ஆரிய மற்றும் பாரதி பற்றி- தோழர் ரவீந்திரன்

ஆரிய இனவியல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு பிரிட்டீஷ் காலனியவாதிகளுக்கு சேவை செய்தவர்கள் RSS. பின்பு இத்தாலி முசோலினி மற்றும் ஜெர்மன் ஹிட்லர் பாசிஸ்ட்டுகளை பின்பற்றி இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைத்தனர். தற்போது அமெரிக்க புதிய காலனியத்திற்கு சேவை செய்திட இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைக்கின்றனர். இதுதான் இவர்களது அரசியல். இந்த அரசியலை ஏற்றுக்கொள்பவர் எந்த சாதி மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் RSS உறுப்பினர் ஆகலாம். இந்த அரசியலை மறைத்துவிட்டு வெறுமனே தலித்தா பார்ப்பானா? என்று சாதியைப் பற்றி பேசுவது இந்த பாசிஸ்ட்டுகளை எதிர்த்துப் போராட பயன்படாது. அந்த கொடியவர்களை பாதுகாத்து திசைதிருப்பவே பயன்படும்.

பாரதியிடம் சமூக மதப்பிரச்சனையில் குறைகள் இருக்கலாம் ஆனால் அரசியலில் காலனியாதிக்க எதிர்ப்பாளர். ஆனால் பெரியாரும் அவரைப் பின்பற்றுபவர்களும் சமூக தளத்தில் பிரிட்டீசார் சாதி பார்பதில்லை என்று சொல்லி இந்திய மக்களின் மீது பிரிட்டீசாரின் கொடூர ஒடுக்குமுறையைப் பற்றி பேச மறுத்து அன்னியர்களுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கிறார்கள். இவர்களுக்கு அன்னியர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களைப் பற்றி சிறிதும் அக்கரை இல்லை