அரசு யந்திரம் பற்றி
அரசு யந்திரம் பற்றி

அரசு யந்திரம் பற்றி

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மா சேதுங் ஆகிய சர்வதேசிய கம்யூனிஸ் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களின் போதனைகளை நாம் சுருக்கிக் கூறினல், பின்வருமாறு தொகுக்கலாம்:-

நாம் எல்லாரும் வர்க்க சமுதாயத்தில் வாழ்கிறோம். சமுதாயத்தில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கு கின்றது; சுரண்டுகின்றது. இன்னோரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி, நசுக்கும் ஒரு வர்க்கம் அதன் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உதவியாக ஒரு யந்திரத்தைப் பெரும் செலவில் கட்டியமைத்திருக்கிறது. இந்த யந்திரம் அரசு யந்திரம் என அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான பகுதி ஆயுதப் படைகள். அரசு யந்திரத்தின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் கொந்தளித்து எழும்போது அவற்றைத் தடுத்து நசுக்குவது.

சுரண்டும் வர்க்கங்களின் காவல் நாய்களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாவிட்டால், சுரண்டல் ஒரு கனம் கூடத் தொடர்ந்து நடக்க முடியாது. ஆகவே,அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள விரும்பினால், தம்மை நசுக்குகின்ற அடக்குமுறை அரசு யந்திரத்தை பலாத்காரத்தால் சுக்கு நூருக்கவேண்டும்; அதாவது, அவர்கள் புரட்சியை நடத்தி, அடக்குமுறை முதலாளித்துவ அரசு யந்திரத்துக்குப் பதிலாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசு யந்திரத்தை அமைக்க வேண்டும். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வருணித்தார்.

கடைசியாக, இதைப் புரட்சியால் அன்றி, பாராளுமன்ற வழிகளில் சமாதான மாற்றத்தின் மூலம் செய்ய முடியாது. பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் அம்மணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்க, நமது வர்க்க உணர்வை மழுங்கடிக்க, நம்மைக் குழப்பிப் போய்க்கிடக்க, ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகாரபீடத்திலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்ப, பிற்போக்குவாதிகள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம். இது ஆயுதப் போராட்டத்துக்குப் பதில் சொற் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சி. எனவே, இந்தப் பாராளுமன்ற மாயைகளால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. நாம் பாராளுமன்றப் பாதையை உறுதியுடன் நிராகரித்து, புரட்சிப் பாதை ஒன்றே அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் அளிக்கும் பாதை எனக் கொள்ளவேண்டும்.

இந்த கருத்துகளை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் புரட்சிவாதிகள்; மார்க்சிய-லெனினியவாதிகள். யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ, யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் திருத்தல்வாதிகள்; திரிபுவாதிகள், இதுதான் மா-லெ வாதிகளையும், நவீன திரிபுவாதிகளையும், புரட்சிவாதிகளையும், திருத்தல்வாதிகளையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாகும்.

இவற்றிற்குப் பதில், ஒரு மத்திய பாதையைக் காண, நடு வழியைக் காண முயல்கின்ற, பாலங்கள் அமைக்க, மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனைக்கும், நவீன திரிபு வாதத்துக்கும் இடையில் சமரசம் கொண்டுவர முயல்கின்ற சிலரும் இருக்கின்றனர். இது சந்து செய்ய முடியாதவற்றை சந்து செய்ய முயல்கின்ற, நீரையும் நெய்யையும் கலக்கின்ற ஒரு முயற்சியன்றி வேறல்ல.

நவீன திரிபுவாதம் என்பது மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையின் எதிர்த் தத்துவமாகும். எனவே, இவேற்றுக்குமிடையில் எவ்வித சமரசமும் ஏற்பட முடியாது.

வீழ்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆகவேதான், நவீன திரிபுவாதத்தை எதிர்த்துப் போராட்டாத அதேவேளையில், உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவது அசாத்தி யம். யார் நவீன திரிபுவாதத்தை எதிர்க்கவில்லையோ, அவர் இன்றே நாளையோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை நிறுத்து வது நிச்சயம். இந்த விஷயத்தில் மயக்கம் இருக்கக்கூடாது. லெனின் தமது காலத்தில், திரிபுவாதம் என்பது தொழிலா ளர் வர்க்க இயக்கத்தில் முதலாளிவர்க்க இயக்கத்தின் செல் வாக்கே என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

உலக ஏகாதிபத்தியத்தைப் போல, நவீன திரிபுவாதமும் அழிவது திண்ணம்.

இவை நவீன திரிபுவாதிகள் மத்தியிலே அக முரண்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. அவர்கள் இன்று ஒன்றுபோல ஐக்கியப்பட்டிருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *