ஆரிய திராவிட தேடுதல்- sp. Muthu.
ஆரிய திராவிட தேடுதல்- sp. Muthu.

ஆரிய திராவிட தேடுதல்- sp. Muthu.

அனைத்து தோழர்களுக்கும்,
நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார்? இவர்களுக்கு இடையில் உண்மையில் பகை வெகு காலம் நீடித்து வந்ததா? இன்றைய பார்ப்பணர்கள் ஆரியர்களா? அல்லது திராவிட -ஆரிய கலப்பா? இது அனைத்திற்கும் பதிலை நாம் தேட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.ஏனென்றால் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் அனைத்துப்பிரச்சனைகளும் இந்த ஆரியர்களின் சதித்திட்டம் ,திராவிட மக்கள் மீதான வஞ்சத்தால் இதை செய்கிறார்கள் என்றெல்லாம் பலவாறான கருத்துக்கள் இங்கு நிலவுகின்றன.இக்கருத்து உருவாக்கப்பட்ட காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து போராடிய மக்களை பிளவுபடுத்தியது இன்றோ இக்கருத்து இந்தியபெருமுதலாளிகளின் சுரண்டலையும், ஏகாதிபத்திய சுரண்டலையும் மறைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.சரி விசயத்துக்கு வருவோம் மற்ற நாட்டு வரலாறு இரும்புகாலம் என்று தொடங்கும் காலத்தை இந்தியதுணைக்கண்டத்தில் மட்டும் வேத காலம் தொடங்குகிறது என்று வரலாற்றாய்வாளர்கள் கூறக்காரணம் வேதகாலத்திற்கு பின்தான் இந்திய துணைக் கண்டத்தில் இரும்பு பயன்பாட்டுக்கு வருகிறது அதை கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஆய்வாளர்கள் அனைவரும் ஐரோப்பியர்கள் இவர்களின் இந்த ஆய்வுகளை நடத்தும் சமயத்தில் தமது முன்னோர்கள் தான் ஆரியர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். தமது முன்னோர்களான ஆரியர்கள் தான் இந்தியாவில் வர்க்கத்தை தோற்றுவித்து முற்போக்கு பாத்திரத்தை ஆற்றினார்கள் அவர்கள் வரவில்லை என்றால் இந்தியா தொல்குடி சமூகமாக இருந்திருக்கும் என்று கூறினார்கள் ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள். எதை ஐரோப்பியர்கள் முற்போக்காக கருதினார்களோ அதைத்தான் பெரியாரியாரும்-அம்பேத்கரும் பிற்போக்காக கருதினார்கள் அது என்னவென்றால் இந்த ஆரியர்கள் தான் ஒற்றுமையான இந்திய சமூகத்தில் வர்ணத்தை விதைத்தார்கள் என்று கூறி ஆரியர்களை பிற்போக்களர்கள் என்று வர்ணித்தார்கள். (ஆனால் உலகில் ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் கூட்டத்தைக்கொண்ட நாகரீகம் எங்கும் தோன்றவில்லை என்பதே வரலாறு) உண்மை இவ்விரு பிரிவினர் சொல்வதற்கு மாறாக இருந்தது அது என்னவென்றால் ஆரியர்கள் வரலாற்று பூர்வமாகவே ஒரு மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்த ஒரு நாடோடிக்கூட்டம் அப்படி இருக்க ஓரிடத்தில் நிலையாக வாழும் மக்கள் கூட்டமே நிலையான உற்பத்தியில் ஈடுபட்டு உபரி உற்பத்தியை ஏற்படுத்த முடியும் அப்படி தோன்றும் உபரியே வேலைப்பிரிவினையை ஏற்படுத்தும் அப்படி இருக்க மேய்ச்சல் குடியான ஆரியர்களுக்கு வர்க்கங்களைப்பற்றிய(வர்ணங்கள்)அறிவு வளர்ச்சியே இருந்திருக்க வாய்ப்பு இல்லை.அப்படி வர்க்கங்களாக பிரியாத சமூகத்தில் அடிமை உடமை தோன்றி இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை உபரி தோன்றாத மக்கள் கூட்டதில் கைவினைத்தொழிலே ஏற்பட்டிருக்க வாய்ப்பு கிடையாது பிறகு இரும்பு பயன்பாட்டை எப்படி அறிந்திருப்பார்கள். பிறகு எப்படி இந்தியாவில் வர்ணங்கள் வந்தன? வர்ணங்கள் வெளியில் இருந்து இந்தியாவிற்கு வரவில்லை அது இங்கு தான் தோன்றியது அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் பல உள்ளது சிந்து வெளி நாகரிகத்தையே எடுத்துக்கொள்வோம் இங்கு ஆரிய கலப்பில்லாத ஒரு இனக்கூட்டம் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது இது ஒரு நகரநாகரீகமாக இருந்துள்ளது.வர்க்கங்கள் தோன்றாத ஒற்றுமையான மக்கள் கூட்டத்திலும் அடிமைகளின் உழைப்பை உறிஞ்சாமல் ஒரு நகர நாகரீகம் தோன்றியதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சமகாலத்திய நாகரீகங்களான எகிப்து மற்றும் மெசபட்டோமிய நாகரீகங்களின் ஆய்வுகள் நமக்கு நிறுபிக்கின்றன அவ்விரு நாகரீகங்களும் அடிமைகளின் உழைப்பை சுரண்டி உருவானவை .ஆதலால் இந்திய மக்கள் ஆரியர்கள் வருவதற்கு முன்னேயே வர்க்கங்களாக (வர்ணங்களாக) பிளவுபட்டு விட்டன. ஆரியர்கள் வருகையின் போது இங்கு பல குலங்கள் வலுக்கட்டாயமாகவோ (அ) திருமண உறவுகளின் மூலமாகவோ(அ)போர் மூலமோ இணைக்கப்பட்டு அடிமை உடைமை அரசுகளாக தோற்றம் பெற்று வர்ணங்கள் இருக்கமடைந்திருக்கவேண்டும் . இந்தியர்கள் ஏற்படுத்திய வர்ணங்களில் ஆரியர்கள் இணைந்திருக்க வேண்டும் அல்லது இங்குள்ள மக்களுடன் இணைந்து வாழ்ந்திருக்க வேண்டும்.அடுத்து வர்ணாசிரம முறை: குலச்சமூகத்தில் பூசாரி (பிராமணன்)சிறப்பு வாய்ந்தவனாக கருதப்படுகிறான் அவனே தன் மக்களுக்காக கடவுளிடம் சடங்கு, பூசை செய்பவனாக இருப்பதால் குலங்கள் அவனை முதல் இடத்தில் வைக்கின்றன குலமக்களை பாதுகாப்பதாலும்,வேட்டை மற்றும் உற்பத்தியான விளைச்சளை பிரித்துக்கொடுப்பதால் குலத்தலைவன்(சத்திரியன்)இரண்டாம் இடத்திலும் வைக்கப்டுகிறான்,விவசாயம்,மற்ற கைவினை தொழிலில் ஈடுபடுபவன்(வைசியன் )மூன்றாம் இடத்திலும், போரில் வெற்றி கொள்ளப்பட்ட குலங்களை சேர்ந்த மக்கள்(சூத்திரர்கள்) அடிமைகளாகவும் அழைத்து வரப்படுகிறார்கள் இந்த முறையே பிராமணன் சத்திரியன்,வைசியன்,சூத்திரன் என்ற அமைப்பு தோன்றக்காரணம் ஆனால் இது குலங்கள் இணைந்து அடிமை உடைமை அரசுகளாக மாறும் போது பிராமணணை பின்னுக்கு தள்ளிவிட்டு சத்திரியர்கள் முதல் நிலைக்கு வந்து விட்டார்கள் ஆனால் பிராமணனுக்கு கட்டுப்பட்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள் காரணம் பிராமணர்களின் ஆதரவு இவர்களுக்கு தேவை மக்களை ஏமாற்றுவதற்கு ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபாடனது சாதிய அமைப்பு இது மத்திய கால நிலஉடமை சமூகம் சார்ந்தது பெரியார்-அம்பேத்கார் கூறுவது போல் வர்ணசிராமத்தில் இருந்த வர்ணங்களைப்போல் கிடையாது.இதில் வர்ணங்கள் மாபெரும் உடைவை தோற்றுவித்துள்ளது.சரி இதைப்பற்றி நாளை பார்ப்போம் (இறுதியாக சில வார்த்தைகள்) 1.ஐரோப்பியர்கள் உருவாக்கிய ஆரிய மாயையை நாம் பின்பற்றும் அதே வேளையில் ஆரியர்கள் தங்களது முன்னோர்கள் ஆரியர்கள் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து தெளிந்து விட்டார்கள்.
மேலும் ஒரு இடத்தில் சமகால நாகரீகங்கள் என்று எகிப்தையும்,மெசபட்டோமியாவையும் கூறியிருப்பேன் அதன் தோற்றம் கால அளவில் வேறு பாடு இருக்கு அவ்வளவுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *