ஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்
ஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்

ஆயுர் வேதம் பற்றி ஒரு தேடுதல்

யுர்வேதம் கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப்பழமையான மருத்துவ முறை. நோய்களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் நம்பப்படுகிறது. 
இச்சூழலில், ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக பரவலாக செய்திகள் வருகின்றன. மேலும், ஆயுர்வேத மருந்துகளில் நேரடியாக கனிமங்கள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. 

ஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.

ஆயுர்வேத மருந்துகளில் ரசாயனங்கள் இருப்பது உண்மையா..? 
சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனையின் ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். 

“ஆயுர் என்றால் வயது, வாழ்க்கை; வேதம் என்றால் அறிவியல். மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? வாழக்கூடாது என்று சொல்வதே ஆயுர்வேதம். ஆகவே இதை மருந்து என்று சொல்வதைவிட ‘வாழ்வியல் தத்துவம்’ என்று சொல்வதே சரியானதாக இருக்கும். நோய் வரும்பட்சத்தில் அதிலிருந்து தப்பிக்கவும் நோயைத் தடுக்கவும் குணமாக்கிக் கொள்ளவும் ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன.

ஆண், பெண், குழந்தை என ஒவ்வொருவருக்கும் மருந்துகள் வித்தியாசப்படும். வாழும் சூழலைப் பொறுத்தும், மனோபாவம், தொழில், உடல்வாகு, ஜீரண சக்தி, உடலின் தன்மையைப் பொறுத்தும் மருந்துகள் வித்தியாசப்படும். இவை அனைத்தையும் கண்காணித்தே மருந்து கொடுக்கப்படும். நோயைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல… நோய் குணமானதும் அது மீண்டும் வராமல் தடுக்கவும் மருந்து தரப்படும். அது உள் மருந்து, புறமருந்து என அமையும்.

மருந்துகளைச் சாப்பிடும்போது சில வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் ஆயுர்வேதக் கோட்பாடுகளை பின்பற்றினால் நிச்சயம் முழுமையான பலன் கிடைக்கும். மற்றபடி ஆயுர்வேத மருந்து என்றில்லை, எந்தவொரு மருந்தையும் தவறான நபருக்கு தவறான மருந்து கொடுத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் திரிபலா சூரணம், நெல்லிக்காய் லேகியம், அஸ்வகந்தா லேகியம் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. ஆனால், ஒருசில மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் முறையாக உட்கொள்ள வேண்டும். அந்த மருத்துவர் தகுதிவாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவம் பழமையானது. ஆனாலும், எந்தவொரு மருந்தும் அதைத்  தயாரிக்கும் நிறுவனமே பொறுப்பு. ஆகவே அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் தகுதிவாய்ந்த நிறுவனமா என்பதைப் பார்க்க வேண்டும். தாதுக்கள், மெர்க்குரி, ரத்தினங்கள் சேர்க்கப்பட்ட மருந்துகள் உள்ளன. அவை ஆயுர்வேத சாஸ்திரப்படி பல நூற்றாண்டுகளாக முறைப்படி தயாரிக்கப்பட்டு வருகின்றன. பஸ்ப, செந்தூரங்கள் என எதுவாக இருந்தாலும் அவை எந்தக்கேட்டையும் ஏற்படுத்தாது.

சித்தா, ஆயுர்வேத மருத்துவம் என்பது நமது நாட்டு மருத்துவம் என்பதை உணராமல் பலர் பேசிவருகிறார்கள். தவறான எந்த ஒரு மருந்தையும், தத்துவங்களையும் நாம் போதிக்கவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஆயுர்வேத மருத்துவத்தின் குறிக்கோளாகும். அதனால் எந்த ஒரு நோயாக இருந்தாலும் நமது பாரம்பர்ய மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் அலோபதி மருந்துகளைச் சாப்பிடும்போது ஆயுர்வேத மருந்துகளையும் சேர்த்தே சாப்பிடலாம். அதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. அதேநேரத்தில் Unlisence Product மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது” என்றார்.

மேலும் தெரிந்துக் கொள்ள

ஆயுர்வேதம் என்றால் என்ன?

ஆயுர்வேதம் இந்தியாவின் ஓர் பழமையான  இயற்கை மற்றும் முழுமையான மருத்துவ முறை. சமஸ்க்ருதத்திலிருந்து பெயர்க்கப் பட்ட  பட்ட இச்சொல் “வாழ்க்கை அறிவியல்” என்னும் பொருள் கொண்டதாகும்.( ஆயுர் என்றால் நீண்ட வாழ்நாள்; வேதம் என்றால் அறிவியல்)

ஆங்கில மருத்துவ முறை ஒரு நோயின் மேலாண்மையின் மீது கவனம் வைக்கிறது. ஆயுர்வேதம் எவ்வாறு நோயை தடுப்பது; நோயுற்றால் அந்த நோயின் ஆணிவேர் காரணத்தைக் களைவது ஆகிய விஷயங்களை நமக்கு அளிக்கிறது.

முக்கியக் கொள்கைகள்:

ஆயுர்வேத ஞானம் வாய்மொழி மூலமாக  பல முனிவர்கள் மூலம் இந்தியாவில் வழிவழியாக வந்து கொண்டிருந்தது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை தொகுக்கப் பட்டு எழுதப்பட்டன. ஆயுர்வேதத்தின் தொன்மையான நூல்கள் சரக சம்ஹிதா , சுஷ்ருத சம்ஹிதா, அஷ்டாங்க ஹ்ருதயா ஆகியவை.  பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அடைய ஒவ்வொரு  தனி மனித அமைப்பில் அமைந்துள்ள  ஐந்து கூறுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை   சமநிலைப் படுத்தப் பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆயுர் வேதத்தின் படி, ஒவ்வொரு மனிதனும் சில கூறுகளின் தாக்கத்தைப் பெற்றிருப் பான். ஒருவரது பிரகிருதி  அல்லது இயல்பான அமைப்பே இதற்கு காரணம். ஆயுர்வேதம் பல்வேறு விதமான அமைப்புக்களை மூன்று விதமான தோஷங்களாக வகைப் படுத்துகிறது.

  • வாத தோஷம். இதில் காற்று மற்றும் ஆகாயத்தின் தாக்கம் அதிகமிருக்கும்.  
  • பித்த தோஷம்: நெருப்பின் தாக்கம் மேம்பட்டிருக்கும்.
  • கப தோஷம்: நிலம் மற்றும் நீரின் தாக்கம் அதிகமிருக்கும்.

      இந்த தோஷங்கள் வெறும் உடல் அமைப்பை மட்டும் தாக்காமல், உடல் கூறு களையும் ( உணவு விருப்பங்கள், ஜீரணம் போன்றவை  ) அவரது மனம், மற்றும் உணர்ச்சிகளையும் பாதிக்கின்றன. உதாரணமாக கப தோஷமுள்ள ஒருவரிடம் நிலத்தின் தன்மை அவரது வலிமையான உடல்கட்டு, மெதுவான ஜீரண சக்தி, சிறந்த நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளின் நிலைத்த தன்மை ஆகியவற்றில் வெளிப்படும். பெரும்பாலானோரின் பிரகிருதி  இரண்டு தோஷங்களின் கலவையாகவே அமைந்திருக்கும். உதாரணமாக , பித்த கப தோஷமுள்ளவர்கள் பித்த தோஷம் மற்றும் கப தோஷம் ஆகிய இரண்டையும் பெற்று, பித்தத்தின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பர். நமது இயல்பான அமைப்பின் குணங்களை புரிந்து கொள்வதன் மூலம்  நம்மைச் சமநிலையில் வைத்துக் கொள்ள தேவையானவற்றை நாம் செய்து கொள்ள முடியும்.(மூலம் https://www.artofliving.org/in-ta/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)

பாலசுப்ரமணியன் விஸ்வநாதன், மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்17 ஜூலை, 2019 அன்று பதில் அளிக்கப்பட்டது

சரியான அளவில் எடுத்துக் கொள்ளப்படாத எந்த மருந்தும் பக்க விளைவுகள் உடையதுதான்.ஒவ்வொரு மருந்தும் நோயாளியின் வயது, உடல் அமைப்பு,எடை,நோயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து கொடுக்கப்பட வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.ஆயுர்வேத மருந்துகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மருத்துவ முறை.அப்போதிருந்த நோய்களுக்குத் தகுந்தாற்போல கண்டுபிடிககப்பட்டவை. நோய்க்கிருமிகளால் பல நோய்கள் உண்டாகின்றன என்பதைக் கண்டுபிடித்தே சில நூறு ஆண்டுகள்தான் ஆகின்றன.அவை எல்லாவற்றிற்கும் நவீன மருத்துவம்தான் சரியானது.அதேபோல சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம்,இதய நோய்கள்,புற்று நோய்கள்,எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்கள் ஆகியவற்றிற்கு ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறதா என்று தேடக்கூடாது.எல்லாவற்றையும் விட முக்கியமானது,முதலில் ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ நோய் என்ன என்று சரியாகத் தெரிந்துகொண்டு மருந்து உட்கொள்ள வேண்டும்.தவறான கணிப்பில் மருந்தளிக்கும்போது பக்க விளைவுகள் மட்டுமல்ல உயிருக்கு ஆபத்தும் எந்த மருத்துவ முறையிலும் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *