Tha SivaKumar

இந்தியாவின் அரசியல் அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கையில்தான் உள்ளது. லெனின் ஏப்ரல் ஆய்வறிக்கையில் கூறியது போல் அரசியல் அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கையில் இருந்தால் இந்தியப் புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சி கட்டம்தான்; ஜனநாயகப் புரட்சிக் கட்டம் அல்ல. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தில் உள்ள வர்க்கம் முதலாளி வர்க்கம் என்பதுடன் இன்று இந்தியாவில் நடக்கும் உற்பத்தி விவசாய உற்பத்தி உட்பட அனைத்து உற்பத்திகளும் முதலாளி-தொழிலாளி என்ற உற்பத்தி உறவின் அடிப்படையில் தான் நடக்கின்றன. உற்பத்தியின் நோக்கம் முதலாளித்துவ சந்தைக்காகவே நடக்கின்றன. குக்கிராமத்தில் அல்லது ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் உற்பத்தி கூட முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி தான். சுய தேவைக்கான உற்பத்தி அல்ல. எனவே இந்திய சமூகத்தின் பொருளாதார அடித்தளமும் அந்த அடித்தளத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளும் உற்பத்தி நோக்கமும் முதலாளித்துவ உற்பத்தி உறவாகவும் முதலாளித்துவ உற்பத்தி நோக்கமாகவும் இருக்கின்றன. எனவே இந்திய சமூகம் ஒரு முதலாளித்துவ சமூகமே. அது இன்று உலக நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளின் இயற்கை வளங்களையும் உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருப்பதால் அது ஏகாதிபத்தியமாகவும் மாறிவிட்டது.