அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் முதலாளித்துவ சகாப்பத்தில் நுழைந்த போது நிறுவனமயப்பட்ட உரிமைகளை அனைவரும் கிடைக்க இடையறாது குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை பொதுவுடைமைச் சிந்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ, உற்பத்திமுறையை மாற்றியமைப்பதன் ஊடாக மாற்றம் கொள்ள முடியும் என்று நம்பியவர்கள் அல்ல. ————————————-
1.”நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி”. மேலும் அவர்கள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக தொழிலாளர்களை சுரண்டுபவர்கள். பொதுவுடமை தத்துவம் பன்றிகளின் தத்துவம். புரட்சி வேலைக்காகது.. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை விட புத்தமே சிறந்தது.. மதம் மக்களுக்கு அபின் இல்லை.. மதம் சமுதாய புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும்.
(அம்பேத்கர் நூல் தொகுப்பு-தொகுதி 7. பக்402-433 மற்றும் தொகுதி:37-பக்212)
2.1929ல் நடைபெற்ற பம்பாய் நெசவாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும், அதை நடத்திய கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து சகட்டுமேனிக்கு அவதூறு செய்கிறார்.
- இந்தியா ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும், இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக; அதுவும் தேவநாகரி வரிவடிவில்தான் இருக்க வேண்டும் என்கிறார். மொழிவழி மாகாணங்கள் இந்தியாவை உடைத்து விடும் என்கிறார்.
(1948ல் மொழிவாரி மாநில அமைப்பு குழுவில் அம்பேத்கர் அளித்த அறிக்கை)
- ரஷ்ய கம்யூனிசம் மோசடியானது.. இந்தியா ஒருபோதும் கம்யூனிச நாடாக ஆகக் கூடாது.. நாடாளுமன்ற ஜனநாயகமே உயர்வானது.. இரஷ்ய பூதம் பல நாடுகளை காவு கொள்கிறது.. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பதே இல்லை.. ரஷ்யாவில் பொதுவுடைமை தோற்கும்.. சொத்திற்காக மக்கள் அங்கே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவர்.
(தொகுதி 37-பக் 531-539 மற்றும் 1947 ஏப்ரல் 13 நவயுகம் அம்பேத்கர் சிறப்பு மலர் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் கலகம், அராஜகம், கம்யூனிசம் வரும் என்ற அம்பேத்கரின் கட்டுரை )
- லாலா லஜபதிராய் இந்திய விடுதலை இயக்கத்தில் அம்பேத்கரை பங்கெடுக்க கோரியபோது நான் நியூயார்க்கில் படிக்க மட்டும்தான் வந்துள்ளேன் என மறுக்கிறார். பின்னர் படிக்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க கூடாது என்கிறார். (1933 ஏப்ரல் 4ல் ஆகாகான் விடுதி பேச்சு). ஒத்துழையாமை இயக்கம் வன்முறையானது என எதிர்க்கிறார்.
(முன்பு ஒருமுறை கீதையின் தத்துவமே சத்யாகிரககம்தான் என 1927 டிசம்பர் 25, 26ல் நடைபெறும் செளதார் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை முன்னிட்டு அம்பேத்கர் பேசியது குறிப்பிடத்தக்கது)
- அரசியலை விட மதத்தில்தான் நான் அதிக நாட்டம் கொண்டவன். கம்யூனிஸ்டுகள் மார்க்ஸைவிட புத்தரை அதிகம் உள்வாங்க வேண்டும்.
( புத்தரா? கார்ல் மார்க்ஸா? என்ற அம்பேத்கரின் கட்டுரை)
மேலதிக ஆதாரங்களுக்கு தான் வாழுங்காலத்திலே தனது வாழ்க்கை வரலாற்றை தானே மெய்ப்பு பார்த்த அவருடைய வாழ்க்கை வரலாறு. தனஞ்செய்கீர் எழுதிய நூல். தமிழில் பெரியார் அறக்கட்டளை வெளியீடு. அதன் பக்கங்கள்: (41,172,184, 203, 344, 433, 579, 603, 604, 653, 665, 666, 667, 672, 675, 677, 678, 679, 696, 741, 757)