அரசை பற்றி
அரசை பற்றி

அரசை பற்றி

மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இருசாரார் இருக்கும் போது அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. அரசாங்கங்கள் மாறிமாறி வரலாம். பாரளுமன்றங்கள், அரசர்கள், ஆயுதப்படைகள், பாசிச சர்வாதிகாரிகள் ஆகியன மாறி மாறி வரலாம். ஆனல் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினது அரசாக அரசு இயங்கி வரும், மனித சமுதாய சரித்திரத்தில் அடிமையரசு, நில உடைமை அரசு, முதலாளித்துவ அரசு, ருசியா அக்டோபர் புரட்சிக்குப்பின் தொழிலாளர் அரசு என பல அரசுகளை உலகம் கண்டுள்ளது. ஆளுவதற்கென்று ஒரு குழு இருக்குமாயின் அக்குழு மக்களை பலாத்காரமாக அடக்கி ஆளுவதற்கென்றே விசேஷமான நிர்வனத்தை அமைத்துக்கொள்கிறது. குறிப்பாக சிறைக்கூடம், ஆயுதப் படை, விசேஷ படைகள் ஆகியன இந்நிலையை அடிப்படையாகக்கொண்டு உருவாகுவதே அரசு. (லெனின், அரசு 1919) அடக்கி ஆளப்பாவிக்கப்படும் மேற்கூறிய சாதனங்களைத் தவிர மற்றும் சட்டத்துறை, தனியாருக்கு சொந்தமான உற்பத்தி, அலுவளர்கள், ஊடகங்கள் ஆகியன சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்துவதற்காக பாயன்படும் சாதனங்களாகும். இவை அத்தனையையும் கொண்டு அமைவதே அரசு. இந்த முழு வர்க்க முரண்களை அகற்றிய பின்பே அரசின் பலாத்கார தன்மை அகற்றப்படுகிறது. உற்பத்தி முறையாலும் மற்ற நிர்வாகத்தினலும் சிலரால் ஆக்கப்பட்ட இந்த அரசாங்கம் அகற்றப்படுகின்றது. (எங்கல்ஸ், ‘குடும்பம் தனி சொத்து அரசு ஆய்யவற்றின் தோற்றம் நூலில்').
ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தின் சாதனமான அரசை பொறு பேற்றுத் தனது வர்க்கத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க இயலாதென்பதை கடந்த கால வரலாற்றில் பல நிகழ்வுகள் சாட்சியம் அளிக்கின்றது. 
அரசாங்கங்களின் மாற்றத்தால் அடிப்படை சமுதாய மாற்றம் நிகழாது.எனவே அரசின் அடிப்படை அமைப்பு முழுமையாக மாற்றப்படல் வேண்டும். இவ்வுண்மையை ருசியா,சீன, போன்ற சோசலிச புரட்சி நடந்தேறிய நாடுகளில் நடந்த வெற்றிகரமான புரட்சியும் நமக்கு அறிந்தவைதானே.
இந்தோனிஷியா, சிலி ஆகிய நாடுகளில் நடந்த அவலமான நிகழ்ச்சிகளும் நமக்கு என்ன வலியுறுத்துகின்றன?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *