இந்தியாவின் பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரம்

இந்த பதிவானது நான் சாதியம் பற்றி இந்தியாவைப் பற்றி தேடிய பொழுது பல்வேறு கருத்தாக்கங்களை ஒன்றிணைக்க ஒரு முயற்சியாக இதை எழுதத் தொடங்கினேன் ஆனால் என்னுடைய அந்த தேடுதல் முடிவடையாமல் இன்னும் தொடர்ந்து கொண்டு உள்ளது அதற்கு பல்வேறு விதமான நூல்களையும் பல்வேறு விதமான தொடர்ந்து தேடிக் கொண்டு உள்ளேன் அதில் ஒரு சிறு பதிவு தான் இவை.

இந்த இடத்தில் கூட்டாக விவசாயம் செய்யப்பட்டது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டது இந்தியா அடிமை படுவதற்கு சற்றுமுன்னர் விளைநிலங்கள் கிராம சமூகத்தில் குழு உறுப்பினர்களிடையே எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி பிரித்துக் கொடுக்கப்பட்டன ஆனால் அப்போதும்கூட கிராம சமூகத்தின் உடமையாக நிலம் இருந்தது அந்த சமூகத்தின் முழு உறுப்பினர் அந்த சமூகத்தை சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை பகுதியை மட்டுமே உரிமையாக கொண்டிருந்தான் அந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் தான் அவருக்கு சொந்தமாக இருந்தது காலனியாதிக்க முன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஒரு சிறிய தேடுதல்.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய நாட்டின் பெரும்பகுதி தெற்கில் சில பிரதேசம் தவிர, மாபெரும் முகலாயப் பேரரசில் அடங்கியிருந்தது. பிரதேச ரீதியாக அனேகமாக ஐரோப்பா முழுமைக்கும் சமமாக இருந்த இந்தப் பரந்த பேரரசின் வளர்ச்சியில் சிறப்பு கூறுகள் இருந்தன . அந்த வளர்ச்சியின்வடிவங்கள் எவ்வளவு அதிகமாக வேறுபட்டிருந்தாலும் இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பை மொத்தமாக முடிவு செய்வதற்கும் உதவுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறையாக இருந்தது. பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்திருக்கும் அரசு நிலவுடமை , விவசாய உறவுகள் , அந்த சமயத்தில் இருந்து மொத்த பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் மீதான தீர்மானம் முக்கியமான காரணியாகத் தாக்கம் செலுத்தியது.
எல்லா நிலமும் பெரிய நீர்ப்பாசனக் அமைப்புகளும் அரசின் உடைமையாக இருந்தன . நிதித்துறை அதிகாரிகள் எல்லாம் நிலங்களைப் பற்றிய அடங்கள் என்ற பதிவேடு வைத்திருந்தார்கள். அவற்றுக்காக வசூலிக்கப்பட வேண்டிய வரியை நிர்ணயித்தார்கள். அரசின் பங்கு வழக்கமாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்குக்கு அதிகமாக இருப்பதில்லை .வரி வசூல் செய்வதற்கு நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது . நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு ஜமீன்தார் பொறுப்பாக இருந்தார். வசூலிக்கப்பட்ட வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் தனக்கு வைத்துக்கொண்டனர் இந்த அமைப்பின் மூலம் நிலபிரபுத்துவ சமூக தன் வருமானத்துக்கு தோற்றம் ஏற்படுத்தி கொண்டது.
நிலம் அரசின் உடைமையாக இருந்தபடியே பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தது . அரசு நேரடியாக வாரம் அல்லது வரிகள் வடிவத்தில் விவசாயிகளின் கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பின் முக்கியமான வடிவமாக அது இருந்தது.
05/03/2022
இந்தியாவின் பொருளாதாரம் பற்றி நான் எழுதிய தொடரானது மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று ஏனென்றால் இந்திய நிலை என்பது அன்று ஆசான் மார்க்ச் கூறியது போல் நிலவுடமை சமூகத்திற்கும் முதலாளியை சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு மேலோங்கிய கட்டமே என்பார் அதுபோல் இங்கு உள்ள நில உடைமை என்பது பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் வரவேண்டும்.
நிலம் அரசின் உடைமையாக இருந்தது படிப்படியாக மறைந்து தனிப்பட்ட நிலப்பிரபுத்துவ உடமையாக மாறியது. கிராம சமூகம் தன்னுடைய சுய பூர்த்தியை தந்தை வழி முறையில் இழந்தது . பலமான வெகுஜன இயக்கங்கள் முகலாய பேரரசு சிதறிப் போவதைத் துரிதப்படுத்தின. ஆனால் இந்த நிகழ்வுப் போக்குகள் பூர்த்தி அடையாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் நடத்திய காலனிய போர்களும் அதன் குறுக்கீடுகளும் இந்த வளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்தியது எனலாம்.
கிராம சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் குண ரீதியில் புதிய உறவுகள் தோன்றின . இதன் தொடர்பாக இந்தியாவில் நகரங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அக்கறையை தூண்டுவதாக அமைந்தன.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவில் இருந்த நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10 சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை.
06/03/22
நேற்றைய பதிவின் தொடர்ச்சி
கிராம சமூகத்தின் உச்சியில் இருந்த கிராம தலைவர் போலீஸ் மற்றும் நிதித்துறை பணிகளை நிறைவேற்றினார். அந்த சமூகத்திற்கு என்று தனியாக எழுத்தர், புரோகிதர் ஆசிரியர் காவலாளி ஜோதிடர் மற்றும் இதர்கள் இருந்தனர். இந்தக் கடமைகள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக வந்தன, அவற்றை நிறைவேற்றியவர்கள் அந்த சமூகத்தை ஆட்சி புரிந்த குழுவாக இருந்தனர், அவர்கள் செய்த வேலைக்கு ஊதியம் உணவு தானியங்களாகவோ அல்லது பண்டமாக வழங்கப்பட்டது, சில இடங்களில் அந்த அளவிற்கு வரி இல்லாத நிலங்கள் அல்லது குறைவான வரித்துக் கொண்ட நிலங்கள் தரப்பட்டன.

இந்த சமூகத்தில் இரு பிரிவினர் இருந்தனர் ஒருவர் முழு உரிமையும் கொண்ட உறுப்பினர் மற்றொருவர் குறைந்தபட்ச உரிமைகளை கொண்ட உறுப்பினர்கள் பண்டைய கால இந்தியாவில் உபயோகிக்கப்படாத நிலம் அதிகமாக இருந்தபடியால் கிராம சமூகங்கள் அன்னியர்களை வரவேற்றனர்.
கிராம சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தங்களுடைய நிலத்தை தங்களுடைய வாரிசுகளிடம் கொடுத்தார்கள் தரிசு நிலம் மேச்சல் நிலம் பசும்புல் நிலம் ஆகியவை கூட்டுமையாக இருந்தன அவற்றுக்கு வரி கிடையாது, விவசாயிகளின் பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தவில்லை நிலத்தை உழுது பயிரிட்டு நிலத்திற்கு வாரம் கட்டவேண்டும் என்ற கடமைகளை மட்டுமே அரசு வற்புறுத்தியது. விவசாயம் செய்வதும் அரசுப் பணியாக இருந்தது அதிகாரிகள் பிரதானமான வருமான அளவுகள் என்ற முறையில்தான் கிராம சமூகத்தின் மேல் அக்கறை கொண்டிருந்தனர் எனவே அவற்றைத் தக்க வைப்பதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள். ஏனென்றால் தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த கிராம சமூக வரிகள் வசூல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

இன்னும் அடுத்த பதிவில் தொடரும் நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *