புரட்சி  பற்றி மார்க்சிய ஆசான்கள்
புரட்சி பற்றி மார்க்சிய ஆசான்கள்

புரட்சி பற்றி மார்க்சிய ஆசான்கள்

முதலாளித்துவத்தினால்தயார்நிலையில்வைக்கப்பட்டிருக்கும் அரசுஇயந்திரத்தைதொழிலாளிவர்க்கம்அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது சொந்தக் குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது. அதைத்தகர்த்தெறியவேண்டும்என்றுமார்க்சும்எங்கெல்சும்கூறினார்கள். லெனின்இதுபுரட்சிப்பற்றியஅடிப்படையானவிதிஎன்றார். பாட்டாளிவர்க்கப்புரட்சியின்உயிர்நாடியானபிரச்சினைஅரசுஅதிகாரத்தைக்கைப்பற்றுவதும்முதலாளித்துவஅரசுஅதிகாரநிறுவனங்களைபலாத்காரத்தின்மூலம்ஒழித்துக்கட்டிபாட்டாளிவர்க்கஅரசுஅதிகாரத்தைநிறுவுவதும், முதலாளித்துவஅரசைஅகற்றிஅவ்விடத்தில்பாட்டாளிவர்க்கஅரசைநிறுவுவதேயாகும். இதுதான்மார்க்சியலெனினியபுரட்சிப்பாதையாகும்.

  1. ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் “பாராளுமன்றவாத வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்” என்று கூறினார்.
  2. ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்றமார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது.
  3. குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தைஎதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீனகம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக் கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு கூறியது.
  4. “சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும்பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவதுஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசுஅதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள்உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின்ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள்தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமானசொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.
  5. குருச்சேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது.
  6. 1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் “ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமைஇயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவு” என்ற கடிதமும்உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று. இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் “மாபெரும் விவாத ஆவணங்கள்” என்று அறியப்படுகின்றன.

சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்இயக்கம் பிளவுகளை சந்தித்தது.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் “இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.

நமது(ஆம் CPI தான் இந்திய அனைத்து பொதுவுடைமை இயக்கத்தின் தாய் சரி தவறுகளை இங்கிருந்து தொடங்கினால் மட்டுமே வரலாற்றில் அறிதல் இலகுவாக இருக்கும்) தலைமையின் திருத்தல்வாதத்தை சுட்டிக் காட்ட இதை எழுதியுள்ளேன் தோழர்களே- தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *