அரசும் அரசியலும் சாதரண அறிமுகம்- சி.பி

அரசும் அரசியலும் சாதரண அறிமுகம்- சி.பி

     அரசியல் என்றாலே அந்த வார்த்தை எதோ ஒரு தவறான சொல்போலவும், அரசியல் பேசும் மனிதர்களெல்லாம் எதோ தவறான எண்ணத்தில் அனுகுவது போலவும் ஒரு சித்திரத்தை பரப்பியுள்ள சமூகத்தை என்னவென்று சொல்ல?

     தமிழக சட்டசபை தேர்தலின் போது பல முன்னனி கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை அற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாக வலம்வந்தன, அவர்கள் வாக்குபடி அப்படியே அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் மாற்றம் நடந்திருக்குமா? அது அவர்களின் எல்லைக்கு வெளியே உள்ளவிவகாரமாக முடிந்திருக்கும்! ஆகவே அரசு என்றால் என்ன? என்பதை பார்க்கும்முன் இதனை எழுதுவதன் என் நோக்கம்!!!

நான் பணிபுரியும் அலுவலக நண்பர்கள் மெத்த படித்தவர்கள் அவர்கள் அறிவாற்றல் குதிரைக்கு கடிவாளமிட்டதுபோல் அவர்களின் தளபகுதி மட்டுமே சார்ந்தது, அதற்க்கு மேல் ஊடகங்களின் கைபாவையே அவர்கள், சுயசிந்தனை என்பது அரிதே! அறிவுஜீவிகளின் கொத்தடிமைகள்!! அவர்களுக்கு காலையில் எழுவதிலிருந்து இரவு உறங்கும்வரை சமூகத்தின் (முதலாளித்துவ சிந்தனையை மண்டியிட்டு வாழும்) உபதேசங்களில் வாழும் மனநிலை அல்லது சுரண்டலில் ஆழ்படும் அவர்களை சற்று எழுப்பிவிட என் சிறிய முயற்ச்சி. ஆகவே அரசு என்பதனை பற்றி பார்போம்:- 

அரசு  

அரசு என்றால் என்ன?

மேலே உள்ள படம் வாயிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் பாராளுமன்றம் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை!

யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் இவர்கள் ஆளூமையே! அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமே!

அரசு எங்கின்ற இந்த ஏற்பாடு ( நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் )ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.

வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசுதேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள் பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்க்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது

இரண்டு நேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோண்றின…

இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை  இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இராணுவம்,

இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு-லெனின்”.

அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்றார் லெனின்.

ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது.  

ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு…

இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!

இதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள் என்றெடத்து கொள்ளவோம்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.

இப்பொழுது அமெரிக்க அடிமையாகி கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?

எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ?

எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிருபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?

அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்!!!!

இதனை நான் மேம்போக்காக எழுதியுள்ளேன்… பாராளுமன்றம், சட்டமன்றம் அதனை பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்வேன்- உங்கள் -சி.பி

. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதே யாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும்

முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது சொந்தக் குறிக்கோளுக்குப் பயன்படுத்தமுடியாது.அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார்.