளின் மூலம் தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.

அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் சுரண்டிக் கொண்டு நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும்.

 • மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவை செய்யப் படுகின்றன.
 • இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பழைமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டுநிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும்.

மார்க்சியம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாக லெனினியமாக வளர்ச்சி கண்டது. சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாக விரிவுபெற்றது. இன்னும் பல நாடுகளின் புரட்சிகளில் மார்க்சியம் வளம் பெற்றது.

 • எனவே, இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

அத்தகைய பங்களிப்பின் ஒரு சிறு முயற்சியே மார்க்சியம் கற்பதற்க்கான இந்த எழுத்து வடிவம்சிபி.

27/01/2020 முகநூலில் பதிவு செய்த நாள்

பாராளுமன்றம் என்பது உண்மையில் என்ன செய்துக் கொண்டுள்ளது.

இன்று மக்களுக்கு செய்ய வேண்டிய எதையும் செய்யாத அரசு மக்களை தினம் தினம் எப்படி ஏமாற்றுகிறது என்பதை அறியாத நடுநிலை நக்கிகள் கேள்வி கேட்பது போல் சட்டம் என்ற பெயரில் ஒடுக்கு முறை ஆதரிப்பதும் மக்களின் வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறைகளை சட்டத்தின் நியாயப் படுத்தும் இந்த நியாயவான்கள் இந்த ஆளும் வர்க்க அடிமைகளே. மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. இதணூடாக மக்களை வெறுப்பேற்றி தங்களின் ஆட்சி அதிகாரத்தை காப்பற்றி கொள்ள செய்யும் வேலையே.
மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அணுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

 • இந்த பாராளுமன்றம் என்பது உண்மையில் என்ன செய்துக் கொண்டுள்ளது.“அனைவருக்கும் வாக்குரிமை என்பது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது.நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடையே பேசுவதற்க்கு ஒரு மேடையைத்தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.

இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.

இன்று ஏகாதிபத்திய சேவையும் கார்ப்ரேட் சேவையும் ஆட்சியாளர்க்ளுக்கு பல்வேறு சிக்கலை உருவாக்கி உள்ள நிலையில் மக்கள் முன் உள்ள முரண்பாடுகளை கையாளும் ஆட்சியாளர் பிர்ச்சினையை தீர்பதற்க்கு பதில் அதனை தங்களின் ஆதாயமாக பயன்படுத்தி கொள்ளும் மக்கள் விரோதிகள். இங்கே உண்மையில் ஏழை எளிய மக்களுக்கு நேர்மையான நியாயம் கிடைக்காது அதற்க்கான அமைப்பு முறை இல்லை இவை. முதாலாளிகளின் சேவைக்கானதே இவை. இன்று பற்றி எரியும் பிரச்சினைகள்தான் இவர்களின் வாழ்வாதரம் இதற்க்கு முடிவுகட்ட நினைக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.-சிபி. 29/01/2020

—————————————————————————————————————————

ரசியா புரட்சியும் இந்தியப் பகுதிகளில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காண்போம்.

இருபதாம் நூற்றாண்டில் ரசியாவில் மூன்று புரட்சிகள் நடந்தன,அதனை காலனிய இந்தியா எப்படி எதிர் கொண்டது என்பதுடன் அன்றை பிரிட்டிஸ் அடிமைகளான புத்திஜீவிகள் அரசின் காலடி ஒற்றி நடந்துக் கொண்ட விதம் அறிந்தால் வரலாற்றில் சில புரிந்துக் கொள்ள பயன்படும்.

1905 டிசம்பரிலும் 1917 மர்ச்சிலும்1917 நவம்பரிலும் நடந்தன. இவற்றில் முதல் புரட்சி தோற்றது. அன்றைய பிரிட்டன் இந்தியப் பகுதிகளில் ரசிய புரட்சியை எதிர் கொண்ட விதம் குறித்து இனி கா1905 டிசம்பர் புரட்சி வரவேற்கப்பட்டது, பிரிட்டனை சட்டபூர்வ வழிகளில் மட்டுமே எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தலைவர்கள் மக்கள் புரட்சியில் பங்கெடுப்பதை பாராட்டினர்.1917 மார்ச்சில் நடந்த புரட்சி, சர்வதேசப் பெண்கள் நாளான்று, பெண்கள் ஆர்பாட்டத்தின் மூலம் தொடங்கியது, இதில் படிப்படியாக தொழிலாளர்களும் இராணுவத்தினரும் கலந்து கொண்டனர். மார்ச்சு 10 ல் 2 லட்சம் தொழிலாளர்களும் மாரச்சு 12 இல் 60 இராணுவத்தினரும் கலந்து கொண்டனர். உணவு தேவை யுத்தம் ஒழிக என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை இராணுவத்தின் ஒரு பகுதியினர் சுட மறுத்து அவர்களுடன் இணைந்தனர்; புரட்சி வென்றது ஜார் பதவி விலகினான். லிபரல் கட்சியினர், சோசலிசப் புரட்சி கட்சியினர், பொதுவுடைமை கட்சியின் ஒரு பிரிவான மென்சிவிக் குழுவினர் ஆகியோர் இணைந்து மார்ச் 12 ல் தற்காலிக அரசாங்கம் அமைத்தனர். இது முதலாளியக் குடியுரிமைகளை வழங்கியது. இது முதலாளிய வகை பட்ட புரட்சியாகும். இது இந்தியப் பகுதிகளில் உள்ள அனைவராலும் வரவேற்க்கபட்டது. நேச நாடுகளுடன் கூட்டு கொண்டு ஜெர்மனியை எதிர்த்த பிரிட்டன், வலுமிக்க இந்த மக்கள் அரசாங்கமே ஜெர்மனியை முறியடிக்கும் என் எண்ணி இதற்க்கு ஆதரவு கொடுத்தது. புரட்சி நடந்த 7 நாட்களுக்குள் ரசிய அரசாங்கத்தை பிரிட்டன் அங்கீகரித்தது.இந்திய பகுதியில் உள்ள அரசியலர்களும் இம் முதலாளியப் புரட்சியை வரவேற்றனர்.1917 நவம்பரில் ஏற்பட்ட புரட்சி, சோசலிசப் புரட்சியாகும். மார்ச்சியில் நடந்த முதலாளியப் புரட்சிக்கு பின் ஏற்பட்ட முதலாளிய அரசு மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்க இயலவில்லை, யுத்தத்தை நிறுத்த இயலவில்லை, மக்களுக்கு உண்ண உணவும் உழைக்க நிலமும் இல்லை, முதலாளிய முரண்பாடுகள் முற்றின. இவ்வாறக நவம்பர் 7 ல் சோசலிசப் புரட்சி லெனின் தலைமையில் நடந்தேரியது, இதனை ஸ்டாலின் வார்த்தையில் சொன்னால்,”உலகம் முழுவதும் உள்ள சுரண்டப்பட்ட மக்களின் ஸ்தாபனப் போராட்ட வழிமுறைகளிலும் வடிவங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் மரபுகளிலும் பண்பாட்டிலும் சித்தாந்தத்திலும் நிகழ்ந்த அடிப்படையான இரு மாற்றத்தைக் குறிக்கிறது”.இத்தகைய புரட்சியை இந்தியப் பகுதிகளில் ஏற்படுத்திய தாக்கத்தைக் காண்போம். மார்ச்சுப் புரட்சியை எல்லாத் தரப்பாலும் மதிக்கப்பட்டது, அரசினரும் இப்புரட்சியை வரவேற்றனர். ஆனால் நவம்பர் புரட்சியை அரசு வரவேற்கவில்லை, இந்தியப் பகுதிகளில் இத்தத்துவம் குறித்த கருத்துகளைத் தடுத்தனர். மேலும் இவர்கள் போல்சிவிஸம் குறித்துத் தவறாக விளக்கம் அளித்தனர்.(ஆரசு ஆவணம் கூறுகிறது.)அரசாங்கத்தின் நிலை இப்படியிருக்க இந்தியப் பகுதிகளில் உள்ள அரசியலர்கள் இப்புரட்சிக் குறித்தும் சோசலிச சமூக அமைப்பு குறித்தும் வேறுபட்டிருந்தனர். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.(1). இவற்றை கடுமையாக் எதிக்கும் நிலை.(2). ஊசலாட்டம், குழப்பம் ஆகியவற்றுகுள்ளாகி நிலைப்பாட்டுத் தெளிவில்லாத நிலை.(3). உறுதியான ஆதரவு நிலை.ஏகாதிபத்திய நிறுவனங்களின் அவதூறுப் பிரசாரத்தையும் மீறி நவம்பர் புரட்சியை வரவேற்றனர். இவர்கள் நோக்கம் ஏகாதிபத்தியத்திடமிருந்து பரிபூரண விடுதலை என்பதாக இருந்ததால், லெனின் முழக்கமான தேசங்களின் சுய நிர்ணய் உரிமை இவர்களைக் கவர்ந்தது. தி மாடர்ன் ரீவ்யு, ஆத்ம சக்தி, சம்சார், சங்கா,ஆந்திராபத்திரிகா, கிஸ்ட்னா பத்திரிகா போன்ற பத்திரிக்கைகள் ரசிய புரட்சியின் ஆதரவு செய்திகளை வெளியிட்டன. ஆங்கில அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்கு இவை பதில் கொடுத்தன.இதனை தொடர்ந்து இங்கு கட்டப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல கருத்துகளை தொடர்ந்து பேசுவோம்-சிபி30/01/2020 முகநூலில் பதிவு செய்த நாள் ————————————————————————————–

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு

அன்புத் தோழர்களே, நான் எழுத நினைத்தவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு அதிலிருந்து நாம் பல தெரிந்துக் கொள்ளவுள்ளது நான் ஆரம்பத்தில் கூறியது போலவே ,”கடந்த கால வரலாற்று தவறுகளிலிருந்து கற்று எதிர்கால தவறுகளை தவிர்ப்போம்”. ஆகவே தோழர்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு தெரியாத தோழர்கள் தங்கள் கட்சி ஆவணங்களை வாசிக்கவும், ஆசிரியர் அருணன் மற்றும் பல ஆசிரியர்கள் எழுதியுள்ள பல பதிவுகளில் உள்ளன, வரலாற்று ஆவணங்களை வாசித்து தங்கள் ஆளுமையை சரிபடுத்தி கொள்ளவும் (இவை CPI, CPM தோழர்களுக்கு) (மா-லெ தோழர்கள் சுனிதி குமார் கோசின் நக்சல்பாரி முன்பும் பின்பும் சரியான வரலாற்று ஆவணம் ஆங்கிலேய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து மா-லெ இயக்கங்களின் இன்றைய நிலைவரை விளக்கியுள்ளார், பல செய்திகளை CPI மற்றும் CPM ஆவணங்கள் சுட்டிகாட்டாத நிகழ்வுகளை இதில் காணலாம்).

மேஜர் ஜெய்பால் சிங்கின்நாடு அழைக்கிறதுபடித்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதில் அவர் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்…. நட்பா அல்லது ….

1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை.

1952 முன் .. தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.1967 ஆம் ஆண்டு நக்சல்பாரி போரட்டத்திற்குப் பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவற்கான முயற்சிகளை மேற்கொண்டது குறித்த அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போரட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம்போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட கட்சிகளுக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போக்குகளைப் போலவே இந்திய மாலெ இயக்கங்களுக்குள்ளும் பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமான உருவான மாலெ இயக்கம் பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மாலெ இயகங்களாக பிரிய ஆரம்பித்தது இன்று பல குழுக்களாக் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது புரட்சிக்கு மாபெரும் பின்னடைவுதான்.கிட்டதட்ட அய்ம்பதாம் ஆண்டை நெருங்கப் போகிற மாலெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வள்ர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில், ரஸ்சிய புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடினார். அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு முறியடித்தார் என்பதை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யம் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

 • முதலாளித்துவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகின்றதென்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது, ஒட்டு மொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மா-லெ புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சினைக்கான போரட்டத்தில்கூட ஒன்றினைந்து செயல்பட முடியாமல் போனதற்க்கு காரணம் என்ன?

சமூக மாற்றம், புரட்சியும்,மார்க்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்தல்லவே, நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நாடோ வலது அரசியலை நோக்கி திருப்பட்டுள்ளது அதனை ஒட்டி அனைத்து பிழைப்புவாத கட்சிகளும் ஒருங்கிணைந்துகொண்டுள்ளது.

மா-லெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை லெனின்யம் வரையறுத்துள்ளது. லெனின் அவர்கள் சொன்னது போல் சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான், அதைக் குணப்ப்டுத்திக் கொண்டிருக்க வேண்டுமாயின் புரட்சியாளர்கள் நீடித்த ஒற்றுமையும், அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அந்த நோய்க்கு மருந்தாகும்.(தொடரும் பல்வேறு கருத்துகளுடன்-சிபி).

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-3

முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது சொந்தக் குறிக்கோளுக்குப் பயன்படுத்தமுடியாது. அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதே யாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும்.

 1. ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் “பாராளுமன்றவாத வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்” என்று கூறினார்.
 2. ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்றமார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது.
 3. குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தைஎதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீனகம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக் கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு கூறியது.
 4. “சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும்பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவதுஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசுஅதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள்உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின்ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள்தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமானசொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.
 5. குருச்சேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது.
 6. 1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் “ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமைஇயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற கடிதமும்உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று. இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் “மாபெரும் விவாத ஆவணங்கள்” என்று அறியப்படுகின்றன.

சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் “இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.

நமது(ஆம் CPI தான் இந்திய அனைத்து பொதுவுடைமை இயக்கத்தின் தாய் சரி தவறுகளை இங்கிருந்து தொடங்கினால் மட்டுமே வரலாற்றில் அறிதல் இலகுவாக இருக்கும்) தலைமையின் திருத்தல்வாதத்தை சுட்டிக் காட்ட இதை எழுதியுள்ளேன் தோழர்களே- தொடரும் 5/02/20 முகநூலில் பதிவு செய்த நாள்

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-4

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-1

.. தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.

 1. குறுகிய கால இடைவெளிகளான 1927-28 மற்றும் 1934-35 ஆம் ஆண்டுகளை தவிர்த்து சிபிஅய் யின் வரலாறு முழுவதும்(பின்னர் சிபிஎம் இன் வரலாறும் அவ்வாறே இருந்தது) முதன்மையாக சந்தர்ப்பவாதமாகவெ இருந்துள்ளது. சிபிஅய்யின் அந்நாளைய பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி காங்கிரஸ் தலைவர்களைக் “கம்யூனிஸ்ட் தலைவர்கள்” என்றும், “அரசியல் பிதாக்கள்” என்றும் தன்னுடைய கட்சியினரைக் “கம்யூனிஸ்ட் காங்கிரசார்” என்றும் 1949 ஆம் ஆண்டில் உருவகப் படுத்தினார்.
 2. மேஜர் ஜெய்பால் சிங்கின் “நாடு அழைக்கிறது” ஆங்கில அரசுக்கு எதிராக இராணுவத்தில் படை கட்ட முயற்சித்து ஆட்சி மாற்றத்திற்க்கு பின் நேரு அரசால் சிறை படுத்தப்பட்ட தோழர் பின்னர் தெலுங்கான போராட்டத்தில் பங்கெடுத்தவர் அவர் சந்தித்த பிரச்சினைகளை நூலாக்கியுள்ளது NCBH, அதில் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்…. நட்பாக அரசின் சேவகனாக மாறியது எப்படி?
 3. 1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை. அந்த நேருவை CPI,CPM கொண்டாடிய முறைமைகளுக்கு காரணம் தெரிவிக்குமா? (அவர் இறந்த பின்னர் அவரை கொண்டாடியதை குறிப்பிடுகிறேன்). தோழர்களே!!!! எனது சில கேள்விகள் உங்கள் முன்,

1, 1947 ஆட்சி மாற்றம் யாருக்கானது இதை நாட்டின் சுதந்திரம் என்பதா?

2. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளா? தேசிய முதலாளிகளா?

3.இந்திய அரசு காலனிய ( அரை, புதிய காலனிய ஏதாவது) நிலைபாடுடையதா?

4.இந்திய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் எதிர்பாளர்களா? இன்னும் தொடரும் இதன் பதிலில்தான் உண்மையான மார்க்சியா அறிவுள்ளது!!!!.

Posted on 06/02/2020

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-5

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-2

குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையேமண்ணுகேற்ற மார்க்ச்சியம்என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை, நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருப்பதை. விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது திருத்தல்வாதிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?

 1. அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் அதிகார புரோக்கர்களான இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் …. காணச் சகிக்க முடியாத நிலை.
 2. சி.பி.ஐ. தலைவர்கள் எப்போதும் மார்க்சியவாதிகளாகவும் இருந்ததில்லை, கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததில்லை.

இனி பதிவுக்கு செல்வோம்.

பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதை பின் வருமாறு கூறியது:

அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .

ஏப்ரல் 1958-ல் சிறப்புப் பேராயம் ஒன்று

அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும் நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானதுஅமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்என்று அந்தத் திருத்தம் கூறியது.

சி.பி.ஐ-யைகட்சியானது “மார்க்சிய-லெனினியத்தின்அடிப்படைக் கோட்பாடுகளால்” வழிநடத்தப்படுவதாக பேராயம் கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீன திரிபுவாதத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத்

தடுக்கும்தடைக்கற்களாககருதி மார்க்சியலெனினிய கோட்பாடுகளை நிராகரித்தது.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60-ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறை -களைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை. நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.

 1. தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் – 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.
 2. “தெலுங்கானா போர்” நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டமோ அல்லது தொடர்கின்ற போராட்டமோ அல்ல. மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்தது. மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையானது

அனைத்துப் போராட்டநடவடிக்கைகளையும்

நிறுத்துமாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்குமாறும் தெலுங்கானா விவசாயிகளையும், போராளிகளையும் கேட்டுக்கொண்டது”.

காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:

கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.

சி.பி.ஐ. கட்சியானது 1951- மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பிவைத்தது.அக்குழுவின் நோக்கம் “கட்சியானது புரட்சிகர வழியை கைவிட்டு விட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில் உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் – அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.

தோழர்களே இன்னும் வரும் உங்களின் பங்களிப்பை பொருத்து மேலோட்டமாக அல்லது ஆழமாக எழுதத் தேவையா என்பதன் அடிப்படையில்.-சிபி.

Posted on 6/2/2020

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-8

கடந்த பதிவில் தோழர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக இந்தப் பதிவு….

கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” (மூலதனம் நூலில் காரல் மார்க்ஸ்).

மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன(ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.

முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:

முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி(பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள் ‘மூலதனம்’ ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.

வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.

செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:

1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்) என்று வகைப்படுத்துகிறார்.

முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை.

தோழர்களே நான் எடுத்துக் கொண்ட தலைப்பில் எனது கருத்துகளை தொகுத்து இங்களிப்பேன், வேறு வாசிப்பு எழுத்துப் பணிக் காரணமாக எல்லா பதிவுகளையும் இங்கே பதிவு செய்ய முடியவில்லை தினம் ஒரு பதிவு எழுத முயற்சிப்பேன் தோழர்களே…சி.பி

தொடரும்…

Posted on 22/02/2020

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-10

இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.

முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரிீ இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது , மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்குமுறையற்ற ஒரு நல் வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.(பதில் எதிர்பார்க்கிறேன் தோழர்களே).

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மா-லெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்…

இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும். இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஸ்ய சமூக ஏகாதிபத்தியம்.

முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம். (1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது. (2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது. (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள். (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது. (6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.

மற்றொரு புரம் ரஸ்ய சமூக ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது, அதனை எதிர் கொள்ள திரன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை…. புரட்சிகர அமைப்புகள் இதே சமூகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் மார்க்சியம் பயின்றிருந்தாலும் அவர்களின் சிந்தனை போக்கு கணக்கில் கொள்ள வேண்டியதன்றோ?

(இடதுசாரிகள் சிந்திக்க வேண்டியவையில் இவையும் ஒன்று)… தொடரும்- சிபி.

29/02/2020 முகநூலில் பதிவு செய்த நாள்

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-11

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-3

“சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவதுஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின் ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

நமது படிப்பினைக்கு மேற்க்கு வங்கத்தில் நடந்தேறியவற்றை கருத்தில் கொண்டு ஆய்ந்தறிந்தால் இதற்க்கு விடை கிடைக்கும். ஆகவே மேற்க்கு வங்கத்தில் சிபிஎம் தலைமையில் நடந்த உழைக்கும் மக்களுக்கு எதிரான சம்பவங்களை சிலவ்ற்றை காண்போம்.

மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும் தற்கொலை என்றுதான் கூறியது.

இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.

குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள் அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட்(2008) மாத இறுதியில் நடந்தன.

மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல், ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!

இந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.

கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.

வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரச அறிவித்தது.

(செய்தி மூலம் புதிய ஜன நாயகம் சுருக்கி கருத்துகளை முன் வைத்துள்ளேன் தோழர்களே).

உண்மையில் சிபிஎம் தோழர்கள் அரசியல் ரீதியாக மேற்க்கு வங்கத்தில் நடந்தவை என்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள் மேலும் அரசு என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள் தோழர்களே.

தொடரும்…சிபி.

15/03/2020.

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-12

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-4

1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன. இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.

சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும் போலீசு குண்டர் படையினராலும் மிரட்டப்பட்டனர். குனி, ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள் சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.

சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும் ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது, உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.

புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009 இதழில் இருந்து எடுத்துக் கையாண்டேன் தோழர்களே.

தொடரும்சிபி.

15/03/2020

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-16

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-6

இன்று இடதுசாரி இயக்கம் என்பது அன்றைய பல்லாயிரம் தியாகிகளின் வரலாற்று அடிசுவடியில் அவர்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது அவர்களின் கனவை தியாகத்தின் உயரிய லட்சியத்தை நாம் உயர்த்திப் பிடிக்கியோறோமா என்பது கேள்விக் குறியே.

விரிவாக ஒவ்வொன்றாக பார்ப்போம் இன்றொரு நிகழ்வை சுட்டிக் காட்டுகிறேன்.

இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும்200 பொது மக்களும் 70 ஆங்கிலப் படைவீர்ர்களும் 37 அமெரிக்கப் படைவீர்ர்களும் படுகாயம்பட்ட தாகவும் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர் ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இராணுவப்படை வீரர்கள் சுடமறுத்து ஆங்கிலேய படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இன்று மதம் அரசாள்கிறது இந்த பாசிஸ்ட்கள் நினைவில் கொள்ளட்டும் அன்று போரட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை பிரிக்க இந்து முஸ்லீம் மதவாத சிந்தனை எடுபடவில்லை, வீரர்கள் தோலோடு தோல் கொடுத்து போரிட்டனர். மக்கள் தன்னிச்சையாக முன்வந்து வீரர்களுக்கு உதவினர், போராட்டத்தை ஓடுக்க கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்ற பின்தான் வீதிகள் ஆங்கிலேய படை கைவசமாயின- இங்கே ஒவ்வொரு கட்சியின் நிலைபாட்டையும் கணக்கில் கொளல் வேண்டும்.(1919 ல் ஜாலியன்வாலா பாக்கில் ஜெனரல் டைரின் வார்த்தையில் குண்டு தீர்ந்துவிட்டதால் சுடுவதை நிறுத்தினோம்) இங்கே வீதியில் உள்ள எல்லோரும் சுட்டு கொல்லபட்ட பின் சுடுவதை நிறுத்தினர். எந்த மதவாதத்திற்க்கும் மயங்காத கடல்படை வீரர்கள்.

வரலாற்று பக்கங்கள் வீரத்தை காட்டுகின்றன அந்தப் பாதையில் நாம் பயணிக்கிறோமா?… தொடரும் தோழர்களே…சிபி.

16/03/2020.

   மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-17

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-7

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் என்பது தனது பணியை ஏன் முடிக்கவில்லை என்பதன் தேடுதலே….

பல ஆண்டுகள் CPM திரிபுவாதத்திற்கு எதிராக போராடி நக்சல்பாரி என அறியப் பட்ட இ.க.க (மா-லெ) தொடங்கப் பட்டது. மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க சாருமஜீம்தார் முன்கையெடுத்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதிய ஜனநாயகப் புரட்சி,தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப் பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது.

இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகள்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நீண்ட காலம் நிலவி வந்த சந்தர்ப்பவாத அரசியலும், எழுபதுகளில் மா-லெ இயக்கத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களும், அமைப்பு அராஜகங்களும் இதற்கான புறநிலைக் காரணிகளாக உள்ளன. இருப்பினும் கட்சியின் அரசியல் வழியிலும், வர்க்கப் போராட்டத்திலும, தவறுகளை மாற்றுவதற்கான போராட்டத்திலும் உறுதியாக நின்று, அதன் போக்கில் தன்னிடமுள்ள பலவீனங்களையும் மாற்றிக் கொள்வதுதான் ஒரு புரட்சிகர தலைமையின் அடையாளம் ஆகும். இல்லையெனில், எத்தகைய மாபெரும் தலைவர்களும் புரட்சிகர இயக்கத்திற்கு தடையாக மாறி அதளபாதாளத்தில் விழுவது நிச்சயம். இதுதான் இன்றைய பல அமைப்பு விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

புரட்சிகர உணர்வும, நடைமுறையும் எள்ளளவும் இல்லாத, ஒரு பெயருக்கு செயல்படும் இயக்கங்களாக மாற்றி அமைத்துக் கட்சியை நடத்திச் சென்ற அந்தத் தலைமை கலைப்புவாத- சந்தர்ப்பவாத தலைவர்களாகவே அவர்கள் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியை நடத்திச் சென்றார். தமிழக மார்க்சிய லெனினிய இயக்கத்திலான வரலாற்று பின்னனி தொகுத்து பார்த்தோமேயானால் எதிர்மறையானது என்றே மதிப்பிட முடியும்.

நாம் புரட்சியாளர்கள் என்று முடிசூடிய பலரும் அரசின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடே தந்து அணிகளை நடத்தி சென்றனர் என்றால் மிகையாகது….

தொடரும் தோழர்களே…. சிபி.

17/03/2020

மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-18

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-8

இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக கூறிக் கொள்ளும் புரட்சிகர அமைப்புகளின் பிளவுகள் பற்றிய ஒரு சிறிய தேடுதலே இவை.

அமைப்புக்குள் கருத்து முரண்பாட்டை அங்கீகரிக்க மறுப்பதே பிளவுகளுக்கு காரணம்.

அமைப்பில் அரசியல் ரீதியாக தோன்றும் கருத்து முரண்பாடுகளை அரசியல் முரண்பாடாக அணுகாமல் தனி நபர் பலவினங்களாக சித்தரித்து திசைத்திருப்பி அமைப்புக்குள் உட்கட்சி ஜன நாயக முறையை கடை பிடிக்காமலும் உட்கட்சி போராட்டத்தை அமைப்பு ரீதியாக நடத்தாமலும் அமைப்புக்குள் ஜன நாயக மத்தியதுவ கோட்பாட்டை கடைப் பிடிக்காமலும் அதன் காரணமாக கட்சி அய்க்கியத்தை பராமரிக்காமல் பிளவுகள் தொடர்கதையாகி கொண்டிருக்கின்றன.

19/03/20