ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்தியாவை சுரண்டி இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளையடிக்கின்ற தன்மை நேரடியான கொள்ளையில் பல வடிவங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் சில புதிய கூறுகளையும் அடைந்தது .வர்த்தக கொள்ளை நாட்டின் ஏழ்மைக்கும் அழிவுக்கும் வழிவகுத்தது. சரக்குகளின் ஏற்றுமதி இந்தியாவின் பொருளாதார அமைப்பின் அடிப்படைகளை அழித்து ஒழித்தது, மூலதனத்தின் ஏற்றுமதி அதன் கடுஞ்சுரண்டல் தன்மை ஒரு புறம் இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு செல்வங்களை ஏதாவது ஒரு வகையில் சுரண்டுவதையே குறிப்பிட்டாக வேண்டும்.
பிரிட்டிஷ் மூலதன ஏற்றுமதி ஏகாதிபத்திய தலைமை நாட்டின் தேவைகளுக்கு ஏற்றபடி தன்னுடைய பொருளாதாரத்தை தகவமைத்து கொள்கிற பாதையை இந்தியாவில் உந்தித் தள்ளியது .அப்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் அதன் காலனி கட்டமைப்பையும் பிரத்தியேகமான கூறுகளையும் பிரிட்டன் உடைய விவசாய மற்றும் மூலப்பொருட்கள் ஒட்டி நிர்ணயித்த ஒரு பக்க மோசமாக வடிவமைக்கப்பட்ட பாணியில் அடைந்தது. இந்தியாவின் இயற்கை செல்வங்களை வளர்த்து அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் மூலதன ஏற்றுமதியின் துறையை முன் நிர்ணயம் செய்தது.
தங்களுடைய பேட்டரிகளுக்கு மூலப்பொருட்களை கொடுப்பதற்கு அவை காலனி அதிகாரிகளுக்கு அவசியமாக இருந்தன. 1840 களில் காலனியாதிக்க அதிகாரிகள் இந்தியாவில் ரயில் பாதைகளை அமைப்பதற்காக தனியார் பிரிட்டிஷ் கம்பெனிகள் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்கள்.
இந்தியாவில் ரயில் பாதைகள் காலனி ஆதிக்க முறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டன அதாவது நாட்டில் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன ஆனால் மக்களுடைய செலவில் அவை அமைக்கப்பட்டன. ரயில் பாதைகளை அமைத்த தனியார் பிரிட்டிஷ் கம்பெனிகள் தன்னுடைய மூலதனத்தில் அல்லாமல் மக்களின் வரி பணத்தில் நிர்மாணித்தது.
காலணி ஆதிக்கவாதிகளின் விருப்பம் என்னவாக இருந்தாலும் ரயில்வே இயக்கத்தில் நேரடியான மற்றும் நடப்பு தேவைகளை நிறைவு செய்ய அவசியமானதாக தொழில்துறை நடைமுறைகளை கொண்டு வர வேண்டியிருந்தது என்று முடித்திருந்தேன் அதன் தொடர்ச்சி இன்று காண்போம்.
19 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகளின் இந்தியச் சுரண்டலில் புதிய கூறுகள் தோன்றி. புதிய நிலைமைகளில் காலனிய சுரண்டுவதற்க்கு அடிப்படையாக பிரிட்டிஷ் மூலதனம் முதலீடுகள் படிப்படியாக மாறியது. எனினும் பழைய கால கட்டத்தில் நடைபெற்ற கொள்ளைகள் பழைய வடிவங்கள் அப்படியே நீடிக்கச் செய்தன.
நாட்டின் நிர்வாகம் மாற்றி அமைக்க பட்டிருந்தது, தந்தி, ரயில்வே துறை, துறைமுகங்கள் இவை அமைப்பபதன் மூலம், நாட்டில் பணவியல் முறை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் நிலைகளை பலப்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் நிதி மூலதனம் நாட்டை சுரண்டுவதற்கு இவை அனைத்தும் அவசியமான முன்நிபந்தனைகள் ஆக இருந்தன .
இந்தியாவில் நடைபெற்ற தேசிய எழுச்சி காலனிய ஆதிக்கவாதிகளின் கொள்கையின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அவர்களை நிர்ப்பந்தித்தது.
1858 ல் இந்தியாவை ஆட்சி செய்கின்ற அதிகாரம் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திடம் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டது.
இந்தியாவில் ரயில் பாதைகள் காலனி ஆதிக்க முறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டன அதாவது நாட்டில் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன ஆனால் மக்களுடைய செலவில் அவை அமைக்கப்பட்டன என்பதோடு முடித்தேன், மேலும் இன்று,
ரயில் பாதை நிர்மாணம் செலவுகள் இந்தியாவின் மீது பெரும் சுமையாக விழுந்தன, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கட்டிய வரியில் இது கணிசமான பங்காக இருந்தது, ரயில்வேக் கடனுக்காக இந்தியா வருடம் தோறும் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளை பிரிட்டனுக்கு அனுப்பியது,
காலணி ஆதிக்கவாதிகளின் விருப்பம் என்னவாக இருந்தாலும் ரயில்வே இயக்கத்தில் நேரடியான மற்றும் நடப்பு தேவைகளை நிறைவு செய்ய அவசியமானதாக தொழில்துறை நடைமுறைகளை கொண்டு வர வேண்டியிருந்தது .