ஆங்கிலேய இந்தியாவும் போராட்ட களமும்

1908ல் திலகர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இதனைக் கண்டித்து வடக்கே பம்பாயிலும், தெற்கே தூத்துக்குடியிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இதனை, “இந்திய பாட்டாளி வர்க்கம் தனது உணர்வு பூர்வமான அரசியல் வெகுஜன போராட்டத்தை தொடங்கி விட்டது. இனி ஆங்கில ஏகாதிபத்தியம் ஆளுமை செலுத்த முடியாது இடிந்து நொறுங்கும்” என்று முழங்கினார் லெனின்.

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது, அமிர்தபஜார் என்ற பத்திரிகை மூலம் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு கண்டனமும், உயிரிழந்த இந்திய மக்களுக்கு அனுதாபமும் சோவியத் அரசின் சார்பில் லெனின் தெரிவித்திருந்தார்

“ஒன்றுக்கொன்று நேர், எதிர் எதிர் முரண்பட்ட இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் அதிகாரத்தை கைப்பற்றுவ தற்காக நடக்கும் போராட்டம் வர்க்கப் போராட்டம்.

சமுதாயத்தின் சகல பகுதி மக்களையும் சுரண்டலில் இருந்து விடுக்காமல் பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது. கூர்மையான வர்க்கப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களை வர்க்கமாக அணிதிரட்ட வேண்டும்.

சமுதாயத்தை இயக்கும் ஆகப் பெரும் சக்தியான உழைக்கும் வர்க்க நலனுக்காக உருவானதே கம்யூனிஸ்ட் கட்சி.

எனவேதான் “புரட்சிகரமான லட்சியமும், புரட்சிகரமான கொள்கையும் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது”
என்றார் லெனின்.

* ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் தொடர்ச்சியாகப் பங்கேற்க வேண்டும். முழுமையான ஜனநாயகம் என்பதே சமத்துவம் ஆகும்.”

– என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.

அப்படியெனில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சில தேடுதல்!

1857ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆங்கில ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் இதை ‘சிப்பாய் கலகம்’ என்று திசை திருப்பினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்பு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும் இந்திய மக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டது.

இந்திய விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க தொடங்கினர். நிலப்பிரபுத்துவ மற்றும் காவல்துறை யின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் அணிவகுத்தனர்.

உ.பி.கோரக்பூர் மாவட்டத்தில் சவுரி சவுரா போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் விவசாயிகளால் கொல்லப் பட்டனர். காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

‘போராட்டப் பாதையில் வன்முறை புகுந்துவிட்டதாகக் கூறி’ காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார். காந்திஜியின் இந்த நடவடிக்கை விடுதலைப் போராட்ட வீரர்களிடமும், பொதுமக்களிடையேயும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும் 200 பொது மக்களும் 70 ஆங்கிலப் படைவீர்ர்களும் 37 அமெரிக்கப் படைவீர்ர்களும் படுகாயம்பட்ட தாகவும் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர் ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இராணுவப்படை வீரர்கள் சுடமறுத்து ஆங்கிலேய படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இன்று மதம் அரசாள்கிறது இந்த பாசிஸ்ட்கள் நினைவில் கொள்ளட்டும் அன்று போரட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை பிரிக்க இந்து முஸ்லீம் மதவாத சிந்தனை எடுபடவில்லை, வீரர்கள் தோலோடு தோல் கொடுத்து போரிட்டனர். மக்கள் தன்னிச்சையாக முன்வந்து வீரர்களுக்கு உதவினர், போராட்டத்தை ஓடுக்க கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்ற பின்தான் வீதிகள் ஆங்கிலேய படை கைவசமாயின- இங்கே ஒவ்வொரு கட்சியின் நிலைபாட்டையும் கணக்கில் கொளல் வேண்டும்.(1919 ல் ஜாலியன்வாலா பாக்கில் ஜெனரல் டைரின் வார்த்தையில் குண்டு தீர்ந்துவிட்டதால் சுடுவதை நிறுத்தினோம்) இங்கே வீதியில் உள்ள எல்லோரும் சுட்டு கொல்லபட்ட பின் சுடுவதை நிறுத்தினர். எந்த மதவாதத்திற்க்கும் மயங்காத கடல்படை வீரர்கள் சரண் அடைவதைவிட வீர மரணத்தை வரவேற்றனர்.