அரசு பற்றி மார்க்சியம்
அரசு பற்றி மார்க்சியம்

அரசு பற்றி மார்க்சியம்

சமுதாய ஆரம்பத்தின் முன் நாட்களை அல்லது குறைந்தது ஆரம்பகால மனித நாகரிகத்தைப் பின்னோக்கிப் பார்ப்போம். இன்றுவரை உலகம் புராதனப் பொதுவுடமை, அடிமை, நிலவுடைமை, முதலாளிய, சோசலிச சமுதாயங்கள் ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென இயங்கியல் வரலாறு நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது. வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றாலேயே வாழ்ந்து வந்தனர். இதற்காக அவர்கள் உபயோகித்த உபகரணங்கள் அம்பு, வில்லு போன்ற புராதனமான உபகரணங்களே. இவை யாவும் பொதுவான உடைமையாக இருந்தன. இவை யாவும் எவராலும் செய்து கொள்ளக் கூடியவையாக இருந்ததால் உற்பத்திச் சாதனங்களைத் தனிநபர் உடைமையாக்கும் நிலை ஏற்படவில்லை.

அதே நேரத்தில் சொற்ப உணவை பெற்றுக் கொள்வதற்குச் சகலரும் கூட்டாக உழைக்கவேண்டியிருந்தது. காட்டு மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். அப்படிச் செய்யாவிடில் காட்டுமிருகங்கள் மனிதரை வேட்டையாடிவிடுமாதலினால் இது அத்தியாவசியமாயிற்று. இப்படி இருந்தும் இந்த வேட்டையாடுவோரின் கூட்டு உழைப்பு அந்த பூர்வீகக்குடியினர் சகலரும் உண்பதற்கு மட்டுமட்டான உணவே.

அரசுபற்றிய மார்க்சியக் கொள்கை

மார்க்சியம்-லெனினியம்-மாசேதுங் சிந்தனையால் முன்வைக்கப்பட்ட பொது உண்மைகள் எல்லாவற்றிலும் அரசைப் பற்றிய கோட்பாடே மிகவும் அடிப்படையானதாகும். மிகவும் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றான இது, முதலில் கார்ள் மார்க்ஸினால் முன்வைக்கப்பட்டது. சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி, சுரண்டலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒவ்வொரு புரட்சியாளனும் இதைக் கட்டாயமாகக் கிரகித்துக் கொள்ள வேண்டு மென்று, பின்னர், லெனினும் மாசேதுங்கும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

“அரசு” என்ற எண்ணக்கருவை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கின்றோம் என்பதற்கு முதலில் வரைவிலக்கணம் கூறுவோம். ஆயுதப்படைகள் என்ற பிரதான உருவிலுள்ள அரசு இயந்திரத்தையே அரசாங்கம் என நாம் விளங்கிக் கொள்கின்றோம். நீதி துறை, சிறைச்சாலைகள், கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவம் ஆகியனவே அரசு இயந்திரத்தின் மற்றைய வடிவங்களாகும். இவற்றை யெல்லாம் ஒன்றுசேர்த்தே அரசு அல்லது அரசு இயந்திரம் எனக் கூறுகின்றோம்.

அரசு எவ்வாறு தோன்றியது? அதன் தன்மையென்ன? நினைவிற்கெட்டாத காலமாக அது இருந்து வந்ததா? இது வர்க்கப் போராட்டத்தில், பக்கம் சாராமல் சமுதாயத்திற்கு மேலேயுள்ள ஒரு நடுநிலைப் பொருளா? அல்லது அது சமுதாயத்தின் ஒரு சேவகனா? அரசின் குறிப்பான தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமானால், இவை நாம் கட்டாயமாக விடைகாண வேண்டிய கேள்விகளில் சிலவாகும்.

முதலாளித்துவத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் மனித நாகரிகத்தின் பரிணாமத்தோடு அரசாங்கம் இருந்து வந்ததாகவும் அது சமுதாயத்திற்கு மேலே, வர்க்கங்களுக்கு மேலே உள்ள ஒரு நடுநிலைப் பொருளெனவும் பக்கம் சாராததெனவும் எம்மை நம்பச் சொல்கின்றனர். ஒர் உதைப்பந்தாட்டத்தின் அல்லது குத்துச் சண்டைப் போட்டியின் மத்தியஸ்தரைப் போல வெவ்வேறு போட்டியாளர்கள் அதாவது வர்க்கங்கள தமது பலத்தைப் பரீட்சிப்பதற்கான களத்தை அரசாங்கம் கொண்டுள்ள தாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது வேறொரு நேரத்தில் சமுதாயத்தினால் சுயமாகவே முடிகிறது? எவ்வாறு எழுச்சி நிகழ்கிறது? நெருக்கடிகட்கு இடையிலான காலம் பொதுவாகப் பெருவாரியான இயந்திரங்களின் ஆயுட்காலத்துடன் பொருந்துகிறது. இயந்திரங்கள் காலத்துக்குக்காலம் புதுப்பிக்கப்பட வேண்டும். பொருளியல் நெருக்கடியின் போது, பெருமுதலாளிகள் பொதுவாகத் தமது பழைய இயந்திரங்கட்குப் பதிலாகப் புதிய இயந்திரங்களைக் கொண்டு வர எண்ணுகின்றனர்.

இது புதிய இயந்திர உற்பத்தி தொழிலுக்கு ஒரு உந்துதலை வழங்குகிறதால் அது மறுபடி உயிர் க் கிறது. இப் போது, பனிமலையிலிருந்து பனிப்பந்து உருளுகிற செயல் எதிர்த்திசையில் நடக்கிறது. விரைவில் முழு அமைப்புமே எழுச்சியை நோக்கிப் பாய்கிறது. காலப் போக்கில் இது, தவிர்க்க முடியாமலே, தொய்வுக்கும் நெருக்கடிக்கும் இட்டுச் செல்கிறது. எழுச்சி – நெருக்கடி – எழுச்சி: முதலாளியத்தின் கீழ்த் தவிர்க்கவும் தடுக்கவும் இயலாத சுற்று இது.

எழுச்சியும் வீழ்ச்சியும், பொருளியற் தொய்வு மிகுந்த ஒரு காலத்தை அடுத்து பொருளியற் செல்வவளமிக்க ஒரு காலம் என்று, ஒன்றை மற்றது ஒரு சுற்றில் தொடரும் என்பது என்னவோ சரியே. நெருக்கடி எவ்வாறு ஏற்படுகிறது என்று கண்டோம். அது எவ்வாறு

இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கின்றனர். அவர்களும் தம்மிடமிருந்த சொற்பக் கொள்வனவுச் சக்தியையும் இழக் கின்றனர். இதையொட்டிப் பிற தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. பின்வரு மாறான தன்மையுடைய ஏதோவொன்று நிகழத்தொடங்குகிறது. வேலை யிழந்த ஆலைத்தொழிலாளர்கட்கு சப்பாத்து வாங்கக்கட்டுப் படியாகாது. இது சப்பாத்துத் தொழிலை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. இதுபோல இன்னும், பனிமலையிலிருந்து உருளும் பனிப்பந்து போல பெருகும் நெருக்கடி முழு முதலாளிய உற்பத்திமுறையும் ஸ்தம்பிக்கும் வரை தொடர்கிறது. இதற்கான மிக மோசமான உதாரணம் 1929-1931 கால இடைவெளியில் நிகழ்ந்த உலகப்பொருளாதார நெருக்கடியாகும். அப்போது, கோடீசுவரர்கள் உயர்மாடிக் கட்டடங்களினின்று பாய்ந்து தம்மை மாய்த்துக்கொண்டனர்.

அப்போது செயற்கையான ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்துவதற்காக, முதலாளியம் தான் உற்பத்தி செய்ததை அழித்தது. பிறேசிலில் கோப்பி எரிக்கப்பட்டது. சீனாவில் பல இலட்சக் கணக்கானோர் பட்டினியால் சாகும்போது, அமெரிக்காவில் கோதுமை மண்ணுக்குள் உழுது புதைக்கப்பட்டது. பால் கான்கள் வழியே கொட்டப்பட்டது. தோடம்பழங்கள் கடலில் வீசப்பட்டன. தேயிலை அழிக்கப பட்டது. இங்கிலாந்தில், கன்ரபெரியின் குருவானவர் கலாநிதி ஹியூலெற் ஜோன்சன் இதைப் பின்வருமாறு பொருத்தமாகக் தொகுத்துரைத்தார்: “கடவுளின் பரிசுகளை நாம் அவர் முகத்தில் விட்டெறிகிறோம்’. முதலாளியத்துக்கு வக்காலத்து வாங்குவோர், மிகையான உற்பத்தியின் விளைவான நெருக்கடியென்று இதை விவரித்தனர். சமுதாயம் தனது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்துவிட்டதாக அவர்கள் பாசாங்கு செய்தனர். அதன்விளைவாகப், பண்டங்கள் மிகுதியாக இருந்ததால், சமநிலையைப் பேண அவற்றில் ஒரு பகுதியை அழிக்க வேண்டியிருந்தது என்றனர். வெகுமந்தமான புத்தியுள்ளவருக்கும் விளங்குமளவுக்கு இது அபத்தமானது. மனித சமுதாயத்தின் தேவைக்கு மீறிய நுகர்பொருட்களைச் சமுதாயம் உற்பத்தி செய்யும் நிலையை உற்பத்தி எட்டிய காலமொன்று இது வரை மனித வரலாற்றில் காணப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *