அரசு பற்றி மயகத்தில் உள்ளவர்களுக்கு-சி.பி
அரசு பற்றி மயகத்தில் உள்ளவர்களுக்கு-சி.பி

அரசு பற்றி மயகத்தில் உள்ளவர்களுக்கு-சி.பி

அரசு பற்றி மயகத்தில் உள்ளவர்களுக்கு-சி.பி+++++++++++++++++++++++++++++++++++தினம் கிளப் அவுஸ் விவாதங்களை கேட்கும் பொழுது பல அப்பாவிதனமான அவர்களின் பேச்சை கேட்கும் பொழுது உண்மையில் வருத்தமாக உள்ளது அவர்கள் பேசும் மார்க்சியம் என்னவென்று அவர்களுக்கும் புரிவதில்லை வெறும் உணர்ச்சி பூர்வமாக உள்ளனர் அவர்களின் சில நிலைப்பாட்டை விமர்சிப்பதோடு உண்மையில் நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை இவர்கள் கிரகிக்கவே இல்லை அதனையும் பேசுவோம் இந்தப் பதிவில்.இங்குள்ள சிலரின் கோட்பாடு மார்க்சியம் ஒவ்வொருவரின் தேவையைக் கொண்டு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.அதாவது மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் சீனா மார்க்சியம் தமிழகமார்க்சியம் என்று நிறுவ நினைக்கின்றனர்.மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக் கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளை களை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட் டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் இவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி…..தேவை பட்டால் இதனை பற்றி விரிவாக எழுதுவேன் தோழமைகளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *