இடதுசாரிகளின் திண்டாட்டம் ஏன்?
இடதுசாரிகளின் திண்டாட்டம் ஏன்?

இடதுசாரிகளின் திண்டாட்டம் ஏன்?

இன்று இடதுசாரிகளின் திண்டாட்டம் ஏன் என்ற எனது தேடுதலில் சில கீழே:-(1) இந்திய உழைப்பாளிகள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மற்றும் மக்கள் திரளிடையிலான பணியை தவிர்த்ததுதான் எல்லா நோய்களுக்கும் ஆணி வேராகும், இயகத்தினுள் இப்பொழுதுள்ள நோய்களை சரிபடுத்த ஒரே மருந்து நேர்மையான மக்கள் திரள் பணியே, முக்கியமான இப்பணியை பற்றி கொள்ள இயலாத காரணத்தால்தான் தேவையற்ற முரண்பாடுகள்.(2). சில திறமையான பேர் வழிகள் அமைப்பின் சிலரை தன் வயப்படுத்தி கொண்டு, “ஆமாம் சாமி” கூட்டத்தை வைத்து நிதி வசூல், நல்ல பேச்சு திறன்,நேர்மையான்வர்கள் கூட தலைவர்கள் போலவே செயல்பட நினைக்கும் இவர்கள் மக்களின் நிலை அரியாதவர்கள்.(3).இந்தியப் புரட்சியை கை கூடாமல் தடுக்கும் காரணிகளை இவர்கள் அறிய மாட்டார்களோ?(4). “மக்களிடமிருந்து மக்களுக்கே” என்றர் மாவோ, ஒவ்வொரு கம்யுனிஸ்ட்டும் பணிவுடன் மக்களிடமிருந்து கற்க்க வேண்டும், மக்களின் பிரச்சினைகளை ஆய்ந்து அந்த விதிகளை கொண்டு செல்ல வேண்டும், இவை அன்று மாவோ இங்குள்ள மேதாவிகளுக்காவே எழுதினாரோ என்னவோ தெரிய்யவில்லை, மேலும் மக்களிடம் தன் மேதாவிதனத்தை கண்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார், ஆனால் இங்கே நடப்பது என்ன?(5).”மக்கள்தான் உண்மையான இரும்புக்கோட்டை, இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது”- என்றார் மாவோ, மேலும் கம்யூனிஸ்டாகிய நாம் மக்களுக்கு தொண்டு செய்ய சொல்கிறார் மாவோ, நாமோ தலைவர்களாக பாவித்து கொண்டு, மக்கள் மீது மார்க்சியத்தை வலுக்கட்டாயமாக திணிக்க தங்களது அதிமேதாவிதனத்தை காட்டும் போக்கு எதற்கோ இவை பற்றி அன்றே மாவோ சொன்னவை தெரியாதோ அல்லது தெரிந்தும் திணிக்கும் செயல் அவை என்னவாகும்?(6). ஒரு கம்யூனிஸ்ட் மக்கள் மீது எந்த ஒரு கண்ணோட்டத்தையும் திணிக்கக் கூடாது?(7) திமிரான போக்கு, அதிமேதாவி போக்கு, தனது தவறுகளை மூடி மறைத்து உத்தரவிடும் போக்கு அடிமை மனப் போக்கு, சுய விமர்சனம் அற்ற அதிகார வர்க்க போக்கு…இவைகளை நான் தேடியதில் கிடைத்தவை தேவைப்படின் தொடர்வேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *